PDA

View Full Version : கொலை எப்படி நடந்தது?ரங்கராஜன்
12-11-2008, 03:18 PM
கொலை எப்படி நடந்தது?


இன்ஸ்பேக்டர் ராஜரத்தினம் புயல் வேகத்தில் அந்த வீட்டுக்குள் நுழைந்தார், வயதான ஏட்டு மதனகோபால் விரைப்பாக வணக்கம் சொன்னான். அந்த வீடு பணக்காரர் கணேசலிங்கத்தின் வீடு, அவர் ஒரு பிரம்மச்சாரி வாழ்க்கை முழுவது பணம் சேர்ப்பதிலே கவனமாக இருந்தார், மனிதர்களையும், தனக்கு என ஒரு குடும்பத்தை அவர் சேர்க்கவில்லை தொழிலிளே கவனமாக இருந்தார். அவருக்கு வயசு 45 ஆனது, சரி இதற்க்கு மேல் எதற்கு கல்யாணம் என்று அவர் அப்படியே இருந்து விட்டார். அவருக்கு துணைக்குனு அவரின் அண்ணன் மகனை விட்டில் வளர்த்து வந்தார். அவன் குணா பன்னிரெண்டாவது படிக்கும் மாணவன். அவனை மிகுந்த பாசத்துடன் வளர்த்தார் ஆனால் என்ன பயன் குணாவின் பாசம் எல்லாம் இவருடைய பணத்தின் மேல் தான் இருந்தது. நிற்க, இன்ஸ்பேக்டர் ராஜரத்தினத்தின் வருகையில் இருந்த என்ன நடந்து இருக்கும் என்று நீங்கள் யோசித்து இருப்பீர்கள், ஆம் கணேசலிங்கம் இறந்து இருந்தார். அவர் வீட்டின் வேலையாள் தான் போலீஸ்க்கு தகவல் அனுப்பினான். குணா நீங்கள் எதிர்ப்பார்ப்பது போல வீட்டில் இல்லை. இரண்டு நாளுக்கு முன் பள்ளி சுற்றுலாவுக்கு சென்று இருந்தான். ராஜா நேராக மதனிடம் வந்தான்.

"யோவ் என்னயா ஆச்சி"

"ஆளு கொஞ்ச நாளாவே உடம்பு சரியில்லாம இருந்து இருக்கார், இன்னைக்கு காலையில படுக்கையிலே இறந்து விட்டார். வீட்டில் வேலை ஆள் தவிர யாரும் இல்லை, இறந்தவர் பிரம்மச்சாரி, கடைசி காலத்தில் தன்னுடைய அண்ணனின் மகனை துணைக்கு வளர்க்கிறார், அவனும் இரண்டு நாளைக்கு முன்னாடி பிக்னிக் போய் இருக்கான்"

"சரியா இயற்கையா தான இறந்து இருக்கார் அதுக்கு எதுகு நம்மள கூப்பிட்டு இருக்காங்க"

"தெரியல சார், இருங்க அந்த வேலைக்காரனை கூப்பிடுறேன்"

வேலையாள் முனியன் வந்தான், அவனின் கண்கள் கலங்கி இருந்தது பயத்துடன் ராஜாவை நெருங்கினான்.

"யோவ் என்னயா பயந்த மாதிரி நடிக்கிற, உன் பேரு என்ன?, எதுக்கு எங்களுக்கு போன் செஞ்சு கூப்பிட்ட" என்றான் ராஜா மிரட்டு தோரனையில்.

"அய்யா சாமி இல்லைங்க, என் பேரு முனியன் நான் அய்யா வீட்டுல 15 வருஷமா இருக்கிறங்க, காலையில போய் அய்யாவ எழுப்ப போனா அவரு...(வாயை முடிக்கொண்டு அழுதான்), எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலைங்க, அவருடைய ஒரே சொந்தம் அவரு அண்ணங்க அவரும் எதோ கிராமத்து பக்கம் இருக்காருங்க, யாருக்கு தகவல் கொடுக்கறதுன்னு தெரியலைங்க அதான் உங்களுக்கு சொன்னேங்க, ஏன்னா நம்ம மேல குத்தம் வந்துடக் கூடாதுன்னு தாங்க" என்றான் முனியன்.

