PDA

View Full Version : 2 மாணவர்களை வெறித்தனமாக தாக்கிய சட்டக் கல்லூரி மாணவர்கள்

ஆதி
13-11-2008, 07:20 AM
சென்னை: சென்னை சட்டக் கல்லூரி வளாகத்தில் 2 மாணவர்களை, சக மாணவர்கள் இரும்புக் கம்பி, உருட்டுக் கட்டைகளைக் கொண்டு வெறித்தனமாக தாக்கினர். இந்த கொலை வெறித் தாக்குதலை போலீஸார் வெளியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அடிபட்ட இரு மாணவர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

சென்னை பாரிமுனையி்ல் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உள்ளது. இங்கு ஜாதி ரீதியாகவும், அரசியல் கட்சிகள் ரீதியாகவும் மாணவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றனர். அடிக்கடி தங்களுக்குள் மோதிக் கொள்வது வழக்கம். மேலும், வெளியிடங்களிலும் அவ்வப்போது மாணவர்கள் கலாட்டாவில் ஈடுபடுவதும் வழக்கம்.

சட்டக் கல்லூரி மாணவர்கள் என்பதால் போலீஸார் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.

வரலாறு காணாத தாக்குதல்

இந்த நிலையில், நேற்று வரலாறு காணாத வகையில் மிகப் பெரிய அளவில் கொலை வெறித் தாக்குதலில் ஒரு பிரிவு மாணவர்கள் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று செமஸ்டர் தேர்வுகள் நடந்தன. அதில் கலந்து கொண்ட ஒரு பிரிவு மாணவர்களைத் தாக்குவதற்காக 50 பேர் கொண்ட இன்னொரு பிரிவு மாணவர்கள் மண்வெட்டி, இரும்புக் கம்பி, டியூப் லைட், உருட்டுக் கட்டைகள் சகிதம் காத்திருந்தனர்.

பரீட்சையை எழுதி முடித்து விட்டு வந்தபோது அந்த மாணவ்ரகள் மீது ஆயுதங்களுடன் காத்திருந்த மாணவர் கும்பல் கொலை வெறித் தாக்குதலில் இறங்கியது.

ஆறுமுகம் என்ற மாணவரை சூழ்ந்த அந்தக் கும்பல் சரமாரியாக தாக்கியது. மேலும் கண்ணில் பட்ட மாணவர்களையும் ஓட ஓட விரட்டித் தாக்கியது.

ஆறுமுகத்தைக் காப்பாற்ற பாரதி கண்ணன் என்ற மாணவர் ஓடி வந்தார். அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களைத் தாக்க முயன்றார்.

இதையடுத்து ஆறுமுகத்தை விட்ட கும்பல், பாரதி கண்ணனை துரத்தியது. அவரை விரட்டி விரட்டி தாக்கியது. அடிபட்டு துடித்த பாரதி கண்ணன் கல்லூரியின் நுழைவாயிலை நோக்கி ஓடினார்.

ஆனாலும் விடாமல் துரத்திய அந்தக் கும்பல் நுழைவாயிலில் வைத்து அவரை மடக்கி மிருகத்தனமாக தாக்கியது.

அடி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார் பாரதி கண்ணன். அப்படியும் விடாமல் ஒரு ஆள் அளவுக்கு உயரம் கொண்ட உருட்டுக் கட்டைகளால் தலை முதல் கால் வரை சரமாரியாக அடித்துத் தள்ளியது.

அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

இத்தனைக்கும் நுழைவாயிலுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸார் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் தாக்குதலையும் தடுக்க முயலவில்லை. அடிபட்டுக் கொண்டிருந்த மாணவரையும் மீட்க முயலவில்லை.

ஒரு மாணவரைப் போட்டு சக மாணவர்கள் மிருகத்தனமாக தாக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து சாலையில் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் பார்த்தனர்.

பின்னர் சுதாரித்துக் கொண்ட பொதுமக்களும், பத்திரிக்கைப் புகைப்படக்காரர்களும் சேர்ந்து நுழைவாயில் அருகே சென்று தாக்குதலை நிறுத்துமாறு கோஷமிடவே, கொலை வெறிக் கும்பல் கல்லூரிக்குள் போய் விட்டது.

பின்னர் பொதுமக்களும், பத்திரிக்கையாளர்களும் பாரதி கண்ணனை மீட்டு தூக்கி வந்தனர். அதன் பின்னர் உள்ளே புகுந்த போலீஸார் பாரதி கண்ணனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல ஆறுமுகம் உள்ளிட்ட மேலும் 2 மாணவர்களும் மீட்கப்பட்டனர்.

படுகாயமடைந்த ஆறுமுகம், பாரதிகண்ணன் ஆகிய இருவரும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆறுமுகம் உயிருக்கு ஆபத்தான நிலையி்ல உள்ளார். பாரதி கண்ணன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அய்யாத்துரை என்ற மாணவருக்கு சிறு காயம் ஏற்பட்டது.

இவர்கள் தவிர சித்திரைச்செல்வன் என்ற மாணவருக்கு காதில் அடிபட்டது. அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கல்லூரிக்குள் நடந்த கொலை வெறித் தாக்குதல் குறித்து அறிந்ததும், தாக்குதல் முடிந்ததும் விரைந்து வந்த முதல்வர் கே.கே.தேவ், மாணவர்களை சமாதானப்படுத்தினார்.

ஏன் இந்த வெறித்தனம்?

சமீபத்தில் நடந்த தேவர் ஜெயந்தியையொட்டி மாணவர்களில் ஒரு தரப்பினர் நந்தனம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்போது மாணவர்கள் ஓட்டிய போஸ்டர்களில் கல்லூரியின் பெயரில் உள்ள அம்பேதகர் என்ற பெயரை சேர்க்கவில்லையாம்.

இதையடுத்து இன்னொரு பிரிவு மாணவர்கள் பிரச்சினை செய்துள்ளனர். இதன் விளைவாகத்தான் நேற்று கொலை வெறித் தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 2ம் ஆண்டு மாணவர்கள், அடிபட்டவர்கள் 3ம் ஆண்டு மாணவர்கள்.

இந்த கொலை வெறித் தாக்குதல் தொடர்பாக மணிமாறன், சித்திரைச் செல்வன், ரவீந்திரன், குபேந்திரன், வெற்றி கொண்டான், ரவிவர்மன், பிரேம்குமார் ஆகிய மாணவர்கள் மீது கல்லூரி முதல்வர் தேவ் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

4 பேர் கைது

போலீஸார் வழக்குப் பதிவு செய்து திலீப் என்ற மாணவரை உடனடியாக கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் நேற்று இரவு ஜெயக்குமார், பால மணிகண்டன், பிரபாகரன் ஆகியோரையும் கைது செய்தனர்.

நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

---------------------------------------

ஆறாம் அறிவுக்கும் ஏற்றமானோம்..
அறிவியல் விழிகளால்
அடுத்தொரு பூமி ஏற்பாடாவதை
ஆய்ந்து கண்டோம்..

பாலைவனமும் சோலைவனமும்
போதிமரமும் சிலுவைமரமும்
விண்டவை துறந்தோம்
விலங்கினமானோம்..

நீதிதுறையும் சட்டத்துறையும்
நிதிதுறையானது
நீதிதேவதை தட்டுஇரண்டும்
களவு போனது..

ரங்கராஜன்
13-11-2008, 07:38 AM
அய்யோ ஆதி அந்த கொடுமையை என்னனு சொல்ல, இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் பொழுது ஜெயா செய்தியில் இந்த தாக்குதலின் வீடியோவைப் பார்த்தேன், உண்மையில் சொல்கிறேன் காட்சி நெஞ்சை அடைத்தது. ஏன் சக மாணவர்களை இப்படி வெறியுடன் தாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இரும்பு கம்பியால் அடித்த அடி ஒவ்வொன்று கதி கலங்க வைத்தது. அதில் நண்பனை காப்பாற்ற வந்து மாட்டிக் கொண்ட ஒருவன் பட்ட அடி அய்யோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நினைத்துப் பார்த்தால் இப்போ கூட கண்ணீர் வருகிறது. இந்த மாதிரி தாக்குதல் நடத்திய மாணவர்களை அமனமாக ஆக்கி உயிரோடு கொளுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. ஏன்னென்றால் வன்முறையை இன்றைய தேதிக்கு வன்முறையால் தான் விழ்த்த முடியும்.

அதற்கான சுட்டியை

http://in.youtube.com/watch?v=Y1ERFjBt2qY

Keelai Naadaan
13-11-2008, 07:58 AM
நேற்று இரவு சன் டி.வி யில் அந்த கொடுமையை பார்த்ததிலிருந்தே மனம் அமைதியில்லை.

