PDA

View Full Version : ஐ லவ் யூவர் டாட்டர்



ரங்கராஜன்
17-11-2008, 02:16 PM
ஐ லவ் யூவர் டாட்டர்

மகேஷ் தன்னிடம் இருக்கும் மிக உயர்ந்த லேவண்டர் கலர் சட்டையை (பேசிக், 400 ரூபாய்) உடுத்தினான். அழகாக தலையை வாரிக் கொண்டான். ஜவ்வாது செண்டு போட்டுக் கொண்டு புறப்பட்டான். பஸ்ஸில் போகும் பொழுது அவன் இரவெல்லாம் மனப்பாடம் செய்ததை ஒப்பித்தபடியே சென்றான். பஸ் ராமாபுரம் தாண்டி நின்றது. அவன் கையில் பையிலுடன் (ஃப்யில்) இறங்கினான். மிகப் பிரமாண்டமான மென்பொருள் அலுவலகத்துக்குள் நுழைந்தான். முகப்பில் தன்னுடைய விவரத்தை சொல்லி விட்டு காத்து இருந்தான். செக்யூரிட்டி உள்ளே இவனை விடவில்லை, ஆபிஸ் நேரத்தில் யாரையும் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டான். இவன் எவ்வளவோ கூறியும் இவனை உள்ளே விடவில்லை. இவன் என்ன செய்வதுனு தெரியாமல் ரங்கராஜனுக்கு போன் செய்தான்.

"ஹலோ நான் மகேஷ் பேசறேன், உங்க ஆபிஸ் கீழ நிக்கிறேன்" என்றான். எதிர்முனையில் போன் துண்டிக்கப் பட்டது.

செக்யூரிட்டி ரூமில் போன் அலறியது. அவன் போனில் பேசி விட்டு, மகேஷை நோக்கி வந்தான்

"சார் நீங்க போங்க, பி லிஃப்டு-ல போங்க, ரூம் நம்பர்-09" என்றான் செக்யூரிட்டி பவ்யமாக.

மகேஷ் சந்தோஷத்துடன் ரூமை அடைந்தான். ரங்கராஜன் அறையில் கணிணியை பார்த்துக் கொண்டு இருந்தார். நல்ல ஆஜானுபாகுவான ஆள் அவர். வயது 50 இருக்கும், நல்ல அடர்த்தியான மீசை. மகேஷ் அவரைப் பார்த்ததும் வாய் நிறைய சிரித்தான், அவர் பதிலுக்கு அளவாக சிரித்தார்.

"குட்மார்னிங் அங்கிள்"

"மார்னிங் டேக் யூர் சீட்"

"அங்கிள் இதான் என்னுடைய மார்க் லிஸ்டு"

"குட், எதாவது காபி சாப்பிடுறீங்களா" என்று போனை எடுத்து காபி ஆர்டர் பண்ண போனவரை

"இல்ல அங்கிள், நல்ல செய்தியா சொல்லுங்க அப்புறம் கை நனைக்குறேன் அங்கிள்"

"ஜஸ்ட் கால் மீ ரங்கராஜன்" என்றார். மகேஷ்க்கு சுறுக்கென்று இருந்தது.

"இல்ல பெரியவங்கள பேர் சொல்ல கூடாது, நான் சார்னு கூப்பிடுறேன்"

"தட்ஸ் பேட்டர், ஓ.கே சொல்லுங்க....... வாட்ஸ் யூவர் நேம்" என்றார். அவனுக்கு இன்னும் சுறுக்கென்றது.

"ம...ம..மகேஷ்"

"ஆ....மகேஷ், சொல்லுங்க"

"சார் அதுவந்து ஐ லவ் யூவர் டாட்டர் சார், அவளும்..... சாரி அவங்களும் தான்,..... அதைப் பற்றி பேச நீங்க தான் இங்க வரச் சொன்னீங்கனு உங்க டாட்டர் சொன்னாங்க"

"யெஸ் மகேஷ் ஐ ரிமம்பர், எந்த கம்பனியில வேலை செய்றீங்க, வாட்ஸ் யூவர் ஆனுவல் இன்கம், அண்டு ஹவ் மச் மனி யூ ஹவ் இன்வெஸ்டடு இன் சேர்ஸ்...."

"சார்....சார்... நான் இன்னும் வேலை தேடினு இருக்கேன்"

"ஓ குட் எப்ப கிடைக்கும்"

"சீக்கிரம்"

"காலேஜ் முடித்து 3 வருஷம் ஆச்சி, மொத்தம் எத்தனை வருஷமா லவ் பண்றதா சொன்னீங்க"

" 6 வருஷமா?......., நான் அகிலாவை நல்லபடியா பார்த்துப்பேன் சார்" என்றான். அவர் சத்தமாக சிரித்தார். மகேஷ்க்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

"ஐயம் சாரி மகேஷ், ஐ காண்டு கன்ரோல் இட், நான் இந்த கம்பனியுடைய சீனியர் ஏ.ஒ, எனக்கு சம்பளம் 75,000 ரூபாய். என்னால என் மனைவியை சந்தோஷமா வச்சிக்க முடியில அவளுக்கு ஒரு டைமண்டு நெக்லஸ்ல வாங்கிதர முடியில ஆறு மாசமா"

"சார் எங்க காதல் உண்மையானது, சந்தோஷம் என்பது நெக்லஸ்ல இல்ல"

"எக்ஸ்செக்ட்லி எக்ஸ்செக்ட்லி, ஆனா திண்ண சோறு இல்லைனா காதல் இனிக்குமா?"

"உண்மைக்காதல்னா......"

