PDA

View Full Version : ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்?மதுரை மைந்தன்
17-11-2008, 10:33 PM
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்?.

இந்த கேள்வியை சில பிரபலங்களிடம் கேட்டால்- ஒரு கற்பனை.

ஒபாமா: எல்லாம் ஒரு மாற்றத்திற்கு தான்

ஜியார்ஜ் புஷ்: கோழி ரோட்டை கிராஸ் பண்ணியதைப் பற்றி எங்களுக்கு அக்கறையில்லை. கோழி ரோட்டில் எங்க பக்கமா இல்லையா என்பது தான் கேள்வி. கோழி ஒண்ணு எங்க பக்கமா இருக்கணும் இல்லை எதிர் தரப்பா இருக்கணும். நடு வழியெல்லாம் ஒத்து வராது.

பில் கேட்ஸ்: நாங்க இப்போ தான் சிக்கன்2008 ஐ ரிலீஸ் பண்ணியிருக்கோம். இந்த கோழி ரோட்டை மட்டும் கிராஸ் பண்ணாது. முட்டை போடும் உங்க டாகுமெனட்ஸ்ஐ பையில் பண்ணும். இந்த சிக்கன் 2008 கிராஷ் ஆகவே ஆகாது.

ஐனஸ்டைன்: கோழி ரோட்டைக் கடந்ததா அல்லது ரோடு கோழியன் கால்களுக்கு கீழே கடந்து சென்றதா?

நியூட்டன்: எனது மூன்றாவது விதிப்படி ஒவ்வொரு ரோட்டின் ஒரு பக்கத்திறகு எதிர புறம் இருந்ததால் கோழி ரோட்டை கடந்து சென்றது

கருணாநிதி: நான் இலங்கைத் தமிழர்களுக்கு அதரவாக ஏற்பாடு செய்திருந்த மனித சங்கிலியில் கலந்து கொள்ள கோழியும் பஙகேற்க ரோட்டை கடந்து சென்றிருக்கலாம். என்னே இந்த கோழியின் தமிழ் பற்று.

ஜெயலலிதா: இந்த மாதிரி கோழிகளை ரோட்டைக் கடக்க செய்து அதனால் விளையும் ஆபத்துகளால் சட்ட ஒழுங்கு முறையைக் காக்க தவறிய கருணாநிதி பதவி விலக வேண்டும்.

சீமான்: நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு ஆதரவாக உலகத் தமிழர் அனைவரும் கடல் கடந்து இலங்கை செல்ல வேண்டும் என்பதை சுட்டக் காட்டும் முகமாக கோழி ரோட்டைக் கடந்து சென்றது என்பேன்.

வடிவேலு: கடந்துட்டான்யா கடந்துட்டான்யா கறி சமைச்சு சாப்பிடாலும்னு கோழியை எடுக்கப் போனா இந்த நாதாரி கோழி ரோட்டைக் கடந்து போயிடுச்சே இப்போ நான் என்ன பண்ணுவேன்?

விவேக்: இந்த தமிழ் நாட்டு மக்களைத் திருத்தவே முடியாதா? கோழியை ரோட்டை கிராஸ் பண்ண விட்டா மழை வரும்னு நம்புறாங்களே? எத்தனை பெரியார் வந்தாலும் திருந்தமாட்டாங்கீளாடா?

கமல ஹாஸன்: ஹா ஹா ஹா நான் தசாவதாரம் படத்தில 10 வேஷத'தில நடிச்சாலும் நடிச்சேன் ரோட்டைக் கடந்து போறது கோழி இல்லை கமல ஹாஸன் தான் கோழி வேஷத்தில போறாருங்கறாங்க.

ரஜனி காந்த்: கண்ணா கோழி ரோட்டைக் கடந்தாலும் சரி அல்லது ரோடு கோழியைக் கடந்தாலும் சரி நான் எப்போ அரசியலுக்கு வருவேன்னு யாராலும் சொல்ல முடியாது.

ஓவியா
17-11-2008, 11:14 PM
மு.க வின் நகைச்சுவையைக்குதான் நான் நன்கு சிரித்தேன். :lachen001:

நன்றி அண்ணா.

கிராமராஜன்: ஏலே அது ஆத்தாவிற்க்கு நேந்து விட்ட கோழி அதான் நாம பூக்குழி நெருப்ப கடந்து உண்மைய காட்டுவது போல், அது சென்னை ரோட்ட கடந்து தான் நிரபராதினு நிருபிக்குது..:D

மதுரை மைந்தன்
17-11-2008, 11:24 PM

ஏதோ சிரிச்சீங்களே அது தான் வேண்டும். நன்றி.