"தங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை என்றும் புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்" என்று சொன்னாராம் போலிஸ் அதிகாரி ஒருவர்.
(நன்றி: தினத்தந்தி) திரி இங்கே (http://www.dailythanthi.com/article.asp?NewsID=450086&disdate=11/13/2008&advt=1)

கையில் கத்தி, கட்டை, கம்பு, இரும்பு கம்பி இவையெல்லாம் படிக்கும் வளாகத்துக்குள்ளேயே எடுத்து செல்லும் இவர்கள் தான்
நாளை சட்டத்தை மதித்து நீதி நியாயத்தை பாதுகாக்க போகிறவர்கள்.
அருகிலிருந்த காவலர்கள் தான் சட்டம் ஒழுங்கை காத்து நிற்பவர்கள்.

பேய் அரசு செய்தால்
பிணம் தின்னும் சாத்திரங்கள் - என்றான் பாரதி பாஞ்சாலி சபதத்தில்

மாணவர்கள்...!!!???? செய்தால் ரசித்து கொண்டிருக்கும் காவலர்கள்

தமிழகம் அமைதி பூங்கா அல்லவா... அங்கேயே கொலை நடந்திருந்தால் கூட
அமைதி பூங்காவின் அந்த நந்தவனத்தில் காவலர்கள் பூப்பறித்து கொண்டிருப்பார்களோ என்னவோ..?

இன்னமும் சாதி விஷயத்தினால் தான் இதுபோன்ற மோதல்கள் நடக்கிறது என எண்ணும்போது அருவருப்பாயுள்ளது.

தாமரை
13-11-2008, 08:29 AM
சட்டம் யாருடைய கைகளுக்கு போய்க் கொண்டிருக்கிறது என்று பார்க்கும் பொழுது மிக அதிர்ச்சியாய் இருக்கிறது.

என்ன சொல்வது என்று புரியவில்லை.

ஆதவா
13-11-2008, 08:32 AM
இந்த மாதிரி தாக்குதல் நடத்திய மாணவர்களை அமனமாக ஆக்கி உயிரோடு கொளுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. ஏன்னென்றால் வன்முறையை இன்றைய தேதிக்கு வன்முறையால் தான் விழ்த்த முடியும்.

அதற்கான சுட்டியை

பிறகு அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

எந்தக் கல்லூரியிலும் படிப்பதற்குத் தடை விதிக்கலாம்... எந்த நாட்டிலும்....

சுகந்தப்ரீதன்
13-11-2008, 09:05 AM
விதிகள் விதிவிலக்கானது
சட்டம் இயற்றுபவருக்கும்
சட்டத்தை காப்பவருக்கும்
சட்டங்கள் செல்லாது.....!!

பாரதி பார்த்தாயா..?? எங்கே சென்று கொண்டிருக்கிறது.. இன்றைய தலைமுறை என்று...?? விரைவில் வீழ்ந்துவிடும் மனிதஇனம் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது..!!

ரங்கராஜன்
13-11-2008, 09:22 AM
பிறகு அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

எந்தக் கல்லூரியிலும் படிப்பதற்குத் தடை விதிக்கலாம்... எந்த நாட்டிலும்....

வித்தியாசத்தை வைத்து என்ன செய்வது, எந்த கல்லூரியிலும் படிக்க தடை விதித்தால் அவர்கள் சந்தோஷமாக ரவுடித் தொழிலை தேர்ந்து எடுத்து இன்னும் அப்பாவி மனிதர்களை கொல்வார்கள். நான் வன்முறைக்கு துணை போகிறவன் கிடையாது, ஆனால் அதே போல மறு கன்னத்தை காட்டிக் கொண்டே இருக்க கூடாது என்று கூறுபவன், ஏன்னென்றால் இவர்கள் மறு கன்னத்தையும் அடித்து விட்டு முதுகுக்கு கையை ஓங்குபவர்கள், வலி என்ன என்பதை அவர்களுக்கும் உணரவைக்க
வேண்டும்

Keelai Naadaan
13-11-2008, 10:00 AM
இந்த மாதிரி தாக்குதல் நடத்திய மாணவர்களை அமனமாக ஆக்கி உயிரோடு கொளுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. ஏன்னென்றால் வன்முறையை இன்றைய தேதிக்கு வன்முறையால் தான் விழ்த்த முடியும்.

சரியான கருத்து அல்ல.
அதிலும் தங்களை போன்ற சிறந்த எழுத்தாளர் இப்படி சொல்லும்படியான நிலையென்றால்...
அதிர்ச்சியாயிருக்கிறது.....:fragend005:

ரங்கராஜன்
13-11-2008, 10:48 AM
சரியான கருத்து அல்ல.
அதிலும் தங்களை போன்ற சிறந்த எழுத்தாளர் இப்படி சொல்லும்படியான நிலையென்றால்...
அதிர்ச்சியாயிருக்கிறது.....:fragend005:

நண்பரே
கருத்து என்பது அவரவர் எண்ணங்களையும், மனநிலைகளையும்
பொருத்தது. ஒரு விஷயத்தை எவ்வளவு ஆழமான கண்ணோட்டத்தோடு பார்க்கிறோம் என்பதை பொருத்தது. அவரவர்களுக்கு என்று சில நியாயங்கள் இருக்கு, தர்மங்கள் இருக்கு. இந்த தாக்குதலின் நியாயம் என்ன?, தர்மம் என்ன?. இந்த செயல்கள் எல்லாம் அவர்கள் தெரியாமல் செய்யவில்லை, நன்கு அறிந்து திட்டமிட்டு தான் செய்திருக்கிறார்கள். பழிக்கு பழியாக செய்தார்கள். அவர்களிடம் நாம் பொறுமையாக எடுத்து சொல்லும் நல்லது கேட்காது. அந்த அடிப்பட்ட மாணவர்களின் வீடியோவை பார்க்கும் தாய் தந்தையுடைய மனநிலை எப்படி இருக்கும். இது என்னுடைய கருத்து தான், இப்படித் தான் செய்யவேண்டும், நினைக்க வேண்டும் என்று நான் வற்புறுத்தவில்லை நண்பரே. முதலில் நான் சராசரியான மனிதன் அதற்க்கு அப்புறம் தான் கதைச்சொல்லி நண்பரே. உங்களின் பூ போன்ற மென்மையான குணத்திற்க்கு நான் மரியாதைக் கொடுக்கிறேன். ஆனால் குரங்குகளுக்கு பூவின் மென்மையின் அருமைப் புரியாது. இந்த மாணவர்கள் குரங்குகள், இவர்களுக்கு கம்பு தான் சரி. உங்களின் மனது நோகும் படி பேசி இருந்தால் மன்னிக்கவும்

Keelai Naadaan
13-11-2008, 11:33 AM
உங்களின் மனது நோகும் படி பேசி இருந்தால் மன்னிக்கவும்
நீங்கள் அப்படியெல்லாம் எதுவும் பேசவில்லையே.

அவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.
ஆனால் வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்ற கருத்து தான் சற்று நெருடலாகப்பட்டது.
விளக்கமாக எழுதாமைக்கு வருந்துகிறேன்.

ஆதி
13-11-2008, 11:40 AM
இந்த சம்பவத்தை கொஞ்சம் நன்றாக உற்றுப்பாருங்கள் மூர்த்தி இன்னொரு உண்மை புரியும் அடிப்பட்டவர்களும் சாமானியர்கள் அல்லர்..

கல்லூரி வாசலில் அடிக்கப்பட்ட பாரதி கண்ணன் கத்தியோடு இருந்திருக்கிறார்.. தன் நண்பனை காக்க அவர் அருகில் இருந்து தேடிப் பெற்ற கத்தி போலது தெரியவில்லை.. முடிந்தால் படத்தையும் பதிக்கிறேன்..

அதுமட்டுமல்ல சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இது புதிதுமல்ல..

வீதிவரை சண்டை வந்ததால்.. ஊரெல்லாம் பேசப்படுகிறது இல்லையே இப்படி ஒரு சம்பவம் நடந்தாற்போலல்லாமல் மறைக்கப்பட்டிருக்கும்..

சட்ட கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டூழியங்களை பல பொது இடங்களில் நேரடியாக பார்த்திருக்கிறேன்.. காவலர்களையே இருவர்கள் கட்டையால் அடிக்க தயங்காதவர்கள்.. முடிஞ்சா மேல கைய வச்சு பாரு தெரியும் என்று முங்குபவர்கள்..

நீதிதுறை ரவுடி துறையாகிறதே என்பது என்னுடைய கவலையே..

சிவா.ஜி
13-11-2008, 11:43 AM
தண்டிக்கப்படவேண்டியவர்கள் அந்த மணவமிருகங்கள் மட்டுமல்ல....வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த காக்கி மிருகங்களும்தான். அடி வாங்கி எழ முடியாத நிலையிலும் முறை வைத்து வந்து தாக்கிவிட்டுப் போகும் அந்த மிருகங்களைத் தடுக்காமல் வெகு இயல்பாகப் பார்த்துக்கொண்டிருக்கும் அவர்களை என்ன செய்தாலும் தகும்.