"ஏய் மகேஷ் ஸ்டாப் இட் மேன், நாம நண்பர்களாக பேசுவோம். தோபாரு மகேஷ் ஆம்பளைகளுக்கு வேலை தான் புருஷலச்சனம், அது இல்லைனா யாரும் மதிக்க மாட்டாங்க. யாராக இருந்தாலும் ஏன் நானாக இருந்தாலும், அகிலாவாக இருந்தாலும், ஏன் உங்க வீட்டிலயும் தான். சரி நீ படிக்கு பொழுது உன் வீட்டில் உனக்கு என்ன மரியாதை இருந்தது இப்ப என்ன இருக்கு யோசித்து பார், அது அவங்க மேல தப்பு இல்லை"

மகேஷ் அமைதியாக தலையை குனிந்தான்.

"மை டியர் எங் மேன், நான் சொல்வதை கேள். நீயும் அகிலாவும் ஒன்னா சந்தோஷமாக சேர்ந்து வாழ முடியாது, ஏன்னா அவ வாழ்ந்த வாழ்க்கை வேற, நீ வாழற வாழ்க்கை வேற. இத ஒரு ஹய் கிளாஸ் மேனா சொல்ல்லை நானும் உன்ன மாதிரி தான் ஒரு கஷ்ட ஜீவனம் செய்யும் குடுமபத்துல இருந்து வந்தவன் என்ற தகுதியில் சொல்றேன்"

"சார் உங்கள மாதிரி நானும் பெரிய ஆள வருவேன் சார்"

"கண்டிப்பா வரணும் ஆனா நான் 20 வயதில் வேலைக்கு சேர்ந்து உன் வயதில் நான் ஒரு ஆபிஸையே கவனித்தேன். ஆனால் நீ இன்னும் வேலை தேடுகிறாய். நீ இந்த சினிமாவில் வருவது போல ஓரே பாட்டில் எல்லாம் முன்னேற முடியாது. என்னை தப்பாக நினைக்காதே உண்மை அதான், வாழ்க்கை வேறு கனவு வேறு"

"கனவு கண்டா தானே வாழ்க்கையை அடைய முடியும்"

"இந்த மாதிரி டைலாக்கெல்லாம் வேலைக்கு ஆவாது எங் மேன். 15-18 வயசுல கனவுகாணும், 18-24 வரை அதற்க்கான தகுதி பண்ணிக்கனும், 24-30 அதை செயல் படுத்தனும், 30 வயசுக்கு மேல அதனுடைய வெற்றியை ருசிக்கனும், கல்யாணம் பண்ணி மூணு மாசத்துல நீங்க இரண்டு பேரும் வெறுத்து ஒதுங்க வேண்டுமா?, நீங்களே யோசிங்க"

மகேஷ் அமைதியாக அமர்ந்தான். ரங்கராஜன் அவனை பார்த்து கொண்டு இருந்தார். அவன் கீழே பார்த்துக் கொண்டு இருந்தான்.

"என்ன மகேஷ் என்ன சொல்றீங்க"

"சார் ஒரு காபி சொல்லுங்க" என்றான் கண்களை துடைத்தபடி.

மதி
17-11-2008, 02:35 PM
யதார்த்தமான கதை.. ஆனாலும் இன்னும் வேலைகூட கிடைக்காமல் பொண்ணு கேட்டு போறவங்க இருக்காங்களா என்ன...??

இந்தக் கதைக்கு ஆங்கிலத்தில் தலைப்பு தேவையா...? முடிந்தால் தமிழில் வைய்யுங்களேன்.

ராஜா
17-11-2008, 02:38 PM
ஐ லவ் யூவர் டாட்டர்


"ஐயம் சாரி மகேஷ், ஐ காண்டு கன்ரோல் இட், நான் இந்த கம்பனியுடைய சீனியர் ஏ.ஒ, எனக்கு சம்பளம் 75,000 ரூபாய். என்னால என் மனைவியை சந்தோஷமா வச்சிக்க முடியில அவளுக்கு ஒரு டைமண்டு பேண்டண்டு வாங்கிதர முடியில ஆறு மாசமா"

:icon_b::icon_b::icon_b::icon_b:




ஆனா திண்ண சோறு இல்லைனா காதல் இனிக்குமா?"

:icon_b::icon_b::icon_b:



. நீ இந்த சினிமாவில் வருவது போல ஓரே பாட்டில் எல்லாம் மூன்னேற முடியாது. என்னை தப்பாக நினைக்காதே உண்மை அதான், வாழ்க்கை வேறு கனவு வேறு"
:icon_b::icon_b::icon_b::icon_b:



"இந்த மாதிரி டைலாக்கெல்லாம் வேலைக்கு ஆவாது எங் மேன். 15-18 வயசுல கனவுகாணும், 18-24 வரை அதற்க்கான தகுதி பண்ணிக்கனும், 24-30 அதை செயல் படுத்தனும், 30 வயசுக்கு மேல அதனுடைய வெற்றியை ருசிக்கனும், கல்யாணம் பண்ணி மூணு மாசத்துல நீங்க இரண்டு பேரும் வெறுத்து ஒதுங்க வேண்டுமா?, நீங்களே யோசிங்க"

:icon_b::icon_b::icon_b:





எதார்த்தங்களை இலகுவாகச் சொல்லும் சிந்தனையும், வன்மையும் உங்களுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கின்றன மூர்த்தி.. பாராட்டுகள்..!

ரங்கராஜன்
17-11-2008, 03:03 PM
இன்னும் வேலைகூட கிடைக்காமல் பொண்ணு கேட்டு போறவங்க இருக்காங்களா என்ன...??

இந்தக் கதைக்கு ஆங்கிலத்தில் தலைப்பு தேவையா...? முடிந்தால் தமிழில் வைய்யுங்களேன்.

நன்றி மதி
இருக்காங்க மதி, வேலையில்லாமல் கல்யாணம் செய்து கொள்பவர்களே இருக்காங்க.

