PDA

View Full Version : நெஞ்சு பொறுக்கு தில்லையே இந்த நிலை கெட்ட மாணவர்களை பார்த்தால்



mbchandar
14-11-2008, 11:26 AM
நெஞ்சு பொறுக்கு தில்லையே --இந்த
நிலை கெட்ட மாணவர்களை பார்த்தால், (http://balachandar.net/blog305-2008-11-14.html)
மேல் சாதி, கீழ் சாதி என்பார் --இதை
மறந்தவர்கள் யாருமில்லை அவனியிலே;

கொஞ்ச நேரமா அடித்தார்கள்? --ஒரு
நிமிடம் வரை வெறியேடு அடித்தார்கள்;
சாதிவெறி பிடித்த மாணவர்களே --நீங்கள்
நாளைய இந்தியாவின் தலைவர்களா
இல்லை தலைவலிகளா? --இதை
நினைந்து நினைந்து மனம் வெறுக்குதிலையே!

காக்க மறந்த காவலர்களே! --உங்கள்
மனிதாபிமானம் எங்கு போனது! காற்றிலா?
அஞ்சி யஞ்சிக் கடமையை மறந்தீர்கள் --ஒரு
நிமிடம் நீங்கள் நினைத்திருந்தால் எல்லாம்
தலை கீழாகி மாறியிருக்குமே! --மாணவன்
கட்டையின் முன் உங்களது லத்தி செல்லுமா!
நெஞ்சு பொறுக்கு தில்லையே --கடமை
செய்ய தவறிய காவலர்களை நினைந்துவிட்டால்.

விழியில் பார்த்தேன். நெஞ்சம் பதரியது --ஒரு
நொடி, இருந்தாலும் என்ன பயன்? பயந்து
நடுங்கி வேடிக்கை பார்த்தவர்களும் --இந்த
சமுதாயத்தில் இருக்கின்றனரே! அஞ்சி யஞ்சி
வாழ்பவர். வாழ்ந்து கொண்டே இருப்பர்.
அதர்மம் தலைவிரித்து ஆடட்டும் -- தமிழ்
நாட்டில் சாதி என்று ஒழியோமோ?...தமிழர்
கண் துடைக்க பாரதியே நீ மீண்டும் பிறப்பாயாக!

அன்று பாரத சனங்களின் நிலைமையை நொண்டிச் சிந்து (http://www.sas.upenn.edu/~vasur/nenjuporukku.html) பாடலில் பாரதி எழுதியிருந்தான். இன்றைய தமிழ்நாட்டின் அவலத்தை பாரதி பாட்டோடு எழுதியுள்ளேன்.

ஆதவா
14-11-2008, 01:21 PM
நெஞ்சு பொருக்கு தில்லையே!!!

பாரதி வந்து இதைப் பார்த்தால் இப்படித்தான் பாடியிருப்பார்.... பொருக்கு இல்லை சார்.. பொறுக்கு...

பாரதி பாடலின் இடைச்செறுகலாக இருந்தாலும் உங்கள் ஆதங்கம் புரிகிறது.. ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன.

அவருடைய அப்பாடல் எடிட் செய்யாமலேயே இந்த நிகழ்வுப் பொருத்தமானது... அவ்வளவு தொலைநோக்குள்ள கவிதை அது... அது கவிதை இல்லை.. உணர்வுக்குவியல்.. நீங்கள் கொடுத்த இணைப்பைத் தொட்டு படித்த பொழுது என் கையில் இருந்த முடிகள் கூச்செறிந்து நின்றன....

இக்கவிதையில் இன்னும் என்ன செய்திருக்கலாம்..

எதுகை மோனையோடு அழகுபடுத்தியிருக்கலாம்.. பிழைகள் களைந்து, நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற திரைப்பாடல் போன்ற அதே மெட்டில் எழுதியிருக்கலாம்.

அதென்ன சார் இரண்டு வரிகளில் ஒரு இணைப்பு கொடுத்திருக்கிறீர்கள்??? விளம்பரமா?

நெஞ்சு பொறுக்குதில்லையே!!!!

Keelai Naadaan
14-11-2008, 03:48 PM
நாட்டில் சாதி என்று ஒழியோமோ?...தமிழர்
கண் துடைக்க பாரதியே நீ மீண்டும் பிறப்பாயாக!


பாரதி நீ மீண்டும் பிறக்காதே...
உன்னையும் சாதிப்பெயரால் நாங்கள் தள்ளி வைத்து விடுவோம்....:traurig001:

நல்ல கவிதை வாழ்த்துக்கள் M.B.சந்தர்.

mbchandar
14-11-2008, 07:27 PM
ஆதவா அவர்களே,
திருத்திக்கொள்கிறேன். எனது தளத்திலும், இங்கே பதிந்ததையும் திருத்திவிட்டேன். நினைப்பது ஒன்று எழுதுவது ஒன்றாக இருக்கிறது. அதன் விலைவாக தான் இந்த பிழைகள்!
மன்னித்துக்கொள்ளுங்கள்

இரண்டு வரி இணைப்பு விளம்பரம் அல்ல. எனது தளத்தில் இருந்து தான் இங்கு நகலெடுத்து பதிந்தேன். அதற்காக அதன் தொடுப்பை இணைந்திருந்தேன். தவறு என்றால் இனிமேல் நான் அப்படி போடவில்லை.

mbchandar
14-11-2008, 07:28 PM
பாரதி நீ மீண்டும் பிறக்காதே...
உன்னையும் சாதிப்பெயரால் நாங்கள் தள்ளி வைத்து விடுவோம்....:traurig001:

நல்ல கவிதை வாழ்த்துக்கள் M.B.சந்தர்.
நன்றி கீழை நாடான்.