மனது வலிக்கிறது.

ஆதி
13-11-2008, 11:49 AM

அண்ணா காக்கிகள் செய்தது ஒரு கோணத்தில் பார்த்தால் சரியென்று கூட சொல்லலாம்.. ஏன்னென்றால் சட்டக்கல்லூரிகாரர்கள் சாமானியர்கள் அல்லர்.. எங்க பிரச்சனைல நீங்க ஏண்ட வரிங்கனு காவலர்களை தாக்கியிருப்பார்கள்.. அதுமட்டுமல்ல பாரதி கண்ணனாக ஒரு காவலர் கிடந்திருப்பார்.. நீங்க அடிச்சுக்கோங்க டா.. எப்படியும் ஒரு சாரார் காலியாக போறாங்க மறுசாராரை உள்ள தூக்கி போடுறோம் னு அமைதியா இருந்திருப்பாங்க.. ஏன்னா இவங்க ஏற்கனவே போலிசையும் அடிச்சவங்க தான..

பாரதி
13-11-2008, 12:03 PM
இப்படி ஒரு பிரச்சினை வரப்போகிறது என்பது முன்னமே தெரிந்தும், மாணவர்கள் பலரும் உருட்டுக்கட்டை, இரும்புத்தடிகள், ஆயுதங்கள் இவைகளை தயார் செய்து கொண்டு தாக்குதலுக்கு தயாராவதும் காவல்துறைக்கு முன்பே தெரியும் என்றும், தெரிந்துதான் அங்கே காவலர்கள் காலையிலேயே அனுப்பப்பட்டனர் என்றும் பத்திரிக்கைச்செய்திகள் கூறுகின்றன. காவலர்கள் காட்சிகளை பார்த்து ரசிக்கவா அங்கே அனுப்பப்பட்டனர்...? பொதுமக்கள், நிருபர்கள், காவலர்கள் முன்னிலையில் கல்லூரி வாசலிலேயே இப்படி நடக்கும் எனில்... தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகிறது.

இவை வெளிச்சத்துக்கு வருகின்றன என்பது ஒரு விதத்தில் சரியென்றாலும், நேரடியாக இந்த காட்சிகளை பார்த்த மக்களின் மனம் எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கும்?

ஆதி
13-11-2008, 12:28 PM
இந்த உறழ்வு இன்று தமிழ்நாட்டு சட்டசபையில் ஒலித்திருக்கிறது.. அ.தி.மு.க ம.தி.முக வினர் வெளி நடப்பு செய்திருக்கிறார்கள்.. (அப்படி சொல்லிவிட்டு கேண்டீனுக்கு உள் நடப்பு செய்திருப்பாங்க)

வழக்கம் போல் முதல்வர் நீதி விசாரனைக்கு உத்தரவிட்டிருக்கிறார் (நீதிக்கே நீதி விசாரனையா )

வழக்கம் போல் ஜெ முதல்வரை பதவி விளக சொல்லியிருக்கிறார்.. (முதல்வர் பதவியை எப்படியும் மீட்பேன் என்ற உறுதியுடன்..)

ஓவியா
13-11-2008, 01:48 PM
அடிமனதை அப்படியே உலுக்கிவிட்டது அந்த வாசலில் விழுந்துக்கிடக்கும் மாணவனின் குருதிசிந்தும் உடல்...:traurig001::traurig001:

இப்படி போனா நாடு எப்படிங்க..:redface:

நான் கண்டு முடித்த அடுத்த நிமிடமே அந்த சுட்டியை யூடியூப்பில் அகற்றிவிட்டது தமிழ்நாட்டு அரசியல்..... என்னா ஸ்பீடுபா :eek::eek:

மாணவர்களிடன் இவ்வளவு வன்முறைக்கூடாது.

கலந்து சிறப்பித்த அத்தனை மாணவர்களுக்கும், போலீசுக்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று மன்ற சார்பில் நாம் தமிழ் நாட்டு போலீசுக்கு ஒரு கடிதம் அனுப்புவோமா!!!

ஓவியா
13-11-2008, 01:50 PM
தண்டிக்கப்படவேண்டியவர்கள் அந்த மணவமிருகங்கள் மட்டுமல்ல....வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த காக்கி மிருகங்களும்தான். அடி வாங்கி எழ முடியாத நிலையிலும் முறை வைத்து வந்து தாக்கிவிட்டுப் போகும் அந்த மிருகங்களைத் தடுக்காமல் வெகு இயல்பாகப் பார்த்துக்கொண்டிருக்கும் அவர்களை என்ன செய்தாலும் தகும்.

மனது வலிக்கிறது.

உண்மையிலே அண்ணா, தூரத்திலுருந்து பார்க்கும் நமக்கே வலிக்கும் பொழுது, தமிழ்நாட்டு காக்கிசட்டை என்ன இரும்பா என்று கேட்க தோன்ருகிறது.

virumaandi
13-11-2008, 01:52 PM
இந்த சட்ட கல்லூரி மாணவர்களின் அட்டூழியம் அளவுக்கு மீறி செல்கிறது...
இத்தனைக்கும்.. இந்த கொடுர தாக்குதல் ஒரு சாதி வெறி என்று கேள்வி பட்டு வெட்கி தலை குனிந்தேன்..
அதிலும்.. ஊர்களில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் தான் அதிகம்..

நல்ல தலைவர்களை ஜாதி தலைவராக ஆக்கியது மட்டுமில்லை..
கொலையாளிகளாகவும் ஆக்க முற்படுகின்றனர்..

அடித்துகொண்டனர்.. வீழ்ந்து விட்டான்........
அதற்கு பின்னரும் அடித்த அந்த கொடுமை.. ஊருக்கே உரியது..
ஊரூக்கு எதிராக ஒருத்தன் ஒன்னு சொல்லிவிட்டால்.. ஒன்று கூடி கொன்றுவிடுவர்..

அதை படிக்க வந்த பரதேசிகளும் செய்வது கொடுமை..

தேவரின் பெருமையும்..
அம்பேத்கரின் பெருமையும் வாழவைக்கும் அடிபொடியர்கள்..அவர்களின் கருத்தை ஒருசதமாவது படித்திருந்தால் நலம்...

நல்ல வருங்காலம்..

virumaandi
13-11-2008, 02:04 PM
உண்மையிலே அண்ணா, தூரத்திலுருந்து பார்க்கும் நமக்கே வலிக்கும் பொழுது, தமிழ்நாட்டு காக்கிசட்டை என்ன இரும்பா என்று கேட்க தோன்ருகிறது.

இது திட்டமிட்ட சதி என்று கூறபடுகிறது...
ஒரு சாரரின் ஆதர்வாளர்.. அந்த கல்லூரி முதல்வர்..
பாராவில் வந்த காக்கிகியின் தலைவர்..
அதை விட கொடுமை..
அந்த கல்லூரி முதல்வர் பிரச்சினையை நிறுத்த முயற்சியே எடுக்காமல் இருந்தார்.. பெரிய இடத்தில் முறை படி புகாரும் அளிக்கவும் இல்லை..
அவரும் இவ்வளவு பெரிதாக அவரின் ஜாதி சொந்தங்கள் நடந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்க வில்லை..
நேற்று இரவு.. ரொம்ப கஷ்டமாக இருந்தது..

இன்று காலையில்.. அந்த முதல்வரை தூக்கியது.. அந்த காக்கிகளை இடை நீக்கியது..
காயத்திற்கு மருத்து போட்டது போல் இருந்தது..
இவ்வளவு உடனடி நடவடிக்கை எடுத்தாலும்..

படிக்கும் மாணவர்களுக்கு எங்கே சென்றது அறிவு..

சினிமா படங்கள் இளைஞர்களை வெகுவாக கெடுத்து உள்ளது..

நான் கூட சண்டையிட்டுள்ளேன்..
அவன் வீழும் வரை தான் எல்லாம்..
அடுத்த நாள்.. காம்ப்ரமைஸ் ஆகிடனும்..
ஆனால்...
இவனுங்களை..
இவர்களின் ஜாதி தலைவர்கள் கூட மன்னிக்க மாட்டார்கள்...

ஓவியா
13-11-2008, 02:05 PM
இந்த சட்ட கல்லூரி மாணவர்களின் அட்டூழியம் அளவுக்கு மீறி செல்கிறது...
இத்தனைக்கும்.. இந்த கொடுர தாக்குதல் ஒரு சாதி வெறி என்று கேள்வி பட்டு வெட்கி தலை குனிந்தேன்..
அதிலும்.. ஊர்களில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் தான் அதிகம்..

நல்ல தலைவர்களை ஜாதி தலைவராக ஆக்கியது மட்டுமில்லை..
கொலையாளிகளாகவும் ஆக்க முற்படுகின்றனர்..