கிராம ராஜன் ஜோக் பிரமாதம்

அன்புரசிகன்
18-11-2008, 02:33 AM
நடிகர்களது வேடிக்கையான பேச்சு அவர்கள் குரலில் யோசித்தேன். நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரே வருத்தம். அவர்களுடன் நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீனை ஒப்பிட்டுவிட்டீர்களே... ஏணி வைத்தாலும் எட்டுமா??? :D

மதுரை மைந்தன்
18-11-2008, 02:40 AM
நடிகர்களது வேடிக்கையான பேச்சு அவர்கள் குரலில் யோசித்தேன். நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரே வருத்தம். அவர்களுடன் நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீனை ஒப்பிட்டுவிட்டீர்களே... ஏணி வைத்தாலும் எட்டுமா??? :D

எல்லாம் ஒரு வெரைட்டிக்காகத் தான். மேலும் மூன்று பிரபலங்களின் கற்பனைஐ சேர்த்திருக்கிறேன். பின்னூட்டம் போட்டு பாராட்டியமைக்கு நன்றி.

ஓவியன்
18-11-2008, 05:38 AM
நன்றாக சிரித்தேன்...

ஜெக்கான கூற்று விழுந்து, விழுந்து சிரிக்க வைத்தது..!! :D:D:D

சிவா.ஜி
18-11-2008, 06:12 AM
அனைவரின் கருத்தும் மிக அருமை. நன்றாக பொருந்தியுள்ளது. குறிப்பாக கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் விவேக்கின் பதில்கள் சூப்பர். பாராட்டுக்கள் மதுரை மைந்தரே.

ஆதி
18-11-2008, 06:17 AM
அம்மாவின் பதில் ரொம்ப சூப்பர், வாழ்த்துக்கள் மதுரை மைந்தன் ஐயா..

அன்புரசிகன்
18-11-2008, 06:33 AM
அனைவரின் கருத்தும் மிக அருமை. நன்றாக பொருந்தியுள்ளது. குறிப்பாக கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் விவேக்கின் பதில்கள் சூப்பர். பாராட்டுக்கள் மதுரை மைந்தரே.

இப்படியே உங்கள் கையால் அமரன் இளசு அறிஞர் போன்ற மன்றின் மைந்தர்கள் சொன்னால் எப்படி இருக்கும் என்று கூறுங்களேன்...

சிவா.ஜி
18-11-2008, 07:26 AM
முதல்ல அறிஞரோட பதில்..

ஹா...ஹா...நீங்க நினைக்கறமாதிரி இது சாதாரண கோழி இல்ல...எங்க ஆய்வுக்கூடத்துல வெச்சு அறிவை அதிகமாக்கின கோழி. இப்ப அது முட்டையிடப் போய்க்கிட்டிருக்கு. அந்த சமயத்துல போக்குவரத்து அதிகமா இருந்தா, அடிபடாம எப்படி சமாளிச்சிப் போறதுன்னு அதுக்கு கத்து குடுத்திருக்கோம். அதைத்தான் இப்ப பரிசோதனை பண்ணிப் பாத்துக்கிட்டிருக்கோம்.

இதுக்காகத்தான் ரொம்ப நாளா மன்றம் வராம இருந்துட்டேன்.

சிவா.ஜி
18-11-2008, 07:35 AM
இளசுவின் பதில்...

இதைப் பாக்கும்போது

கண்போன போக்கிலே
கால் போகலாமா
கால் போன போக்கிலே
மனம் போகலாமா...

என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

பாடல் வரிகள் மனிதனுக்கு மட்டுமல்ல
சாலையைக் கடக்கும் இந்தக் கோழிக்கும்தான்..

இதே கருத்தில் மன்றத்தில் இருக்கும்
மற்றொரு பதிவு இதோ
www.tamilmantram.com/vb/showthread.php?p=392040#post392040

சிவா.ஜி
18-11-2008, 07:46 AM
அமரனின் பதில்

அடடா....இதுவே கோழியாக இல்லாமல் காக்கையாக இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும்.

சாலையும் கறுப்பு
காக்கையும் கறுப்பு
கடந்துபோகும்
அறிவிருப்பதே அதன் சிறப்பு

இப்படி கவி பாடியிருப்பேனே...

சரி கோழிக்கும் பாடினேன் கவி...

கோழியும் காக்கையின் தோழிதான்
கலங்காமல் கடந்து போய்
வாழவேண்டும் நீடூழிதான்...

அமரன்
18-11-2008, 07:48 AM
இப்படியே உங்கள் கையால் அமரன் இளசு அறிஞர் போன்ற மன்றின் மைந்தர்கள் சொன்னால் எப்படி இருக்கும் என்று கூறுங்களேன்...

