PDA

View Full Version : நடிகன்



நதி
12-11-2008, 10:01 AM
தினசரி செய்திகள் தரும் பரபரப்பை விஞ்சிய பரபரப்பை அந்த வார இதழ் ஏற்படுத்தி இருந்தது.
"அவரா சொன்னார்.. இருக்காது"
"சொன்னாலும் சொல்லி இருப்பார்.. வேசம் போடுவது அவருக்கு கைவந்த கலையாச்சே"
"சே.. மனிதாபிமானம் மிக்கவர். இளகிய மனம் பொருந்தியவர் எங்கிற நினைப்பை இப்படிச் சுக்கு நூறாக்கி விட்டாரே"
"என்ன மனுசரப்பா.. உண்மை என்னென்னு தெரிஞ்சுக்காமல் கண்டபடி பேசுறாங்களே"
"நிச்சயம் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துக்க மாட்டேன்னு சொல்லி இருக்க மாட்டார்.. அவருக்கு வேண்டாதவங்க யாரோ கிளப்பி விட்ட புரளி இது"
இப்படி ஆளாளுக்கு டீக்கடைகளிலும் தெருவோரங்களும் எங்கெல்லாம் கூடிப் பேசுவார்களோ அங்கெல்லாமுமாக உணர்ச்சிகளை தூவிக்கொண்டிருந்தார்கள்.

அந்த வாராந்தரியின் அலுவலகத்தில் இணையத்தில் பரவலாகப் பேசப்படும் விடயமாக அதுவும் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்த விடயமாக தமது தினசரியில் வெளியான செய்தி செய்த சாதனை பருகியபடி களிப்பில் இருந்தார் அந்த நிருபர். எதையோ சாதித்து விட்ட நினைப்பில் மிதந்தபடி இருந்தவரை கைதட்டிக் கூப்பிட்டது அலைபேசி. காதில் பொருத்திக் கொண்டார்.

" என்னா சார் இப்புடிப் பண்ணிட்டீங்க. யாரோ எதையோ சொன்னால் அதை அப்படியே போட்டுடிவீங்களா. என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே. வீட்டுக்கு வாங்க. பேசுவோம்"

தொடர்பு துண்டிக்கப்பட்டதும் தான் பேட்டிக்காக அனுமதி கேட்டு தர மறுத்த அந்த நடிகரின் வீட்டுக்கு மோட்டார் பைக்கை தட்டினார் நிருபர்.

ரங்கராஜன்
12-11-2008, 10:20 AM
நல்ல முய்ற்சி வாழ்த்துக்கள்

சிவா.ஜி
12-11-2008, 11:22 AM
சமீபத்திய அஜீத், அர்ஜுனின் அறிக்கைகளை வைத்து எழுதப்பட்டக் கதை. அதன் பின்னனியில் இருக்கும் காரணத்தை நன்றாகவே கற்பனை செய்திருக்கிறீர்கள் ரவுத்திரன். அது உண்மையாகக்கூட இருக்க வாய்ப்பிருக்கிறது.

சின்ன செய்தியைக் கதையாக்கிய திறமைக்குப் பாராட்டுக்கள்.

இளசு
01-04-2009, 08:07 PM
வாளைவிட எழுதுகோல் வலியதே...

எவர் கையில் இருப்பினும்!

நச் சிறுகதைக்குப் பாராட்டுகள் ரவுத்திரனுக்கு!