அடித்துகொண்டனர்.. வீழ்ந்து விட்டான்........
அதற்கு பின்னரும் அடித்த அந்த கொடுமை.. ஊருக்கே உரியது..
ஊரூக்கு எதிராக ஒருத்தன் ஒன்னு சொல்லிவிட்டால்.. ஒன்று கூடி கொன்றுவிடுவர்..

அதை படிக்க வந்த பரதேசிகளும் செய்வது கொடுமை..

தேவரின் பெருமையும்..
அம்பேத்கரின் பெருமையும் வாழவைக்கும் அடிபொடியர்கள்..அவர்களின் கருத்தை ஒருசதமாவது படித்திருந்தால் நலம்...

நல்ல வருங்காலம்..

அண்ணா, கருத்துகளுக்கு நன்றி இருப்பினும் இந்த வரிகள் யாருக்கு?

எனக்கு புரியவில்லையே?

யாரை 'பரதேசிகள்' என்று குறிப்பிட்டுள்ளீர்கள்?

கொஞ்சம் விளக்கம் ப்லீஸ்.

ஆதவா
13-11-2008, 02:22 PM
அண்ணா, இந்த வரிகள் யாருக்கு? எனக்கு புரியவில்லையே?

யாரை 'பxxxxxx' என்று குறிப்பிட்டுள்ளீர்கள்?

கொஞ்சம் விளக்கம் ப்லீஸ்.

படிக்க வந்தவர்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள்..

பxxxxx கொஞ்சம் தணிக்கை செய்யப்படவேண்டிய வார்த்தைதான்..

ரங்கராஜன்
13-11-2008, 02:45 PM
படிக்க வந்தவர்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள்..

பxxxxx கொஞ்சம் தணிக்கை செய்யப்படவேண்டிய வார்த்தைதான்..

இதில் தணிக்கைக்கு அவசியமே இல்லை, பரதேசி என்றால் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு வேலை நிமித்தமாவோ, பிழைக்கவோ வந்தவர்கள் என்று பொருள். அட்டுழீயத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் எல்லாம் வெளியூர் ஆட்கள் தானே?

உதயசூரியன்
13-11-2008, 06:17 PM
ஓவியா..
அது கோபத்தில் வந்த வார்த்தைகள் என்றாலும் நிஜமான வார்த்தைகள்..
ஏனெனில்..
சென்னை சட்ட கல்லூரிகளில்.. வந்து படிக்கும் வெளியூராரின்(அனேக சென்னை கல்லூரிகள் அப்படி தான்) இந்த நடவடிக்கை கண்டு திட்டும் வார்த்தை.. ஆனால் அது மோசமான வார்த்தையும் அல்ல..
வெளியூர்.. மற்றும் ஊர் ஊராக சுற்றும் போக்கத்தவனை.. இப்படி திட்டுவது சென்னையில்.. தமிழ் நாட்டில் வழக்கம் என்று நினைக்கிறேன்..

இரு குரூப்புகளும் சேர்ந்து தேவரையும்.. அம்பேத்கரையும் மானபங்க படுத்தி விட்டனர்..
பொதுவாகவே.. சட்ட கல்லூரி மாணவர்களுக்கு.. ஒரு திமிர் உள்ளது.. அதற்கு வக்கீல் மற்றும் நீதிபதிகளின் ஆதரவு இருப்பதால்...

நல்ல வேளை அடிபட்ட அம்மாணவர்கள் பிழைத்து கொண்டனர்..
அடிபட்டவர்களும்.. சாதி வெறியர்களே..
இதன் மூலம் சில மாணவர்களின் சாதி வெறி மாறினால் நலமே..

இரவு கடந்து காலையிலேயே.. துரித நடவடிக்கை எடுத்து அக்கல்லூரி முதல்வர், காவல் அதிகாரிகள் அனைவரையும் தூக்கி எறிந்து தனது ஆதங்கத்தை 18 மணி நேரத்திற்குள் வெளிபடுத்தி.. நீதி விசாரனைக்கும் உத்தரவிட்ட முதல்வர் கலைஞரின் ஆதங்கத்துடன் என்னுடைய ஆதங்கத்தையும் கலந்து கொள்ள விழைகிறேன்..

அது சரி..
இவர்கள் சட்டத்தை படித்து என்ன செய்வார்கள்..
சாதரண படிக்காதவர்களுக்கே.. பல அச்சங்கள் இருக்கின்றது..
வெட்கம்
வெட்கம்
சட்ட கல்லூரி மாணவர்களுக்கு இது வெட்கம்..
வெட்கி தலை குணியுங்கள்.. மாணவர்களே..
சண்டை நடந்தவற்றிர்கான காரணம்.. அதை விட வெட்கம்..
இந்த கோபத்தை..
தமிழர்களை ஓட ஓட விரட்டிய கர்னாடக கொலை வெறியர்களிடம் காட்டியிருந்தல் கூட பாவமே..
கீழே விழுந்தவனை.. செத்த பாம்பினை அடிப்பது போல் அடிப்பது ஆண்மைக்கு அழகல்ல.. தமிழனுக்கு பிடித்தவையும் அல்ல..

அடுத்து வெட்க பட வேண்டியது... காவல்..
அதை விட வெட்க பட வேண்டியது.. அங்கே.. இருந்த பத்திரிகையாளர்கள்.. வித விதமாக போட்டோக்களை எடுத்தும்.. வீடியோக்களை எடுத்து தள்ளிய ஊடகவியலாளர்கள்..
ஆம்..
எப்பொழுதும்.. மீடியாக்களுக்கு காசு பார்ப்பதை தான் பெரிதாக எண்ணுகின்றனர்.. இந்த புகை பட வீடியோ காமிரா மேன்கள்..
வசதியாக எல்லா பத்திரிகைகளும் இப்படி ஒரு விஷயத்தை எடுத்து சொல்ல கூட மறுக்கின்றன..

வாழ்க தமிழ்

ரங்கராஜன்
13-11-2008, 06:38 PM

அருமையான வார்த்தைகள்

ஓவியா
13-11-2008, 07:18 PM
நன்றி உதயசூரியண் அண்ணா.

ஜாதிக்காக இவை நடந்தன என்றால் வெட்கம்... வெட்கம்... வெட்கம்...

வளரும் சமுகமும் மூடநம்பிக்கைப்போல் ஜாதியை கட்டிகொண்டு அழுதால் நாடு முன்னேறின மாதிரிதான்.

யாராவது தலைவர் மு.க. எடுத்த முடிவையொட்டி வந்த செய்தி பதிவு சுட்டியை தாருங்களேன். நன்றி.

தமிழ் மகன்
13-11-2008, 11:39 PM
இந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்து விக்கித்துப்போனேன். இப்படியும் இருப்பார்களா மனிதர்கள். இவர்கள் சட்டம் படித்து நாளை எந்த நீதியை காப்பாற்றுவார்கள். நாளை கொலைகாரர்களுக்கும், வன்முறையாளர்களுக்கும் தான் வக்காலத்து வாங்குவார்கள். வேடிக்கை பார்த்த காவல் துறையை என்னவென்று சொல்வது, வெட்க்கக்கேடு இவர்கள் மக்களை எப்படி காப்பாற்றப்போகிறார்கள். காவலர்களுக்கு பணி இட மாற்றல் உத்தரவு உடனே நடைமுறைபடுத்து இது போன்ற சேவையை மற்ற ஊர்களுக்கும் போய்செய்யுங்கள் என்று மயிலிறகால் வருடிகொடுத்தால் எப்படி இவர்கள் திருந்துவார்கள். கடுமையான சட்டங்கள் எல்லாம் சாதாராண அப்பாவி மக்களுக்குத்தானா?

"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதர்களை கண்டால்"
என்று பாரதியின் பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

arun
14-11-2008, 02:22 AM
உண்மையில் சொல்லப்போனால் சட்டக் கல்லூரி மாணவர்களின் அட்டகாசத்துக்கு அளவே இல்லை அடி பட்டவர்களும் சாதாரமாணவர்கள் இல்லை என்பதற்கு வீடியோ ஆதாரங்களே சாட்சி

அடிக்கடி நடக்கும் இந்த தகராறு இந்த முறை ஓவராக போய் விட்டது இருப்பினும் ஜாதிக்காக இது போல செய்யும் செயல்கள் வன்மையாக கண்டிக்க தக்கதே

சிறுபிள்ளை
14-11-2008, 02:53 AM
சொன்னா வெக்கக்கேடு என்றுதான் சொல்லத்தோன்றுகிறது,. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை சாகும்வரை சிறையில் அடைக்க வேன்டும். காட்சியை பாக்கும் இவர்கள் மனிதர்கள்தானா அல்லது மனிதர்கள் தோல் போர்த்திய மிருகங்களா என்ற எண்ணமே மேலோங்கியது... மேற்கொன்டு எதுவும் சொல்ல விரும்பவில்லை...

