PDA

View Full Version : அன்பு உள்ளங்களே



chezhian
04-04-2003, 08:48 PM
அன்பு உள்ளங்களே
தமிழ் நெஞ்சங்களே
வணக்கம்....

உங்கள் நண்பன் செழியன்
தமிழ்மன்றத்தில் காலடி பதிக்கிறேன்.
உங்கள் வாழ்த்தும் ஆசியும் வேண்டி
அதற்கு என் நன்றியும் கூறி!

madhuraikumaran
05-04-2003, 12:17 AM
வருக... செழியனே வருக...!
இங்கும் தமிழ் மழை தருக !!!

aren
05-04-2003, 12:24 AM
செழியனே, உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

gankrish
05-04-2003, 04:35 AM
செழியன் வருக வருக உங்கள் வருகையால் இந்த மன்றம் செழித்து வளரும்.

இளசு
05-04-2003, 09:32 AM
வாருங்கள் நண்பரே
செழிப்பான பெயர் உமக்கு
பேருக்கேற்ற சிறப்பான படைப்பளித்து
மன்றம் செழிக்க வைப்பதும் பொறுப்பு!
வாழ்த்தும்.. வரவேற்பும்....

Dinesh
05-04-2003, 11:39 AM
அழகாக ஆரம்பித்திருக்கும் செழியன் அவர்கள்
மன்றத்தில் செழிப்புடன் வலம்வர வாழ்த்துக்கள்.

தினேஷ்.

poo
05-04-2003, 12:18 PM
செழிப்பான வாழ்க்கை கண்முன்னே... திறந்த வெள்ளமாய் பாய்ச்சுங்கள் கவிதைகளை!!!

Narathar
07-04-2003, 03:56 AM
செழியா..........
தமிழ் செழிக்க தமிழ் மன்றில் பாடுபடு
உன் வரவு நல்வரவாகட்டும்!!!!!!

prabhaa
07-04-2003, 04:14 AM
வருக செழியனே...
வந்து தமிழ் வளர்த்து,
வானம்பாடியாய் செழித்து,
வெற்றி பெறுவீராக...

anushajasmin
07-04-2003, 10:45 AM
வருக செழியனே உங்கள் வருகையில் இந்த மன்றம் மேலும் உயரட்டும்