இதை தமிழில் "நான் உங்கள் மகளை காதலிக்கிறேன்" ன்னு வைக்க முடியாது மதி. தப்பாக நினைக்க மாட்டிங்கன்னு சொன்னேன். எனக்கு நீங்களே ஒரு நல்ல தலைப்பை சொல்லுங்க மதி நன்றாக இருந்தால் மாத்தி விடலாம்.

ரங்கராஜன்
17-11-2008, 03:06 PM
எதார்த்தங்களை இலகுவாகச் சொல்லும் சிந்தனையும், வன்மையும் உங்களுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கின்றன மூர்த்தி.. பாராட்டுகள்..!

நன்றி அண்ணா
உங்களுக்கு பிடிச்சி இருந்தா சரி

mukilan
17-11-2008, 03:12 PM
உங்கள் குருஜியின் பாதையில் போறீங்க போல. யதார்த்ததை ரசித்தேன் மூர்த்தி. காதல் எனும் கானல் நீரில் மீன் பிடிக்க நினைக்கும் கனவுலகில் வாழும் பையன்களுக்கு நல்ல பாடமாக அமையட்டும்.

"அண்டு ஹவ் மச் மனி யூ ஹவ் இன்வெஸ்டடு இன் ஹார்ஸ்....""".....


சேர்ஸ்னு சொல்ல வந்தீங்களோ?

ரங்கராஜன்
17-11-2008, 03:30 PM
"அண்டு ஹவ் மச் மனி யூ ஹவ் இன்வெஸ்டடு இன் ஹார்ஸ்....""".....


சேர்ஸ்னு சொல்ல வந்தீங்களோ?

நன்றி முகிலன்
நீங்கள் முழுமையாக படித்தீர்கள் என்ற சான்று இது, நன்றி மாற்றி விட்டேன்

ஓவியா
17-11-2008, 04:03 PM
நல்ல கரு. அதற்க்கு முதல் பாராட்டு
நல்ல உரையாடல் நடை அதற்க்கு இரண்டாம் பாராட்டு
'ஒரு காப்பி' என்ற ஒரு வரியில் ஒரு முடிவு அதற்க்கும் பாராட்டு

கதை சுவாரஸ்யமாக போகின்றது, இருப்பினும் 6 வருடமாக காதலிக்கும் ஒரு காதல் தனக்கு வேலையில்லை என்பதால் கைநழுவி போவது என்பது ஒருவனுக்கு மரணத்தின் முதல் வலியை அனுபவிப்பதற்க்கு சமம்.

மூர்த்தி எழுத்துலகில் தங்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருப்பதாக ஒரு ஒளி என் கண்களுக்கு தெரிகிறது. வாழ்த்துக்கள்.

என் தாழ்மையான வேண்டுகோள். மிக அதிகமான ஆங்கில கலவையை கையாளும் விதம் சருக்கலின் முதற்ப்படி. முடிந்தால் தவிருங்கள். ஆங்கில தலைப்பை கண்டு கதையை காணமல் போவும் மனிதர்கள் பலர் இருக்கின்றனர், என்னையும் சேர்த்து.

********************************************************************************************************
(அன்று ராஜா அண்ணாவின் கதையும் இப்படிதான் இருந்தது, இன்று மூர்த்தியின் கதையும் அப்படியே. இதற்க்கும் என் கருத்து இதேதான்)

தற்ப்பொழுது மக்கள் 90% இப்படிதான் உறையாடுகின்றனர் என்பது தெரிந்த விசயம்தான்.
இருப்பினும், நடைமுறை வசனமாக இருந்தாலும் சரி, முடிந்தவரை ஆங்கிலம் இல்லாமல் இருந்தால் தமிழ் மன்றம் இன்னும் சிறக்கும். தமிழ் மன்றத்தை சிறப்பிப்பது அனைவரின் கடமை. :icon_b:

aren
17-11-2008, 05:26 PM
நல்ல கதை மூர்த்தி. காதல் செய்யலாம், ஆனால் கல்யாணம் செய்வதற்கு முன்பாக வீட்டிற்கு வரும் மனைவியை வைத்து காப்பாற்ற முடியுமா என்று முதலில் பார்க்கவேண்டும் பின்னரே அதைப்பற்றி யோசிக்கவேண்டும்.

ரங்கராஜம் ஒரு யதார்த்தவாதி, யதார்த்தைப் பேசுகிறார். மகேஷ் கவலைப்படவேண்டாம், முனைப்புடன் காரியத்தில் இறங்கினால் வெற்றி நிச்சயம்.

ரங்கராஜன்
18-11-2008, 02:55 AM
நல்ல கதை மூர்த்தி. காதல் செய்யலாம், ஆனால் கல்யாணம் செய்வதற்கு முன்பாக வீட்டிற்கு வரும் மனைவியை வைத்து காப்பாற்ற முடியுமா என்று முதலில் பார்க்கவேண்டும் பின்னரே அதைப்பற்றி யோசிக்கவேண்டும்.

ரங்கராஜம் ஒரு யதார்த்தவாதி, யதார்த்தைப் பேசுகிறார். மகேஷ் கவலைப்படவேண்டாம், முனைப்புடன் காரியத்தில் இறங்கினால் வெற்றி நிச்சயம்.

வெற்றி வெற்றி
திரு. அரென் அவர்களே உங்களுடைய + -வான பதிலுக்கு நன்றி

ரங்கராஜன்
18-11-2008, 03:12 AM
கதை சுவாரஸ்யமாக போகின்றது, இருப்பினும் 6 வருடமாக காதலிக்கும் ஒரு காதல் தனக்கு வேலையில்லை என்பதால் கைநழுவி போவது என்பது ஒருவனுக்கு மரணத்தின் முதல் வலியை அனுபவிப்பதற்க்கு சமம்

என் தாழ்மையான வேண்டுகோள். மிக அதிகமான ஆங்கில கலவையை கையாளும் விதம் சருக்கலின் முதற்ப்படி. முடிந்தால் தவிருங்கள். ஆங்கில தலைப்பை கண்டு கதையை காணமல் போவும் மனிதர்கள் பலர் இருக்கின்றனர், என்னையும் சேர்த்து..