ராஜா அவனை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு "யோவ் நல்ல வெவரமா செஞ்சி இருக்க, உன் வெவரம் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும்"

குணா வீட்டுக்குள் நுழைந்தான், அவனைப் பார்த்தால் வயதுக்கு மீறிய வளர்ச்சி என்பது தெரியும், வீட்டில் போலீஸ் நிற்பதை பார்த்து குழப்பத்துடன் உள்ளே வந்தான். உடனே முனியன் குணாவை நோக்கி ஓடினான்

"ஐய்யோ தம்பி நம்ம ஐயா நம்மள விட்டு போய்டாரு" என்று அழுத படியே அவனை அனைத்தான். குணா கண்கள் லேசாக கண்ணீர் கசிந்தது. அவன் கணேசலிங்கத்தின் படுக்கையை நோக்கி சென்றான், இவர்கள் மூவரும் அவன் பின்னாடியே சென்றனர். கணேசலிங்கத்தின் முகம் ஊதி இருந்தது, உதடுகள் காய்ந்து இருந்தது, முடிகள் நோயின்
தீவிரத்தால் கொட்டி இருந்தது. ஆள் கொஞ்சம் தாட்டியாக தான் இருந்தார். ராஜா குணாவுக்கு ஆறுதல் கூறிவிட்டு, அங்கு இருக்கும் ஏட்டுகளை அழைத்துக் கொண்டு ஜீப்பில் பயணமானான். பயணத்தின் பொழுது ராஜா ஆரம்பித்தான்

"யோவ் மதன் எத்தன வருஷ சர்வீஸ் உனக்கு ஒரு குற்றம் நடந்த இடத்துக்கு போன, பார்த்தவுடனே கண்டு பிடிக்க வேணா அது கொலையா இல்ல இயற்கை மரணமான்னு, நான் வேற கடுப்பாகிடேன் என்னடா இது டிராஸ்பர் மாத்தினு களம்பற சமயத்துல இந்த கேஸ் இழுத்துடுமோனு. நல்ல வேலை இயற்கை மரணம் தான்"

"ஐயா தப்பா நினைக்கலனா, நான் ஒன்னு சொல்றேன். எனக்கு என்னமோ அந்த சின்ன பையன் மேல தான் சந்தேகமா இருக்கு"

"என்னயா சர்வீஸ்னு சொன்னவுடன் அப்படி சொல்றீயா" என்று சிரித்தான். ஆனால் உள்ளுக்குள் அவனுக்கு அந்த சந்தேகம் இருந்தது.

"இல்லயா, நீங்க போனாப் அப்புறம் இது வேறு யாராவது கையில போச்சுனா உங்களுக்கு தானே சங்கடம் அதான் சொன்னேன்"

ஏட்டு மதன் சொல்வதிலும் அர்த்தம் இருப்பதாக நினைத்தான் ராஜா, ஸ்டேசனுக்கு போனது கணேசலிங்கத்தின் பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தான். இரண்டு நாள் கடந்தது. பிரேதப் பரிசோதனை ரீப்போர்டில் கணேசலிங்கம் இயற்க்கையாக தான் இறந்து இருக்கிறார் என்று அவருக்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்து விட்டதாகவும் இருந்தது. போலீஸ் எதிர்ப்பார்த்தது போல எந்த விஷமும் அவரின் உடலில் இல்லை. வேறு சுகர்ருக்கான, பிரஸ்சருக்கான மாத்திரைகள், பாதி செறித்த நிலையில் இருந்த இரவு உணவு அவ்வளவு தான் அவரின் வயிற்றில் இருந்ததாக ரீப்போர்டு சொன்னது. ராஜா ஏட்டு மதனிடம் திரும்பி

"பார்த்தியா அவன் சின்ன பையன்யா, வேலை ஆளுக்கு அந்த அளவு அறிவு பத்தாது இது இயற்கை மரணம் தான்"

"அய்யா இந்த காலத்துல சின்ன பசங்க தான் நம்பமுடியில, எல்லத்தையும் சினிமா, டீ.வியை பார்த்து கத்துக்குறாங்க"

ராஜாவுக்கு அவர் சொன்னது சரின்னு பட்டது. உடனே கணேசலிங்கத்தின் வீட்டுக்கு சென்றான். வீட்டில் குணாவும், அவனின் கிராமத்து பொற்றோரும், முனியனும் டீவி பார்த்துக் கொண்டு இருந்தனர். ராஜாவை பார்த்தவுடன் சகஜமாக வரவேற்றனர்.

