PDA

View Full Version : முதுகெலும்பு

மதி
18-11-2008, 02:20 PM
மு.கு: இது பழைய கரு, பழைய களம். ஏற்கனவே எங்கேயோ படித்த மாதிரி இருந்தால் பொறுத்தருள்க. :)
கொஞ்ச நாட்களாய் தான் இப்படி. காலையில் சீக்கிரமே எழுந்து விடுவது, அவசர அவசரமாய் காக்காக்குளியல் முடித்து தெருமுனைக்கு ஓடுவது. அங்கு தான் அவன் வேலை பார்க்கும் அலுவலகப் பேருந்து நிற்கும். இந்த பெங்களூர் மாநகர நெரிசலில் சிக்கி ஏழு முப்பதுக்கு அவன் ஏற வேண்டிய பேருந்து வருவதற்கு எப்படியும் எட்டு மணியாகிவிடும். இது தெரிந்து எப்போதும் சோம்பலாய் ஏழேமுக்காலுக்கு மேல் தான் செல்வான். இப்போது தான் கொஞ்ச நாளாய் ஏழு முப்பதுக்கே ஆஜர். காரணம் அவள்.

இன்னமும் அவள் தான். பேர் தெரியாது. அவளும் தினமும் அங்கு தான் வந்து நிற்கிறாள். அவள் வேறு அலுவலகம். பாழாய் போன மென்பொருள் தான். தினமும் அவள் தூக்கிட்டு நிற்கும் மடிக்கணினியைப் பார்க்க கோவம் கோவமாய் வரும். அவளை இப்படி துன்புறுத்திகிறதே. மென்மையாய் தான் இருந்து தொலைத்தால் என்ன? இவ்வளவா கனக்க வேண்டும். பாருங்கள். தூக்க முடியாமல் தூக்கி கஷ்டப்படுகிறாள். வீட்டில் ராணி மாதிரி இருந்திருப்பாள் போலும். கொஞ்ச நாட்களாய் தான் இப்படி.

சீக்கிரம் எழுந்து அவள் வருமுன் சென்று அவளுக்காக காத்திருப்பது. புதிதாய் இந்த காலனிக்கு குடி வந்திருக்கிறாள் போலும். என்னமோ இதுவரை இந்த பெங்களூரில் சந்நியாச வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு அவள் மீது ஈர்ப்பு. செல்லமாய் உதட்டை சுழித்து தோழியிடம் அவள் பேசும் அழகா, காற்றில் அசைந்தாடும் முடியை ஒற்றை விரலால் ஒதுக்கிவிடும் செயலா, சிரிக்கும் போது சீராய் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் பல்வரிசையா.. தெரியவில்லை. ஆனால் ஒன்று. இதுவரை தமிழிலே பிழையில்லாமல் எழுதத் தெரியாத நான் தப்பும் தவறுமாக கவிதை எழுத ஆரம்பித்துவிட்டேன். கொஞ்ச காலமாக அவளும் என்னை கவனிக்க ஆரம்பித்து இருக்கிறாள். முன்பு வெறும் பார்வை. இரண்டு மூன்று நாட்களாய் தான் சிநேகமாய் ஒரு புன்னகை. இப்படியே போகட்டும் இன்னும் கொஞ்ச நாளில் பேசிவிடலாம். வாழ்ந்தால் இந்த மாதிரி ஒரு பெண் கூட தான் வாழணும்.

இன்றும் அப்படித் தான். ஏழரை மணிக்கே தெரு முனைக்கு போய்விட்டேன். அவள் வர இன்னும் ஐந்து நிமிஷமிருக்கு. சரியாய் அதே நேரத்துக்கு வந்துவிடுவாள் அவள் வந்து ஐந்து நிமிஷங்களில் அவள் பேருந்து வந்துவிடும். அந்த ஐந்து நிமிஷங்கள் தான் தரிசனமே. எப்பவாவது அவள் பார்வை என் பக்கம் திரும்பும். எதேச்சையாய் பார்ப்பது போல் நானும் பார்த்து புன்னகைப்பேன். அவளும். அவ்வளவு. அந்த நொடிக்காக இன்னு இருபத்துநாலு மணி அங்கேயே காத்திருக்கலாம் போல தோன்றும். அதோ அவள் வந்து கொண்டிருக்கிறாள்.

