PDA

View Full Version : ♔. இந்தியா இங்கிலாந்து ஒருநாள் போட்டித்தொடர்..!



ராஜா
10-11-2008, 08:20 AM
எதிர்வரும் இந்தியா இங்கிலாந்து ஒருநாள் போட்டித்தொடர்..!


போட்டி 1 /ராஜ்கோட்/ காலை 9 மணி/ நவ. 14. வெள்ளி.

போட்டி 2 / இந்தூர் / காலை 9 மணி/ நவ. 17. திங்கள்.

போட்டி 3 / கான்பூர் / காலை 9 மணி/ நவ. 20. வியாழன்.

போட்டி 4 / பெங்களூரு / மதியம் 2 மணி / நவ. 23. ஞாயிறு.

போட்டி 5 / கட்டாக் / மதியம் 2 மணி / நவ. 26. புதன்.

போட்டி 6 / கவுகாத்தி / காலை 9 மணி / நவ. 29. சனி.

போட்டி 7 / டெல்லி / மதியம் 2 மணி / டிச. 02. செவ்வாய்.

ராஜா
10-11-2008, 08:35 AM
கடந்த முறை நடந்தவை..

2007 பருவம் /இந்தியாவின் பயணம்/ இங்கிலாந்தில்...


4 *- 3 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி..!

யுவராஜின் ஒரே ஓவரில் இங்கி. வீரர் டிமிட்ரி மாஸ்கரேனஸ் தொடர்ச்சியாக 5 சிக்சர்கள் அடித்ததும் இப்பயணத்தில்தான்..!

ராஜா
10-11-2008, 08:45 AM
(அன்று)

நாட்வெஸ்ட் தொடர் 2007 வெற்றிக்கோப்பையுடன் இங்கிலாந்து அணித்தலைவர் பால் காலிங்வுட்..!

http://content-ind.cricinfo.com/db/PICTURES/CMS/79300/79319.2.jpg

ராஜா
10-11-2008, 08:53 AM
எதிர்வரும் தொடருக்கான இந்திய அணி..

தோனி (தல & விகா)

சேவாக், கம்பீர், ஹர்பஜன்,யுவராஜ், ஆர்.பி சிங்குகள், ஜாகீர், விராட் கோலி, ப்ரக்யான் ஓஜா, முனாஃப் படேல், பதான், ரெய்னா, இஷாந்த், ரோஹித் ஷர்மாக்கள், முரளி விஜய்.

ராஜா
10-11-2008, 09:09 AM
எதிர்வரும் தொடருக்கான இங்கிலாந்து அணி..

http://content-ind.cricinfo.com/inline/content/image/312589.html?alt=icon
கெவின் பீட்டர்சன் ; தல..!
___________________________________

http://content-ind.cricinfo.com/inline/content/image/218747.html?alt=icon

இயான் பெல் ( 2007 தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்)
____________________________________

http://content-ind.cricinfo.com/inline/content/image/252246.html?alt=icon

ரவி போபாரா.. ( இலங்கை வம்சாவழி வீரர்)
____________________________________

http://content-ind.cricinfo.com/inline/content/image/299679.html?alt=icon

ஸ்டூவர்ட் ப்ராட் ( யுவராஜ் 6 X 6 ..!)
_____________________________________

http://content-ind.cricinfo.com/inline/content/image/243823.html?alt=icon

ஆண்ட்ரூ ஃப்ளின்டாஃப்.. ( இந்திய அணிக்கு தலைவலி..!)
______________________________________

aren
10-11-2008, 09:16 AM
முதல் ஒரு நாள் ஆட்டத்தில், இந்திய அணி இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்:

1. தோனி
2. சேவாக்
3. கம்பீர்
4. ஹர்பஜன்
5. யுவராஜ்
6. முனாஃப் படேல்
7. ஜாகீர்
8. பதான்
9. ரெய்னா
10. இஷாந்த்
11. ரோஹித் ஷர்மா

ராஜா
10-11-2008, 09:16 AM
எதிர்வரும் தொடருக்கான இங்கிலாந்து அணி..

http://content-ind.cricinfo.com/inline/content/image/252448.html?alt=icon

சமித் படேல்.. ( இந்திய வம்சாவழி வீரர்)
_______________________________________

http://content-ind.cricinfo.com/inline/content/image/310253.html?alt=icon

பால் காலிங்வுட் (முன்னாள் தல..!)
________________________________________

http://content-ind.cricinfo.com/inline/content/image/216453.html?alt=icon

ரயான் சைட்பாட்டம்.. ( அவங்க பக்க கூந்தலழகன்..)
_________________________________________


மற்றும்..

ஹார்மிசன், ஆண்டர்சன், குக், ப்ரையர், ஸ்வான், ரைட், ஷா.

aren
10-11-2008, 09:17 AM
பதானிற்கு பதில் ஹோஜாவிற்கு இடம் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

ராஜா
10-11-2008, 09:20 AM
முதல் ஒரு நாள் ஆட்டத்தில், இந்திய அணி இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்:

1. தோனி
2. சேவாக்
3. கம்பீர்
4. ஹர்பஜன்
5. யுவராஜ்
6. ஆர்.பி சிங்
7. ஜாகீர்
8. பதான்
9. ரெய்னா
10. இஷாந்த்
11. ரோஹித் ஷர்மா


6 மட்டையாளர், 1 ஆல் ரவுண்டர், 4 பந்துவீச்சாளர் என்று சரிவிகித அணியாத்தான் இருக்கு.. பொறுத்திருந்து பார்ப்போம் மாட்டிரிக்ஸ்..!

ராஜா
10-11-2008, 09:38 AM
மாதவராவ் சிந்தியா மைதானம்.. கான்பூர்.

வெற்றி தோல்வி புள்ளிவிவரங்கள்..

போட்டிகள்

மொத்தம் : 10.

இந்தியா பங்கேற்றவை : 9.

வெற்றி : 4.

தோல்வி : 5.

கடைசியாக வென்றது : நவ.9/2005. இலங்கைக்கு எதிராக 7 விக்கெட் வேறுபாட்டில்..

கடைசியாகத் தோற்றது : பிப்.11/2007. இலங்கைக்கு எதிராக 5 ஓட்டங்கள் வேறுபாட்டில்.

arun
11-11-2008, 02:25 AM
கடந்த முறையை போலவே இந்த முறையும் போட்டி கொஞ்சம் சவாலாக தான் இருக்கும்

இராசகுமாரன்
14-11-2008, 09:13 AM
நேரடி ஒளிபரப்புக்கு:

http://www.cricboom.com/ (http://www.cricboom.com/)

http://www.ustream.tv/channel/ind-v-eng---cricket

ஆதி
14-11-2008, 09:32 AM
158 ஓட்டங்கள் வித்யாசத்தில் இந்தியா வெற்றி..

ராஜா
14-11-2008, 01:00 PM
ஹீரோ ஹோண்டா கோப்பைக்கான இந்திய இங்கிலாந்து ஒருநாள் போட்டித்தொடர்..

முதல் போட்டி / ராஜ் கோட் / 14.11.2008.