"ஒன்னும் இல்ல கணேசலிங்கத்தின் ரூமை பார்க்க வேண்டும் அதான் வந்தேன்"

"நீங்க தானே அங்கிள் அந்த ரூமை பூட்டி சீல் வச்சி இருக்கீங்க" என்றான் குணா.

"சாவி எடுத்து வந்து இருக்கேன், பாக்கலாமா"

"கண்டிப்பா அங்கிள்" என்றான் குணா. ராஜாப் போய் அந்த ரூமை பார்த்தான், கொஞ்சமாக பிணவாடை அந்த ரூமில் மிச்சம் இருந்தது. ஒரு டீ.வி, ஏ.சி, ஒரு கட்டில், பக்கத்தில் ஒரு டேபிளில் கைநாட்டு வைக்கும் சீல் இங்க் பேடும், ஒரு ட்ரேயில் மாத்திரைகளும் இருந்தது. சார்பிட்ரேட், டேப்பின் ரிட்டார்டு 20MG, இன்சுலின் ஊசிகள் அவ்வளவே தான் இருந்தது.

ராஜா தன்னுடைய கைப்பேசியில் இருந்து பிரேதப் பரிசோதனை செய்த டாக்டருக்கு போன் செய்தான். பத்து நிமிஷமாக எதோ விஷயம் பேசினார்கள், கொஞ்ச நேரத்தில் டாக்டர் போன் செய்வதாக சொல்லி வைத்தார். ராஜாவின் பார்வை அறைக்கு வெளியில் இருந்த குணாவின் பக்கம் திரும்பியது. அவனிடம் போய்

"டேய் உன்ன என்னமோனு நினைச்சேன் டா, பரவாயில்லை இந்த காலத்து பசங்க"

"என்ன அங்கிள் சொல்றீங்க ஒன்னுமே புரியலை"

"ஓரு பத்து நிமிஷத்தில் எல்லாம் புரிஞ்சிடும்". சரியாக அரை மணி நேரம் கழித்து ராஜாவுக்கு போன் வந்தது

"அப்படியா டாக்டர், நான் நினைச்ச மாதிரி தான், ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்" என்று போனை துண்டித்தான். குணாவை விட்டான் ஒரு அறை. ஜீப் ஸ்டேசனை நோக்கி வந்தது, அதில் இருந்து ராஜாவும், குணாவும் இறங்க்கி வந்தனர்.

மதன் ஆச்சர்யமாக "என்ன சார் இவன எதுக்கு இங்க கூட்டினு வந்திங்க எதாவது தெரிஞ்சதா?" என்றார் ஆவலாக.

"யோவ் உன்னுடைய சர்வீஸ் அறிவு கரைட்டு தாயா, இந்த பரதேசி தான் கொன்னு இருக்கான். விட்ட அறையில அவனே ஒத்துக்குனான்"

"என்ன சார் இயற்க்கை மரணம்ன்னு ரீப்போர்டுல இருந்தது"

"ஆமாயா இயற்க்கையாக ஆக்கப்பட்ட மரணம், கணேசலிங்கத்துக்கு சக்கரவியாதியே கடையாது வேறும் பிரஸ்சர் மட்டும் தான். அவருக்கு எழுத, படிக்க தெரியாது அத பயண்படுத்திக்குனு இந்த பரதேசி அவரு சொத்துக்காக சக்கர நோய் இல்லாதவருக்கு இன்சுலின், சக்கர நோய்களுக்கு கொடுக்கற மாத்திரையை எல்லாம் மூன்று மாசமா கொடுத்து இருக்கான், பாவம் அந்த ஆளும் இவனை நம்பி சாப்பிட்டு இறந்து விட்டர்" என்று மறுபடியும் விட்டான் ஒரு அறை. மதனுக்கு முகம் மாறியது

"என்னயா பேச்சே காணும்" என்றான் ராஜா.

"இல்ல சார் என்னுடைய அண்ணன் பையனும் என் கூட தான் தங்கி இருக்கான், அதான் .........."

