PDA

View Full Version : ஒரே சொடுக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களின் அளவைக் குறைப்பது எப்படி?sarathecreator
11-11-2008, 05:24 AM
நண்பர் ஷிவா தனது புதிய Camera வில்அதிகபட்ச Resolution ல் நூற்றுக்கு மேற்பட்ட படங்கள் எடுத்திருந்தார்.அவைகளை கேமராவிலிருந்து கணினிக்கு மாற்றிவிட்டு,எனக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு முயற்சித்தார்..

ஒவ்வொரு படத்தின் Resolution மிக அதிகம் (3072 X 2304). அதனால் படங்களின் அழகு மெருகேரியிருந்தது நிஜம். ஆனால் ஒவ்வொரு கோப்பின் அளவும் மிக மிக அதிகமாக இருந்தது ( > 4MB)

ஒட்டுமொத்தக் கோப்புகளையும், எனக்கு e-mail அனுப்ப முயற்சித்துத் தோல்வியடைந்தவர், என்னுடன் தொலைபேசினார்.

நான் வழமை போல கூகிளிடம் சரணடைந்து ‘ஆண்டவரே! ஏதேனும் Image Resize Application இருந்தால் கொடுத்துதவவும். என்றேன்’. அவரது கருணை என்பக்கம் இருந்தது.

கூகிள் ஆண்டவர் இந்த மென்பொருளை (http://download.microsoft.com/download/whistler/Install/2/WXP/EN-US/ImageResizerPowertoySetup.exe) எனக்காகப் பரிந்துரைத்தார்.

நான் எனது கணினியில் அதை நிறுவிப் பரிசோதித்தேன். ஆகா. என்ன விந்தை.
ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட அதியுயர் ரெசொல்யூசனில் எடுக்கப்பட்ட படங்களை, குறைந்த ரெசொல்யூசனுக்கு மாற்றிவிட்டதே. அற்புதம். நண்பர் ஷிவாவுக்குத் தகவல் கொடுத்தேன். அவர் உடனே 400 எம்பி அளவிலான கோப்புகளை - குறைந்த ரெசொல்யூசனுக்கு மாற்றினார்.

3072 x 2304 ல் இருந்த படங்களை 400 x 300 க்கு மாற்றினார். 4 எம்பி அளவிலான படங்கள் 30 கேபி அளவுக்குக் குறைந்துவிட்டன.

வழமை போல பொட்டலம் போட்டு எனக்கு அனுப்பினார்.

இந்த அப்ளிகேசன் இல்லாவிடில், நாங்கள் இதுவரை செய்து வந்ததுபோல் ஒவ்வொரு கோப்பாகத் திறந்து ஒவ்வொன்றையும் மாற்றிக்கொண்டு இருந்திருப்போம். காலமும், நேரமும் ஓடியிருக்கும்.

Image Resizer application for Windows XP is here

http://download.microsoft.com/download/whistler/Install/2/WXP/EN-US/ImageResizerPowertoySetup.exe

Image Resizer Application for Windows Vista is here

This is a clone of Image Resizer which is one of the Microsoft PowerToys for Windows XP. It enables you to resize one or many image files with a right-click. This version will work also on non-XP versions of Windows including Windows Vista.

http://sourceforge.net/projects/phototoysclone/

sarathecreator
11-11-2008, 05:25 AM
பிகாசா மூலம் ஒரே நேரத்தில் பல படங்களின் அளவை மாற்றுவது எப்படி? (http://tamizh2000.blogspot.com/2008/11/blog-post_1831.html)


முதலில் Picasa பயன்பாட்டைத் துவக்கி, அதில் ஒரு Folder உருவாக்கி,அதில் எந்த எந்தப் படங்களையெல்லாம் Resize செய்யப் போகிறோமோ அவைகளை Import செய்யவும்.

Import ஆன பிறகு, Folderல் வலது Click செய்து, Select All Pictures ஐத் தேர்வு செய்யவும்.

பிறகு File Menuவில் Export Pictures To Folder தேர்வு செய்யவும். இப்போது ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களையெல்லாம் எங்கே எந்த Target Folderல் Export செய்யவேண்டும் என்பதற்கான புதிய Folder பெயரை தட்டெழுதவும்.

Image Size Options பகுதியில் உள்ள Slide bar ஐ நகர்த்தி உங்களின் target படங்களின் அளவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கவும்வேறு ஏதேனும் விருப்பங்கள் இருந்தால் அதையும், இந்த உரையாடல் பெட்டி (dialog box)யில் தெரிவித்துவிட வேண்டியது.

OK கொடுக்க வேண்டியது ஒன்றுதான் மீதி.

இப்போது புதிதாக உருவாக்கப்பட்ட Target Folderல் அனைத்துப் படங்களும் அளவு குறைந்து பதிவாகி இருக்கும். அதை அப்படியே சுருக்கிப் பொட்டலம் போட்டு நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிடலாம்.