ஏனிந்தக் கொலை வெறி.. இப்ப பாருங்க ஓவியன் உங்களை வைத்து காமெடி பண்ணப்போறார்.

அறிஞரின் ஆராய்ச்சி பற்றி அறிய

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4754

கண்மணி
18-11-2008, 08:08 AM
கோழி ஏன் ரோட்டைக் கடந்தது..

யோசிச்சுகிட்டே நடந்தேன். தூரத்தில ஒரு பொண்ணு அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் பார்த்தது. ரோடைக் கடக்கணும் போல.

அட கோழியும் இப்படித்தான் இரண்டு பக்கமும் பார்த்துட்டு கடந்திருக்குமோ.

சின்ன கேள்வியோடு கோழியைப் பார்த்தேன். அது பாட்டுக்கு குப்பையைக் கிளறிகிட்டு இருந்தது.

எனக்குப் புரிஞ்ச மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது.

ஆனா மனசு இலேசானது. மெல்ல நடக்க ஆரம்பித்தேன்,

--------------------------------------------------------------

இதை யாரு சொல்லி இருப்பாங்க சொல்லுங்க பார்ப்போம்...

அன்புரசிகன்
18-11-2008, 08:12 AM
கோழி ஏன் ரோட்டைக் கடந்தது..

யோசிச்சுகிட்டே நடந்தேன். தூரத்தில ஒரு பொண்ணு அந்தப் பக்கமும் பார்த்தது. ரோடைக் கடக்கணும் போல.

அட கோழியும் இப்படித்தான் இரண்டு பக்கமும் பார்த்துட்டு கடந்திருக்குமோ.

சின்ன கேள்வியோடு கோழியைப் பார்த்தேன். அது பாட்டுக்கு குப்பையைக் கிளறிகிட்டு இருந்தது.

எனக்குப் புரிஞ்ச மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது.

ஆனா மனசு இலேசானது. மெல்ல நடக்க ஆரம்பித்தேன்,

--------------------------------------------------------------

இதை யாரு சொல்லி இருப்பாங்க சொல்லுங்க பார்ப்போம்...

மதி..???? :rolleyes: சிவாஜி அண்ணாத்தையாகவும் இருக்கலாம்

ஆதி
18-11-2008, 08:13 AM
சின்ன கேள்வியோடு கோழியைப் பார்த்தேன். அது பாட்டுக்கு குப்பையைக் கிளறிகிட்டு இருந்தது.

எனக்குப் புரிஞ்ச மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது.

ஆனா மனசு இலேசானது. மெல்ல நடக்க ஆரம்பித்தேன்,

--------------------------------------------------------------

இதை யாரு சொல்லி இருப்பாங்க சொல்லுங்க பார்ப்போம்...

பென்ஸண்ணா..

கண்மணி
18-11-2008, 08:19 AM
ரோடு, பெண், தனக்குள்ளே கேள்வி பதில்.. எதையுமே சொல்லாதது எல்லாத்தையும் சொன்ன மாதிரி படம் காட்டறது...

ஆமாங்க ஆமாம்... மொக்கை மதிதான்.

அன்புரசிகன்
18-11-2008, 08:33 AM
சூப்பர் சிவாஜி அண்ணா... இந்த டைமைங் ஜோக் ரொம்பவே நல்லாயிருக்கு. விழுந்து விழுந்து சிரித்தேன்... (பத்திக்கிச்சு இன் பாகம் 2)ஏனிந்தக் கொலை வெறி.. இப்ப பாருங்க ஓவியன் உங்களை வைத்து காமெடி பண்ணப்போறார்.

ஏதோ என்னால முடிஞ்சது. ........... ஆனா ஓவியனால என்னை வைத்து எழுதமுடியாது. காரணம் அதே கூத்து அவரும் பண்றவர்.... ஆகையால முடிஞ்சா............. உங்களால........................ அதுவும் முடியாதே.................... :icon_p:

:icon_36:

மதுரை மைந்தன்
18-11-2008, 09:04 AM
இப்படியே உங்கள் கையால் அமரன் இளசு அறிஞர் போன்ற மன்றின் மைந்தர்கள் சொன்னால் எப்படி இருக்கும் என்று கூறுங்களேன்...

உங்கள் கோரிக்கையை ஏற்று இதோ சில மனறத்து நணபர்களின் பதில்கள்:

சிவா.ஜி: எனது அடுத்த கதை " கொத்திக் கொல்லும் இரவுகள்". கதையில் தினம் இரவு யாராவது கொத்திக் கொல்லப்படுவார். விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் இது யாரோ கொத்தனாருடய வேலையாகத் தான் இருக்கும் என்பார். இறுதியில் தெரிய வரும் கொன்றது வைரஸ் அட்டாக் வந்து வெறி பிடித்த கோழிகள் என்று.