ஆதவா
14-11-2008, 03:10 AM
இதில் தணிக்கைக்கு அவசியமே இல்லை, பரதேசி என்றால் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு வேலை நிமித்தமாவோ, பிழைக்கவோ வந்தவர்கள் என்று பொருள். அட்டுழீயத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் எல்லாம் வெளியூர் ஆட்கள் தானே?

மூர்த்தி... என்னைப் பொறுத்தவரையிலும் மன்றத்திற்கென ஒரு மரியாதை உண்டு.. ஆதலால் இந்த மாதிரி விவாத களங்களில் ஒருவரைக் குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் திட்டுவது தவறு என்பேன். படைப்பு களங்களில் இந்த பார்வையே வேறு. எனக்கு எப்போதுமே நீதிபதி ஸ்தானம்தான் பிடிக்கும்... இருபக்க விவாதங்கள் கேட்டு தீர்ப்பு வழங்குவது... நீதிபதியாக அல்லது வழக்குரைஞர்களாக இருப்பவர்கள் யாருமே குற்றவாளிகளை அவர் எத்தனை கொடூர கொலைகள் செய்திருந்தாலும் தவறான வார்த்தைகளால் அலங்கரிப்பதில்லை.. ஏன்? சபை மரியாதை.... அத்தகைய மரியாதையை இங்கே எதிர்பார்க்கிறேன்....

ஓவியா..
அது கோபத்தில் வந்த வார்த்தைகள் என்றாலும் நிஜமான வார்த்தைகள்..
ஏனெனில்..
சென்னை சட்ட கல்லூரிகளில்.. வந்து படிக்கும் வெளியூராரின்(அனேக சென்னை கல்லூரிகள் அப்படி தான்) இந்த நடவடிக்கை கண்டு திட்டும் வார்த்தை.. ஆனால் அது மோசமான வார்த்தையும் அல்ல..
வெளியூர்.. மற்றும் ஊர் ஊராக சுற்றும் போக்கத்தவனை.. இப்படி திட்டுவது சென்னையில்.. தமிழ் நாட்டில் வழக்கம் என்று நினைக்கிறேன்..

அதை விட வெட்க பட வேண்டியது.. அங்கே.. இருந்த பத்திரிகையாளர்கள்.. வித விதமாக போட்டோக்களை எடுத்தும்.. வீடியோக்களை எடுத்து தள்ளிய ஊடகவியலாளர்கள்..
ஆம்..
எப்பொழுதும்.. மீடியாக்களுக்கு காசு பார்ப்பதை தான் பெரிதாக எண்ணுகின்றனர்.. இந்த புகை பட வீடியோ காமிரா மேன்கள்..
வசதியாக எல்லா பத்திரிகைகளும் இப்படி ஒரு விஷயத்தை எடுத்து சொல்ல கூட மறுக்கின்றன..

வாழ்க தமிழ்

உதய சூரியன் அவர்களே!! பத்திரிக்கையும் மீடியாவும் போட்டோவோ, இல்லை வீடியோவோ எடுக்காமல் விட்டிருந்தால் இன்று இச்செய்தியே பெரிய அளவில் இருந்திருக்காது.... அவர்களைக் குறை சொல்வதில் எனக்கு சம்மதமில்லை..

அன்புடன்
ஆதவன்

aren
14-11-2008, 04:14 AM
இது காட்டுமிராண்டித்தனம் என்பதைத்தவிற வேறு என்ன சொல்ல.

இவர்கள்தான் நம் நாட்டின் சட்டத்தை நாளை காப்பாற்றப் போகிறவர்கள். அப்படியானால் நாடு போகும் பாதை????????

நாராயணா!!!!

shibly591
14-11-2008, 04:24 AM
கல்வி கற்கும் இடங்களில் பெருகி வரும் வன்முறைகளை நிறுத்துவது எப்படி? என்பது இப்போது கேள்விக்குறியாகிவிட்டது..

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 6 முறை மோதல் நிகழ்ந்தது..

எங்கே செல்லும் இந்தப்பாதை...?

வசீகரன்
14-11-2008, 04:41 AM
அண்ணா காக்கிகள் செய்தது ஒரு கோணத்தில் பார்த்தால் சரியென்று கூட சொல்லலாம்.. ஏன்னென்றால் சட்டக்கல்லூரிகாரர்கள் சாமானியர்கள் அல்லர்.. எங்க பிரச்சனைல நீங்க ஏண்ட வரிங்கனு காவலர்களை தாக்கியிருப்பார்கள்.. அதுமட்டுமல்ல பாரதி கண்ணனாக ஒரு காவலர் கிடந்திருப்பார்.. நீங்க அடிச்சுக்கோங்க டா.. எப்படியும் ஒரு சாரார் காலியாக போறாங்க மறுசாராரை உள்ள தூக்கி போடுறோம் னு அமைதியா இருந்திருப்பாங்க.. ஏன்னா இவங்க ஏற்கனவே போலிசையும் அடிச்சவங்க தான..

ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்களே ஆதி..!
மாணவர் கத்தியுடன் பாய்ந்தார்.. அவர் தன்னை தற்காத்துகொள்ள கையில் கிடைத்த ஆயுதத்துடன் அந்த மிருகங்களிடம் இருந்து போராடி இருக்கிறார்...

காவல் துறை அப்படி இருந்தது சரிதான் என்கிறீர்களே... மனிதாபிமானம்... எங்கே ஸார் போனது...
தொலைக்காட்சியில் பார்க்கும் நமக்கே.. இருதயம் உருகி கண்ணீராக வழிகிறது..!
வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற காவல் துறையினரின் பிள்ளையாக இருந்திருந்தால்... அவர்கள் அப்படி நின்றிருந்திருப்பார்களா..?
காக்கி உடையை மீறி அவர்கள் உள்ளங்களில் ஈரம் இருந்திருந்தால் அப்படி சிலையாக... நின்றிருந்திருப்பார்களா..?

விக்ரம்
14-11-2008, 08:59 AM
இரவு கடந்து காலையிலேயே.. துரித நடவடிக்கை எடுத்து அக்கல்லூரி முதல்வர், காவல் அதிகாரிகள் அனைவரையும் தூக்கி எறிந்து தனது ஆதங்கத்தை 18 மணி நேரத்திற்குள் வெளிபடுத்தி.. நீதி விசாரனைக்கும் உத்தரவிட்ட முதல்வர் கலைஞரின் ஆதங்கத்துடன் என்னுடைய ஆதங்கத்தையும் கலந்து கொள்ள விழைகிறேன்..
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு இந்தளவு மோசமாக இருக்கிறதே என்று ஆதங்கப்பட்டு -> தமிழக காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வரை பிரதமரோ (அ) ஜனாதிபதியோ தூக்கியிருந்தால் இன்னும் நல்லா இருக்குமோ... சும்மா என்னுடைய ஆதங்கத்தை சொன்னேன்.

பாவம் அந்த காவலர்கள் என்ன பாவம் செய்தார்கள்? விஜயகாந்த் படத்தில் வரும் காவலருக்கு இருக்கும் அதிகாரம், நடைமுறையில் இல்லை. அங்கே நடந்த வன்முறையை தடுக்க வேண்டுமென்றால், துப்பாக்கிச் சூட்டின் மூலம் தான் தடுத்திருக்க முடியும். துப்பாக்கிச் சூடு நடத்த எத்தனை மேலதிகாரிகளின் கையெழுத்து வாங்க வேண்டும்.

துப்பாக்கிச் சூடு நடத்தும் போது, பத்திரிக்கைக்காரர்கள் இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும். இப்படி பலப்பல முட்டுக்கட்டைகள்.

அப்புறம் கல்லூரி முதல்வர் -> பிரச்சினை பண்ற மாணவர்களை எல்லாம் நினைச்சவுடனே தூக்கிட்டா, அவரு கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்தா, அவரை இந்த உலகத்தைவிட்டே தூக்கிடுவானுக..

என்ன பண்றது? நாம வாழ்றது ஒரு மாதிரி வன்முறையான உலகத்திலே. வலிமையானவன் வறியவனை தாக்குறது எப்பவுமே சகஜம்.

மதுரை மைந்தன்
14-11-2008, 10:04 AM
தமிழ் நாட்டிற்கும் தமிழர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி இது. ராஜ பக்ஷே இதைப் பார்த்து கை கொட்டி சிரிக்கப் போகிறார். இலங்கையில் அப்பாவித் தமிழர்களை இன படு கொலை செய்வதற்கும் இத்தகைய சாதி வெறித் தாக்குதல்களுக்கும் பெரிய வேறு பாடு இல்லை. தாக்குதல் நடத்திய வர்களின் பெற்றோர்கள் அவமானத்தில் தலை குனிய வைக்கும் நிகழ்ச்சி இது. இந்த பெற்றோர்கள் இவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது.