‘அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே..உலகம் சுருங்குதே.. இருவரில் அடங்குதே…’ ச்சே. பாழாய் போன அலைபேசி இந்நேரமா அலறித் தொலைய வேண்டும். அந்தப் பாட்டே நாராசமாய் கேட்டது. பார்த்தால் ‘Amma Calling’

“என்னம்மா…” எரிச்சலுடன் நான்.

“தம்பி. எங்க இருக்க. ஆபிஸுக்கு கிளம்பியாச்சா..?”

“பஸ்ஸுக்கு நிக்கறேன்.. என்ன விஷயம் சொல்லுங்க?” அவசரக்குரலில் நான். அவள் போய்விடுவாளே..! என் கஷ்டம் அம்மாக்கு புரியுமா..

“தம்பி.. இன்னிக்கு கிளம்பி நாளைக்கு காலைல வரோம் பெங்களூருக்கு”

“என்னது. இங்க வர்றீங்களா..? எதுக்கு?”

“நீ தான் கூப்பிட்டியே அதான்….” என் நிலைமை புரியாமல் அம்மா.

“நான் அப்போ கூப்பிட்டேன். என்னமோ உங்க ஊர விட்டு வர மாட்டேன்னு பிகு பண்ணிக்கிட்டீங்க. இப்ப மட்டும் என்ன..?”

“இல்ல.. நீ வேற கூப்பிட்டுக்கிட்டு இருக்கியா… பொண்ணு வேற அங்க தானே வேலை பாக்குது. அதான்…” அப்போது தானா அவள் வந்து சேர வேண்டும். அம்மா சொன்னது காதில் விழவில்லை.

“என்னது…?”

“அதான் டா.. உனக்கு பொண்ணு பாக்க போறோம். மத்ததெல்லாம் அங்க வந்து பேசிக்கறேன்.”

வைத்தால் போதுமென்றிருந்தது. அப்பாடா… அவள் பேருந்து வருவதற்குள் பார்த்துவிட்டாள். வழக்கத்தை விட இன்று இன்னும் சிநேகத்துடன் சிரித்த மாதிரி தோன்றியது.

எட்டு மணிக்கு என் பேருந்தில் ஏறி போன போது தான் தோன்றியது. அம்மா பொண்ணு பார்க்க வரப்போவதா தானே சொன்னாங்க. எரிச்சல் எரிச்சலாய் வந்தது. பின்ன என்ன. இருவத்திஏழு வயசாவுது. ஒருவருஷத்துக்கு முன்னாடியே பொண்ணு பார்க்க சொன்னேன். ‘பொண்ணு பாக்கறேன்..பாக்கறேன்’னு இழுத்தடித்துவிட்டு இப்போ நான் ஒரு பொண்ணை பார்க்கும் போது வந்தால்… சரி.. வரட்டும் நாளைக்கு பேசிக்கலாம்.

காலை அஞ்சு மணிக்கே அம்மாவும் அப்பாவும் வந்தாச்சு. ‘இவங்ககிட்ட எப்படி சொல்வது? பொண்ணு பார்க்க போக வேண்டாமென்று. என்கிட்ட கேட்டா இங்க வந்தாங்க. அவங்களா முடிவு பண்ணிட்டு வந்தா நான் என்ன பண்ண…?’

அப்பா தான் ஆரம்பித்தார்.

“தம்பி.. அந்த பொண்ணும் இங்க தான் அந்த கம்பெனியில வேலை பாக்குது. இதே ஏரியால தான் இருக்குது போல அவங்க அப்பா அம்மா எல்லாம் இங்க வந்துட்டாங்க. காலைல எங்கியாவது அவங்கள பாக்கலாம்…”

என்னால் தாங்க முடியவில்லை.

“நீங்க தானே வந்தீங்க. போய் பாருங்க. உங்களுக்குப் பிடிச்சிருந்தா நான் பொண்ணு பாக்குறேன். அப்புறமா முடிவு பண்ணிக்கலாம்.” நினைவில் அவள்.

‘இப்போ தான் முதல் பொண்ணே பார்க்கப் போறாங்க. இதுக்கே ஒரு வருஷம் ஆக்கிட்டாங்க. எப்படியும் இந்த சம்பந்தம் முடியாது. அதனால கவலை இல்லை.’ அம்மா மேல அவ்வளவு நம்பிக்கை.