Narathar: நடிகர் திலகத்திற்கு கோழி என்றால் ரொம்ப பிடிக்கும். பதி பக்தி என்ற படத்தில் "குப்பையைக் கிளரி விடும் கோழியே கொண்டிருக்கும் அன்பிலே" என்று பாடியிருக்கிறார்.

ஓவியா: அடுத்த பாட்டுக்கு பாட்டு பதிவில் கோழி என்ற வார்த்தையைக் கொடுத்து எல்லோரும் முடியைப் பியத்து கொள்ள வேண்டும்.

கண்மணி
18-11-2008, 09:10 AM
குண்டும் குழியுமான ரோடுகளை
போடாமலிருக்க
கோழிகள் நடத்தும் மேற்பார்வை..

தவறிப் போட்டால்
தவறாமல் போடும் மார்க்
முட்டை!

------ இதை யார் சொல்லியிருப்பாங்க சொல்லுங்க பார்க்கலாம்-----

சிவா.ஜி
18-11-2008, 09:12 AM
அசத்தல் மதுரை மைந்தரே. கலக்கிட்டீங்க. எல்லோருடையதும் அருமை.

கண்மணியோட 'மதி'ப்பார்வை ச்சும்மா....ச்சூப்பர்.

அன்புரசிகன்
18-11-2008, 09:15 AM
:D :D :D

அக்கா மற்றும் நாரதரின் வசனங்கள் அருமை....

கிரைம் வசனங்களுக்கு சிவாஜி அண்ணலே சொந்தமாகிவிட்டாரா???? !!!

அன்புரசிகன்
18-11-2008, 09:19 AM
குண்டும் குழியுமான ரோடுகளை
போடாமலிருக்க
கோழிகள் நடத்தும் மேற்பார்வை..

தவறிப் போட்டால்
தவறாமல் போடும் மார்க்
முட்டை!

------ இதை யார் சொல்லியிருப்பாங்க சொல்லுங்க பார்க்கலாம்-----
செல்வன் அண்ணாவா??? இது கொஞ்சம் ஊகிக்க கஷ்டமாயிருக்கு... செல்வன் அண்ணா என்றால்
த வறிப் போட்டால்
தவ றிபோட்டால்
தவறா மல்லுப்போடும்
தவறாமல் போ டும் மார்க்
முட் ஐ....
மூ ட்டை என்று எழுதியிருப்பார்.....

செல்வன் அண்ணா வாறதுக்கு முன்னம் ஓடி ஒளிச்சிடவேண்டும்... :auto003:

சிவா.ஜி
18-11-2008, 10:00 AM

அன்பு அசத்துறீங்க....நிஜமாவே சூப்பரப்பு...பட்டையைக் கிளப்புங்க....:icon_b::icon_b:

கண்மணி
18-11-2008, 10:00 AM
சாலைக் கோழி
இரைச்சல்
காலைக் கோழி
இறைச்சி

------------அப்படியே இதுவும் யாருன்னு கண்டு பிடிங்க மக்கா--------------

சிவா.ஜி
18-11-2008, 10:02 AM
சாலைக் கோழி
இரைச்சல்
காலைக் கோழி
இறைச்சி

------------அப்படியே இதுவும் யாருன்னு கண்டு பிடிங்க மக்கா--------------

இது கண்மணியேத்தான்....இல்லன்னா....நம்ம அக்னி.

ஆதி
18-11-2008, 10:04 AM
சாலைக் கோழி
இரைச்சல்
காலைக் கோழி
இறைச்சி

------------அப்படியே இதுவும் யாருன்னு கண்டு பிடிங்க மக்கா--------------

இளசண்ணாவோ ?? அமரனோ ??

ஓவியன்
18-11-2008, 10:17 AM
அறிஞரின் ஆராய்ச்சி பற்றி அறிய

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4754

காலையில் இந்தப் பதிவினைப் பார்த்ததும் இந்தத் திரியைத்தான் தேடினேன், கிடைக்க மாட்டேன் என்றிட்டுதே...!! :)

anna
18-11-2008, 10:23 AM
இதை அப்படியே மிமிக்ரி மாதிரி சொல்லி பார்த்தேன் அருமையாக இருந்தது.ஒபாமா,ஜார்ஜ் புஷ்,ஐன்ஸ்டைன்,நியூட்டன் இவர்கள் வாய்ஸ் மட்டும் தெரியலை

மதுரை மைந்தன்
18-11-2008, 10:38 AM
இதை அப்படியே மிமிக்ரி மாதிரி சொல்லி பார்த்தேன் அருமையாக இருந்தது.ஒபாமா,ஜார்ஜ் புஷ்,ஐன்ஸ்டைன்,நியூட்டன் இவர்கள் வாய்ஸ் மட்டும் தெரியலை

உங்க மிமிக்ரிஐ ஒலிப் பதிவு செய்து மன்றத்தில் பதிவு செய்தால் நாங்களும் ரசிப்போமே செய்வீரகளா? பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

கண்மணி
18-11-2008, 10:38 AM
அந்தச் சாலையை
ஆனந்தமாய்
இரைச்சலுடனும்
ஈரத்துடனும்
உற்சாகத்துடனும்
ஊக்கத்துடனும்
எதார்த்தமாய்
ஏனோகடந்ததென
ஐயம்
ஒருவேளை
ஓரத்தில் போனது
ஔவையோ!

