PDA

View Full Version : இன்றும் வாழ்கிறேன்!!!



aren
12-11-2008, 05:36 AM
இன்றும் வாழ்கிறேன்
உன் நினைவுகள்
என் மனதினில்
உயிருடன் இருப்பதால்
இன்றும் வாழ்கிறேன்!!!

நான் கல்லூரி பரிட்சைக்கு
படிக்கும் பொழுது
எனக்கு தேநீர் கொடுத்தாய்!!!

நான் நல்ல மதிப்பெண்கள் வாங்க
என் பெயருக்கு
கடவுளுக்கு அர்சனை செய்தாய்!!!

நான் சோர்வுடன் இருந்தபொழுது
எனக்கு எதிர்கால கதைகள் சொல்லி
என்னை பூரிக்க வைத்தாய்!!!

நான் நல்ல வேலையில்
சேர்ந்தவுடன்
விரதம் இருந்து
கடவுளுக்கு நன்றி சொன்னாய்!!!

என் முதல்மாத
சம்பளத்தை
உனக்கு பரிசாக அளித்தபொழுது
அதை கடவுளுக்கு கொடுத்து
அவருக்கு நன்றி சொன்னாய்!!!

இமைப்பொழுதும்
நான் சிறப்பாக இருக்க
அனைத்து
ஆயத்தங்களையும் செய்தாய்!!!

நான் உன்னை கைபிடிக்க
உன் சம்மதத்தைக்
கேட்டபொழுது
ஒரு புன்முறுவலுடன்
சம்மதித்தாய்!!!

கல்யாண தேதி
நெருங்கும்பொழுது
உனக்கு காலன்
கொடுத்த தேதி
நெருங்குகிறது
என்று ஏன் சொல்லவில்லை!!!

உன் இன்னல்களை மறைத்து
எனக்காகவே வாழ்ந்த உன்னை
இன்றளவும் மறவாமல்
உன் நினைவுடனேயே
இன்றும் வாழ்கிறேன்
என்றும் வாழ்ந்துகொண்டிருப்பேன்!!!

ஓவியன்
12-11-2008, 06:08 AM
சில உறவுகள் இப்படித்தான் ஆரென் அண்ணா,
காலையில் மலர்ந்த அழகிய மலர் மணம் பரப்பி
பின், வாடி தன் வாழ்வை முடிப்பது போல
நம் வாழ்வை நறுமணமாக்கி
தம் வாழ்வைச் சீக்கிரமாக முடித்து விடுகின்றன...

ஏன், ஏன் இப்படி
என்பதற்கு என்னிடம் விடையில்லை
இந்தக் கவிதையைப் படிக்கப் போகும்
உறவுகளே உங்களிடம்....???

அமரன்
12-11-2008, 07:02 AM
ஆரென் அண்ணாவின் கவிதைகளில் எளிமையும் கருவில் வலிமையும் சேர்ந்திருப்பதால் அவை எளிதாகப் புகுந்து வலிமையாக மோதி தன் சுவடுகளை ஆழப்பதித்து விடுகின்றன. இந்தக் கவிதையில் மரணித்த கவிநாயகி போல அவை என்றும் நினைவில் இருந்தாலும் அந்த தடங்களில் வழி நடக்கவேண்டியது கவி'தைக்கு செய்யும் சிறப்பு. உணர்வு பூர்வமான இந்தக் கவி'தை ஆரம்பத்தில் ஆசைப்பட்டதைப் பார்க்கும் போது கடைசி முடிவு அவளின் கனவை சிதைத்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. மற்றப்படி கவிதை கனமான தனமான கவிதை.

மன்மதன்
12-11-2008, 07:33 AM
கவிதையில் காவியத்தை
படைத்திருக்கிறீர்கள் ஆரென்ஜி.

பாராட்டுகள் என்று ஒரு
வார்த்தையில் சொல்ல முடியாது..

வலியை அனுபவித்தால்தான்
புரியும் வலி..

சிவா.ஜி
12-11-2008, 08:55 AM
இன்னல்களிலெல்லாம் உடனிருந்துவிட்டு, இன்பமான இல்லறத்தைத் துவக்கும் வேளையில் இல்லாமல் போன இனிய உறவு.

கவி நாயகனின் மன பாரம்....என்னவென்று சொல்ல? வார்த்தைகளால் சொல்லமுடியாத அந்த வேதனை. அதனுடன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்துவிட முடிவு செய்த பெருமனம்.

எளிமையான வரிகளில் கதை சொன்னக் கவிதை. வாழ்த்துகள் ஆரென்.

Mano.G.
12-11-2008, 10:48 AM
என்ன சொல்ல,
நினைத்து பார்க்கிறேன்
எனக்காக வாழ்ந்த உனக்கு,
உனக்காக நான் வாழ நீ இடம் கொடுக்கலையே,
ஏன் நீ கொடுத்து தான் பழக்கமோ,
பெருவதை விரும்பவில்லையோ
ஏன்??????