“சரி. நாங்களும் அதான் அவங்ககிட்ட சொல்ல சொல்லிருக்கோம். ஆனா அவங்க உன்னையும் எதிர்பார்ப்பாங்க. பார்க்கலாம். போய்ட்டு வந்து சொல்றோம். மேற்கொண்டு பாத்துக்கலாம்.” என் முகத்தைப் பார்த்த அப்பா சொன்னார். பரவாயில்லை. என் நிலைமையை கொஞ்சம் புரிஞ்சுக்கிட்டார்.

எல்லோரும் கிளம்பிப் போனதும் வீட்டில் தனியா படுத்திருந்தேன் அவள் நினைவில். சொல்ல மறந்துட்டேனே. இது வாரயிறுதி. அப்படியே தூங்கிப் போயிட்டேன்.

முழித்துப் பார்த்தால் வீட்டில் அனைவரும் இறுக்கமான முகத்துடன். ‘அப்பாடி பொண்ணு புடிக்கல போல. தப்பிச்சாச்சு.’

நானும் எதுவும் கேட்கவில்லை. அம்மாவும் அப்பாவும் எதுவும் சொல்லவில்லை. ‘அப்போ அவங்களுக்கே பிடிக்கல. அதனால தான் பேசலை. இல்லாட்டி ஏதாச்சும் சொல்லிருப்பாங்களே. இனியும் தாழ்த்த வேண்டாம். நாளைக்கே அந்த பொண்ணுக்கிட்ட பேசிட வேண்டியது தான்.’

அன்றிரவே அப்பாவும் அம்மாவும் ஊருக்கு கிளம்பிவிட்டார்கள். அடுத்தவாரம். திங்கட்கிழமை. அவசர அவசரமாக கிளம்பி அந்த பொண்ணுக்க்காக காத்திருக்கக் கிளம்பினேன்.

அவள் வந்ததும் அவளிடம் பேசலாமென்று பக்கத்தில் போனேன். என்னைக் கவனிக்காமல் அவள் தோழியிடம் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

“பா…உங்கிட்ட போன்ல சொன்னேன்ல. பொண்ணு பார்க்க வராங்கன்னு. போட்டோ கூட பார்க்கல. சரி. அப்பா அம்மா சொன்னாங்கன்னு அந்த இடத்துக்குப் போனா அங்க அவனோட அப்பா அம்மா மட்டும் வந்தாங்க. பையன காணோம். என்னன்னு கேட்டா ஆள் ப்ரண்டு கல்யாணத்துக்குப் போயிட்டானாம். யாராச்சும் இப்படி இருப்பாங்களா..? ஒன்னு அவன் வர பயந்துக்கிட்டு வீட்டுல படுத்து தூங்கியிருக்கணும்..இல்ல அவனுக்கு வேற லவ் மேட்டர் ஏதாச்சும் இருக்கணும். சரியான முதுகெலும்பில்லாத பய..நல்ல வேளை நான் தப்பிச்சேன்”

சுரீரென உறைத்தது. அம்மா சொல்ல சொல்லக் கேட்காம பொண்ணோட போட்டோவ நான் பார்க்க மாட்டேன் என்று சொன்னது.

எப்போது வந்து பாடாய் படுத்தியது மறுபடி வந்தது. முதுகில் பயங்கரமாய் மிகபயங்கரமாய் வலிக்க ஆரம்பித்தது.

ஆதவா
18-11-2008, 02:29 PM
Down Down மதியண்ணா...

கதையில பாதியிலயே முடிச்சு அவிழ்ந்திடுச்சு... சரி வேற ஏதாச்சும் திருப்பம் இருக்கலாம்னு நினைச்சேன்.... நல்லவேளை நீங்களாகவே பழைய கரு ; பழைய களன்னு சொல்லி காப்பாத்தினீங்க (உங்களை:D)

ஆனா எனக்கு ஒண்ணு தெரியல? பழைய கரு பழைய களன்னு தெரிஞ்சும் ஏன் பதிச்சீங்க? (ஒருவேளை அனுபவமா இருக்குமோ????)