ராஜ்கோட்டில் ரன் மழை..!

இன்றைக்கு இங்கிலாந்து அணிக்கு நாள் சரியில்லை போலும்.. டாஸ் வென்ற இங்கி. அணித்தலைவர் தெரியாத்தனமாக இந்தியாவை பேட் செய்ய அழைத்துவிட, பின்னர் இந்திய அணியின் அட்டகாசம்தான் போங்கள்..!

துவக்க இணையான சேவாக், கம்பீர் இருவரும் ஆரம்பதிலேயே அதிரடியைக் காட்டினார்கள்.. என்னதான் நடக்கிறது என்று இங்கி.அணி புரிந்துகொள்ளும் முன்பே இருவருமே அரை சதம் அடித்துவிட்டனர்.

ஸ்கோர் 127 ஐத் தொட்டபோது, கம்பீர் கொஞ்சம் அலட்சியமாக சமித் படேலின் பந்தை தூக்கி அடிக்க பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார்.. (51)

அடுத்து அந்த ரெய்னா வந்து இங்கிலாந்து பந்துகளை அள்ளி மைதானத்துக்கு வெளியில் கொட்டத்தொடங்கினார்.. எதிர் முனையில் சேவாக் வழக்கமான வன்முறையிலிறங்க ஸ்கோர் எகிறத் தொடங்கியது.

ஒரு கட்டத்தில் சமித் படேலின் ஓவரில் 6, 1, 1, 4, 4, என்று ஓட்டங்களைக் குவித்தும் திருப்தியுறாத சேவாக், கடைசிப்பந்தையும் பவுண்டரிக்கு விரட்ட முயல, மிக அழகாக காட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார் .. (85)

சேவாக்கை வழியனுப்பிவிட்டு கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்ட இங்கி.அணியின் சந்தோஷத்துக்கு அற்பாயுள்.. காயமுற்ற பறவையாக களத்துக்குள் காலடி எடுத்துவைத்த யுவராஜ் சிங் தன் வாழ்நாளின் சிறந்த ஆட்டத்தை இன்று ரசிகர்களுக்கு விருந்தாகப் படைத்தார்..

தொட்டது அனைத்தும் துலங்க.. மட்டையில்
பட்டது அனைத்தும் பறக்க.. ஒரு ருத்ர தாண்டவமே ஆடிவிட்டார் யுவராஜ்..! காமிராக்காரர்களின் கைகள் இன்று பந்துகளைத் துரத்தி துரத்தியே ஓய்ந்து போயிருக்கும்..!

மற்றொரு முனையில் ஃப்ளிண்டாஃப் வீசிய ஃபுல்டாஸ் பந்தை தொட்டு லட்டு போல காட்ச் கொடுத்த ரெய்னா (43), அடுத்து வந்து முட்டையிட்ட (பதானின் பலத்த சிபாரிசு) யூசுஃப் பத்தான் என்று விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் யுவராஜின் கைகள் ஓயவே இல்லை..! 70 க்கும் குறைந்த பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்ய, அவருக்கு பக்க துணையாக தோனி..!

மாய வித்தைக்கு மயங்கியவர்கள் போல பந்து வீசிய வெள்ளையர்களின் பந்துகள் அனைத்தும் எல்லைக்கோட்டுக்கு அப்பால் வெளியேற்றப்பட்டன..!

50 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 387 ஓட்டங்கள் குவித்துவிட்டது..!

ஓவருக்கு 7.76 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பிரிட்டிஷாருக்கு கடும் அதிர்ச்சி ஜாகீர்கான் உருவில் காத்திருந்தது..

முதல் விக்கெட்டை முனாஃப் பட்டேல் வீழ்த்த அடுத்த 3 விக்கெட்டுகளையும் ஜாகீர் தன் வசமாக்கினார்.. 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் வீழ்ந்ததுமே ஆங்கிலேயர்களின் தன்னம்பிக்கை தரைமட்டம் ஆயிற்று.. அணித்தலைவர் கெவின் பீட்டர்சன் (63) மற்றும் ரவி போப்பாரா (54) ஆகிய இரு மரங்கள் மட்டுமே இந்திய பந்துவீச்சு புயலில் சற்று தாக்கு பிடித்தன.

3.4 ஓவரில் 41 ஓட்டங்களை அள்ளி வழங்கிய யூசுஃப் பத்தான் இறுதி விக்கெட்டை வீழ்த்த, இங்கிலாந்தின் கதை 229 ஓட்டங்களில் முடிவடைந்தது. 158 ஓட்டங்கள் வேறுபாட்டில் இந்தியா வெற்றி பெற்றது.



http://ind.cricinfo.com/db/PICTURES/CMS/96000/96081.jpg

ஆட்டநாயகன் : யுவராஜ் சிங்.(138)

anna
14-11-2008, 01:11 PM
அருமையான வெற்றி ஆனாலும் தொடரை வெல்லும் வரையில் ஆட்டத்தில் எந்த ஒரு நிலையிலும் மெத்தனம் காட்ட கூடாது.ஒவ்வொரு ஆட்டத்திலும் அனல் பறக்க வேண்டும் அப்பத்தான் அடங்குவர் ஆங்கிலேயர்கள்.

ராஜா
14-11-2008, 01:29 PM
அருமையான வெற்றி ஆனாலும் தொடரை வெல்லும் வரையில் ஆட்டத்தில் எந்த ஒரு நிலையிலும் மெத்தனம் காட்ட கூடாது.ஒவ்வொரு ஆட்டத்திலும் அனல் பறக்க வேண்டும் அப்பத்தான் அடங்குவர் ஆங்கிலேயர்கள்.


சரியாகச் சொன்னீர்கள் நண்பரே..!

ஆனால் நம்மவர்கள் அடுத்த ஆட்டத்திலேயே சொதப்பினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை..!

அறிஞர்
14-11-2008, 02:25 PM
முதல் போட்டியிலே ஓட ஓட அடித்துவிட்டனர்..

arun
15-11-2008, 02:49 AM
நேற்றைய யுவராஜின் ஆட்டம் அற்புதம் தொடர் முழுவதும் இந்த ஆக்ரோஷம் தொடரட்டும்

ராஜா
15-11-2008, 04:31 AM
நேற்றைய போட்டி.. சில சுவையான தகவல்கள்..

அதி விரைவாக சதம் அடித்த 2 வது இந்தியர் யுவராஜ் சிங்.. ( 64 பந்துகள்)

முதல் இந்தியர்..? முகமது அசாருதீன்.. 62 பந்துகளில் அடித்திருக்கிறார்.. ( பரோடா, 17/12/1988 , எதிர் நியூசிலாந்து)

குறைந்த பந்துகளில் சதம் அடித்த உலகச் சாதனையாளர் .. ஷாஹித் அஃப்ரிதி ( பாக்)
இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் அடித்துள்ளார்..

அவரே, 2005 ல் , கான்பூர் போட்டியில் நம்ம ஆளுகளையும் சாத்தி 45 பந்துகளில் சதமடிச்சுருக்காரு..!