--- இது யாரு சொல்லுங்க பார்ப்போம் ---------

ஆதி
18-11-2008, 10:42 AM
அந்தச் சாலையை
ஆனந்தமாய்
இரைச்சலுடனும்
ஈரத்துடனும்
உற்சாகத்துடனும்
ஊக்கத்துடனும்
எதார்த்தமாய்
ஏனோகடந்ததென
ஐயம்
ஒருவேளை
ஓரத்தில் போனது
ஔவையோ!

--- இது யாரு சொல்லுங்க பார்ப்போம் ---------

அவரே தான் நம்ம கமலகண்ணன்

மதுரை மைந்தன்
18-11-2008, 10:46 AM
எனது நண்பர் கேட்கிறார் "நீங்க ஆரம்பிச்ச திரிஐ கண்மணி அவங்க பக்கம் திருப்பிட்டாங்களே".

எனது பதில் "திரிஐ நான் ஆரம்பிச்சேன். கண்மணி அதன் பழத்தை சாப்பிட்டாங்க நாளைக்கு அவங்க பையன் அப்புறம் பேரன் சாப்பிடுவாங்க. ஆனா விதை விதச்சது நான். இது என்ன பெருமையா, கடமை என்னோட கடமை."

ஓவியா
18-11-2008, 10:58 AM
மக்கா உள்ளே வந்ததும் முதல் திரிய படிக்கிறேன்..

அய்யோ என்ன கலாட்டாவா இருக்கு, அனைவரின் கற்பனையும் அட்டகாசமாக இருக்கு, சிரித்து சிரித்து கன்னமே வழிக்குது!!

முக்கியமாக இளசுக்கு சிவாஜி அண்ணா எழுதியதை சிரிப்புடன் ரசித்தேன்..:D

கண்மணி
18-11-2008, 11:10 AM
எனது நண்பர் கேட்கிறார் "நீங்க ஆரம்பிச்ச திரிஐ கண்மணி அவங்க பக்கம் திருப்பிட்டாங்களே".

எனது பதில் "திரிஐ நான் ஆரம்பிச்சேன். கண்மணி அதன் பழத்தை சாப்பிட்டாங்க நாளைக்கு அவங்க பையன் அப்புறம் பேரன் சாப்பிடுவாங்க. ஆனா விதை விதச்சது நான். இது என்ன பெருமையா, கடமை என்னோட கடமை."

ஆனாலும் இது ரொம்ப ஓவர்.. இன்னும் மூணு தலைமுறைக்கு இதே திரியில எழுதறதா? :D:D:D:D
:D

கண்மணி
18-11-2008, 11:14 AM
சரக்கு லாரியா போகுதே. எதாவது நம்மச் சரக்கு இருக்குமோன்னு பார்க்கத்தான் அங்கிட்டும் இங்கிட்டும் அல்லாடிகிட்டு இருக்கு அந்த சைட் டிஷ்...

-- இதைச் சொல்றது யாருங்கோ-----

கண்மணி
18-11-2008, 11:17 AM
செல்வன் அண்ணாவா??? இது கொஞ்சம் ஊகிக்க கஷ்டமாயிருக்கு... செல்வன் அண்ணா என்றால்
த வறிப் போட்டால்
தவ றிபோட்டால்
தவறா மல்லுப்போடும்
தவறாமல் போ டும் மார்க்
முட் ஐ....
மூ ட்டை என்று எழுதியிருப்பார்.....

செல்வன் அண்ணா வாறதுக்கு முன்னம் ஓடி ஒளிச்சிடவேண்டும்... :auto003:

அன்பு எப்படி இப்படி சரியாக் கண்டு பிடிக்கிறீங்க

கண்மணி
18-11-2008, 11:17 AM
இது கண்மணியேத்தான்....இல்லன்னா....நம்ம அக்னி.

சூப்பர்.. நானேதான்..

கண்மணி
18-11-2008, 11:18 AM
அவரே தான் நம்ம கமலகண்ணன்

இது சரி.. .நம்ம மனோஜ் அண்ணன் எப்படிச் சொல்வார்?