Narathar
12-11-2008, 03:49 PM
அந்த அண்ணன் மகனை கொலைகாரனென்று சந்தேகப்படவைத்து வேறு யாரையாவது கொலைகாரனாக்குவீர்கள் என்று பார்த்தால்......

எதிர்பாராத விதமாக அவனே கொலைகாரன்!!!!

சக்கரை நோய் இல்லாதவர்களுக்கு அதற்கான மருந்துகளை கொடுத்தால் இறந்துவிடுவார்கள் என்ற விடயத்தை சொல்லியிருக்கின்றீர்கள்...

மருத்துவ ரீதியாக அது சரியானதுதானா? யாரப்பா மருத்துவர்கள் இருக்கீங்க இங்கே?

ரங்கராஜன்
12-11-2008, 03:54 PM
அந்த அண்ணன் மகனை கொலைகாரனென்று சந்தேகப்படவைத்து வேறு யாரையாவது கொலைகாரனாக்குவீர்கள் என்று பார்த்தால்......

எதிர்பாராத விதமாக அவனே கொலைகாரன்!!!!

சக்கரை நோய் இல்லாதவர்களுக்கு அதற்கான மருந்துகளை கொடுத்தால் இறந்துவிடுவார்கள் என்ற விடயத்தை சொல்லியிருக்கின்றீர்கள்...

மருத்துவ ரீதியாக அது சரியானதுதானா? யாரப்பா மருத்துவர்கள் இருக்கீங்க இங்கே?

என்ன நண்பரே கதையின் முடிச்சையே பின்னுட்டத்தில் போட்டு கதையை எளிமை படுத்திவிட்டீரே. ஆம் அங்கு தரப்பட்ட விஷயங்கள் உண்மை தான். ச.நோ இல்லாதவருக்கு அந்த மாத்திரையை தந்தால் ஆள் கொஞ்ச கொஞ்சமாக காலி, அது ஒரு ஸ்லோ பாயிசன் மாதிரி.

aren
12-11-2008, 05:50 PM
நம்ம மருத்துவர் இளசு அவர்கள்தான் வந்து பதில் சொல்லவேண்டும்.

நல்ல கதை. தொடருங்கள்.

ரங்கராஜன்
13-11-2008, 06:41 AM
நம்ம மருத்துவர் இளசு அவர்கள்தான் வந்து பதில் சொல்லவேண்டும்.

நல்ல கதை. தொடருங்கள்.

நன்றி அரேன்
உங்களின் சந்தேகத்தை தீர்க்க, திரு.இளசு அவர்களை தனி மடலில் தொடர்பு கொண்டு இந்த கதையை படித்து உங்களின் சந்தேகத்தை தீர்க்கும் படி கோரிக்கை வைத்துள்ளேன். கூடிய சீக்கிரம் உங்களின் சந்தேகம் தீரும் என்ற நம்பிக்கையில்...... நன்றி

இளசு
14-11-2008, 10:02 PM
சர்க்கரை அளவைக் குறைக்கும் டயோனில் வகை மாத்திரைகளும்,
இன்சுலினும் - உயிர் பறிக்கும் விளைவுகள் கொண்டவையே..

கைநாட்டு என்று முன்குறிப்பு தந்து வாசகரை உசுப்பிவிட்ட மூர்த்தி அவர்களுக்கு ஜே!

poornima
15-11-2008, 06:00 AM
எப்படி எல்லாம் யோசித்து கதை எழுத முயற்சிக்கிறீர்கள்..பாராட்டுகள்

சொத்துக்கு சர்க்கரை வியாதி உள்ள தாத்தாவுக்கு ஜாங்கிரி தந்து சாகடிக்க
நினைத்த கவுண்டமணி - செந்தில் கூட்டணி அந்த ஜாங்கிரியே மருந்தாக ஆகி
தாத்தா உயிர் பிழைக்க கவுண்டமணி செந்திலைப் போட்டு புரட்டி எடுக்கும்
காட்சி நினைவாடலில்...