அன்புரசிகன்
14-11-2008, 11:40 AM
நான் இந்த செய்தியை படித்துவிட்டு பேசாமல் இருந்துவிட்டேன். நேற்று இராத்திரி எனது நண்பன் ஒருவன் வந்து டேய் ஒரு வீடியோ க்ளிப் ஒன்று யூடப் இல் இருக்கு பாக்கிறியா என்றான். நானும் ஏதோ என்று பார்த்ததின் விளைவு இராத்திரி நீண்டநேரம் தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுத்தேன்....

இந்த சம்பவத்தை உலகின் இரண்டாம் ஸ்தானத்திலிருக்கும் காவல் துறையென வர்ணிக்கப்படும் தமிழ்நாட்டு காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது...

http://www.youtube.com/watch?v=RgiP9WgstKo

கொலைக்குற்றம் செய்தாலும் இவ்வளவு கொரூரமாக யாரும் யோசிக்கமாட்டார்கள்...

போலியோவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு வந்து தன்கோரிக்கையை சற்று கடினமாக முன்வைத்தபோது அவரை பல போலீசார் தம் சப்பாத்து காலால் உதைத்து ஏதோ சதித்துவிட்டோம் என்று தமிழக காவல் துறை நடந்துகொண்டது தற்சமயம் நினைவிற்று வருகிறது...

ஓவியா
14-11-2008, 11:48 AM
உலகின் இரண்டாம் ஸ்தானத்திலிருக்கும் காவல் துறையென வர்ணிக்கப்படும் தமிழ்நாட்டு காவல் துறையினர்

அன்பு இது உண்மையா!!!

அய்க்கோ 'மினி ஆர்ட் அட்டேக்' வருவது போல் இருக்கே, சோடா பிலீஸ்.

அமரன்
14-11-2008, 11:56 AM
அக்கா துப்பு துலக்குவதில் தமிழ்நாடு காவல்துறை உலகில் இரண்டாம் இடம்தான்...

அவர்கள் உயிர் அவர்களுக்கு முக்கியமாகப் பட்டதில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறார்கள். வானத்தை நோக்கி ஒரு வேட்டு தீர்த்திருந்தாலே வெறிக்கூட்டம் சிதறி ஓடி இருக்கும். இந்த அநியாயங்களைக் கண்டு பொதுமக்கள் வெகுண்டு திரண்டு நடவடிக்கை எடுத்தார்கள் என்பது மட்டுமே இந்த விடயத்தில் ஆறுதல்.

ஆதி
14-11-2008, 12:10 PM
தற்போதுதான் இந்த சம்பவத்தின் ஒளி-ஒலி காட்சியை பார்க்கிறேன்.. உணர்ச்சிகள் தாறுமாறாய் தாவுகின்றன..

போதிமரத்தான் பொறுமைகள் செல்லாது
ஆதி தண்டனைகள் அமலாக்க வேண்டும்

இவர்கள் அனைவரையும் வரிசையாய் நிற்க வைத்து காட்டு யானையிடம் காவு கொடுக்க வேண்டும்..

praveen
14-11-2008, 12:46 PM
இந்த சம்பவத்தை உலகின் இரண்டாம் ஸ்தானத்திலிருக்கும் காவல் துறையென வர்ணிக்கப்படும் தமிழ்நாட்டு காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது...

இங்கே நான் தந்தது அனைத்தும் செய்தித்தாள்களில் படித்ததை உள்வாங்கி தந்த கருத்து.

போலிஸார் குற்றம் நடக்கும் முன்னே அந்த இடம் வந்தது, வேடிக்கை பார்க்க அல்ல. தடுத்து நிறுத்தவே. கல்லூரி முதல்வர் கல்லூரிக்குள் நுழைய அனுமதி தராதததாலே அவர்கள் உள்நுழைய முடியாமால் இப்படி எல்லோரும் அவர்கள் செயல்பாட்டை ஏளனம் செய்யும்படி ஆகி விட்டது.

எல்லோரும் சொல்வது போல இவர்களே தாமாக உள்நுழைந்து நடவடிக்கை எடுப்பதென்றால், அவர்களை அடித்து உதைத்து தான் அப்புறப்படுத்தியிருந்திருக்க வேண்டும். பின் மீடியாக்களின் வீடியோவில் காவல்துறை தடியடி தான் தெரிந்திருக்கும் முந்தையது மறைக்கப்பட்டிருக்கும்.

இதற்கு முன் பலமுறை நடந்த (சட்டக்கல்லூரி மானவர்கள் நடத்திய) கலாட்டாகளில் போலிஸார் அத்துமீறி உள்நுழைந்து தாக்கியதாக புகார் வந்ததால் முறையான அனுமதிக்காக காத்திருந்திருக்கின்றனர்.

மக்கள் மத்தியில் ஆட்சிமேல் அதிருப்தி வந்துவிடக்கூடாது என்பதற்காக காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் பந்தாடப்பட்டுள்ளனர். உண்மையிலே கடமையை செய்யத்தவறியவர் அந்த கல்லூரி முதல்வர் தான். முழுப்பிரச்சினை முடிந்த பின் தான் அவர் காவல் துறைக்கே புகார் தந்தார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன், அவர் மெத்தனத்தை. ஆனால் காவல்துறை தங்களுக்கு வந்த தகவலையொட்டியே அசம்பாவிதம் நடக்கும் என்று அங்கே தடுக்க சென்றிருக்கின்றனர்.

போலிஸ்காரர்கள் தன்னிச்சையாக சென்று சம்பவத்தை தடுக்க, தாக்குபவர்களை அடித்து பெரிய பிரச்சினை ஆகியிருந்தால், தமிழ்நாட்டில் அனைத்து சட்டக்கல்லூரிகளும் ஸ்டிரைக் செய்திருக்கும். மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று எல்லா கல்லூரிகளும் ஸ்டிரைக் செய்யப்பட்டிருக்கும். வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கனிப்பு செய்திருப்பர். பிரச்சினை பின்னர் வேறு மாதிரி திரும்பியிருந்திருக்கும்.

இருந்தாலும் காவல்துறையினர் வேடிக்கை பார்த்தது சரியானது என்று நான் சொல்லவரவில்லை. இரண்டு ரவுடி கும்பல் மோதும் போது அவர்களே ஒருவருக்கொருவர் போட்டு தாக்கி கொள்ளட்டும் என்று இருப்பதை போல இருந்து விட்டனர்.

anna
14-11-2008, 01:28 PM
என்ன காட்டுமிராண்டிதனமான செயல் இவங்க எல்லாம் வருங்கால் வழக்கறிஞர்கள். நெஞ்சு பொறுக்குது இல்லையே இந்த நிலை கெட்ட மனிதனை நினைத்து விட்டால்.அய்யகோ இது என்ன தமிழ்நாடா அல்லது சுடுகாடா என எண்ண தோன்றுகிறது.

ராஜா
14-11-2008, 01:33 PM
இங்கே நான் தந்தது அனைத்தும் செய்தித்தாள்களில் படித்ததை உள்வாங்கி தந்த கருத்து.

போலிஸார் குற்றம் நடக்கும் முன்னே அந்த இடம் வந்தது, வேடிக்கை பார்க்க அல்ல. தடுத்து நிறுத்தவே. கல்லூரி முதல்வர் கல்லூரிக்குள் நுழைய அனுமதி தராதததாலே அவர்கள் உள்நுழைய முடியாமால் இப்படி எல்லோரும் அவர்கள் செயல்பாட்டை ஏளனம் செய்யும்படி ஆகி விட்டது.

எல்லோரும் சொல்வது போல இவர்களே தாமாக உள்நுழைந்து நடவடிக்கை எடுப்பதென்றால், அவர்களை அடித்து உதைத்து தான் அப்புறப்படுத்தியிருந்திருக்க வேண்டும். பின் மீடியாக்களின் வீடியோவில் காவல்துறை தடியடி தான் தெரிந்திருக்கும் முந்தையது மறைக்கப்பட்டிருக்கும்.

இதற்கு முன் பலமுறை நடந்த (சட்டக்கல்லூரி மானவர்கள் நடத்திய) கலாட்டாகளில் போலிஸார் அத்துமீறி உள்நுழைந்து தாக்கியதாக புகார் வந்ததால் முறையான அனுமதிக்காக காத்திருந்திருக்கின்றனர்.

மக்கள் மத்தியில் ஆட்சிமேல் அதிருப்தி வந்துவிடக்கூடாது என்பதற்காக காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் பந்தாடப்பட்டுள்ளனர். உண்மையிலே கடமையை செய்யத்தவறியவர் அந்த கல்லூரி முதல்வர் தான். முழுப்பிரச்சினை முடிந்த பின் தான் அவர் காவல் துறைக்கே புகார் தந்தார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன், அவர் மெத்தனத்தை. ஆனால் காவல்துறை தங்களுக்கு வந்த தகவலையொட்டியே அசம்பாவிதம் நடக்கும் என்று அங்கே தடுக்க சென்றிருக்கின்றனர்.

