PDA

View Full Version : வேறுபட்ட இயக்க முறைமைகள் உள்ள கணிணிகளுக்கு இடையே LAN அமைப்பு ஏறபடுத்த முடியுமா?

வெங்கட்
15-11-2008, 04:19 PM
நான் கணிணி தொடர்பாக முறையான படிப்பு எதுவும்படிக்கவில்லை என தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் கம்ப்யூட்டர் இதழைப் படித்தும், கணிணி தொடர்பான தமிழ் நூல்கள் சில படித்தும், தற்போது கணிணி தொடர்பான வலைப் பதிவுகளைப் படித்தும் தான் கணிணியைப் பற்றிய அடிப்படை விபரங்களை அறிந்து கொண்டு வருகிறேன். அந்த வகையில் எனது கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் எனக்கு தோன்றிய ஐயங்களை கூறுகிறேன். இதற்கு நமது மன்ற நண்பர்கள் விடை அளித்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

கேள்வி 1: வேறுபட்ட இயக்க முறைமைகள் உள்ள கணிணிகளுக்கு இடையே LAN அமைப்பு ஏற்படுத்த முடியுமா? நான் பணிபுரியும் அலுவலகத்தில் Suse Linux உள்ள கணிணியும், Windows98 உள்ள கணிணியும் உள்ளது. இவ்விரு கணிணிகளுக்கு இடையே கோப்புகளை பரிமாறிக்கொள்ள LAN அமைப்பு ஏற்படுத்துவது சாத்தியமா? ஆம் எனில் விளக்கினால் எனக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

கேள்வி 2: ஓப்பன் ஆபிஸ்(2.0 அல்லது உயரிய பதிப்பு) தொகுப்பினை பயன்படுத்துவது தொடர்பான கையேடு மின் நூல் வடிவில் இருப்பின் (முடிந்தால் தமிழிலோ அல்லது எளிய ஆங்கிலத்திலோ) அதற்கான சுட்டியை தெரிந்தவர்கள் கொடுத்திட கேட்டுக் கொள்கிறேன்.

selvamurali
15-11-2008, 06:28 PM
நிச்சயமாக இயலும் நண்பரே!

லினக்ஸ்சிலும், விண்டோசிலும் அதற்கேன ப்ரத்யோகமாக உள்ள ப்ரோட்டா கால்களை நிறுவிக்கொண்டால் வேறு வேறு இயக்க முறைமைகளை எளிதில் குறும்பரப்பில் கொண்டுவரலாம்.

வெங்கட்
16-11-2008, 05:38 AM
நிச்சயமாக இயலும் நண்பரே!

லினக்ஸ்சிலும், விண்டோசிலும் அதற்கேன ப்ரத்யோகமாக உள்ள ப்ரோட்டா கால்களை நிறுவிக்கொண்டால் வேறு வேறு இயக்க முறைமைகளை எளிதில் குறும்பரப்பில் கொண்டுவரலாம்.

பதில் அளித்த செல்வமுரளி அவர்களுக்கு மிக்க நன்றி. புரோட்டா கால்கள் நிறுவுவது பற்றி விளக்கமாக கூறினால் தெரிந்து கொள்வேன். இங்கு கூறுவதற்கு நேரம் அதிகம் தேவைப்படும் என்றால் அது தொடர்பான இணையப்பக்கங்கள் இருப்பின் அதன் சுட்டியைத் தாருங்கள்.

சாம்பவி
16-11-2008, 06:07 AM
1. யுனிக்ஸோ வின்டோஸோ.... அடிப்படையில் அவை
TCP/IP ப்ரோட்டோகால்கள் கொண்டே நிறுவப்படுவதால்...
இரண்டுக்குமான தகவல் தொடர்பு என்பது மிக மிக சாத்தியமே...
இன்றைய இணைய உலகமே இதை அடிப்படையாகக் கொண்டது தான்...

ஒரே நெட்நொர்க்கில் இணைக்க தனி பிரயர்த்தனம் ஏதும் அவசியமில்லை....
அப்படியே இணைக்கலாம்.... !!! ;)

இவற்றிற்கிடையே பகிர்தல் என்று வரும்போது மட்டுமே அதற்கான மென்பொருள் நிறுவப்பட வேண்டும்....

விண்டோஸில் ஃபைல் ஷேரிங் என்பது தன்னுள் அடக்கம்...
யுனிக்ஸிற்கு மட்டும் சாம்பா ( samba ), எனப்படும் மென்பொருள் நிறுவி.. கான்ஃபிகர் செய்யப்பட வேண்டும்....www.samba.org

அனுமதி இலவசம்.... !!!!
அப்புறம் என்ன... ஷேரிங்கோ ஷேரிங் தான்.... !!!!!

2. http://documentation.openoffice.org/manuals/OOo2.x/user_guide2_draft.pdf

ஆதவா
16-11-2008, 09:59 AM

samba வின் உரிமையாளர் samabavi யோ? :)

anna
16-11-2008, 12:38 PM
இயக்கலாம் ஆனால் நாங்கள் அனைத்து கணினிலும் வின்டோஸ் அப்பரேட்டிங் சிஸ்டம் தான் உள்ளது அதில் வேறுபாடு உள்ளது ஒரு சில கம்யூட்டர்களில் இன்னும் 98 உள்ளது.ஒண்ணும் பிரச்சனை இல்லை.நீங்கள் சொன்னது போல் வின்டோசையும் லினக்கசையும் நெட்வோர்க் பண்ணி பாக்கவில்லை.முயன்று பின் பதில் தருகிறேன்.

சாம்பவி
16-11-2008, 05:18 PM
samba வின் உரிமையாளர் samabavi யோ? :)

ஐ...இது நல்லா இருக்கே........ !!!!

"விண்டோவி"னு பேர் வச்சிருந்தா... விண்டோஸோட உரிமையாளர் ஆகி இருப்பேனேப்பா.... தப்பு பண்ணிட்டீங்களே தந்தையே.............

"மைக்ரோவி"னு பேர் மாற்றலாமா
அப்புறம் மைக்ரோசாஃப்டே நம்ம கையில் தான்...........:*???? !!!!!!

பொறுப்பாளர்களே.. நீங்களாச்சும் உதவுங்களேன்.... ;) .. !!!

samba வின் உரிமையாளர் samabavi யோ? :)

ஆமா அதென்ன சமபாவி... ??? :(

வெங்கட்
18-11-2008, 12:38 PM
பதில் அளித்த சாம்பவி அவர்களுக்கு நன்றி. விரைவில் முயற்சி செய்கிறேன்.