ரங்கராஜன்
15-11-2008, 06:21 AM
எப்படி எல்லாம் யோசித்து கதை எழுத முயற்சிக்கிறீர்கள்..பாராட்டுகள்நன்றி
அங்கீகாரம் கிடைக்கும் வரை எல்லாமே முயற்சிதான்

MURALINITHISH
22-11-2008, 09:07 AM
அடப்பாவி இல்லாத வியாதிக்கு வைத்தியமா சரிதான்

சுகந்தப்ரீதன்
24-11-2008, 11:08 AM
நல்லா டுவிஸ்டு வச்சி ஒவ்வொரு கதையும் எழுதுறீங்க..
கதையில் ஒரு மருத்துவ செய்தியை சேர்த்து சொல்லி இருக்கிறீர்கள்..!!
வாழ்த்துக்கள்.. நண்பரே..!!

கண்மணி
24-11-2008, 11:41 AM
கதை அழகாக வந்திருக்கு மூர்த்தியண்ணா..ஆனால்

1. இறந்த ஒருவரை பரிசோதனை செய்தால் அவருக்கு சர்க்கரை வியாதி இருந்ததா இல்லையா என்று எப்படித் தெரியும்? கணேசலிங்கத்தோட குடும்ப டாக்டர் இல்லையின்னா ரெகுலரா போகிற மருத்துவமனையில் அல்லவா விசாரிக்கணும்? அவரது இரத்தச் சர்க்கரை அளவு குறைந்திருப்பதா, இனிசுலின் பக்கவிளைவுகள் போல
ஒரு ஊகம் சொல்லலாம். வியாதி இருக்கவே இல்லைன்னு சொல்ல முடியுமா?

2. பிரிஸ்கிரிப்ஸன் இல்லாம மருந்து வாங்கக் கூடாது இல்லியா? அப்போ மருந்துக் கடைக்காரர் உடந்தையா இருந்திருக்கணும் இல்லியா?

3. எந்த டாக்டரும் மருந்து கொடுக்கறப்ப நோயாளிக்கு, உங்களுக்கு இந்த இந்த வியாதி இருக்கு.. இன்னின்ன மாத்திரை இப்படி இப்படி சாப்பிடணும் என்றுச் சொல்லி அல்லவா அனுப்புவார். ஒரு காய்ச்சல் மாத்திரை இல்லை தலைவலி மாத்திரைன்னா பரவாயில்லை. சர்க்கரை மாத்திரை போன்ற தொடர் மாத்திரைகளை..கொஞ்சம் கஷ்டம்தான். அப்ப டாக்டரையும் கூப்பிட்டு விசாரிக்கணும்.

4. பணக்கார வீடு.. அதனால மாத்திரை வாங்கி வர படிக்கிற பையனை அனுப்பறது கஷ்டம்தான் இல்லையா? வேலைக்காரன் தானே மாத்திரை வாங்கி வருவான். அப்போ அவனும் சந்தேக லிஸ்ட்ல வரணுமே..

நானு துப்பறிஞ்சிருந்தா கூண்டோட எல்லோரையும் அமுக்கி இருப்பேன்.. பாவம் இன்ஸ்பெக்டரு ஏமாந்துட்டாரு..


துப்பறியும் லேடி ஜேம்ஸ்பாண்ட்

கண்மணி..

(கிரைம் ஸ்பெஸலிஸ்ட்)


(ஓவியா அக்கா சிவில் கேஸ் மட்டும்தான் டீல் பண்ணுவாங்க.. அதாவது சொத்துத்தகராறு, காண்டக்ட் வெரிஃபிகேஷன் இப்படி)

ரங்கராஜன்
24-11-2008, 01:56 PM
கதை அழகாக வந்திருக்கு மூர்த்தியண்ணா.எக்கா, என்னகா இது?

நீங்கள் நிறைய கேள்வி கேட்டு இருக்கீங்க, கதையை முழுசாக புரிந்துக் கொண்டு இத்தனை கேள்வி கேட்டு இருக்கீங்க நன்றி. நான் சில கேள்வி கேக்குறேன். அதுக்கு பதில் நீங்க சொல்லுங்க.

1. இறந்த ஒருவரை பரிசோதனை செய்தால் அவருக்கு சர்க்கரை வியாதி இருந்ததா இல்லையா என்று எப்படித் தெரியும்?
http://en.wikipedia.org/wiki/Autopsy

இதில் அட்டாப்ஸியை பற்றி குறிப்புகள் இருக்கு அதை படித்தால் உங்களின் சந்தேகங்கள் தீரும்.