இதே யுவராஜ், இதே இங்கிலாந்துக்கு எதிரா கோவாவில் 3/4/2006 ல் 73 பந்துகளில் நூறு ஓட்டம் எடுத்திருக்காரு..

அது என்னமோ தெரியல.. இந்த இங்கிலீஷ்காரனுங்களைக் கண்டா அவருக்கு எப்படி இருக்குமோ..? பின்னு பின்னுன்னு பின்னுறாரே..!

ராஜா
15-11-2008, 04:41 AM
நேற்றைய போட்டி.. சில சுவையான தகவல்கள்..

இங்கிலாந்துக்கு எதிரா இந்தியா எடுத்த உச்ச ஒருநாள் போட்டி ஸ்கோர் இதுதான்.. (387/5)

இதுக்கு முந்தி, 24/ ஆகஸ்ட்/ 2007 ல பிரிஸ்டல் மைதானத்துல எடுத்த 329/7 தான் அதிக பட்ச ஸ்கோர்..

ராஜா
15-11-2008, 04:51 AM
நேற்றைய போட்டி.. சில சுவையான தகவல்கள்..

இங்கிலாந்துக்கு எதிரா ஒரே ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் (138) குவித்த இந்திய வீரர் என்ற பெருமையும் யுவராஜுக்குதான்..

முந்தைய சாதனையாளர்.. நவ்ஜோத் சிங் சித்து (134).

ராஜா
15-11-2008, 04:57 AM
நேற்றைய போட்டி.. சில சுவையான தகவல்கள்..

இங்கிலாந்துக்கு எதிரா ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் வேறுபாட்டில் (158) வென்றதும் புதிய சாதனைதான்.. இதுக்கு முந்தி, 1985ல 86 ஓட்டங்களில் வென்றதுதான் சாதனையா இருந்துச்சு.

ஆனா அவிங்க நம்மள 202 ஓட்டங்கள் வேறுபாட்டில் ஜெயிச்சுருக்காய்ங்க.. அது வேற விஷயம்..!

ராஜா
15-11-2008, 05:05 AM
அடுத்த போட்டி..


ஹீரோ ஹோண்டா கோப்பைக்கான இந்திய இங்கிலாந்து ஒருநாள் போட்டித்தொடர்..

2 வது போட்டி / மகாராணி உஷா ராஜே அறக்கட்டளை மைதானம் , இந்தூர், ம.பி. / 17.11.2008./ காலை 9 மணி.

மன்மதன்
15-11-2008, 09:41 AM
அடுத்து வந்து முட்டையிட்ட (பதானின் பலத்த சிபாரிசு) யூசுஃப் பத்தான் என்று விக்கெட்டுகள் வீழ்ந்தாலும்

20-20 மேட்ச் யூசுஃப் பதானின் ஆட்டத்தை அதுக்குள்ள மறந்துட்டா எப்படி? ஒரு முட்டைக்கே கலங்கிட கூடாது. அவரும் அடித்திருந்தா நேற்றைய மேட்ச் இன்னும் பல சாதனைகளை எடுத்திருக்கும்.. :)

ராஜா
15-11-2008, 11:09 AM
20-20 மேட்ச் யூசுஃப் பதானின் ஆட்டத்தை அதுக்குள்ள மறந்துட்டா எப்படி? ஒரு முட்டைக்கே கலங்கிட கூடாது.

ஹி..ஹி.. இந்த முட்டைக்கெல்லாம் கலங்கற ஆளா நாங்க..?

முதல்தரப் போட்டிகளில் யூசுஃப் பத்தான் ஏதோ சாதிச்சு இருக்கற மாதிரிதான் புள்ளி விவரம் சொல்லுது.. ஆனா சர்வதேசப் போட்டிகளில் இன்னும் அவர் குறிப்பிடும்படியா எதுவும் சாதிக்கலை என்பதே நிஜம்..!

இனியாவது சாதிக்க வாழ்த்துகள்..!

மன்மதன்
15-11-2008, 12:15 PM
முதல்தரப் போட்டிகளில் யூசுஃப் பத்தான் ஏதோ சாதிச்சு இருக்கற மாதிரிதான் புள்ளி விவரம் சொல்லுது.. ஆனா சர்வதேசப் போட்டிகளில் இன்னும் அவர் குறிப்பிடும்படியா எதுவும் சாதிக்கலை என்பதே நிஜம்..!


ஆமா...சின்ன புள்ளதானே ..இனிதான் சாதிக்கும்.. நல்ல ஹிட்டர்.. பூ எப்போ புயலாகும்னு காத்திருக்கோம்.:)

அறிஞர்
17-11-2008, 02:48 AM
நேரடி ஒளிபரப்புக்கு:

http://www.ustream.tv/channel/india-v-england-series-live (http://www.ustream.tv/channel/india-v-england-series-live)

மதி
17-11-2008, 03:25 AM
இந்தியா.. 45/3..
மூன்று விக்கெட்டும் பிராட் வீழ்த்தினார்.
நிலைமை சரியில்லையே..

ராஜா
17-11-2008, 03:59 AM
88-3

19 ஓவர்களில்..

யுவராஜ். 31*

கம்பீர் 38*

ராஜா
17-11-2008, 04:04 AM
இந்தியா 100 ஓட்டங்களைக் கடக்கிறது..

20.2 ஓவர்களில்..

கம்பீர் 43*

யுவராஜ் 38*

ராஜா
17-11-2008, 04:16 AM
கம்பீர் அரை சதம்.. 56 பந்துகளில்..!

13 வது ஒருநாள் அரைச் சதம்..!

ராஜா
17-11-2008, 04:20 AM
யுவராஜ் அரை சதம்.. ( 61 பந்துகளில்..!)

38 வது அரைச்சதம்..!

ராஜா
17-11-2008, 04:26 AM
இருவரும் அரை சதம் போட்டுவிட்டதால் இப்போது ஒரு விக்கெட் விழக்கூடும் என்பது என் கணிப்பு..!

ராஜா
17-11-2008, 04:31 AM
ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச அழைக்கப்பட்டிருக்கிறார்..

யுவ்ராஜ் இங்கிலாந்துக்கெதிராக 1000 ஓட்டங்கள் எடுத்தவர் என்ற சாதனை புரிகிறார்..

அடுத்தடுத்து இரு போட்டிகளிலும் சேர்த்து 200 ஓட்டங்கள் எடுத்துள்ளார்..

141/3

27 வது ஓவர்..

ராஜா
17-11-2008, 04:38 AM
இந்தியா : 150/3

கம்பீர் 64*

யுவ்ராஜ் 68*

29 வது ஓவர்..

ராஜா
17-11-2008, 04:44 AM
பீட்டர்சன் பந்தை தன் ஸ்டம்புக்குள் திருப்பிவிட்டு ஆட்டமிழக்கிறார் கம்பீர்.. (70)

30 ஓவர்களில் 163/4

ராஜா
17-11-2008, 04:56 AM
கம்பீருக்குப் பிறகு ஆடவந்திருக்கும் அணித்தலைவர் தோனி தான் எதிர்கொண்ட 7வது பந்தில் முதல் ஓட்டத்தை எடுத்து கணக்கைத் துவக்குகிறார்..