போலிஸ்காரர்கள் தன்னிச்சையாக சென்று சம்பவத்தை தடுக்க, தாக்குபவர்களை அடித்து பெரிய பிரச்சினை ஆகியிருந்தால், தமிழ்நாட்டில் அனைத்து சட்டக்கல்லூரிகளும் ஸ்டிரைக் செய்திருக்கும். மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று எல்லா கல்லூரிகளும் ஸ்டிரைக் செய்யப்பட்டிருக்கும். வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கனிப்பு செய்திருப்பர். பிரச்சினை பின்னர் வேறு மாதிரி திரும்பியிருந்திருக்கும்.

இருந்தாலும் காவல்துறையினர் வேடிக்கை பார்த்தது சரியானது என்று நான் சொல்லவரவில்லை. இரண்டு ரவுடி கும்பல் மோதும் போது அவர்களே ஒருவருக்கொருவர் போட்டு தாக்கி கொள்ளட்டும் என்று இருப்பதை போல இருந்து விட்டனர்.

:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:
:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:
:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

Keelai Naadaan
14-11-2008, 01:37 PM
அவர்கள் உயிர் அவர்களுக்கு முக்கியமாகப் பட்டதில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறார்கள். வானத்தை நோக்கி ஒரு வேட்டு தீர்த்திருந்தாலே வெறிக்கூட்டம் சிதறி ஓடி இருக்கும். இந்த அநியாயங்களைக் கண்டு பொதுமக்கள் வெகுண்டு திரண்டு நடவடிக்கை எடுத்தார்கள் என்பது மட்டுமே இந்த விடயத்தில் ஆறுதல்.

உயிருக்கு பயந்து இருந்தார்கள் என்பது சரியாய் இருக்காது. அவர்கள் கைகள் ஏதோ காரணத்தால் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
சாதி பிரச்னை வேறு.

பெரும்பாலும் காவல்துறை ஆளும்கட்சிக்கு ஏற்ப பாரபட்சமாகத்தான் நடந்து கொள்ளும்.

சிலசமயங்களில் பாதுகாப்புக்காக 100 அடி 200 அடி தூரத்துக்கு நிற்கும் காவலர்களை பார்த்தால் உண்மையிலேயே பாவமாக இருக்கும்.

அதிலும் அரசியல் தலைவர்கள் வருகிறார்கள் என்ற காரணத்துக்காக பாதையை சரி செய்வதற்காக
பொதுமக்களிடம் வசவுகள் வாங்கி கொண்டு நிற்கும்போது.. அந்த துறைமீது பரிதாபம் மேலிடும்.

இங்கே ஒவ்வொரு சிலைக்கும் காவலர்கள் போடவேண்டும். அல்லது சிலையை கூண்டுக்குள் வைக்கவேண்டும்.

நாள்தோறும் கண்டமாதிரியான நபர்களையும் சந்தித்து அவர்கள் பேச்சு நடையே கூட மாறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.

எந்தவொரு குற்றவாளி மீதும் அவர்கள் தைரியமாய் நடவடிக்கை எடுக்க முடியும் என்று எண்ண தோன்றவில்லை.

வெளிநாடுகளில் காவலருக்கு இருக்கும் மரியாதை என்ன, அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாகன வசதி, பாதுகாப்பு உபகறணங்கள் என்ன, எத்தனை பேருக்கு ஒரு காவலர் என்ற விகிதம் என்றெல்லாம் கணக்கு போட்டால் உண்மையிலேயே இங்கிருக்கும் நிலையை நினைத்து வருத்தம் மேலிடுகிறது.

இன்றும் கூட பல காவலர்கள் சைக்கிளில்தான் பயணம் செய்கிறார்கள். இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறி செல்கிறார்கள்

அபுதாபியில் ஒருமுறை பார்த்தேன், சாலையில் செல்லும் குழந்தைக்கு நகர்வலம் வரும் காவலர் வண்டியிலிருந்தபடியே கையசைத்து செல்கிறார்.
தண்டனைகள் அங்கே கடுமையாக அமுல்படுத்தபடுவதால் காவல்துறைமீது பயமும் உண்டு மரியாதையும் உண்டு.
குற்றங்கள் குறைந்திருப்பதால் காவலர் மன இறுக்கம் இல்லாமல் கையசைக்கிறார்.

இங்கே எந்த தண்டனையையும் எளிதில் அமுல்படுத்த முடியாது. கமிஷன் தான் போடமுடியும். அந்த கமிஷன் ஆராய்ந்து தீர்ப்பு சொல்வதற்குள் அந்த நபர் இயற்கையாகவே இறந்திருப்பார்.

சில விஷயங்களை மன்றத்தில் பேச இயலாது.

Keelai Naadaan
14-11-2008, 01:41 PM
பிரவீண் அவர்கள் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன்.

மதி
14-11-2008, 01:57 PM
இவர்களெல்லாம் மாணவர் சமுதாயமென்று சொல்லவே வெட்கமாயிருக்கிறது. இதில் எத்தனை பேர் உண்மையான மாணவர்..எத்தனை பேட் தொழில்முறை ரவுடிகள் என்று தெரியவில்லை. ஆயினும் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி சொன்னது என்றென்றும் பொய்த்துவிடுமோ என்று பயமாயிருக்கிறது.

ஓவியா
14-11-2008, 02:05 PM
பிரவின்,
உங்களின் கருத்துக்குள் நானும் உட்படுகிறேன். சரி கோலெஜ் உள்ளேதானே அவர்கள் செல்ல அனுமதியில்லை.

ஆனாலும் அந்த வாசலின் வெளியில் விழுந்த மாணவனை ஓடி சென்று தூக்கியோ அல்லது வெளியில் இழுத்தோ அவனுக்கு முதலுதவி அளிக்கக்கூடவா அவர்களின் கைகளும் மனமும் கட்டப்பட்டுள்ளது!!!

மனிதநேயம் இருந்த ஒருவர் அந்த யூடியுப்பில் காவலிடம் 'நீங்களேல்லாம் என்ன மனிதர்கள்' என்று கத்துவதை கேட்கும் பொழுது நமக்கே வலிக்குதே!!.

மதி
14-11-2008, 02:06 PM
அன்பு உறவுகளுக்கு...
செய்திச்சோலை திரி மீண்டும் விவாத களமாக மாறிக்கொண்டிருக்கிறது. நிகழ்வுக்கு கண்டங்கள் தெரிவிப்பதோடு நில்லாமல் அனைவரும் தத்தம் பார்வையும் தந்து அலசலை ஆரம்பித்துவிட்டால் முழுமையான விவாதக்களமாகிவிடும். எல்லா செய்தி திரிக்கும் இது பொதுவானது. ஆதலின் இதற்கு மேலும் இந்த நிகழ்வு பற்றி விவாதிக்க விரும்பினால் விவாதக்களத்தில் தனித்திரி தொடங்கி விவாதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

praveen
15-11-2008, 04:50 AM
பிரவின்,
உங்களின் கருத்துக்குள் நானும் உட்படுகிறேன். சரி கோலெஜ் உள்ளேதானே அவர்கள் செல்ல அனுமதியில்லை.

ஆனாலும் அந்த வாசலின் வெளியில் விழுந்த மாணவனை ஓடி சென்று தூக்கியோ அல்லது வெளியில் இழுத்தோ அவனுக்கு முதலுதவி அளிக்கக்கூடவா அவர்களின் கைகளும் மனமும் கட்டப்பட்டுள்ளது!!!

மனிதநேயம் இருந்த ஒருவர் அந்த யூடியுப்பில் காவலிடம் 'நீங்களேல்லாம் என்ன மனிதர்கள்' என்று கத்துவதை கேட்கும் பொழுது நமக்கே வலிக்குதே!!.

சித்திரை செல்வனை அடிக்கும்போது காவல்துறை தடுக்கும்போது இந்த அடிபட்டவர்கள்+அடிகொடுத்தவர்கள் கல்லூரிக்குள் நுழையாதே என போலீஸை அரட்டிவிட்டுத்தானே இரும்புக்கம்பியால் மண்டையை உடைத்து கொண்டனர்.

சென்னை சட்டக்கல்லூரியில் பலமுறை போலிஸ் தனது மூக்கை உடைத்து கொண்டதால் இந்தமுறை எட்டவே நின்று விட்டது என்று நினைக்கிறேன்.

எப்படியிருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் அடிபட்டவரை கொண்டு சென்றிருக்கவேண்டும், கேமரா முன்பு.

சரி அடிபட்ட இவர்களை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தது யாரென்று நினைக்கிறேன், நீங்கள் பார்த்த வீடியோவில் அதெல்லாம் காட்டியிருக்க மாட்டார்கள், ஏனென்றால் பார்ப்பவர் உணர்ச்சியை தூண்டுவதும், அரசாங்கத்தை குறை கூறுவதும் தான் பல மீடியாக்களின் வேலை.

