PDA

View Full Version : \\\கவிஞனின் மனைவி\\\ஆதவா
13-11-2008, 02:57 AM
எனது கணவரின் கவிதைகள்
இசங்கள் எனும் அடர்ந்த காடுகளில்
விளைந்தவை
குறியீட்டுக் காய்கள் முளைத்து
செழித்து வளர்ந்தவை

அவரைப் போன்றே
அவைகளும் மூர்க்கமானவை
எனக்குள் ஒவ்வொருமுறையும்
அவர் திணிக்கும்பொழுதெல்லாம்
வாசிப்புத் திணறலில்
என் நுகர்தலின் வாயில்
குதறப்பட்டிருக்கிறது

என் மனநிலையை பங்கப்படுத்தி
காணும் இடமெல்லாம் கவிதையாக்கியது
அவரது கவிதைகள்

என்னைச் சுவைத்த அவைகளின் தாகம்
இன்னும் தீரவில்லை.
அவர் இன்னும் நிறுத்திறார்போலில்லை

அவரது கவிதைக்கான மரணத்தை
ஒவ்வொரு காகிதத்திலும் எதிர்பார்க்கிறேன்
அவைகளோ பல்கிப் பெருகி
என்னை வதம் செய்வதில் உறுதியாக இருக்கின்றன

இன்று அவருக்கு பாராட்டு விழா.

அவரைச் சுற்றி பல்வேறு கவிதைகள்
வட்டமடித்துக் கொண்டிருந்தன.
அவை ஒன்றுக்கொன்று
தான் தின்ற கதைபேசி அலைந்தன

என்னருகே வெறிதெளித்த கவிதையொன்று
என்னைக் காறி உமிழ்ந்து கொண்டிருந்தது.
என்னைப் போன்றே பலரையும்.

ஓவியன்
06-10-2009, 08:11 AM
கவிஞர்கள் என்றில்லை பல பிரபலமான கலைஞர்கள் தம் ஆக்கங்களால் தம் மனைவியுடன் மூர்க்கமாக தம்மைத் திணித்துள்ளதாகவே அறியமுடிகிறது. அவர்களைப் பொறுத்த வரை வெளியே பூசிக் கொள்ளும் வாசனைத் திரவியங்களெல்லாம் உள்ளே இருக்கும் நாற்றத்தினை மறைப்பதற்கே...

பெண்களே ஒவ்வொரு கவிதைகளாக இருக்க, அப்படியொரு பெண் கவிதைகளின் மரணத்தை எதிர்பார்த்திருப்பது அவள் எந்தளவுக்கு காயப்பட்டிருக்கிறாளென்பதை எடுத்தியம்புவதாக இருக்கிறது, நல்ல கவி வரிகள் மனதார வாழ்த்துகிறேன் ஆதவா..!!

aren
10-10-2009, 09:39 AM
கொஞ்சம் காட்டமானக்கவிதையாக இருக்கிறது. ஒரு மனைவியை நேசிக்கத்தெரியாதவன் எப்படி கவிதையைப் படைப்பான் என்று கேள்வி என்னையறியாமலேயே வருகிறது

வானதிதேவி
10-10-2009, 10:54 AM
காயத்திற்கு கவிஞர் மருந்திடாதவரை அது ராசபிளவாக இருந்து கொல்லும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

நல்ல கவிதை என்று சொல்வதை விட நம் ஆறுதலுக்காவது அடுத்து வரட்டும் கவிஞர் மனைவியின் ஆனந்த கவிதை.

சிவா.ஜி
10-10-2009, 11:39 AM
இதுவும் ஒரு இசம் பேசும் கவிதையே. சிந்துபைரவியில் பாகவதர் சிவகுமாரின் மனைவி சுலக்*ஷனா நினைவுக்கு வருகிறார்.

திணிப்பு என்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்தமுடியாத ஒன்று. ஒவ்வாத ஒன்றை திணிப்பது குமட்டலை ஏற்படுத்துவதைப்போலத்தான் கவிதையும் பாவம் அந்த அப்பாவிப் பெண்ணைப் படுத்துகிறது.

கவிஞன் முதலில் நல்ல மனிதனாக இருக்கட்டும்.

சிறந்த கவிதை ஆதவா. வாழ்த்துகள்.

aren
10-10-2009, 12:33 PM
எந்த மனைவியும் தன் கணவன் செய்யும் வேலையை மற்றவர்கள் பாராட்டினால் அவளுக்கு புரியாமல் இருந்தாலும் நிச்சயம் பாராட்டவே செய்வார்.

இந்த கவிதையில் வரும் மனைவி ஏன் தன் மீது திணிக்கப்பட்டதாக நினைக்கிறாள் என்று எனக்குப் புரியவில்லை.

இளசு
04-11-2009, 05:47 PM
இராமக்கவி அல்லன்..
கிருஷ்ணகவி இவன்..

சீதையாய் இருக்க விரும்புபவள்..
ராதையாக இயலா முரண்நிலை..


-----------------------------

என் பார்வை சரியா?
ஆதவனுக்கே வெளிச்சம்!!!