கண்மணி
18-11-2008, 12:24 PM
கோயம்புத்தூர்
வழித்தடத்தில் சேவல்

ரோஜாவுடன்
மெட்டுடனே
நடைபோட்டு

கனவுகளுடன்
மடத்தனமாய்
பந்தல் மாறி
தடுமாறியதால்
துள்ளிக் கடந்தது கோழி.

கண்மணி
18-11-2008, 12:29 PM
அய்யோ அறுக்கறாங்களே
அலறிக் கொண்டு போனது கோழி
அந்ததப்பக்கம்.:D:D:D

(முடி....ல)
--------இதை எழுதியது யாராக இருக்கும்?-----------

அன்புரசிகன்
18-11-2008, 01:14 PM
அய்யோ அறுக்கறாங்களே
அலறிக் கொண்டு போனது கோழி
அந்ததப்பக்கம்.:D:D:D

(முடி....ல)
--------இதை எழுதியது யாராக இருக்கும்?-----------
இப்படி சிமைலி போட்டு எழுதுவது என்றால் பென்ஸானந்தா தான்............ சரியா??? :confused:

ஆனால் அவரது பதிவில் ஒரு எழுத்தேனும் பிழை இருக்கும்... அது போணது என்றாவது போட்டிருப்பார்.... :lachen001:

கண்மணி
18-11-2008, 01:16 PM
அடடா குட்டிக் கரணம் போட்டாதான் ஓவியன் இல்லையா.. தப்பு பண்ணிட்டனே

அன்புரசிகன்
18-11-2008, 01:20 PM
அடடா குட்டிக் கரணம் போட்டாதான் ஓவியன் இல்லையா.. தப்பு பண்ணிட்டனே

ஓவியனா......... சான்ஸ்ஸே இல்ல... பேசிக்கையே நீங்க கவனிக்கல. (font colour)

ஓவியன் என்றால் இப்படி இருக்கும்...

அய்யோ அறுக்கறாங்களே
அலறிக் கொண்டு போனது கோழி
அந்ததப்பக்கம். :icon_rollout: :icon_rollout: :icon_rollout:

(முடி....ல)

மன்மதன்
18-11-2008, 01:55 PM
கண்மணி கொடுக்கும் ஒவ்வொரு கோழியும்.. சாரி.. பதிவும்
இந்த பக்கத்தையே கலகலப்பா ஆக்குது..

சூப்பர் பதிவு..!!

ஆதி
18-11-2008, 01:56 PM
கோயம்புத்தூர்
வழித்தடத்தில் சேவல்

ரோஜாவுடன்
மெட்டுடனே
நடைபோட்டு

கனவுகளுடன்
மடத்தனமாய்
பந்தல் மாறி
தடுமாறியதால்
துள்ளிக் கடந்தது கோழி.

அக்கா மனோஜ் பாணி பற்றி கேட்டாங்களே பதில் போடலாம் னு வந்தா நீங்களே பதிலையும் போட்டுடீங்க.. கேள்வியும் நீங்க பதிலும் நீங்களே...

அமரன்
18-11-2008, 03:19 PM
ஒரு கோழி ரோட்டைக் கிராஸ் பண்ணினதுக்கா இந்தளவு களேபரம்.

மதி
18-11-2008, 03:21 PM
கோழி ஏன் ரோட்டைக் கடந்தது..

யோசிச்சுகிட்டே நடந்தேன். தூரத்தில ஒரு பொண்ணு அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் பார்த்தது. ரோடைக் கடக்கணும் போல.

அட கோழியும் இப்படித்தான் இரண்டு பக்கமும் பார்த்துட்டு கடந்திருக்குமோ.

சின்ன கேள்வியோடு கோழியைப் பார்த்தேன். அது பாட்டுக்கு குப்பையைக் கிளறிகிட்டு இருந்தது.

எனக்குப் புரிஞ்ச மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது.

ஆனா மனசு இலேசானது. மெல்ல நடக்க ஆரம்பித்தேன்,

--------------------------------------------------------------

இதை யாரு சொல்லி இருப்பாங்க சொல்லுங்க பார்ப்போம்...
ஹாஹா...
கண்மணியக்கா... வாய்விட்டு சிரித்தேன்....
என்னமோ எழுதும் போது மட்டும் இப்படி மொக்கையா தான் எழுத வருது... என்ன பண்ண...

உங்க வார்த்தைய நிறைவேத்தும் விதமா புதுசா இதே மாதிரி கதை எழுதியிருக்கேன் பாத்துட்டு இரண்டுக்கும் எத்தனை வித்தியாசம்னு சொல்லுங்க... ;););):D:D:D

மதி
18-11-2008, 03:24 PM
மன்ற உறவுகளின் கலாய்ப்பு கலக்கல்... திரியை ஆரம்பிச்ச மதுரை மைந்தருக்கும் தொடர்ந்து எல்லோரையும் கலாய்க்கும் கண்மணியக்காவுக்கும் நன்றி பல....