177/4

33 வது ஓவர்.

ராஜா
17-11-2008, 05:12 AM
தொண்ணூறுகளில் யுவராஜ்..

மீண்டும் சதமடிப்பாரா..

96*

194/4.

37 ஓவர்கள்..

ராஜா
17-11-2008, 05:15 AM
யுவராஜ் மீண்டும் சதம்.. (107 பந்துகளில்..)

10 வது ஒருநாள் சதம்..!

ராஜா
17-11-2008, 05:17 AM
தோனி ஆட்டமிழக்கிறார்..

காலிங்வுட் பந்தில் ஸ்டம்பைப் பறிகொடுத்த அவர்..

26 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்தார்..!

39 ஓவர்கள் முடிவில் 206/5

ராஜா
17-11-2008, 05:22 AM
210 / 5.

40 வது ஓவர்.

புதிய மட்டையாளர்.. இர்ஃபான் பத்தானின் அண்ணன் யூசுஃப் பத்தான்..!

ராஜா
17-11-2008, 05:32 AM
3 வது பவர் ப்ளே,

மட்டைபிடிக்கும் அணியின் விருப்பத்துக்கேற்ப 43 முதல் 47 ஓவர்கள் வரை அனுசரிக்கப்படுகிறது..!

ராஜா
17-11-2008, 05:42 AM
யுவராஜ் சிங் ஆட்டமிழக்கிறார்..

ஸ்டூவர்ட் பிராடின் 4 வது பலியாக விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து வெளியேறுகிறார்..

அவர் குவித்த ஓட்டங்கள் 118.

239/6.

44 வது ஓவர்..!

ராஜா
17-11-2008, 05:58 AM
ஹர்பஜன் ரன் அவுட்..

3 வது நடுவர் முடிவெடுக்கும் முன்னரே வெளியேறினார்..

258/7

47 வது ஓவர்..!

ராஜா
17-11-2008, 06:04 AM
ஜாகீர் கான் ரன் அவுட்..



261/8

48 வது ஓவர்..!

ராஜா
17-11-2008, 06:09 AM
274/8.

49 ஓவர் முடிவில்..

ராஜா
17-11-2008, 06:11 AM
ஆர்.பி. சிங் ஸ்டம்ப் ஹார்மிசனின் பந்தில் அல்லலுறுகிறது..!

274/9

ராஜா
17-11-2008, 06:16 AM
50 ஓவர் முடிவில் 292 /9.

இன்று பிறந்தநாள் காணும் யூசுஃப் பத்தான் 29 பந்துகளில் தன் முதல் அரை சதம் அடித்தார்..

இரண்டுக்கும் வாழ்த்துகள்..!

ராஜா
17-11-2008, 06:17 AM
சுருக்கமான ஸ்கோர்..

இந்தியா 292/9.

யுவராஜ் 118.

கம்பீர் 70.

யூசுஃப் 50*

ஸ்டூவர்ட் பிராட் : 4/55.

ராஜா
17-11-2008, 07:05 AM
இங்கிலாந்து அணி வெற்றிபெற..
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
தேவையான ஓட்டங்கள் : 274
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
நிறைவடைந்த ஓவர்கள் : 5
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட் கையிருப்பு : 9
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ஓவியன்
17-11-2008, 07:11 AM
ஆமா...சின்ன புள்ளதானே ..இனிதான் சாதிக்கும்.. நல்ல ஹிட்டர்.. பூ எப்போ புயலாகும்னு காத்திருக்கோம்.:)

என்னே ஒரு வார்த்தை.....!! :)

பூ, இன்று புயலாகி இங்கிலாந்தைப் பந்தாடியதே, மன்னிக்கவும் மட்டையாடியதே..!! :):)

ராஜா
17-11-2008, 07:20 AM
இங்கிலாந்து அணி வெற்றிபெற..
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
தேவையான ஓட்டங்கள் : 262
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
நிறைவடைந்த ஓவர்கள் : 10
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட் கையிருப்பு : 9
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
இதே 8 ஓவர்களில் இந்தியா 30/3

ராஜா
17-11-2008, 07:31 AM
10 ஓவர் முடிவில்..47/1 ( முதல் பவர் ப்ளே)

ப்ரையர் : 13*

ஷா : 30*

ராஜா
17-11-2008, 07:51 AM
இங்கிலாந்து அணி வெற்றிபெற..
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
தேவையான ஓட்டங்கள் : 221
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
நிறைவடைந்த ஓவர்கள் : 15
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட் கையிருப்பு : 9
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
17-11-2008, 08:00 AM
ப்ரையர் 31*

ஷா 39*

16 ஓவர்களில் 75/1

ராஜா
17-11-2008, 08:10 AM
இங்கிலாந்து அணி வெற்றிபெற..
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
தேவையான ஓட்டங்கள் : 207
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
மீதமிருக்கும் ஓவர்கள் : 30
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட் கையிருப்பு : 9
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
17-11-2008, 08:16 AM
யுவராஜ் பந்தில் சிக்சர் அடித்து தன் அரை சத*த்தை நிறைவு செய்கிறார் ஓவைஸ் ஷா..!

95/1

ராஜா
17-11-2008, 08:21 AM
22.4 ஓவர்களில் இங்கிலாந்து 100 ஓட்டங்களைக் கடக்கிறது..!

வெற்றி பெறத் தேவையான ஓட்ட விகிதம் 7.00 க்கு கொஞ்சம் அதிகம்..

ராஜா
17-11-2008, 08:25 AM
நொண்டும் ஓவைஸ் ஷாவுக்கு மாற்று ஓட்டக்காரராக இயான் பெல் வருகை தந்த மறுகணமே, ஷா யுவராஜின் பந்தில் விமுகா ஆகிறார்.

102/2.

23.1 ஓவர்.

புதிய மட்டையாளர் : கெவின் பீட்டர்சன்.

ராஜா
17-11-2008, 08:29 AM
இங்கிலாந்து அணி வெற்றிபெற..
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
தேவையான ஓட்டங்கள் : 185
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
மீதமிருக்கும் ஓவர்கள் : 25
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட் கையிருப்பு : 8
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
17-11-2008, 08:33 AM
இங்கிலாந்துக்கெதிரான யுவராஜின் அதிரடித் தாக்குதல் தொடர்கிறது..

தற்போது விக்கெட்டைப் பறிகொடுத்தவர்...

மாத்யூ ப்ரையர் 38.

109/3.

26 ஓவர்.

ராஜா
17-11-2008, 08:44 AM
இங்கிலாந்து அணி வெற்றிபெற..
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
தேவையான ஓட்டங்கள் : 173
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
மீதமிருக்கும் ஓவர்கள் : 20
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட் கையிருப்பு : 7
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
17-11-2008, 08:50 AM
ஃப்ளிண்டாஃப் : 4*

பீட்டர்சன் : 15*


124/3

32ம் ஓவர்.

ராஜா
17-11-2008, 08:58 AM
ஒரு சுவையான நிகழ்வு..