1. அதான் இந்த கதையின் வலியே

2. உங்களின் வேண்டுகோளை பாராட்டுக்கு உரியதே. என்னுடைய முதல் ஆங்கில தலைப்பு கதை இது, இதுவரை என்னுடைய பழைய கதைகளில் நான் தமிழை தவிர வேறு வைத்ததில்லை. ஏனென்றால் அந்த கதைக்கு அது சரியாக பட்டது, அதே போல தான் இந்த கதைக்கு இந்த தலைப்பு சரியாக பட்டது. அதே போல இந்த கதையில் வரும் ஆங்கில வார்த்தைகள் எல்லாம் அவசியமானது (புரிதலை நாடி), ஏனென்றால் கதையின் ஓட்டம் அப்படி, இந்த ஆங்கில வார்த்தைகளை எடுத்து விட்டு தமிழில் போட்டு பாருங்கள், உங்களுக்கு கதாபாத்திரத்தின் வேறுபாடு உணர முடியாது. அதனால் தான்?. நான் கூடிய அளவில் ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பது இல்லை தவிர்க முடியாத பட்சத்தில்.

நண்பர்களே இந்த கதைக்கு ஒரு சிறந்த தமிழ் தலைப்பை தாருங்கள், பாராபச்சம் இல்லாமல் எனக்கு பிடிக்கும் பட்சத்தில் அந்த நண்பருக்கு ஐ-கேஷ் 200 தருகிறேன் (ஏனென்றால் என்னிடம் கொஞ்சமா தான் ஐ-கேஷ் இருக்கு)

சிவா.ஜி
18-11-2008, 03:29 AM
1960 களிலிருந்து கையாளப்பட்ட கருதானென்றாலும், புதிதாக எதையும் சொல்லவில்லையென்றாலும், எதார்த்தமாக இருக்கிறது. பாராட்டுக்கள் மூர்த்தி.

ரங்கராஜன்
18-11-2008, 03:47 AM
1960 களிலிருந்து கையாளப்பட்ட கருதானென்றாலும், புதிதாக எதையும் சொல்லவில்லையென்றாலும், எதார்த்தமாக இருக்கிறது. பாராட்டுக்கள் மூர்த்தி.

வித்தியாசமான கருத்து தந்ததுக்கு நன்றி திரு.சிவா

SivaS
18-11-2008, 03:50 AM
ஐ லவ் யூவர் டாட்டர்

15-18 வயசுல கனவுகாணும், 18-24 வரை அதற்க்கான தகுதி பண்ணிக்கனும், 24-30 அதை செயல் படுத்தனும், 30 வயசுக்கு மேல அதனுடைய வெற்றியை ருசிக்கனும்.

சூப்பர்!!!!!!!!!!
வாழ்கைய அனுபவிக்க தெரிந்தவர்களின் கருத்து:icon_b::icon_b:

ஓவியா
18-11-2008, 11:09 AM
மூர்த்தி, இந்த கதைக்கு இந்த தலைப்புதான் பொருந்தும் என்றால் அது அப்படியே இருக்கட்டும். அடுத்த கதையில் மாற்றியமைக்கலாம்.

நான்தான் சொன்னே நடைமுறையில் மக்கள் இப்படிதான் உறையாடுவார்கள் என்று, ஆனாலும் அதை தமிழ் வார்த்தைகள் கொண்டு செம்மைபடுத்த்துவது ஆசிரியரிடமல்லாவா உள்ளது. :)

ஓவியன்
18-11-2008, 11:34 AM
இதுதான் யதார்த்தம், ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் உண்மையும் அதுதானே....

முதலில் சுவர் வேண்டும், சுவரிருந்தால் வேண்டிய விதத்தில் சித்திரம் வரைந்திடலாம்...

கொஞ்சம் எழுத்துப் பிழைகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள் என்ற என் அன்பான வேண்டுதலுடன் மனதார்ந்த வாழ்த்துக்கள் மூர்த்தி..!!

ஓவியன்
18-11-2008, 11:38 AM
தற்ப்பொழுது மக்கள் 90% இப்படிதான் உறையாடுகின்றனர் என்பது தெரிந்த விசயம்தான்.

ஆமாம், இது எங்கிருந்து கிடைத்த புள்ளிவிபரம்..?, இந்த புள்ளிவிபரத்திற்கு ஆதாரமான கருத்துக்கணிப்புப் பற்றி முழு விபரம் தந்தால் பெரு மகிழ்ச்சியடைவேன்....

செல்வா
18-11-2008, 02:20 PM
முதலில் மன்றில் பதிந்த தங்கள் கதைக்கு எனது வாழ்த்துக்கள் மூர்த்தி.
எனக்கென்னவே இந்தக் கதையோடு ஒத்துப்போக முடியவில்லை...
இந்தக்கதை எதார்த்தம் என்பதை விடவும் ஏற்றத்தாழ்வின் வெளிப்பாடாகத்தான் இருக்கிறது....
படித்து முடித்தபின் பல கேள்விகள் மனதில்
வேலையில்லை என்ற ஒரே காரணத்திற்காக காதலை உதறித்தள்ளுவதா?
ஆறு வருடக் காதல் மனம் இருந்தால் 75000 சம்பளம் வாங்கும் ஒருவரால் அவனுக்குத் தொழில் செய்யவோ அல்லது வேறு வேலைகளுக்குரிய வாய்ப்பை உருவாக்க்கித்தர முடியாதா?
அப்படி வாய்ப்புகள் கிடைத்தும் அவன் பயன்படுத்தவில்லை என்றால் அவர் கேட்கும் கேள்விகள் சரி என ஒத்துக்கொள்ளலாம். வாய்ப்புகளே வழங்காமல் வேலையில்லை என்ற காரணத்தை வைத்து காதலைத் துறப்பது மனம் ஒத்துக் கொள்ளவில்லை...