2. பிரிஸ்கிரிப்ஸன் இல்லாம மருந்து வாங்கக் கூடாது இல்லியா?

இது வேறும் சட்டம் அவ்வளவு தான், உங்களுக்கே தெரியும் போதை பொருள்களே லேசில் கிடைக்கும் இந்த காலத்தில், மருந்து வாங்குவது பெரிய விஷயமே இல்லை. நானே எத்தனையோ வாட்டி மருந்து சீட்டு இல்லாமல் வாங்கி இருக்கேன். (இந்த கதை எழுத காரணமே அதான்).

3. எந்த டாக்டரும் மருந்து கொடுக்கறப்ப நோயாளிக்கு, உங்களுக்கு இந்த இந்த வியாதி இருக்கு

நம் அப்பா, அம்மாவிடம் நாம் எந்த மாத்திரையும் கொடுத்தாலும் சாப்பிடுவாங்க ஏன் தெரியும்?, நம்பிக்கை அதான் அந்த பெரியவரும் சாப்பிட்டார்.

4. வேலைக்காரன் தானே மாத்திரை வாங்கி வருவான். அப்போ அவனும் சந்தேக லிஸ்ட்ல வரணுமே..

ஏங்க கொலை செஞ்சவன் இல்லாத பொழுது சந்தேக கேஸ் என்று நாம் அனைவரையும் கைது பண்ணலாம், ஆனால் கொலைகாரனே இருக்கும் பொழுது எதுக்கு அவங்கல கைது பண்ணனும்.

என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு, ஸ்டாண்டப் ஆன் தி பென்சு

கண்மணி
24-11-2008, 03:01 PM
1. இறந்த ஒருவரை பரிசோதனை செய்தால் அவருக்கு சர்க்கரை வியாதி இருந்ததா இல்லையா என்று எப்படித் தெரியும்?
http://en.wikipedia.org/wiki/Autopsy


A systematic review of studies of the autopsy calculated that in about 25% of autopsies a major diagnostic error will be revealed.[3] However, this rate has decreased over time and the study projects that in a contemporary US institution, 8.4% to 24.4% of autopsies will detect major diagnostic errors.

A large meta-analysis suggested that approximately one third of death certificates are incorrect and that half of the autopsies performed produced findings that were not suspected before the person died.[4] Also, it is thought that over one fifth of unexpected findings can only be diagnosed histologically, i.e. by biopsy or autopsy, and that approximately one quarter of unexpected findings, or 5% of all findings, are major and can similarly only be diagnosed from tissue.


இது ரொம்ப ஜெனிரிக்கா இருக்கே! அதுவும் தவறான மருந்து எனக் கண்டுபிடிக்க 24.4 % சான்ஸ் இருக்காம். இதில் சர்க்கரை வியாதி மருந்துகள் சேருமா இல்லியா? உறுதியா சொல்ல முடியலை இல்லியா?

2. பிரிஸ்கிரிப்ஸன் இல்லாம மருந்து வாங்கக் கூடாது இல்லியா?இது வேறும் சட்டம் அவ்வளவு தான், உங்களுக்கே தெரியும் போதை பொருள்களே லேசில் கிடைக்கும் இந்த காலத்தில், மருந்து வாங்குவது பெரிய விஷயமே இல்லை. நானே எத்தனையோ வாட்டி மருந்து சீட்டு இல்லாமல் வாங்கி இருக்கேன். (இந்த கதை எழுத காரணமே அதான்).

ஆனா என்ன மருந்து வாங்குறது என்று +2 படிக்கிற மாணவன் தெரிஞ்சிகிட்டது எப்படி? அவனுக்கு உதவினது யாரு.. இண்டர்நெட் அப்படின்னு சொன்னீங்கன்னா மன்ற மீட்டிங் வரும் பொழுது தலையிலேயே கொட்டுவேன்.


3. எந்த டாக்டரும் மருந்து கொடுக்கறப்ப நோயாளிக்கு, உங்களுக்கு இந்த இந்த வியாதி இருக்கு

நம் அப்பா, அம்மாவிடம் நாம் எந்த மாத்திரையும் கொடுத்தாலும் சாப்பிடுவாங்க ஏன் தெரியும்?, நம்பிக்கை அதான் அந்த பெரியவரும் சாப்பிட்டார்.

அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சது காலையில இத்தனை மாத்திரை.. மதியம் இத்தனை மாத்திரை சாயந்திரம் இத்தனை மாத்திரை.. இவ்வளவுதான். அதனால எக்ஸ்ட்ரா மாத்திரை கொடுத்தா மாட்டிக்குவீங்க. அடுக்கு பதிலா மாத்திரையை மாத்திக் கொடுக்கறது.. எக்ஸ்பயரி ஆன மாத்திரையைக் கொடுக்கிறது இப்படி ட்ரை பண்ணிப் பாருங்க. :D

அதுவும் தவறான மருந்து அதுவும் பிளட் சுகர் மாத்திரைசாப்பிட்ட பின்னால் உடம்பு முடியலை. ஆனா டாக்டர்கிட்ட யாரும் கொண்டுபோகலை. அவரும் என்ன மருந்து ஒத்துக்கலைன்னு பார்த்து ட்ரீட்மெண்ட் மாத்தலை. எந்த டெஸ்டும் செஞ்சுப் பார்க்கலை.
3 நாள் ரெகுலரா சாப்பிட்டா, முதல்ல மயக்கம் வரும்... அதை வச்சே டாக்டர் கண்டுபிடிச்சு நாலு சாத்து சாத்தி இருப்பார். உடனே ஐ சி யூ ல அட்மிட் பண்ணி தீவிர சிகிச்சை கொடுத்திருப்பார்

ஐயோ ஐயோ அது ஹாஸ்பிடலே இல்லாத ஊரு... அக்கம் பக்கம் யாருமில்லாத ஊரு இப்படிச் சப்பைக் கட்டு கட்ட ரெடியா இருப்பீங்களே!!!.அதாவது மூர்த்தி -- கொஞ்ச நாளா உடம்பு முடியாதவர் டாக்டர் கிட்ட போகாத காரணம் என்ன? ஏன் ஹாஸ்பிடல்ல சேர்க்கலை? இப்படிப் பலகேள்விகள் இருக்கு மூர்த்தி..
4. வேலைக்காரன் தானே மாத்திரை வாங்கி வருவான். அப்போ அவனும் சந்தேக லிஸ்ட்ல வரணுமே..

ஏங்க கொலை செஞ்சவன் இல்லாத பொழுது சந்தேக கேஸ் என்று நாம் அனைவரையும் கைது பண்ணலாம், ஆனால் கொலைகாரனே இருக்கும் பொழுது எதுக்கு அவங்கல கைது பண்ணனும்.

பிராக்டிகல் டெஸ்டப்போ சரியா உபகரணங்கள் வேலை செய்யலைன்னா கவர்மெண்ட் ஸ்கூல்ல விடையைக் கொடுத்துடுவாங்க. நாம பூரா எக்ஸ்பெரிமெண்டையும் கற்பனை பண்ணி பதில் எழுதணும். அந்த மாதிரி கடைசி ரிசல்ட் வச்சு பதில் எழுத முயற்சி செஞ்சிருக்கீங்க. அதனாலதான் பெரிய ஓட்டை.. பையன் +2 படிக்கிறான். எனவே மைனராகக் கூட இருக்கலாம். 18 வயசு முடியாத பையனா (5+12=17) அந்த சாத்தியத்தையும் மறந்துட்டீங்க. அதுவும் கொஞ்ச நாளா உடம்பு சரியில்லாத பெரியவரை கண்டுக்காம விட்டதுக்காக உங்களையும் சந்தேகத்தின் பேர்ல அரஸ்ட் பண்ணி விசாரிக்கணும்.என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு, ஸ்டாண்டப் ஆன் தி பென்சு[/QUOTE]

பென்ஸ் தாங்க மாட்டார். நீங்க முட்டிப் போடுங்க.

நான் சிறுவன்னுக்காக வாதாடினால் உங்க கேஸ் புஸ்ஸூன்னு போயிடும்.

ரங்கராஜன்
24-11-2008, 03:09 PM
எக்கா தெரியாதனமா உங்களை கேள்வி கேட்டுடேன், என்ன ஒரு கொலை வெறியோட பதில் சொல்றீங்க. அசாத்திய திறமை உங்களுக்கு (என்ன செய்வது இப்படி எதாவது சொல்லிதான் தப்பிக்க வேண்டி இருக்கு)