மீடியாக்கள் எந்த குற்றம் எதுவும் கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் மட்டும் புகழ்வார்கள் அதற்கு உதாரணம்
ஹிதேந்திராவின் இருதய மாற்று அறுவை கிசிக்கைக்கு போலிஸ் அதிவேகத்தில் இருதயத்ததை கொண்டு சென்று சேர்த்தது.

lolluvathiyar
20-11-2008, 06:25 AM
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த காக்கி மிருகங்களும்தான்.

வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுத்தாலும் அவர்கள் தன்டிக்க பட்டிருப்பார்கள்.

அடிபட்டவர்களும்.. சாதி வெறியர்களே..
இதன் மூலம் சில மாணவர்களின் சாதி வெறி மாறினால் நலமே..

மாறாது அரசியல்வாதிகள் மாற விடமாட்டார்கள்

சண்டை நடந்தவற்றிர்கான காரணம்.. அதை விட வெட்கம்..

சாதிதான் காரனம். சாதிவெறியை கல்லூரி பள்ளி மானவன் மானவியர்களுக்கு வளர்த்த பெருமை அரசியல்வாதிகளுக்கு உரியது. இன்று சட்டகல்லூரி விரைவில் ஏதாவது பள்ளியில் நடக்கும் சன்னை காட்சி வீடியோவும் நாம் பார்கலாம்.

அதை விட வெட்க பட வேண்டியது.. அங்கே.. இருந்த பத்திரிகையாளர்கள்.. வித விதமாக போட்டோக்களை எடுத்தும்.. வீடியோக்களை எடுத்து தள்ளிய ஊடகவியலாளர்கள்..

அதுதான் அவர்கள் தொழில், ஒரு தனி மனிதனின் வீட்டுக்குள் நடப்பதை திருட்டுதனமாக படம் எடுத்தால் அது அசிங்கம். ஆனால் இங்கு தெருவில் ஆட்டும் ஆட்டத்தை படம் எடுத்து மக்களுக்கு காட்டுவது தவறல்ல அது அவர்கள் கடமை. அவர்கள் எடுக்காவிட்டால் இதை நாம் அறிந்திருக்க முடியாதல்லவா.

தமிழ் நாட்டிற்கும் தமிழர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி

இது இந்தியா முழுவது கல்லூரிகளில் நடக்கிறது. தமிழர்களுக்கு தான் இதனால் அவமானம் என்று சொல்ல முடியாது.

தாக்குதல் நடத்திய வர்களின் பெற்றோர்கள் அவமானத்தில் தலை குனிய வைக்கும் நிகழ்ச்சி இது.

பெற்றோர்களும் இதே வெறியுடன் வாழ்ந்து வந்தவர்கள். அப்பன் புத்தி புள்ளைகளுக்கு தப்பாம பிறந்திருக்கு. அவர்கள் அவமான பட மாட்டார்கள். ஒரு வேலை பெருமை பட்டு கொன்டு இருக்கலாம்.

ஆனாலும் அந்த வாசலின் வெளியில் விழுந்த மாணவனை ஓடி சென்று தூக்கியோ அல்லது வெளியில் இழுத்தோ அவனுக்கு முதலுதவி அளிக்கக்கூடவா அவர்களின் கைகளும் மனமும் கட்டப்பட்டுள்ளது

ஓ உதவி செய்ய போயிருக்கலாம் ஆனால் பெரிய தடி கம்பி வச்சு அடிக்கற கூட்டத்திடம் அடி வாங்கும் போலீஸை யார் ஆஸ்பத்திரி கூட்டீட்டு போவாங்க. அவுங்களுக்கும் புள்ள குட்டி இருக்குல்ல.

அப்புறம் எதுக்கு அங்க போலீஸ் நிக்குதுனு கேக்கறீங்களா. காரனம் மானவர்கள் வெளியே வந்து கலவரம் செய்வதை தடுக்கவும், ஏதாவது விஐபியை தாக்க கூடாது என்பதற்க்கவும் ஏதாவது அரசியவாதிகளின் சிலையை சேத படுத்தி விடுவதை தடுக்கவும் தான் போலீஸ் வெளியே காவல் நின்றிருப்பார்கள்.
போலீஸ் இல்லை என்றா கலவரம் தெருவுக்கு வந்திருக்கும். ஏராளமான அப்பாவி மக்கள் செத்திருப்பார்கள். விலங்குகள் காட்டுகுள் மட்டும் அடித்து கொள்ள வகை செய்து விட்டதை பாராட்ட வேன்டும்.

இது போன்ற கலவரங்கள் இந்தியாவில் கல்லூரிகளில் புதிதல்ல. காலம் காலமாக நடந்து வரும் சாதர்ன செயல்தான். இந்த முரை காமிராவில் பதிவாகி விட்டது. அவ்வளவுதான்.

ரொம்ப நாள் கழிச்சு மன்றம் வந்தனா கை பரபரக்ங்குது அதான் இந்த திரியை தேடி வந்தேன்

பென்ஸ்
20-11-2008, 02:31 PM
அப்புறம் எதுக்கு அங்க போலீஸ் நிக்குதுனு கேக்கறீங்களா. காரனம் மானவர்கள் வெளியே வந்து கலவரம் செய்வதை தடுக்கவும், ஏதாவது விஐபியை தாக்க கூடாது என்பதற்க்கவும் ஏதாவது அரசியவாதிகளின் சிலையை சேத படுத்தி விடுவதை தடுக்கவும் தான் போலீஸ் வெளியே காவல் நின்றிருப்பார்கள்.

என்னடா வாத்தியாரை காணோம்ன்னு நினைத்தேன்....
வந்ததோட சொல்ல வேண்டியதை சொல்லிடிங்க....

இந்த திரியும், அந்த வீடியோவின் பாதிப்பும் எனக்கு சிறிது அதிகம்....
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது...

ஆனா சாதியின் பேரை சொல்லை அடி நடத்துவதை பாத்தா கேவலமா இருக்கு

ஸ்ரீதர்
30-11-2008, 04:38 PM
தண்டிக்கப்படவேண்டியவர்கள் அந்த மணவமிருகங்கள் மட்டுமல்ல....வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த காக்கி மிருகங்களும்தான். அடி வாங்கி எழ முடியாத நிலையிலும் முறை வைத்து வந்து தாக்கிவிட்டுப் போகும் அந்த மிருகங்களைத் தடுக்காமல் வெகு இயல்பாகப் பார்த்துக்கொண்டிருக்கும் அவர்களை என்ன செய்தாலும் தகும்.

மனது வலிக்கிறது.

இதே போலீசை , இதே சட்டக்கல்லூரி விடுதிக்குள் நுழைந்து மாணவர்களை அடித்ததற்காக கிழி கிழி என்று கிழித்தவர்கள் இப்போது உள்ளே நுழையவில்லை என்று குற்றம் கூறுகிறார்கள். சத்தியமாக போலீஸ் துறை செய்ததை நியாயம் என்று நான் சொல்லவில்லை. பாழாய்போன அரசியல்வாதி ஜென்மங்களின் தலையீடு இல்லாமல் போலீசிடம் அதிகாரத்தை வழங்கிப்பாருங்கள். பிறகு நடப்பதைப்பாருங்கள். அமெரிக்காவில் ஜார்ஜ் புக்ஷ் இன் மகள் குடித்துவிட்டு கலாட்டா செய்ததற்காக ஒரு வாரம் தண்டனை கொடுத்தார்களாம். அதற்கான சுதந்திரம் அந்நாட்டு போலீசுக்கு இருந்ததால்தான் அதனை சாதிக்க முடிந்தது. நம் நாட்டில் ஒரு கவுன்சிலர் வீட்டு எடுபிடி மேல்கூட கைவைக்கமுடியாது.

இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள். அடி கொடுத்தவர்களும் சரி , அடி வாங்கியவர்களும் சரி ஒன்றும் யோக்கியர்கள் இல்லை. கடைந்தெடுத்த பொறுக்கிகள்.(இந்த வார்த்தையை உபயோகித்தற்கு மன்னிக்கவும் இதை விட மோசமான வார்த்தை உபயோகிக்க முடியாது) மாமேதை அம்பேத்கர் பெயரையும் , பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரையும் வைத்துக்கொண்டு இல்லாத அட்டூழியங்களை செய்துகொண்டிருந்தவர்கள்தான். இவர்கள் இருவரின் செயல்களை இன்று அம்பேத்கரும் , முத்துராமலிங்கதேவரும் பார்த்திருந்தால் ரத்தக்கண்ணீர் விட்டிருப்பார்கள். இன்றைய தேதியில் இவர்கள் இருக்கவேண்டிய இடம் கல்லூரி அல்ல. அரசியல் கட்சி. இதே வேலையை அரசியல் கட்சிக்காக இவர்கள் செய்திருந்தால் இந்நேரம் மாவீரன் என்று போஸ்டர் ஒட்டி கட்சிப்பதவியும் கொடுத்து கொஞ்ச காலம் கழித்து அமைச்சராகவும் ஆகி இருப்பார்கள்.