செல்வா
18-11-2008, 02:38 PM
அடடா என்ன மதி நீங்க இப்படி கோட்டை விட்டுட்டீங்களே...? அப்படினு ஆதவா சொல்றார் :D

மதி
18-11-2008, 03:14 PM
Down Down மதியண்ணா...

கதையில பாதியிலயே முடிச்சு அவிழ்ந்திடுச்சு... சரி வேற ஏதாச்சும் திருப்பம் இருக்கலாம்னு நினைச்சேன்.... நல்லவேளை நீங்களாகவே பழைய கரு ; பழைய களன்னு சொல்லி காப்பாத்தினீங்க (உங்களை:D)

ஆனா எனக்கு ஒண்ணு தெரியல? பழைய கரு பழைய களன்னு தெரிஞ்சும் ஏன் பதிச்சீங்க? (ஒருவேளை அனுபவமா இருக்குமோ????)
அந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்ல... என் நண்பனுக்கு நடந்தது. ஏறக்குறைய இரண்டு மணிநேரம் அவன் பயணம் செய்யணும்... அப்போது அவனுடன் பயணம் செய்த பெண் அவள்.... அதைப் பத்தி யோசிக்கும் போது எழுதத் தோன்றிற்று.....
கதை பழையதென்றாலும்.. உணர்வு புதிதல்லவா...!:)

பென்ஸ்
19-11-2008, 12:50 AM
எங்கப்பா குதிருக்குள்ள இல்லை.....!!!!

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே...

எதுக்கு மதி இத்தனை பில்டப்பு....

ஆதவா... இப்போ வரை கதை இவ்வளவுதான் நடந்திருக்கு, இனிமேலும் மதி சொதப்பலைனா.. மதியோட கதை சுபம் தான்....

மதி
19-11-2008, 12:59 AM

தாமரை சொன்னது சரியா தானிருக்கு. யார வச்சு நீ எழுதினாலும் எல்லோரும் அது உன் கதைன்னு தான் நம்பறாங்க... என்ன பண்ண..

இதுவும் அது மாதிரி ஆனா என்ன பண்ண...? :eek::eek::frown::frown:
நான் கற்பனைன்னு சொல்லல.. என் ரூம்மேட் வாழ்க்கையில் நடந்ததுன்னு தானே சொன்னேன். அவனும் இப்போ தமிழ் தப்பும் தவறுமா எழுதறான். :eek::eek:

ரங்கராஜன்
19-11-2008, 02:28 AM
பாராட்டுகள்

அன்புரசிகன்
19-11-2008, 02:45 AM
“பா…உங்கிட்ட போன்ல சொன்னேன்ல. பொண்ணு பார்க்க வராங்கன்னு. போட்டோ கூட பார்க்கல. சரி. அப்பா அம்மா சொன்னாங்கன்னு அந்த இடத்துக்குப் போனா அங்க அவனோட அப்பா அம்மா மட்டும் வந்தாங்க. பையன காணோம். என்னன்னு கேட்டா ஆள் ப்ரண்டு கல்யாணத்துக்குப் போயிட்டானாம். யாராச்சும் இப்படி இருப்பாங்களா..? ஒன்னு அவன் வர பயந்துக்கிட்டு வீட்டுல படுத்து தூங்கியிருக்கணும்..இல்ல அவனுக்கு வேற லவ் மேட்டர் ஏதாச்சும் இருக்கணும். சரியான முதுகெலும்பில்லாத பய..நல்ல வேளை நான் தப்பிச்சேன்”

திரைப்படங்களில் வந்தது போன்ற தொரு எண்ணம் இந்த பகுதியில் தான் உள்ளது... ஆனாலும் சுவையாகவே உள்ளது...

இப்போ வரை கதை இவ்வளவுதான் நடந்திருக்கு, இனிமேலும் மதி சொதப்பலைனா.. மதியோட கதை சுபம் தான்....
Mutual Transaction???? :lachen001:

தாமரை
19-11-2008, 03:08 AM
தாமரை சொன்னது சரியா தானிருக்கு. யார வச்சு நீ எழுதினாலும் எல்லோரும் அது உன் கதைன்னு தான் நம்பறாங்க... என்ன பண்ண..

இதுவும் அது மாதிரி ஆனா என்ன பண்ண...? :eek::eek::frown::frown:
நான் கற்பனைன்னு சொல்லல.. என் ரூம்மேட் வாழ்க்கையில் நடந்ததுன்னு தானே சொன்னேன். அவனும் இப்போ தமிழ் தப்பும் தவறுமா எழுதறான். :eek::eek:

இப்போ என்ன சொல்றீங்க..