வேலை இல்லை என்ற ஒற்றைக் குறையைக் காரணம் காட்டி ஒரு ஏழைக்கு தன் மகளை மணமுடிக்க மறுப்பதோடு வேலை இல்லாமல் காதலித்தது குற்றம் என்ற ஊணர்வை அவனுள் தோற்றுவித்து அவர் செய்யும் தவறை அவரே ஞாயப்படுத்திக் கொள்வதோடு வாசகன் மனதிலும் அதை விதைக்கிறது இந்தக் கதை தன் முடிவின் வழியாக.

காதல் மனிதர்களுக்குள் வருவது... பொதுவானது. அதற்கு வேலை தேவை இல்லை. வேறு எதுவும் தேவைஇல்லை மனிதர்கள் போதும்.

ஆனால் ஒரு வேலை அல்லது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பல விடயங்கள் தேவைப்படுகிறது.
யாராவது ஒருவர் சொல்லட்டும் என்வாழ்க்கை முழுவதும் நானாகவே யாருடைய உதவியுமின்றி தனியனாக முன்னேறினேன் என்று. கண்டிப்பாக இயலாது. ஒவ்வொரு கட்டத்தில் நம்மை அறியாமலே ஒவ்வொருவர் தூண்டுகோலாக இருந்திருப்பர்.

அத்தகைய ஒருவராக அந்த மனிதர் ஏன் இருக்க இயலாது? அப்படி இருக்க வேண்டும் என்பதே என் அவா.

மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

ரங்கராஜன்
19-11-2008, 03:56 AM
காதல் மனிதர்களுக்குள் வருவது... பொதுவானது. அதற்கு வேலை தேவை இல்லை. வேறு எதுவும் தேவைஇல்லை மனிதர்கள் போதும்.

.
நன்றி
காதலுக்கு எதுவுமே தேவையில்லை காதலிக்க எதிர்பாலினத்தவர் இருந்தால் போது, உண்மை தான் ஆனால் கல்யாணத்துக்கு எல்லாம் தேவை.

ஆறு வருடங்களாக காதலித்தவன் ஒரு வேலை வாங்க முடியவில்லை என்பது அவனின் அலட்சிய போக்கை காட்டுது.

உண்மையில் எனக்கு ஒரு பெண் இருந்தால் நான் வாசு மாதிரி ஆட்களுக்கு கொடுக்க மாட்டேன்

நன்றி

பாரதி
19-11-2008, 02:09 PM
அன்பு மூர்த்தி,

கண்களை துடைத்தபடி " சார், ஒரு காபி சொல்லுங்க" என்று சொல்வதற்காக ஆறு வருட அன்பு?? பொதுவாக காதல் என்பது நடைமுறை வாழ்க்கையை சார்ந்ததாகத்தான் அமைய வேண்டுமா? ஆங்கில வார்த்தைகள் அதிகமாக இடம்பெற்றதாகத்தான் எனக்கும் தோன்றுகிறது. தலைப்பு... இயன்ற வரையில் ஆங்கிலத்தை தவிர்க்கலாம். கதை எழுதும் விரல்களுக்கு சரியான தலைப்பை இடுவதிலும் எந்த சிரமமும் இருக்கப்போவதில்லை.

தொடர்ந்து நல் ஆக்கங்களை இங்கு படைத்து வர வாழ்த்து மூர்த்தி.

ஆதவா
19-11-2008, 02:35 PM
உண்மையிலேயே காதலுக்கு என்ன தேவை? நல்ல வாழ்க்கை.. அந்த காதல் தொய்வடையாமல் நீண்டு நெடுநாட்கள் வாழ பணம் தேவை..

திருமணத்திற்குப் பின் தேடல்கள் அத்தியாவசியங்களும் அதிகமாகிவிடுகின்றன. இங்கே வெற்றுக் காதல் உதவாது செல்வா.. வெறும் காதலையும் கவிதைகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?

நல்ல வேலையில் இருந்தும் குறைந்த சம்பாத்தியம் என்ற காரணத்தினால் ஒத்த கருத்துடைய ஒருத்தியை நான் இழக்க நேரிட்டது... இங்கு வேலையே இல்லை என்றால்?????

சினிமாக்கள் வேண்டுமானால் காதலை எப்படி வேண்டுமென்றாலும் பேசிக்கொள்ளலாம்... வாழ்க்கை என்ற யதார்த்தத்திற்குள் நுழையும் பொழுது இவையெல்லாம் ஒத்துவராது.

அவன் காதலித்தது குற்றம்தான்... தான் வாழவே இன்னொருவனை நாடும் நிலையில் இருக்கும் அவன், பிறகு எப்படி அடுத்தவளள வாழ வைப்பான்? காதலுக்கு தகுதி முக்கியம்... அந்தத் தகுதியில் காதலனோ காதலியோ தள்ளாட்டமின்றி நிற்கும் திறம் மிகுந்தவர்களாக இருத்தல் அவசியம்..

சரி, இந்த ஆபீசரால் ஏன் அந்தக் காதலனை ஏற்ற முடியாது??? முடியும்... அதற்காக பொண்ணைக் கேட்பது ஓவர்...

அவன் எப்படிப்பட்டவன் என்று அறியாத நிலையில் வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஒருவனுக்குப் பெண்ணைத் தருவதைக் காட்டிலும் நன்கு விசாரித்து ஒரு மாப்பிள்ளைத் தேடித்தர முயலும் அப்பாக்கள் என்றுமே சாபம் பெற்றவர்கள்தான்.....

திருவிளையாடல் என்ற தமிழ் திரைப்படம் நீங்கள் கண்டிருக்கலாம்... உங்கள் கேள்விக்களுக்கும் சந்தேகங்களுக்குமான விடை அப்படத்தில் கிடைக்கலாம்...