தோனி பந்துவீச சேவாக்கை அழைத்தார்.. உடனே இங்கி. தல பீட்டர்சன் இனிவரும் 5 ஓவர்களை பவர்ப்ளே ஆக அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அடுத்த நிகழ்வாக சேவாக்குக்கு பதிலாக ஹர்பஜனையே பந்துவீச்சைத் தொடரச் சொன்னார் தோனி.

எனினும் ப்ளிண்டாஃபும், பீட்டர்சனும் ஹர்பஜனின் ஒரு ஓவரில் 3 சிக்சர்கள் அடித்தனர்.. அந்த ஓவரில் 21 ஓட்டங்கள் கிடைத்தன.

145/3

33 வது ஓவர்.

ராஜா
17-11-2008, 09:03 AM
34வது ஓவரில் இங்கி. 150 ஓட்டங்களைக் கடந்தது..!

ராஜா
17-11-2008, 09:07 AM
இங்கிலாந்து அணி வெற்றிபெற..
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
தேவையான ஓட்டங்கள் : 132
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
மீதமிருக்கும் பந்துகள் : 90
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட் கையிருப்பு : 7
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
17-11-2008, 09:13 AM
ஃப்ளிண்டாஃப் : 39*

பீட்டர்சன் : 24*

36 வது ஓவர்


168/3

ராஜா
17-11-2008, 09:21 AM
37 வது ஓவர் (பவர் ப்ளே முடிவு)


183/3

5 ஓவர்களில் இங்கி எடுத்த ஓட்டங்கள் 59.

ராஜா
17-11-2008, 09:23 AM
பவர் ப்ளே முடிந்ததும் பந்து வீச வந்த யுவராஜ் ஃப்ளிண்டாஃபை (43) வி.மு.கா. ஆக்குகிறார். :)

ராஜா
17-11-2008, 09:26 AM
யுவராஜின் அதே ஓவரின் 5 வது பந்தில் பீட்டர்சன் போல்ட் ஆகிறார்.. :)

184/5

ராஜா
17-11-2008, 09:33 AM
ஹர்பஜனின் பந்தில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழக்கிறார் பால் காலிங்வுட்.

ராஜா
17-11-2008, 09:34 AM
இங்கிலாந்து அணி வெற்றிபெற..
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
தேவையான ஓட்டங்கள் : 106
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
மீதமிருக்கும் பந்துகள் : 60
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட் கையிருப்பு : 4
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
17-11-2008, 09:40 AM
யூசுஃப் பந்தில் பிடி கொடுத்து ரவி போபாரா ஆட்டமிழக்கிறார்..

193/7

ராஜா
17-11-2008, 09:45 AM
இங்கி. 200 ஓட்டங்களை 44 வது ஓவரில் கடக்கிறது..

ராஜா
17-11-2008, 09:49 AM
சேவாக் பந்தில் சமீத் படேல் ஆட்டமிழக்கிறார்..

222/8

44.4 ஓவர்.

ராஜா
17-11-2008, 09:50 AM
B]இங்கிலாந்து அணி வெற்றிபெற..
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
தேவையான ஓட்டங்கள் : 67
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
மீதமிருக்கும் பந்துகள் : 30
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விக்கெட் கையிருப்பு : 2
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL[/B]

ராஜா
17-11-2008, 10:02 AM
சேவாக் பந்தில் ஹார்மிசன் ஆட்டமிழக்கிறார்..

233/9


சேவாக் பந்தில் பிராட் ஆட்டமிழக்கிறார்..

238/10.


இந்தியா 54 ஓட்டங்கள் வேறுபாட்டில் வென்று 7 போட்டிகள் கொண்ட தொடரில் 2*க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஓவியன்
17-11-2008, 10:14 AM
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கும் சகலதுறை ஆட்டத்தால் கலக்கிய யுவராஜூக்கும் என் வாழ்த்துக்கள்..!! :)

மதி
17-11-2008, 10:17 AM
அடுத்த அதிரடியான வெற்றி.. யுவராஜ் உண்மையிலேயே இன்று கலக்கல் ராஜ்...
இந்திய அணியினருக்கு வாழ்த்துகள்.

ராஜா
17-11-2008, 10:41 AM
இரண்டாவது ஒருநாள் போட்டி.. ஒரு தொகுப்பு.


முதலில் மட்டைபிடித்த இந்தியாவுக்கும், கடந்த போட்டியைப் போன்றே ஒரு அதிரடித் துவக்கம் இருக்குமோ என* எதிர்பார்த்து, காலையிலேயே வந்து குழுமிவிட்ட இரசிகர்களுக்கும் கொஞ்சம் அதிர்ச்சி தரும் விதமாக சேவாக், ரெய்னா, ரோஹித் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கின. அதுவும் 30 ஓட்டங்கள் எடுப்பதற்குள்..!

தொலைக்காட்சியில் ஆட்டத்தை இரசித்துக் கொண்டிருந்த சிலர் இன்று அலுவலகத்துக்கு மட்டம் போட்டது வீணாகி விட்டதே என்று புழுங்கிக்கொண்டிருந்தபோது, ஆபத்பாந்தவனாக யுவராஜ் வந்தார். சரளமாக ஷாட்களை அடிக்கத்தொடங்கினார்.

திருவிழாவில் தொலைந்துபோன பிள்ளை போல, கூடவந்தவர்களையெல்லாம் தவறவிட்டுவிட்டு தவித்து நின்ற கம்பீரும், உற்சாகமாக ஆடத் துவங்க.. பின் என்ன.. இந்திய ரசிகர்களின் கண்களுக்கு விருந்துதான்..!


இலகுவாக மட்டைக்கு பந்து வரும் வகையில் வீசிக்கொண்டிருந்த வீச்சாளர்களுக்கு வேறுபாடாக, இடையே வந்த இங்கிலாந்து தலையின் சுழலும் பந்துகளை கணிக்கத் தவறிய குற்றத்துக்கு பரிகாரமாக 70 ஓட்டங்கள் எடுத்திருந்த கம்பீர் ஆட்டமிழக்க, அடுத்து ஆட்டத்தில் சற்றே தொய்வு..

இருப்பினும் கருமமே கண்ணாயினராக ஆடிய யுவராஜ் அடித்த சதம் ரசிகர்களை நிமிர்ந்து உட்காரச் செய்தது. எதிர்முனையில் தோனி ஆட்டமிழக்க, பிறந்தநாள் குழந்தை யூசுஃப் பத்தான் ஜோடி சேர்ந்து, முடிந்தவரை பந்துகளை சந்திக்கும் வாய்ப்பை யுவராஜுக்கு கொடுத்தார்.

118 ஓட்டங்கள் குவித்த யுவராஜ், பிராட் வீசிய பந்தில் ஆட்டமிழக்க, அடுத்து , ஹர்பஜன்,, ஜாகீர்கான் ஆகியோர் பவர்ப்ளேயை சரியாகப் பயன் படுத்திக்கொள்ளாமல் வந்து போயினர்.

