PDA

View Full Version : சமாதானம்



ஆதி
11-11-2008, 11:44 AM
யாதென்று அறியாத
அகவையொன்றில் ஆரம்பித்தது
ஆலயத்துக்கும் எனக்குமான
பரிச்சயம்..

சிலுவையிலும் சுவர்களிலும்
அறைவுற்ற
சிரூபங்களின் கால்கைகளில் இருந்து
சிந்தும் குருதி சொட்டுக்கள்
கொன்றவர்களை பழிதீர்க்க
குரோதங்களை கொப்பளிக்கும்
என்னுள்..


உள்ளுள் உயிர்த்து சாத்தான்களாய்
வெளியேறும் என் எண்ணங்கள்
இன்றுவரை
யாதென்று உணர முயற்சித்ததில்லை
"சமாதானம்" எனும் வார்த்தையை..

ஆதவா
11-11-2008, 12:19 PM
Anti கவிதை. தீயவர்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். இறைவன் எழுந்தபொழுது சாத்தான்களும் உடன் எழுந்தன. சொல்லப்போனால் இறைவன் தான் சாத்தான்களின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருக்கிறான். அல்லது அப்படி தூண்டுகிறான்.

உண்மையிலேயே, குருதி கண்ட குரோத மனிதர்கள் பழி வாங்க, வாங்கப்பட வாழ்கிறார்கள். இல்லையா ஆதி? உனக்குள் உருவாகும் தீயவைகள் என்றுமே அவ்வார்த்தையை அடையாது. என்று தீயவை வளர்ந்ததோ அந்த விகிதத்தில் சமாதானமும் வளர்ந்திருக்கவேண்டும்.

வெளியேறு(ம்)???
எண்ணாங்கள் ???

மேலும்

அகவையின்றி, ஆலத்துக்கும்.. இதற்கான விளக்கங்கள் அறிய காத்திருக்கிறேன்.

வாழ்த்துக்கள்..

ஆதி
11-11-2008, 01:47 PM
பிழைகளை நீக்கிவிட்டேன் ஆதவா.. சுட்டியமைக்கு நன்றி..

உங்களின் பார்வை அருமைதான் ஆதவா.. நன்றிகள் பல ஆதவா பின்னூட்டத்திற்கு..

அமரன்
12-11-2008, 07:25 AM
சின்னவயதில் நானும் கோவிலுக்குப் போனேன். அங்கே கடவுள் கையில் ஆயுதம். காரணம் அறிந்த பின்னர் அது ஆ..இதம் என்றானது. போதனை சரியானபடி இருந்தால் சரியாகும். அந்த வயது எது நட்டாலும் முளைக்கும் பருவம். பாராட்டுகள் ஆதி.

சிவா.ஜி
12-11-2008, 07:52 AM
அமரனை நான் வழிமொழிகிறேன். போதனைகள் தான் வழிகாட்டுகின்றன. நல்ல போதனை நல்ல மனிதனை உருவாக்கும். அவற்றை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில்.

நல்லதொரு கவிதையை, நல் கருத்துடன் தந்த தம்பிக்கு பாராட்டுக்கள்.