வாழ்த்துக்கள் மூர்த்தி..

aren
19-11-2008, 07:20 PM
வெற்றி வெற்றி
திரு. அரென் அவர்களே உங்களுடைய + -வான பதிலுக்கு நன்றி

நான் ரொம்பவும் நெகடிவ்வான பார்ட்டி என்று நினைத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

செல்வா
19-11-2008, 09:01 PM
இல்லை ஆதவா உங்கள் கருத்தை நான் மறுக்கிறேன். உங்கள் கருத்துப்படிப் பார்த்தால் வறுமை இருக்கும் இடத்தில் காதலுக்கு வழியில்லை என்றுச் சொல்கிறீர்களா?
உலகில் மனிதன் தோன்றிய நாளிலிருந்தே காதலும் இருக்கிறது. நாளை உயிரோடு இருப்போமா? என்ற நிலையிலும் எப்போது குண்டு விழுமோ எப்போது துப்பாக்கி இரவைகள் துளைக்குமோ என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழும் மனிதர்கள் மத்தியிலும் காதல் இருக்கும் இருக்க வேண்டும் இல்லை என்றால் உயிர்கள் இல்லை.
சரி நல்ல வணிகம் செய்து வசதியாக இருக்கும் ஒருவரைத் திருமணம் செய்து வைக்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள் வணிகத்தில் நட்டம் ஏற்பட்டு வறுமை வந்து விட்டால் உடனே காதல் போய்விடுமா?

தனது அப்பாவும் அண்ணணும் சம்பாதித்து வைத்த சொத்தை அனுபவிக்காமல் ஊரைவிட்டு ஓடி ஒரு மனதாய் உழைத்து முன்னேறி இன்று ஊரே வியக்கும் வண்ணம் வாழ்பவர்கள் பலர் இருக்கின்றனர்.

என்னோடு உடன் படித்த எனது நண்பன் ஒருவனின் வாழ்வே அதற்குச் சாட்சி. சென்னை நகரத்தில் கூலிவேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி படிப்படியாக முன்னேறி இன்று வளைகுடாவில் நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனது பூர்வாங்கம் தெரிந்ததால் நான் ஆணித்தரமாகச் சொல்கிறேன். பத்தாம் வகுப்பில் தப்பிப் பிழைத்தவன். அதன் பிறகும் படிக்காமல் ஊர்சுற்றிக் கொண்டிருந்தவன்.
அவனை பொறுப்புடன் வாழ வைத்தது எது? காதல். அவனோடு கூட இருந்து துன்பத்திலும் துணையாயிருந்து அவனை தூக்கி நிறுத்திய அவன் துணைவியும் அவனது காதலும். இது ஒரு நிகழ்வு மட்டுமல்ல இன்னும் எத்தனையோ உதாரணங்களை நான் தர இயலும் அனைத்தும் எனது வாழ்வில் நான் சந்தித்த மனிதர்களின் வாழ்விலிருந்தே வரும் ஆதாரங்கள்.

ஆறுவருடங்களாகக் காதலிக்கும் ஒரு பெண் தன் மனதில் எத்தகைய கனவுகளை ஆசைகளைச் சுமந்திருப்பாள் அந்த ஆசைகளைக் கனவுகளை நிறைவேற்றுவதில் ஒரு தந்தைக்குக் கடமை இல்லையா?

எதைவைத்து மகேஷை பொறுப்பற்றவன் என்று சொல்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை?

வாழ்க்கைக்கு வெறும் காதல் போதுமா பணம் தேவையில்லையா?
தேவைதான் பணம் தேவைதான். அந்தப் பணத்தை சம்பாதிக்கும் பொறுப்பையும் உத்வேகத்தையும் தைரியத்தையும் காதல் கொடுக்கும். காதலைத் தொலைத்து விட்டு எவ்வளவு சம்பாதித்து வாழ்ந்தாலும் வாழும் வாழ்வில் உயிர் இருக்காது. எத்தனை தான் புது மனைவியுடன் குழந்தைகளுடன் பாசம் காட்டி வாழ்ந்தாலும் ஆறுவருடக் காதல் ஆறிப்போய்விடாது ஒரேயடியாக.... அடிமனதில் இருந்து அழுத்திக் கொண்டேதான் இருக்கும்.



உண்மையில் எனக்கு ஒரு பெண் இருந்தால் நான் வாசு மாதிரி ஆட்களுக்கு கொடுக்க மாட்டேன்

நன்றி

அது சரி இது என்ன கதையில் இல்லாதப் புதுப் பாத்திரம் :D

ரங்கராஜன்
20-11-2008, 02:29 AM
நான் ரொம்பவும் நெகடிவ்வான பார்ட்டி என்று நினைத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.


கண்டிப்பாக இல்லை திரு.அரென்
நான் வெற்றி வெற்றி என்று எழுதியது என் கதையை நல்ல கதை என்று நீங்கள் முதல் முறையாக அங்கிகரிச்சதுக்கு

அப்புறம் என்னுடைய கதையில் உள்ள நாயகனுக்கு பாஸிடிவ் ஆன முடிவை சொன்னதுக்கு.

நீங்கள் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள், நன்றி

ரங்கராஜன்
20-11-2008, 02:41 AM
நன்றி செல்வா
உங்களின் கருத்துக்கு நீங்கள் காதலின் பொது தன்மையை பற்றி பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த கதையில் வரும் கதாபாத்திரத்தின் படி தான் முடிவு தரப்பட்டு உள்ளது. யாதார்த்தமான அப்பா, காதலின் அர்த்தம் தெரியாத பொண்ணு, சினிமாவின் தாக்கத்தில் காதலித்த மகேஷ் அவ்வளவு தான், இந்த கதையில் என்ன நியாயம் செய்ய முடியுமோ அதை தான் செய்தேன்.