அன்புரசிகன்
11-11-2008, 05:34 AM
windows live mail (hotmail) ல் மின்னஞ்சல் அனுப்பும் போது படங்களை இணைக்க photo uploading tool என்பதன் மூலம் எந்த பெரிய படத்தினையும் சில வினாடிகளில் இணைத்திடலாம். (அது அளவை தானாகவே குறைக்கும்) ஒரே ஒரு பிரச்சனை. இரண்டுதடவை சொடுக்கவேண்டியிருக்கும். :D

மன்மதன்
11-11-2008, 06:02 AM
நல்ல தகவல்.
நன்றி நண்பரே..

irfanview என்ற சாஃப்ட்வேர் கூட இதற்கு பயன்படும்..

செல்வா
11-11-2008, 07:42 AM
தெரியாத விடயம் பகிர்தலுக்கு நன்றிகள் நண்பரே.

விகடன்
11-11-2008, 09:59 AM
பரவாயில்லையே.
தகவலை சம்பவமாகவே தந்துவிட்டீர்கள்.
விடயத்தை உள்ள்வாங்குவதற்கு முன்னர் அதை எப்படி விவரித்திருக்கிறீர்கள் என்பதை படிப்பதைலேயே அதிக கவனம் செலுத்தினேன்.
பாராட்டுக்கள் சரத்.

anna
13-11-2008, 06:26 AM
சூப்பர் அருமையான பயனுள்ள தகவல் தந்த நண்பருக்கு வாழ்ததுக்கள்.

வெற்றி
16-12-2008, 10:02 AM
மிக நன்றாக வேலை செய்கிறது..(எளிதாக விரைவாக கூட) என் செல்பேசிக்கான (வால் பேப்பர்) அளவில் மிக எளிதாக மாற்றிக்கொண்டேன்...நன்றி

சூரியன்
16-12-2008, 10:14 AM
மிகவும் நல்ல தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

sujan1234
17-12-2008, 03:52 PM
நல்ல சொப்ட்வேர் நன்றி எனக்கு இதுதான்தேவைப்பட்டது

அக்னி
18-12-2008, 11:40 PM
பயனுள்ள தகவற் பகிர்வுக்கு நன்றி சரத்கிரியேட்டர் அவர்களே...

*****

windows live mail (hotmail) ல் மின்னஞ்சல் அனுப்பும் போது படங்களை இணைக்க photo uploading tool என்பதன் மூலம் எந்த பெரிய படத்தினையும் சில வினாடிகளில் இணைத்திடலாம். (அது அளவை தானாகவே குறைக்கும்) ஒரே ஒரு பிரச்சனை. இரண்டுதடவை சொடுக்கவேண்டியிருக்கும். :D
Windows XP இயங்குதளத்தை எனது கணினியில் மீள நிறுவியதும்,
என்னாற் படங்களை Windows Live Mail இல் இணைக்க முடியவில்லை.
படங்களைப் பதிவேற்ற முடியவில்லை என, அனுப்ப முற்படுகையில் Error Message வருகின்றது.

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/Error-1.jpg

AARUL
01-02-2009, 04:37 PM
படங்களின் அளவைபெரியதா ஆக்க சுட்டி தேவை

பா.ராஜேஷ்
20-02-2009, 08:23 AM
Microsoft Office Picture Manager மூலமாகவும் அளவை குறைக்க முடியும். படத்தை இந்த அப்ளிகேஷனில் திறந்து கொள்ளவும். பின்னர் thumbnails view அல்லது Filmstrip view கொடுத்து தேவையான படங்களை தெரிவு செய்து கொள்ளவும். பின்னர் Tool bar லிருந்து Edit Pictures ஐ click செய்யவும். வலது பக்கம் வரும் option களில் Resize ஐ click செய்யவும். தற்போது கிடைக்கும் option களில் நீங்கள் நேரடியாகவே உங்களுக்கு தேவையான அளவை கொடுக்கலாம். அல்லது எத்தனை சதவிதம் குறைக்க வேண்டும் என்றும் கூட குறிப்பிடலாம். பின்னர் Ok ஐ click செய்வதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட அனைத்து படங்களும் அளவு மாற்றப்பட்டிருக்கும். பின்னர் அனைத்தையும் அதே Folder லோ இல்லை Save As கொடுத்து வேறு Folder லோ Save
செய்து கொள்ளலாம்.

வெற்றி
20-02-2009, 08:54 AM
படங்களின் அளவைபெரியதா ஆக்க சுட்டி தேவை
மேல் இருக்கும் அந்த மென் பொருள் மூலமாகவே அதையும் செய்யலாம் ஆருள்

Microsoft Office Picture Manager மூலமாகவும் அளவை குறைக்க முடியும். ்.
தவவலுக்கு நன்றி ராஜேஸ்