எல்லோரும் உன்னைத் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறாங்களா?
இல்லைத் தெரியாத மாதிரி நடிக்கிறாங்களா?

தாமரை
19-11-2008, 03:17 AM
கதைக் களம் கொஞ்சம் இல்லை ரொம்பவே பழசு.. நவராத்ரி காலம். அதில சாவித்ரி தன் காதலன் சிவாஜிதான் பெண் பார்க்க வர்ராங்கன்னு தெரியாம ஓடிடுவாங்க. இதில மதி - ஸாரி கதாநாயகன் குப்புறப் படுத்துட்டார்..

மதி
19-11-2008, 03:38 AM
அட... இதுக்கு இவ்ளோ எதிர்ப்பா... படம் மட்டும் பழசைத் தட்டி எடுக்கலியா... அது மாதிரி தான்...அரதப் பழசான கதையையும் கொஞ்சம் எழுதத் தான் விடுங்களேன்..... எப்போ தான் அந்த காலம் மாதிரி தூர நின்னு பொண்ண பாக்குறது? படபடன்னு இப்போ இருக்கற மாதிரி போய் பேசிட்டா என்ன தான் சுவாரஸ்யம் இருக்கப் போகுது...

மதி
19-11-2008, 03:41 AM
இப்போ என்ன சொல்றீங்க..

எல்லோரும் உன்னைத் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறாங்களா?
இல்லைத் தெரியாத மாதிரி நடிக்கிறாங்களா?

அது தெரிஞ்சா நான் ஏன் தெரியாத மாதிரி புலம்பப்போறேன்.:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:

தாமரை
19-11-2008, 03:43 AM
அது தெரிஞ்சா நான் ஏன் தெரியாத மாதிரி புலம்பப்போறேன்.:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:

ஓ தெரியாத மாதிரி-யா புலம்பறீங்க. அப்ப தெரியுமா?:lachen001::D:eek:

சிவா.ஜி
19-11-2008, 04:03 AM
யாருப்பா அது மதியை இப்படி அழ வைக்கிறது?.....நல்லாத்தானே எழுதியிருக்கார்.

கதை பழசு,களம் பழசுன்னு அவர் சொல்லிட்டதால....நடையை மட்டும் பாத்தா....

நல்ல தேர்ச்சி இருக்கு. சொல்றதை தெளிவா சொல்லியிருக்கீங்க. இதே நடையில ரொம்ப புதுசா ஒன்னு முயற்சி பண்ணுங்க மதி. அசத்தலா வரும்.

கதை சொன்ன விதத்துக்கு பாராட்டுக்கள்.

தாமரை
19-11-2008, 04:09 AM

விமர்சனம் கதையைப் பத்தியா?

நடை அப்படின்னதும் மதியின் மதிய உலா ஞாபகத்துக்கு வரும்.
மதியின் மதிய உலா அப்படின்னா முதுகு வலி ஞாபகத்துக்கு வரும்..

முதுகு வலி ஞாபகத்துக்கு வந்த பின்னால இது கதைன்னா ஞாபகத்துக்கு வரும்?

மதியோட கதைச் சொல்லி திறமைக்கும், பின்னூட்டங்களுக்கும் சம்பந்தமே இல்லை சிவாஜி.:eek::rolleyes::icon_ush:

சிவா.ஜி
19-11-2008, 04:15 AM
அடடா....நடைன்னதும் அது மதியோட நடைன்னும், முதுகு வலின்னதும் அது நடையால வந்ததுன்னும் யோசிக்க முடியாமப் போச்சே....

(பின்னூட்டமெல்லாம் எந்த திசையை நோக்கின்னு தெரிஞ்சி ரசிச்சேன் தாமரை. சும்மா குறுக்கால புகுந்து ஒரு மாறுதலா(மதிக்கு ஆறுதலா) கதை நடையை விமர்சிக்கலாமென்றுதான் அப்படி சொன்னேன். மதியைக் கலாய்க்க எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன?)

மதி
19-11-2008, 04:25 AM
விமர்சனம் கதையைப் பத்தியா?