வாசு என்பவன் தான் இந்த கதையை எழுத காரணமே, நீங்கள் கேள்வி கேட்டதும் என்னையும் மறந்து ஒரு தகப்பனா தான் நான் பதில் எழுதினேன், அப்பொழுது மகேஷ் என்ற நிழல் பெயர் மறைந்து நிஜ பெயர் நியாபகம் வந்து விட்டது.

நன்றி

செல்வா
20-11-2008, 06:04 AM
காதலின் பொது தன்மையை பற்றி பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த கதையில் வரும் கதாபாத்திரத்தின் படி தான் முடிவு தரப்பட்டு உள்ளது. யாதார்த்தமான அப்பா, காதலின் அர்த்தம் தெரியாத பொண்ணு, சினிமாவின் தாக்கத்தில் காதலித்த மகேஷ் அவ்வளவு தான், இந்த கதையில் என்ன நியாயம் செய்ய முடியுமோ அதை தான் செய்தேன்.


தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் மூர்த்தி. உங்கள் கதையை குறை சொல்லவில்லை. உங்கள் திறமையையும் குறைத்துச் சொல்லவில்லை. கதையின் கருவில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் விளைந்த கருத்து மோதல் தான் இது. இத்தகைய கருத்து மோதல் தான் மன்றத்தின் பலம் என நான் எண்ணுகிறேன். ஆதவனின் கருத்துக்கு தகுந்த ஆதாரத்துடன் பதில் கொடுக்க வேண்டும் எனத்தோன்றியதால் நான் கண்டவற்றிலிருந்து பதிவிட்டேன்.
நான் காதலின் பொதுத்தன்மையைப் பற்றிப் பேசவில்லை. காதல் என்பதே ஒரு உணர்வு அது மனிதனோடு உருவானது அந்த உணர்வை மனிதன் உருவாக்கிய வாழ்க்கை வசதி பணம் வேலை போன்றவற்றால் மறுக்கச் சொல்லுவதும் மறக்கச் சொல்லுவதும் தான் இயல்புக்கு மாறானது என்பதை வலியுறுத்துகிறேன். அவ்வளவே...

உங்கள் மனதில் தோன்றியதை நீங்கள் கதையாகப் படைத்துள்ளீர்கள் அது இத்தகையச் சிந்தனையை ஒரு விவாதத்தை தூண்டி விட்டுள்ளது. இது மன்றத்தில் சாதாரணமாக நடப்பது தான். வெறும் படைப்புகள் மட்டுமல்லாது படைப்புகள் தொடும் கருத்துகளின் மீதான விவாதங்கள். உங்களுக்கு கடினமாக இருந்தால் இதைத் தனித்திரியாக விவாதக்களத்தில் விவாதிக்கலாம். ஆதவாவின் பதிலைப் பொறுத்து முடிவுசெய்வோம். என்ன சொல்கிறீர்கள் ஆதவரே.

ரங்கராஜன்
20-11-2008, 06:11 AM
நண்பரே
நான் கண்டிப்பாக தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டேன். மூத்தவர்கள் நீங்கள் எந்த விமர்சனமும் தரலாம், உங்களின் விமர்சனங்களில் உங்களைவிட எனக்கு தான் லாபம், பல கரு எனக்கு கிடைக்கும். நீங்கள் என்னை தப்பாக நினைக்காதீர்கள். நீங்கள் தான் எங்களை போன்றோரை வழி நடத்தவேண்டும் நன்றி.

சிறுபிள்ளை
21-11-2008, 04:36 AM
எல்லாமே சரிதான்.. ஆனால் வாதங்கள் அதைவிட பலமாக அமைதுள்ளது. முடிவு கொஞ்சம் நெருடல்தான்...ஆனால் ஒவ்வொறு மனிதனின் மனனிலையும் வேறு வேறு அல்லவா?

பாராட்டுக்கள் மூர்த்தி.

உங்கள் சிறுபிள்ளை.

ரங்கராஜன்
21-11-2008, 05:52 AM
எல்லாமே சரிதான்.. ஆனால் வாதங்கள் அதைவிட பலமாக அமைதுள்ளது. முடிவு கொஞ்சம் நெருடல்தான்...ஆனால் ஒவ்வொறு மனிதனின் மனனிலையும் வேறு வேறு அல்லவா?

பாராட்டுக்கள் மூர்த்தி.

உங்கள் சிறுபிள்ளை.

நன்றி சிறுபிள்ளை
ஆம் நீங்கள் கூறுவது உண்மை தான் இது கொஞ்சம் பெரியபிள்ளைகளின் முடிவு.

சிறுபிள்ளை
21-11-2008, 06:05 AM
நன்றி சிறுபிள்ளை
ஆம் நீங்கள் கூறுவது உண்மை தான் இது கொஞ்சம் பெரியபிள்ளைகளின் முடிவு.

ஓ அப்படியா...ஆனால் உங்கள் வயது என்னைவிட குறைவாக உள்ளதே.
சும்மா விளையாட்டுக்குத்தான் கூறினேன் கோபித்துக்கொள்ள வேண்டாம் நண்பர் மூர்த்தியே.

ரங்கராஜன்
21-11-2008, 06:09 AM
ஓ அப்படியா...ஆனால் உங்கள் வயது என்னைவிட குறைவாக உள்ளதே.
சும்மா விளையாட்டுக்குத்தான் கூறினேன் கோபித்துக்கொள்ள வேண்டாம் நண்பர் மூர்த்தியே.

ஹா ஹா நன்றி நண்பரே
நான் பெரியபிள்ளை என்று கூறியது என்னை இல்லை, இதில் பெண்ணின் அப்பா கதாபாத்திரத்தில் இருக்கும் ரங்கராஜனை குறிப்பிட்டேன். தப்பாக எடுத்துக் கொள்ளாமல் பதில் அளித்ததுக்கு நன்றி

சிறுபிள்ளை
21-11-2008, 06:40 AM
தவறாக எடுத்துக்கொள்ள ஏன்ன இருக்கிறது நண்பரே... தொடர்ந்து அசத்துங்கள்.

