PDA

View Full Version : ♔. சாம்பியன்ஸ் லீக் : T 20 போட்டித்தொடர்..!ராஜா
17-11-2008, 06:59 AM
சாம்பியன்ஸ் லீக் : 20 கிரிக்கெட் போட்டித்தொடர்..!

6 மில்லியன் டாலர் பரிசுத்தொகை கொண்ட 20/20 போட்டித்தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 முதல் 10ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற* உள்ளது..

வெளிநாட்டு அணிகள் உட்பட எட்டு குழுக்கள் பங்கு பெறும் இப்போட்டித்தொடர் சென்னை,( ஹையா.. மழை வரும்.. ஜாலி..!) பெங்களூர், மும்பை நகரங்களில் நிகழவிருக்கிறது.

1. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

(இந்தியாவின் நடப்பு (உள்நாட்டு) 20/20 சாம்பியன் அணி )

2. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

(ரன்னர் அப் அணி)

3. வெஸ்டர்ன் வாரியர்ஸ் அணி.

( ஆஸி. 20/20 சாம்பியன்)

4. விக்டோரியா புஷ்ரேஞ்சர்ஸ் அணி.

(ரன்னர் அப் அணி)

5. பிரிடோரியா டைட்டன்ஸ் அணி.

(தெ.ஆ. 20/20 சாம்பியன்.)

6. நேடால் டால்பின்ஸ் அணி.

(ரன்னர் அப் அணி)

7. சியால்கோட் ஸ்டாலியன்ஸ் அணி.

(பாகிஸ்தான் 20/20 சாம்பியன்)

8. மிடில்செக்ஸ் அணி.

(இங்கிலாந்து சாம்பியன்)

ஆக 8 அணிகள் கலந்துகொள்ளும் இப்போட்டித்தொடரின் பெருவெற்றியாளருக்கு பரிசுத்தொகையாக 3 மிலியன் டாலர் ..!

சாம்பியன்ஸ் லீக் அமைப்புக்குழுத் தலைவராக ( ஐ பி எல் புகழ்) லலித் மோடி நியமிக்கப்பட்டிருக்கிறார்..!போட்டிகள் நிகழும் விவரம்..Dec 3rd - Middlesex Crusaders vs Victoria Bushrangers in Mumbai
Dec 3rd - Rajasthan Royals vs Natal Dolphins in Bangalore
Dec 4th - Sialkot Stallions vs Western Rambal Warriors in Banglore
Dec 4th - Chennai Super Kings vs Victoria Bushrangers in Mumbai
Dec 5th - Middlesex Crusaders vs Pretoria Titans in Chennai
Dec 5th - Rajasthan Royals vs Sialkot Stallions in Mumbai
Dec 6th - Western Australia vs Natal Dolphins in Banglore
Dec 6th - Victoria Bushrangers vs Pretoria Titans in Chennai
Dec 6th - Chennai Super Kings vs Middlesex Crusaders in Chennai
Dec 7th - Natal Dolphins vs Sialkot Stallions in Bangalore
Dec 7th - Rajasthan Royals vs Western Rambal Warriors in Bangalore
Dec 7th - Chennai Super Kings vs Pretoria Titans in Chennai

Dec 8th - Semifinal 1 (Group B First placed team vs Group A Second placed team)
Dec 9th - Semifinal 2 (Group A First placed team vs Group B Second placed team)

Dec 10th - Final (Winner of Semifinal 1 vs Winner of Semifinal 2)

ஓவியன்
17-11-2008, 07:17 AM
இப்பவே கண்ணைக் கட்டுதே, இனி வரும் காலங்களில் 50/50 ஆட்டங்கள் இல்லாமலே போயிடுமோ...?? :sprachlos020:

அன்புரசிகன்
17-11-2008, 08:03 AM
50-50 விளையாட்டாக துடுப்பாட்டப்போட்டி
20-20 விளையாட்டாக வியாபாரம்...

ராஜா
17-11-2008, 01:58 PM
உண்மைதான் மாம்ஸ்..!

அடுத்த 10 ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின் ஒளிபரப்பு மற்றும் விளம்பர உரிமைகளை ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 975 மிலியன் டாலர் விலை கொடுத்து வாங்கியிருக்கிறதாம்..

இவ்வளவு பணம் புழங்கும் ஒரு விளையாட்டில் ஊழலும் ஏமாற்றுதலும் இல்லாமல் இருக்குமா..?

arun
17-11-2008, 05:01 PM
சாம்பியன்ஸ் தொடரை பொறுத்த வரை வெற்றியை நிர்ணயிப்பதில் பல உள் குத்துக்கள் இருக்கலாம் என நினைக்கிறேன்

எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை.....

ராஜா
20-11-2008, 03:31 PM
http://content-ind.cricinfo.com/inline/content/image/330732.jpg?alt=2


விக்டோரியா புஷ்ரேஞ்சர்ஸ் அணி அறிவிப்பு.. மைக்கேல் ஹஸி சென்னைக்கு ஆடுவது உறுதி..!


கேமரான் ஒய்ட் (தல)

டேவிட் ஹஸி,

ப்ராட் ஹாட்ஜ், உள்ளிட்ட 15 நபர் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே அணியைச் சேர்ந்த மைக்கேல் ஹஸி சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஆடுவதில் உறுதியாக இருப்பதால் அவர் பெயர் விக்டோரியா அணியில் இல்லை.

aren
20-11-2008, 03:41 PM
எல்லோரும் கோடிக்கணக்கில் பணம் சேர்ப்பதற்காக நாம் மணிக்கணக்காக இதைப் பார்க்கவேண்டுமா என்று நினைத்து என்னுடைய கிரிக்கெட் சானல் கனெக்ஷனை நிறுத்திவிட்டேன்.

ராஜா
20-11-2008, 03:51 PM
எல்லோரும் கோடிக்கணக்கில் பணம் சேர்ப்பதற்காக நாம் மணிக்கணக்காக இதைப் பார்க்கவேண்டுமா என்று நினைத்து என்னுடைய கிரிக்கெட் சானல் கனெக்ஷனை நிறுத்திவிட்டேன்.


தங்களைப் போன்று பலர் இப்போது நல்ல முடிவு எடுத்து வருகிறார்கள்.. எல்லோருமே விழித்துக்கொள்ளுமுன் எரியும் வீட்டில் பிடுங்கியது வரை இலாபம் என்பதுபோல, அவசரம் அவசரமாக போட்டித்தொடர்கள் அறிவிக்கப்பட்டு ஆண்டு முழுதும் நடத்தப்படுகின்றன.

முன்பெல்லாம் எப்போதாவதுதான் கிரிக்கெட் நடக்கும். இப்போதோ ... எப்போதுமே கிரிக்கெட்தான்... இதில் வீணாகும் மனித வேலைநாட்களுக்கு கணக்கே இல்லை..!

ராஜா
03-12-2008, 05:18 AM
மும்பை தீவிரவாதத் தாக்குதல்களின் எதிரொலியாக இன்று தொடங்கவிருந்த சாம்பியன்ஸ் லீக் போட்டித்தொடர் ஒத்திப்போடப்பட்டிருக்கிறது.

அனேகமாக அடுத்த ஆண்டு (2009) துவக்கத்தில் இத்தொடர் இடம்பெறுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.