போட்டியின் கடைசிப்பந்தில் தன் வாழ்வின் முதல் ஒருநாள் (சர்வதேச) அரைச்சதத்தை யூசுஃப் எட்ட, இங்கிலாந்துக்கு 293 ஓட்ட இலக்கை இந்தியா நிர்ணயித்தது.

வழக்கம்போல அதிர்ச்சியுடன் துவங்கிய இங்கிலாந்து ஓட்டம் எட்டுதலை, மாத்யூ ப்ரையர் (38) மற்றும் ஓவைஸ் ஷா (58) ஆகியோர் ஓரளவு நிலைப்படுத்தினர். எனினும் ஆட்டத்தின் எந்த நிலையிலும் இங்கிலாந்து ஓட்ட விகிதம் இந்தியாவுக்கு கவலையளிக்கும் விதத்தில் இல்லை.


ஓட்டம் குவித்து இங்கிலாந்தை ஆட்டங்காணச் செய்த யுவராஜ், பந்துவீச்சில் அவர்களை மைதானத்தை விட்டு ஓட்டம் காணவும் செய்தார். ப்ரையர் மற்றும் ஷா இவரின் வீச்சுக்கு இரையானார்கள். பக்கதுணையாக எதிமுனையில் ஹர்பஜனும் ஒத்துழைக்க, இங்கிலாந்தின் தேவையான ஓட்ட விகிதம் 9 ஐ நோக்கி உயரத் தொடங்கியது.

இப்படியே போனால் சரியாக இருக்காது என்று முடிவு செய்த மட்டையாளர்கள், ப்ளிண்டாஃபும் பீட்டர்சனும் பவர்ப்ளே வேண்டிப்பெற்று ஓட்டங்களைக் குவித்தார்கள். முதன்முறை பந்துவீச வந்தபோதே ஓவருக்கு எட்டரை ஓட்டங்களைத் தந்து ஓரங்கட்டப்பட்ட வள்ளல் ஆர்.பி.சிங்கையும் பந்து போடச் செய்து 5 பவர்ப்ளே ஓவர்களில் இங்கிலாந்து 59 ஓட்டங்கள் பெற உதவினார் நிர்வாக அறிவியலில் சிறந்த தோனி..!

பவர்ப்ளே முடிந்த பிறகு மீண்டும் யுவராஜ் , தன் கடைசி ஓவரை வீசினார். அதில் ப்ளிண்டாஃப் (43) மற்றும் பீட்டர்சன் ஆட்டமிழந்தனர்..!

பின்னர் வந்தோர் எவரும் சரியாக ஆடாததால் இங்கிலாந்து ரன் சேசிங் 238 ஓட்டங்களில் முடிந்தது.

ஆட்டநாயகன் : யுவராஜ் சிங்.

anna
17-11-2008, 12:05 PM
இரண்டாவது ஆட்டத்திலும் 54 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

அறிஞர்
17-11-2008, 01:32 PM
கலக்கல் இந்தியா...

யுவராஜ் vs. இங்கிலாந்து போட்டி அருமை...

நேரடி ஒளிபரப்பின் மூலம் யுவராஜ் சதத்தை கண்டு மகிழ்ந்தேன்.

ராஜா
18-11-2008, 04:37 PM
இந்திய இங்கிலாந்து ஒருநாள் போட்டித்தொடர்..

3வது போட்டி / 20/11/2008.09.00 Hrs.

http://www.cricinfo.com/db/PICTURES/DB/032000/010089.jpg

கிரீன் பார்க் மைதானம்.. சில தகவல்கள்..

நிறுவப்பட்டது : 1945.

ரசிகர்கள் கொள்ளளவு : 45,000.

முனைகளின் பெயர்கள் ; 1) மில் பெவிலியன் முனை, 2) ஹாஸ்டல் முனை.

உள்ளூர் அணி : உத்தரப்பிரதேசம்.

இரவில் ஆடும் வசதி : உண்டு.

மட்டையாளர்களுக்கு சாதகமான களம் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் மாசு மிக்க நகரங்களில் ஒன்று என அறியப்படும் கான்பூரில் (கங்கை நதிக்கரையில்) இம்மைதானம் அமையப்பெற்றிருக்கிறது.

ராஜா
18-11-2008, 05:00 PM
வரலாற்றின் ஏடுகளில்..

இந்திய இங்கிலாந்து போட்டித்தொடர் 1976/77. (இந்தியா)

ஆஸி.யிடமும் மேற்கிந்தியத்தீவுகளிடமும் சரியாக உதை வாங்கியிருந்த இங்கி. அணி தன் கடுப்பைத் தீர்த்துக்கொள்ள இந்தியா வந்து இறங்கியது. பிரபல டோனி கிரெய்க் தான் அதன் தலைவர். இங்கிலாந்து அணியின் அப்போதைய பெயர் எம்.சி.சி...!

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3க்கு 1 என்ற கணக்கில் அப்போது இங்கிலாந்து வென்றது. முதல் மூன்று டெஸ்டுகளை முறையே 1 இன்னிங்ஸ் + 25 ஓட்டங்கள், 10 விக்கெட்டுகள், 200 ஓட்டங்கள் என்ற வேறுபாட்டில் வென்ற எம்சிசி, பெங்களூரு போட்டியை மட்டும் இந்தியாவிடம் பறிகொடுத்தது. மும்பை போட்டி சமன் ஆயிற்று.

இங்கிலாந்து அணி பந்தில் வாசலைன் என்னும் பசையைத் தடவி விக்கெட்டுகளை வீழ்த்தி, வென்றதாக பிரச்னை கிளம்பியது இத்தொடரில்தான்..!

ராஜா
20-11-2008, 07:32 AM
மூன்றாவது ஒருநாள் போட்டி.. 20/11/08. (கான்பூர்)

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 48.4 பந்து பரிமாற்றங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்கள் பெற்றிருக்கிறது.

இலங்கை வம்சாவழி வீரரான ரவி போப்பாரா அரைச்சதம் அடித்தார்.

:)

ராஜா
20-11-2008, 01:35 PM
மூன்றாவது போட்டியிலும் இந்தியா வெற்றி..!

241 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அடையும் முயற்சியில், இந்தியா 40 ஓவர்களில் 198 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்றி ஆட்டம் தடைபட்டது.

வெளிச்சம் இல்லாததின் பலனை இந்திய மட்டையாளர்களுக்கு அளித்த நடுவர்கள், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி கணக்கிட்டார்கள். 5 விக்கெட் இழந்திருந்த இந்தியா வெற்றிபெற 40 ஓவரில் 182 ஓட்டங்கள் எடுத்தாலே போதுமென்று டக்வொர்த் விதி வழிகாட்டியது.

தேவைக்கு மேல் 16 ஓட்டங்கள் எடுத்திருந்ததால் இந்தியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியினர் இந்த தீர்ப்பை வரவேற்கவில்லையென்றாலும் வேறுவழியின்றி ஒப்புக்கொள்ள நேரிட்டது.

இந்திய தரப்பில் சேவாக் 68 ஓட்டங்கள் எடுத்தார்.

ஆட்டநாயகன் : ஹர்பஜன் சிங். (3/31)

ராஜா
21-11-2008, 01:18 PM
இந்திய இங்கிலாந்து ஒருநாள் போட்டித்தொடர்..