மதி
18-11-2008, 03:25 PM
ஒரு கோழி ரோட்டைக் கிராஸ் பண்ணினதுக்கா இந்தளவு களேபரம்.
என்ன இப்படி கேட்டுட்டீங்க.. ஒரு கோழி ரோட்ட கிராஸ் பண்றது எவ்ளோ பெரிய விஷயம்... :eek::eek:

Keelai Naadaan
18-11-2008, 03:27 PM
பிரமாதம்...பிரமாதம்...

பாராட்டுக்கள் மதுரை மைந்தரே.:icon_b::icon_b::icon_b:

எல்லோருடைய மிமிக்ரியும் ரசிக்கும்படி இருந்தாலும் சிவா.ஜி அவர்களும், நீங்களும் பொருத்தமாய் எழுதியிருக்கிறீர்கள்.

ரசித்து படித்து சிரித்தேன்.

வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்.

தாமரை
18-11-2008, 03:30 PM
ரொம்ப நாளைக்கு முன்னால நடந்த சாட்தான் ஞாபகத்திற்கு வருது..

அவர்: அந்தக் கல்லூரியிலா படிச்சீங்க, நான் தினமும் அந்தக் கல்லூரியைக் கிராஸ் பண்ணித்தான் போவேன்.

தாமரை: : அப்படித் தெரியலையே. இப்ப ரீஸண்டா கூட காலேஜ் போய் வந்தேனே, காலேஜ் நேராத்தானே இருந்தது..

அவர்:: அய்யோ விட்டுடுங்க..

யார் அந்த அவர்? நம்ம அறிஞர்தான்

anna
18-11-2008, 04:55 PM
உங்க மிமிக்ரிஐ ஒலிப் பதிவு செய்து மன்றத்தில் பதிவு செய்தால் நாங்களும் ரசிப்போமே செய்வீரகளா? பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

ஓ கண்டிப்பாக ஆனால் பதிவு செய்ய எனது வீட்டு கம்யூட்டரில் வசதி இல்லை எனவே அலுவலகம் சென்று நாளை பதிக்கிறேன்.

arun
18-11-2008, 06:55 PM
ஜெயலலிதா: இந்த மாதிரி கோழிகளை ரோட்டைக் கடக்க செய்து அதனால் விளையும் ஆபத்துகளால் சட்ட ஒழுங்கு முறையைக் காக்க தவறிய கருணாநிதி பதவி விலக வேண்டும்.

சூப்பர்... பொருத்தமாக சொல்லி இருக்கிறீர்கள் :icon_b:

அன்புரசிகன்
18-11-2008, 07:45 PM
ஜெயலலிதா: இந்த மாதிரி கோழிகளை ரோட்டைக் கடக்க செய்து அதனால் விளையும் ஆபத்துகளால் சட்ட ஒழுங்கு முறையைக் காக்க தவறிய கருணாநிதி பதவி விலக வேண்டும்.

சூப்பர்... பொருத்தமாக சொல்லி இருக்கிறீர்கள் :icon_b:
தப்பு.........

இப்படித்தான் சொல்வாங்க..

இந்த மாதிரி கோழிகளை ரோட்டைக் கடக்க செய்து அதனால் விளையும் ஆபத்துகளால் சட்ட ஒழுங்கு முறையைக் காக்க தவறிய கருணாநிதி யின் மைனாரிட்டி திமுக பதவி விலக வேண்டும்.

பென்ஸ்
19-11-2008, 12:55 AM
மதுரை மைந்தரே கலக்கலாக இருக்கிறது இந்த பதிவு.... உங்கள் பதிவில் கண்மணியில் குறும்பும்.... பாராட்டுகள் இருவருக்கும்....

சிவா.. அது எப்படி இளசுவை இப்படி கலக்கிவிட்டிங்க.... இளசு பார்க்கலையோ???

சிவா.ஜி
19-11-2008, 03:02 AM
சிவா.. அது எப்படி இளசுவை இப்படி கலக்கிவிட்டிங்க.... இளசு பார்க்கலையோ???

இளசு தாயகம் போயுள்ளார். அதுதான் இன்னமும் பார்க்கவில்லை. அறிஞரும் இந்தப் பக்கம் வரமாட்டேங்கறாரே...

lolluvathiyar
20-11-2008, 05:51 AM
கோழி ஏன் ரோட்டை கடந்தது இதுக்கு இத்தனை பேர் இத்தனை விளக்கம் தராங்களா. சூப்பருங்கோ. நானும் ஏதாவது ஒன்னு தரேன்.

