PDA

View Full Version : வாமலோஷன் கைது



Narathar
15-11-2008, 03:55 PM
"வெற்றி எப் எம்" வானொலி நிகழ்ச்சி முகாமையாளர் வாமலோஷன் கைது

செய்தி : வீரகேசரி இணையம் 11/15/2008 11:24:42 AM -

தமிழ் ஊடகவியலாளரும் வெற்றி எப்.எம். வானொலி முகாமையாளருமான ஏ.ஆர்.வி.லோஷன் (லோஷன்) இன்று சனிக்கிழமை அதிகாலை வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது.

பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயல்களுக்கு துணைபோதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இவரைக் கைதுசெய்யும்போது பொலிசாரால் வழங்கப்பட்ட பதிவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரைக் கைதுசெய்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்பட்டபோதிலும் பின்னர் அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய முடியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

லோஷன் முன்னாள் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன 'சூரியன்' வானொலியின் நிகழ்ச்சி முகாமையாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. லோஷன் கைது செய்யப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக வெற்றி எப்.எம். அறிவிப்பாளர் சந்திரமோகனும் (சந்துரு) அவரது வீட்டில் வைத்துப் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிசாரால் கடுமையாக விசாரணை செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது

ஓவியன்
16-11-2008, 02:33 AM
நேற்று இந்த செய்தி, வெற்றி எப் எம்மில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்ததாக அறிந்தேன், லோஷனை எனக்கு ஒரு ஒலிப்பரப்பாளனாக மிகவும் பிடிக்கும்...

அவர் விரைவில் விடுதலையாகி வீடு திரும்ப என் பிரார்த்தனைகளும்..

தீபன்
19-11-2008, 03:59 PM
நாரதரே... நீங்கள் நலம்தானே...?
லோஷன் அண்ணா விரைவில் விடுவிக்கப்படுவாரென தகவல்.
ஒரு ரசிகனாய் காத்திருக்கிறேன்.

shibly591
19-11-2008, 04:23 PM
பத்தாண்டு கால ஊடக இலக்கியத்தின் எனது நெருங்கிய நண்பரின் கைது கவலை தருகிறது..

ஒரு முறை எனது வீட்டுக்கு எனது அழைப்பை ஏற்று வருகை தந்தமையை வாழ்நாளில் மறக்க முடியாது.

திறமையான நல்ல நேர்மையான ஊடகவியலாளர் திரு.வாமலோஷன் அவர்கள்..

அவர் விரைவில் விடுதலை பெற பிரார்த்திக்கிறேன்..

ஓவியன்
22-11-2008, 10:51 AM
வெற்றி எப்.எம் வானொலியின் நிகழ்ச்சிப் பிரிவு பணிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ ஆர் வாமலோசன் இன்று நண்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனத் தமிழ்வின் (http://www.tamilwin.com/view.php?22OpDcc3nW24dC2h202HQM4d20jH0bP9E2e2ILL3b37GYe) செய்தி வெளியிட்டுள்ளது...

பி.கு- லோசனின் கைதுக்கு இந்த பதிவு (http://loshan-loshan.blogspot.com/2008/11/blog-post_06.html)தான் காரணமென்று ஒரு செய்தி காற்றிலே உலாவுகிறது..