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/94500/94538.jpg

4வது போட்டி../23. 11. 2008./ ம*தியம் 2.30 மணி. (பகல் இரவுப் போட்டி.)

சின்னசாமி விளையாட்டரங்கம். பெங்களூரு.


அனில் கும்ப்ளே தன் 400வது விக்கெட்டை வீழ்த்தியது,

இன்சமாம் உல் ஹக் தன் 100வது டெஸ்ட் விளையாடி, அதில் சதம் அடித்தது,

ஆஸி. வீரர் மைக்கேல் கிளார்க் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்தது..

எல்லாம் இந்த மைதானத்தில்தான்..!

ராஜா
21-11-2008, 01:31 PM
இதே அரங்கத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் இதற்குமுன் இருமுறை மோதியிருக்கின்றன. (1985 & 1993)

இரண்டிலுமே இங்கிலாந்துதான் வெற்றி பெற்றது.

ராஜா
21-11-2008, 01:46 PM
வரலாற்றின் ஏடுகளில்...


1980 டெஸ்ட் போட்டி.. இந்தியா.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொன்விழாவை ஒட்டி இந்த ஒரே டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது.

முன்பெல்லாம் டெஸ்ட் போட்டிகளின் இடையே ஒரு ஓய்வு நாள் இருப்பது வழக்கம். அதிலும் இந்த டெஸ்ட் கொஞ்சம் விசித்திரமான ஓய்வு நாளைக் கொண்டிருந்தது.

ஆட்டத்தின் துவக்க நாளன்று சூரிய கிரகணம் இருந்தது. எனவே அன்றைய நாளில் ஆட்டத்தை நடத்தி, பார்வையாளர்களின் கண்களுக்கு ஊறு ஏற்பட்டால் என்ன செய்வது என்று அஞ்சி, வாரியம் முதல்நாளையே ஓய்வுநாளாக அறிவித்துவிட்டது..!

அந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 114 ஓட்டங்கள் குவித்ததுடன், 13 விக்கெட்டுகளை வீழ்த்திய இயான் போத்தம் ஆட்டநாயகனாக தேர்வானார்.

அதே போட்டியில் இங்கிலாந்தின் பாப் டெய்லர் 10 பிடிகள் எடுத்து சாதனை ஏட்டிலும் இடம் பிடித்தார்.

ராஜா
21-11-2008, 02:13 PM
4 மற்றும் 5 வது போட்டிகளுக்கான அணி அறிவிப்பு.

எம். விஜய்க்கு பதிலாக சச்சின்..

ஆர்.பி.சிங்குக்கு பதிலாக இர்ஃபான் பத்தான்..!

anna
21-11-2008, 04:41 PM
டக் வொர்த் லீவீஸ் முறை எல்லாம் வச்சி நம்ம ஜெயிச்சிட்டோம் என இருமாப்பு கொள்ள கூடாது நான்காவது போட்டியில் ஜெயித்து முதல்ல தொடரை கைப்பற்ற வேண்டும்.

ராஜா
23-11-2008, 06:05 AM
ஹீரோ ஹோண்டா கோப்பை : இந்திய இங்கிலாந்து ஒருநாள் போட்டித்தொடர்.

4 வது போட்டி. எம். சின்னசாமி விளையாட்டரங்கம். பெங்களூரு.

தொடரின் முதல் பகலிரவுப் போட்டி.

மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு..!

ஓவியன்
23-11-2008, 07:03 AM
இன்றைய போட்டியில் லிட்டில் மாஸ்டர் விளையாடுவாரென எதிர்பார்க்கப் படுகிறது, டெண்டுல்கர் அணியினுள்ளே வந்தால் ரெய்னா அல்லது ரோஹித் இன்றைய போட்டியில் விளையாட முடியாமற் போகலாம்...

மதி
23-11-2008, 07:07 AM
எங்களுரில் நடக்கிறது. நேற்று மழையிருந்தது. இன்றில்லை. ஆயினும் மேகமூட்டமாய் தான் இருக்கிறது. பார்க்கலாம். முழு மேட்சும் நடக்குமா என்று?

அய்யா
23-11-2008, 07:33 AM
இதே அரங்கத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் இதற்குமுன் இருமுறை மோதியிருக்கின்றன. (1985 & 1993)

இரண்டிலுமே இங்கிலாந்துதான் வெற்றி பெற்றது.

அப்படின்னா இன்னிக்கு?

ஒருவேளை தேர்ட் டைம் லக்கி போல இந்தியா வெல்லும். (வெல்லுமா?)

ராஜா
23-11-2008, 08:18 AM
இங்கிலாந்து டாஸ் வென்றது..

பந்து வீசுகிறது..!

22/0.

ராஜா
23-11-2008, 08:30 AM
சேவாக் : 26* (26)

சச்சின் : 7*(16)

இந்தியா : 34/0

7 ஓவரில்...

ராஜா
23-11-2008, 08:41 AM
சச்சின் அவுட்..!

38/1.

11 ஓட்டங்களில் ஸ்டூவர்ட் பிராடின் பந்துவீச்சில் போல்ட் ஆனார்..!

8 வது ஓவர்.

ராஜா
23-11-2008, 08:54 AM
இந்தியா :
"""""""""""""""""""""""""
ஓவர்கள் : 10
"""""""""""""""""""""""""
ஓட்டங்கள் : 61
"""""""""""""""""""""""""
விக்கெட்டுகள் : 01
"""""""""""""""""""""""""

ராஜா
23-11-2008, 08:58 AM
கம்பீர் 10 பந்துகளில் 4 பவுண்டரிகள் அடித்தார்..

சேவாக் 28*

கம்பீர் 21*

ராஜா
23-11-2008, 09:05 AM
இந்தப் போட்டியில் 36 ஓட்டங்கள் எடுத்த போது , சேவாக் ஒருநாள் போட்டிகளில் 6000 ஓட்டங்களைக் கடந்தார்..!

ராஜா
23-11-2008, 09:11 AM
சேவாக் : 43*

கம்பீர் : 22*

13 ஓவர் முடிவில் 79/1

ராஜா
23-11-2008, 09:22 AM
14 ஓவர்களில் 82 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

ராஜா
23-11-2008, 10:48 AM
மீண்டும் போட்டி மாலை 5.50க்கு துவங்கும் என நடுவர்கள் அறிவிப்பு..!

ராஜா
23-11-2008, 11:25 AM
15 ஓவர்களில்..

89/1.

சேவாக் : 47*

ராஜா
23-11-2008, 11:29 AM
சேவாக் அரை சதம்..!

32வது ஒருநாள் அரை சதம்..!


93/1

ராஜா
23-11-2008, 11:33 AM
மொத்த ஓவர்களில் 6 குறைக்கப்பட்டுள்ளது.

அணிக்கு 44 ஓவர்கள் மட்டுமே..!

16 ஓவர் முடிவில் 103/1.

சேவாக் 60*

ராஜா
23-11-2008, 11:40 AM
இன்னிக்கு ஒண்ணும் கதை ஆகாது போல இருக்கு பங்காளி..!