நடை அப்படின்னதும் மதியின் மதிய உலா ஞாபகத்துக்கு வரும்.
மதியின் மதிய உலா அப்படின்னா முதுகு வலி ஞாபகத்துக்கு வரும்..

முதுகு வலி ஞாபகத்துக்கு வந்த பின்னால இது கதைன்னா ஞாபகத்துக்கு வரும்?

மதியோட கதைச் சொல்லி திறமைக்கும், பின்னூட்டங்களுக்கும் சம்பந்தமே இல்லை சிவாஜி.:eek::rolleyes::icon_ush:
கரீக்டு.. மதிய உலாவோட இதை சம்பந்தப்படுத்தணும்னு தானே எழுதினேன்.... ;););)
என்ன இருந்தாலும் மதிய உலாவும் 'கதை' தானே... :icon_ush::eek::icon_ush:

அமரன்
19-11-2008, 08:28 AM
ஏதோ ஒரு செல்லைனுக்கு விளம்பரம் போடுவாங்களே. பஸ்ஸ்டாண்டில் நின்றபடி மழைக்குக் குடைபிடித்தபடி 'நான் பொண்ணைப் பார்த்திட்டேன்'னு போனில் சொல்வது போல.. அந்த நினைவு கதையைப் படிக்கும்போது வந்து தொலைத்தது. எல்லாமே நல்லாருக்குங்க. வாழ்த்துகள்.:icon_b::)

அன்புரசிகன்
19-11-2008, 08:45 AM
எல்லாமே நல்லாருக்குங்க. வாழ்த்துகள்.:icon_b::)

எது...? பொண்ணை தொலைத்ததா???:eek:

அமரன்
19-11-2008, 08:54 AM
எது...? பொண்ணை தொலைத்ததா???:eek:

ஆமாங்க...
அவளுக்கும் மதியின் கதையின் நாயகந்தான் தன்னை பொண்ணு பார்க்க வருகிறான்னு தெரியலையே.. அப்போ... அப்போ..

மதி
19-11-2008, 08:56 AM
எது...? பொண்ணை தொலைத்ததா???:eek:
அதானே... நல்லா கேளுங்க ரசிகரே..என் கதையின் நாயகன் பொண்ணை தொலைத்தது.. எல்லாருக்கும் நல்லாருக்கு...

சீரியஸ் கதைய இப்படியா காமெடி கதையாக்கறது... :eek::eek::eek:

கண்மணி
19-11-2008, 08:59 AM
மதி? கதை? சீரியஸ்? அட!

:rolleyes::eek::D:icon_ush:

மதி
19-11-2008, 09:05 AM
மதி? கதை? சீரியஸ்? அட!

:rolleyes::eek::D:icon_ush:

அக்கா... இதானே வேணாங்கறது.....
வேணாம்.. வலிக்குது.... அழுதுடுவேன்....:traurig001::traurig001::traurig001:

பாரதி
19-11-2008, 01:42 PM
அன்பு மதி,

கதையை படித்தேன். அவன் என்று எழுத ஆரம்பித்தது, இடையிலேயே தன்னிலையாக மாறி இருப்பதிலிருந்தே இது கற்பனையா அல்லது அனுபவமா என்பது நன்றாக விளங்குகிறது. பென்ஸ், தாமரை பின்னூட்டங்கள் இருந்த சிறு சந்தேகத்தை நிவர்த்தி செய்ய உதவுகின்றன.

இதை ஏன் சுவையான சம்பவங்கள் பகுதிக்கு நகர்த்தக்கூடாது மதி...? கதை..... விரைவில் சுபமாகட்டும். வலிகள் சுகமாகட்டும்.

மதி
19-11-2008, 03:29 PM

அண்ணா.... சத்தியமா இது கதை தான்..... சில நிகழ்வு தவிர.. ஹிஹி
எங்க வேணும்னாலும் நான் சொல்றேன்...
அழ வச்சிடாதீங்க.... :traurig001::traurig001::traurig001::traurig001:

ஆனா.. நீங்க சொன்ன... படர்க்கை தன்னிலை மாறியது எதேச்சையாக தான். அதில் ஒன்றும் உள்குத்து இல்லை..