ஆதவா
22-11-2008, 04:18 AM
நீங்கள் காதல்ர்கள் மத்தியில் இருந்து பார்க்கிறீர்கள்.. நான் அப்பாவின் ஸ்தானத்தில் இருந்து பார்க்க முயல்கிறேன்.

நான் நன்றாக செட்டில் ஆகி, கார் பங்களாவோடு இருக்கிறேன். என் மகள் ஒரு வேலையில்லாதவனை காதலித்து வருகிறாள் என்று வைத்துக் கொள்ளுங்கள்>.. நான் கண்ணை மூடிக் கொண்டு ஒத்துக் கொள்ள முடியுமா? என் மகள் ஒரு கஷ்டப்படுபவனுக்கு மத்தியில் வாழ என் மனது ஒத்துக் கொள்ளுமா? நீங்கள் கேட்கிறீர்கள். இஷ்டப்பட்டவனிடம் வாழும்போது கஷ்டம் தெரியாது என்று... எத்தனை நாளைக்கு???

என் மகள் நேராநேரத்திற்கு சாப்பிடுவாள். அடுத்த வேளையைப் பற்றிய கவலையை நான் வளர்த்தமாட்டேன். எனும்பொழுது, அடுத்த வேளையைப் பற்றி கவலைப்படும் ஒருவனுக்கு என் மகளைத் தர முயல்வேனா?

நீங்கள் கேட்கிறீர்கள்.. அவன் நினைத்தால் ஒரு நல்ல வேலையும் தரலாமே என்று...

அவனுக்கு வேலை தரலாம்.. அதற்காக பொண்ணைத் தரமுடியுமா? அட என்னை விடுங்கள்.

எந்த ஒரு தாயும் தன் பெண் நல்ல இடத்தில் வாழவேண்டும் என்று நினைக்கிறாள். இல்லையா? மகள் தனக்கு இஷ்டமானவனைத் தேர்ந்தெடுத்துவிட்டாள் என்பதற்காக உடனே முடிவெடுக்க முடியாது.

இந்தியத் திருமணங்கள் பெரும்பாலும் விருப்பமில்லா திருமணங்கள்தாம்... விரும்பி ஏற்றுக் கொள்ளும் வாழ்க்கை காதலர்களுக்கு வருகிறது.... எத்தனை பேர் நீங்கள் சொல்லும்படி இருக்கிறார்கள்?

நான் நடத்தி வைத்த திருமணம்,

என் ஊதாரி நண்பனும் வசதியுள்ள நண்பியும் காதலித்தார்கள். நன்றாக வாழ்கிறார்கள்..... உங்களைப் போன்றே சரியான உதாரணம்.... எனக்கு என் பக்கத்தில் இருந்து நான் சந்தித்த உதாரணங்கள் காட்ட ஒருவருமில்லை என்றாலும்...

மகளின் ஆறுவருடக் கனவும், அப்பாவின் இருபது வருடக் கனவும் ஒன்றாகிவிடுமா?

செல்வாண்ணே!!! நான் மத்திமன்.. நான் காதலித்தவளோ வசதியுள்ளவள்.. இருவரும் சேர இயலவில்லை... பல காரனங்கள் இருந்தது. எத்தனையோ நாட்கள் மனதில் இருத்தி, இருவரும் முடிவெடுத்தோம்... அவசரப்பட்டு காதல் பட்டது தவறாகவே இருந்தாலும் அதை விட்டுவிடுவோம் என்பது.. சரி..

மூர்த்தி கதையில் வருவதைப் போன்று அவள் அப்பா சம்மதம் இல்லாமல் போனால்....???

காதலர்கள் ஊரை விட்டு ஓடுவார்கள்..
தற்கொலை செய்துகொள்வார்கள்..
வேறு என்ன ???

வேலையில்லாமல் சுற்றும் வாலிபன் என்றால் அவனது குடும்ப சூழ்நிலை கஷ்டமாகத்தான் இருக்கும்... அப்படியென்றால் தன்னைத் தூக்கி வளர்த்த அப்பா அம்மாவை அம்போவென்று விட்டுவிட்டு, ஊரை விட்டு ஓடுவதும் தற்கொலை செய்துகொள்வது சரியா?

எங்கள் விவாதத்தில் மூர்த்தியின் கதை அடிபடக்கூடாது என்பதால்..
எனது மற்றும் செல்வா அவர்களது பதிவுகளை கூண்டோடு வேறு திரியில் பதிக்க பொறுப்பாளர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்..

ரங்கராஜன்
22-11-2008, 04:31 AM
நன்றி ஆதவா
உங்களின் கருத்து அபாரம், இதில் என் கதை அடிப்பட எதுவும் இல்லை, இன்னும் கேட்டால் கதை உங்களின் விவாதத்தால் நன்றாக வாசகர்களிடம் போய் சேருகிறது

MURALINITHISH
22-11-2008, 08:53 AM
ஒரு இளைஞனாய் கதையில் மாறுபட்ட கருத்து இருந்தாலும் ஒரு தகப்பனாக கண்டிப்பாக அவரின் மனதை புரிந்து கொள்ள முடிகிறது மேல்மட்டத்தில் வளர்ந்த மகள் வேலை தேடுபவனோடு எத்தனை நாட்கள் சந்தோஷமாக இருக்க முடியும்
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் இது நம் முன்னோர்கள் மொழி
இளைஞனாய் நான் நினைத்த பெண்ணை திருமணம் செய்தாலும் ஒரு பெண்ணின் தகப்பனாய் வேலை இல்லாதவனுக்கு பெண்ணை கொடுப்பது முடியாத காரியம்