மறுபடியும் மழை..!

தாமரை
23-11-2008, 02:30 PM
ஆட்டம் 22 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது..

இந்தியா 155 ரன்களை எட்டினால்

இங்கிலாந்தின் இலக்கு 200 க்கு மேல் போகலாம்..

கொஞ்சம் கடினமான இலக்குதான்..இன்னும் 4 ஓவர் இழப்பு ஏற்பட்டால்..

டிராதான்

ராஜா
23-11-2008, 02:47 PM
அணிக்கு 22 ஓவர்கள்.. என்ற அடிப்படையில் மீண்டும் ஆட்டம் தொடங்குகிறது..!

18 ஓவர் : 117/1.

இந்தியாவுக்கு இன்னும் 4 ஓவர்கள் உள்ளன..!

ராஜா
23-11-2008, 02:51 PM
சேவாக் ஆட்டமிழந்தார்..! (

யுவராஜ் வருகை..!

கம்பீர் 38*

20வது ஓவர்..

124/2

ராஜா
23-11-2008, 02:56 PM
22 ஓவர் முடிவில்..


இந்தியா.. 166/4.

மதி
23-11-2008, 03:09 PM
பார்க்கலாம்.. என்ன நடக்குதுன்னு....
இன்னிக்கு ஒரே வாணவேடிக்கையா தான் இருக்கும்... :)
யுவராஜ் இன்றும் கலக்கல்...

தாமரை
23-11-2008, 03:16 PM
இனிமேல் நீங்கள் காண இருப்பது 20/20 மேட்ச்

ராஜா
23-11-2008, 03:16 PM
கடைசி 5 ஓவரில் இந்தியா 60 ஓட்டங்கள் எடுத்தது.

சேவாக் :69.

கம்பீர் :40.

யுவராஜ் : 25*


இங்கிலாந்து வெற்றிபெற 22 ஓவர்களில் 198 ஓட்டங்கள் எடுக்கவேண்டும்..!

ராஜா
23-11-2008, 03:21 PM
இனிமேல் நீங்கள் காண இருப்பது 20/20 மேட்ச்



மிகவும் சரி..!
___________________________________________________________

முதல் ஓவரில் அடிதடி ஒன்றுமில்லை..!


இரண்டாவது ஓவரில் இஷாந்த் அருமையான பிடி ஒன்றை எடுத்தார்..

இங்கிலாந்து 1/1.

மதி
23-11-2008, 05:24 PM
இங்கிலாந்து 178/8. (22 ஓவரில்)

இந்தியா மாபெரும் வெற்றி... 4-0 தொடரை வென்றது.

இந்திய அணியினருக்கு வாழ்த்துகள்

ராஜா
24-11-2008, 11:40 AM
வாழ்த்துகள் இந்திய அணி..!

ஆட்ட நாயகன் : வீரேந்தர் சேவாக். (69 ஓட்டங்கள்).

ராஜா
24-11-2008, 11:59 AM
http://img.cricinfo.com/SERIES/2008-09/ENG_IN_IND/sitegraphic-indveng_odi4.jpg


http://content-ind.cricinfo.com/db/PICTURES/CMS/96300/96301.2.jpg

ராஜா
24-11-2008, 12:28 PM
இந்திய இங்கிலாந்து ஒருநாள் போட்டித்தொடர்.. 2008.

ஐந்தாவது போட்டி. / 26 நவம்பர் 2008./ பகல் 2.30.

பாராபட்டி விளையாட்டரங்கம், கட்டாக், ஒரிசா.

கபில்தேவ் தனது 300வது டெஸ்ட் விக்கெட்டை (ருமேஷ் ரத்நாயகே, இலங்கை) வீழ்த்தியது இந்த களத்தில்தான்..

இந்தியாவுக்கு ராசியான மைதானம் இது. 5 ஒருநாள் போட்டிகளை இங்கு வென்றுள்ளது.

கட்டாக்கில் விமான நிலையம், சர்வதேசத் தரமுள்ள நல்ல விடுதிகள் இல்லாததால் இங்கு விளையாட வெளிநாட்டு அணிகள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. ( அருகிலுள்ள விமான நிலையம் : புவனேஷ்வர்.)

மன்மதன்
24-11-2008, 12:47 PM
டக் வொர்த் லீவீஸ் முறை எல்லாம் வச்சி நம்ம ஜெயிச்சிட்டோம் என இருமாப்பு கொள்ள கூடாது நான்காவது போட்டியில் ஜெயித்து முதல்ல தொடரை கைப்பற்ற வேண்டும்.



எங்களுரில் நடக்கிறது. நேற்று மழையிருந்தது. இன்றில்லை. ஆயினும் மேகமூட்டமாய் தான் இருக்கிறது. பார்க்கலாம். முழு மேட்சும் நடக்குமா என்று?



அப்படின்னா இன்னிக்கு?

ஒருவேளை தேர்ட் டைம் லக்கி போல இந்தியா வெல்லும். (வெல்லுமா?)


ஆஹா........என்ன ஒரு கணிப்பு..:icon_b::icon_b::icon_b:

மதி
24-11-2008, 12:59 PM
சும்மாவா மன்மதண்ணே... :)

ராஜா
24-11-2008, 01:00 PM
புதிய வீரர்களின் திறமையை இனிவரும் 3 போட்டிகளில் சோதித்துப் பார்க்க நல்ல வாய்ப்பு..!

-தோனி.

ராஜா
28-11-2008, 04:20 AM
தொடர் கைவிடப்பட்டதாகவும்,

இங்கிலாந்து அணி ஊர் திரும்பிவிட்டதாகவும் தகவல்..!

வசீகரன்
29-11-2008, 11:29 AM
தொடர் கைவிடப்பட்டதாகவும்,

இங்கிலாந்து அணி ஊர் திரும்பிவிட்டதாகவும் தகவல்..!

அப்படியா...???:fragend005::fragend005::fragend005: ஒருநாள் போட்டிகள் மட்டும்தான் கை விட பட்டதாக தகவல்..
இரண்டாவது டெஸ்ட் போட்டி கூட சென்னைக்கு மாற்றபட்டதாக அறிவிக்கப்பட்டதே..!
இங்கிலாந்து இருக்கிறார்களா.... மூட்டையை கட்டி விட்டார்களா...!!!:sprachlos020:

ராஜா
02-12-2008, 04:52 AM
அப்படியா...???:fragend005::fragend005::fragend005: ஒருநாள் போட்டிகள் மட்டும்தான் கை விட பட்டதாக தகவல்..
இரண்டாவது டெஸ்ட் போட்டி கூட சென்னைக்கு மாற்றபட்டதாக அறிவிக்கப்பட்டதே..!
இங்கிலாந்து இருக்கிறார்களா.... மூட்டையை கட்டி விட்டார்களா...!!!:sprachlos020:

நீங்கள் சொல்வது சரிதான் வசீ..!

டெஸ்ட் போட்டிகள் நிகழ இருப்பதாகவே செய்திகள் கிடைத்திருக்கின்றன..