என்ன பிரச்சனையாயிடுச்சுன்னா...?? இப்போ தான் அம்மா கூப்பிட்டு இது கதை உண்மைச்சம்பவமான்னு சந்தேகமா கேட்டாங்க. அதைத் தான் தாங்க முடியல... :traurig001::traurig001::traurig001:

mukilan
19-11-2008, 03:41 PM
எல்லாரும் ஏன் மதி மேல இந்தக் கொலை வெறில இருக்குறீங்க. மதி என் கிட்ட எப்பவோ சொல்லியாச்சு... ஆனா இதை மன்றத்தில பகிரங்கமா சொல்லனுமானு யோசிக்கிறேன்.

சரி கிண்டல் அப்புறம்.... கதையைப் பற்றி.

மதி பழைய கள்ளு ருசியா இருக்குனு சொல்லுவாங்க (சொல்வாங்களா? ஒயின் மட்டுந்தான் சொல்வாங்களோ). உங்கள் எழுத்து நடை அபாரம். "கொஞ்ச நாளாதான் இப்படி" என முதல் பத்தியிலேயே இரண்டு முறை வருவது சுவை கூட்டியிருப்பதாய் உணர்கிறேன். கதை பழசானாலும் எழுத்து நடை புதுசாத்தான் இருக்கு. மடிக்கணினி கணம் தாங்கா மென்மை என வர்ணனைகள் வேறு. இனிமே வேற கள்ளை இதே பாட்டில்ல ஊத்தி குடுங்க. சும்மா ஜிவ்னு ஏறட்டும்.

மதி
19-11-2008, 03:53 PM
நன்றி முகில்.. நீங்களாவது என்னை நம்புறீங்களே...?!
இனிமே காதல்.. கத்திரிக்காய்.. கல்யாணம்னே கதை எழுதக்கூடாதுப்பா....
என்னம்மா.. விளாசுறாங்க...

கண்மணி
20-11-2008, 02:29 AM
என்ன பிரச்சனையாயிடுச்சுன்னா...?? இப்போ தான் அம்மா கூப்பிட்டு இது கதை உண்மைச்சம்பவமான்னு சந்தேகமா கேட்டாங்க. அதைத் தான் தாங்க முடியல...லை..
:traurig001::traurig001::traurig001:

தவளை! தவளை!!:eek::eek::eek:

அப்போ பொண்ணு பாக்க வந்தது உண்மையா?
:D:D:D:D:lachen001::lachen001::lachen001:

நான் யாருக்கும் சொல்லமாட்டேன். சரியா!:icon_ush::icon_ush::icon_ush:

இன்னொரு ரகசியம்... மதியோட அப்பா அம்மா கூட மன்ற உறுப்பினர்கள்.. இல்லேன்னா அவங்களுக்கு இந்தக்கதையை படிக்க வாய்ப்பு???

அதனால சகலமானவர்களுக்கும் இதன் மூலம் அறிவிக்கிறது என்னவென்றால்... மதி பற்றிய ரகசியங்களை ஹேஸ்யங்களை கிசுகிசுக்களை இங்கே எழுத வேண்டாம்..:icon_b: (ஹி ஹி.. சொன்னா கேட்கவாப் போறீங்க)

(ஆஹா மதி மாட்டினாரு):icon_rollout::icon_rollout:

மதி
20-11-2008, 03:17 AM
கதைன்னே யாரும் நம்பமாட்டேங்கறாங்க...சரி.. என்ன நடந்துச்சுன்னு தான் சொல்லலாம்.. யாருக்கு என்ன நஷ்டம்னு தான் எழுதினேன்.. :)

பை த வே.. வந்தார்கள்.. பார்த்தார்கள்..ஊருக்குத் திரும்பி சென்றார்கள்... அவ்ளோ தான்... :traurig001::traurig001::traurig001:.
(ஒரு வேளை பொண்ணுக்கு என்னைப் பிடிக்கலியோ..??:rolleyes::rolleyes:)

அப்புறம்... அம்மா அப்பா இங்க உறுப்பினர்களா இருக்காங்களா...???? அச்சச்சோ.. நேத்து அவங்க கேட்கும் போது இதை யோசிக்கத் தோணலையே..

இதன் மூலம் நான் அனைத்து நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் கேட்டுக் கொள்வது என்னவென்றால் என்னைப் பற்றிய கிசுகிசுக்களையும் (கிசுகிசு எழுதற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய ஆளில்லை; ரகசியங்களுமில்லை) உண்மைச் செய்திகளையும் மன்றத்தில் பதிய வேண்டாம். குடும்பத்துல குழப்பம் உண்டாயிடப்போகுது.