இந்த பக்கம் நம்ம மதுரை வீரன் கடி தாங்க முடியாம ரோட்டுக்கு அந்த பக்கம் தப்பிச்சு ஓட ரோட்டை கடக்குது. என்ன மதுர வீரரே சந்தோசம் தானே

anna
20-11-2008, 05:53 PM
ஓ கண்டிப்பாக ஆனால் பதிவு செய்ய எனது வீட்டு கம்யூட்டரில் வசதி இல்லை எனவே அலுவலகம் சென்று நாளை பதிக்கிறேன்.

அன்பர்களுக்காக ஏதோ எனக்கு தெரிந்தவரையில் மிமிக்ரி செய்து உள்ளேன். இது யார் யார் வாய்ஸ் என கண்டுபிடியுங்கள்.

http://music.cooltoad.com/music/song.php?id=393374
http://music.cooltoad.com/music/song.php?id=393375
http://music.cooltoad.com/music/song.php?id=393376
http://music.cooltoad.com/music/song.php?id=393376
http://music.cooltoad.com/music/song.php?id=393379
http://music.cooltoad.com/music/song.php?id=393377

நல்ல இருந்தாலும் இல்லையானாலும் சும்மா எப்படி இருக்குனு சொல்லுங்க

நதி
20-11-2008, 08:41 PM
ஹஹ்ஹ்ஹ்ஹா...
வரிகளால் வலித்தது போதாதென்று (அசத்தல்ஸ்)
ஒலியால் வலிக்க வைத்தும் விட்டீர்களே.
அண்ணாமலை..
வீராசாமி, கலைஞர் குரல்கள் கனகச்சிதம். மற்றவர்களின் நெருங்கிய சாயல் உள்ளது. மெதுவாகப் பேசும் ரஜினி புதுசு.

மதுரை மைந்தன்
20-11-2008, 11:44 PM
கோழி ஏன் ரோட்டை கடந்தது இதுக்கு இத்தனை பேர் இத்தனை விளக்கம் தராங்களா. சூப்பருங்கோ. நானும் ஏதாவது ஒன்னு தரேன்.

இந்த பக்கம் நம்ம மதுரை வீரன் கடி தாங்க முடியாம ரோட்டுக்கு அந்த பக்கம் தப்பிச்சு ஓட ரோட்டை கடக்குது. என்ன மதுர வீரரே சந்தோசம் தானே

சந்தோசம் தான் வாத்தியாரே. ஆனா இந்த திரில எனது கடியை விட கடிமணி யோட கண், சாரி கண்மணியோட கடி கொஞ்சம் அதிகம்னு படலையா உங்களுக்கு? அவங்களைப் பத்தியும் கொஞ்சம் லொள்ளுங்களேன்

anna
21-11-2008, 06:55 AM
ஹஹ்ஹ்ஹ்ஹா...
வரிகளால் வலித்தது போதாதென்று (அசத்தல்ஸ்)
ஒலியால் வலிக்க வைத்தும் விட்டீர்களே.
அண்ணாமலை..
வீராசாமி, கலைஞர் குரல்கள் கனகச்சிதம். மற்றவர்களின் நெருங்கிய சாயல் உள்ளது. மெதுவாகப் பேசும் ரஜினி புதுசு.

மிக்க நன்றி

மதுரை மைந்தன்
21-11-2008, 09:53 AM
அன்பர்களுக்காக ஏதோ எனக்கு தெரிந்தவரையில் மிமிக்ரி செய்து உள்ளேன். இது யார் யார் வாய்ஸ் என கண்டுபிடியுங்கள்.

http://music.cooltoad.com/music/song.php?id=393374
http://music.cooltoad.com/music/song.php?id=393375
http://music.cooltoad.com/music/song.php?id=393376
http://music.cooltoad.com/music/song.php?id=393376
http://music.cooltoad.com/music/song.php?id=393379
http://music.cooltoad.com/music/song.php?id=393377

நல்ல இருந்தாலும் இல்லையானாலும் சும்மா எப்படி இருக்குனு சொல்லுங்க

நண்பர் prajaannamalai அவர்களே. உங்க மிமிக்ரி அனைத்தையும் கேட்டேன். ஜனகராஜ் கலைஞர் கருணாநிதி கார்த்திக சூப்பர் ஸ்டார் வீராசாமி இவர்களின் குரல்களை அப்படியே கொண்டு வந்து அசத்திட்டீங்க. அறிஞர் ஐயாவிடம் சொல்லி உங்களுக்கு மன்றத்தின் அசத்தல் மன்னர் என்ற பட்டத்தை தர சிபாரிசு செய்கிறேன்.