கண்மணி
20-11-2008, 03:54 AM
அந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்ல... என் நண்பனுக்கு நடந்தது. ஏறக்குறைய இரண்டு மணிநேரம் அவன் பயணம் செய்யணும்... அப்போது அவனுடன் பயணம் செய்த பெண் அவள்.... அதைப் பத்தி யோசிக்கும் போது எழுதத் தோன்றிற்று.....
கதை பழையதென்றாலும்.. உணர்வு புதிதல்லவா...!:)

எல்லாரும் ஏன் மதி மேல இந்தக் கொலை வெறில இருக்குறீங்க. மதி என் கிட்ட எப்பவோ சொல்லியாச்சு... ஆனா இதை மன்றத்தில பகிரங்கமா சொல்லனுமானு யோசிக்கிறேன்.

.

கதைன்னே யாரும் நம்பமாட்டேங்கறாங்க...சரி.. என்ன நடந்துச்சுன்னு தான் சொல்லலாம்.. யாருக்கு என்ன நஷ்டம்னு தான் எழுதினேன்.. :)

பை த வே.. வந்தார்கள்.. பார்த்தார்கள்..ஊருக்குத் திரும்பி சென்றார்கள்... அவ்ளோ தான்... :traurig001::traurig001::traurig001:.
(ஒரு வேளை பொண்ணுக்கு என்னைப் பிடிக்கலியோ..??:rolleyes::rolleyes:)

.

நான் எதுவுமே சொல்லலியே தம்பி! :rolleyes::rolleyes::rolleyes:

என் வாக்கைக் காப்பாத்திட்டேன். :D:D:D:D

நான் எப்பவுமே ரொம்ம்ம்ம்ம்ப நல்லவள்..:aetsch013:aetsch013::aetsch013:

நீங்களாத்தான் உளறிட்டீங்க.:eek::eek::eek::eek:

மதி
20-11-2008, 03:57 AM
முதல்ல சொன்னதும் உண்மை... கடைசியா சொன்னதும் உண்மை....
என் அறைத் தோழன் தினமும் ஆபிஸுக்கு செல்லும் போது ஒரு பொண்ண பார்த்தான். தினமும் புன்னகையிலேயே அவர்கள் தினம் கழிந்தது. எங்ககிட்ட வந்து உருகினவன் அந்த பொண்ணுக்கிட்ட பேசல.. அப்புறம் அவன் வீடு மாத்தி வேற ஏரியாக்கு போயிட்டான். அதுக்கப்புறம் அந்த பொண்ணுக்கிட்ட பேசினானா.. இல்லியான்னு எங்ககிட்ட சொல்லல...

அப்பா அம்மா மேட்டர் என் கதை..
எல்லாத்தையும் ஒரே கதையா சொல்ல வந்த போது தான் இந்த குழப்பம்..

நானும் நீங்க சொன்னீங்கன்னு சொல்லலியே.. நானா தானே சொன்னேன்னு சொன்னேன்..

கண்மணி
20-11-2008, 03:58 AM
நானும் நீங்க சொன்னீங்கன்னு சொல்லலியே.. நானா தானே சொன்னேன்னு சொன்னேன்..

அனுபவம் உங்களது அப்படின்னா பயணம் செய்தது?:confused::confused::confused:

ஓவியன்
21-11-2008, 06:43 AM
இதை ஏன் சுவையான சம்பவங்கள் பகுதிக்கு நகர்த்தக்கூடாது மதி...? கதை..... விரைவில் சுபமாகட்டும். வலிகள் சுகமாகட்டும்.

இந்த முன்மொழிவை நான் வழி மொழிகிறேன்...!!! :D:D:D

_________________________________________________________________________________________________

அட, பழம் நழுவிப் பாலில் விழ
அந்த பால் கிண்ணத்தைக் கவுத்த கதையா இருக்கே...???

என் வருத்தங்கள் மதி...!! :traurig001:

மதி
21-11-2008, 07:24 AM

உங்கள் வருத்தங்களுக்கு மிக்க நன்றி....ஓவியன்.. :D:D:D:D