PDA

View Full Version : ::முதற்கனவு::



ஆதவா
10-11-2008, 03:46 AM
என்றேனும் முதற்கனவைப் பற்றி
யோசித்திருக்கிறேனா என்றால்
இல்லை

இரவு உறங்கியதும்
உறக்கம் விழித்தவுடன்
விழியசைவிடுக்கில் நசிந்தன கனவுகள்
பிறகெப்படி நினைவுற?
அதிலும் முதற்கனவு?

பிறை ஓய்ந்த தினமொன்றில்
மூளியான வானம் பார்க்கையில்
தவழ்ந்து வந்து வீழாதோ
கவிதை போல் முதற்கனவு?

நினைவுத் தகட்டின் புழுதி தட்டி
கனவுப் பட்டியலை எடுக்க நேர்ந்ததில்
கனவின் தொடக்கம்
எதுவென்றறிய முடியவில்லை

சப்தமான நிசப்தத்தில் தியானிக்கையில்
ஒருவேளை முதற் கனவு கிடைக்குமா என்றால்
புலன்கள் ஒருங்கிணைந்தது போல
கனவுகள் கூடவில்லை

மருத்துவத் தோய்தலில்
மூளை அகழ்ந்து,
கனவைத்
திரைப்படுத்த இயலுமா எனில்
ஆகாதென்றது காலம்.

விரியும் பிரபஞ்சத்தின்
ஏதோவொரு மூலையில்
தேங்கி நிற்கும் என் கனவை
எவ்விதிப்படி மீட்க?

இவ்வாறாக இருக்கையில்

பிறிதொருநாள்தான் தெரிந்தது
இதுவரையிலும் முதற்கனவை
காணவே இல்லை என்பது.

ஓவியன்
10-11-2008, 04:03 AM
முன்பு நான் ஓவியனாக இந்த மன்றத்தில் அடி எடுத்து வைத்த ஆரம்ப நாட்களில், காலையில் அலுவலகம் வந்து இணையத்தில் இணைந்து மன்றத்தில் நுளைந்தால், மன்றமே ஆதவனின் கவிதைத் திரிகளால் நிரம்பியிருக்கும்...

அந்தக் காலம் ஓடித் தேய்ந்து போனதோ என்று நான் ஏங்கியிருக்க, வான் மழையாக வந்திறங்கியிருக்கும் ஆதவக் கவிச் சாரல்..!!

கனவுகளே இப்படித்தான் ஆதவா,
உண்மை என்று நினைத்து
மகிழ்ந்து, இரசித்துக் கொண்டிருக்கையில்
கண்ணசைவால் கலைந்து
கனவுகள் நிஜமில்லை என உறைக்க வைக்கும்...

கண்ட கனவுகளைப் பதிவு செய்ய
ஒரு கருவி இல்லையே என
ஏங்கவும் வைக்கும்.....

ஆழ்மனப் படிவுகளின் வெளிப்பாடுதான் கனவென்றாலும்
கனவு, என்பதன் பூரண விளக்கம் இன்னமும்
விஞ்ஞானிகளுக்கு பூரணமில்லாஹ ஒன்றுதான்....

இதில் முதல் கனவைத் தேடுவதெப்படி...??
தேடுவதென்றாலும் எங்கிருந்து நாம் தேட ஆரம்பிப்பது..??

இப்படிப் பல கேள்விகளை என்னுள்ளே தூண்டி விட்டன உங்கள் வரிகள்...


பிறிதொருநாள்தான் தெரிந்தது
இதுவரையிலும் முதற்கனவை
காணவே இல்லை என்பது

கொஞ்சம் குழப்புகிறதே ஆதவா,
முதற்கனவே இல்லாதவனிடத்தே
வேறு ஒரு கனவும் வந்திட வாய்ப்பில்லைத்தானே

அப்படியிருக்க....


இரவு உறங்கியதும்
உறக்கம் விழித்தவுடன்
விழியசைவிடுக்கில் நசிந்தன கனவுகள்
பிறகெப்படி நினைவுற?

இந்த வரிகள் எங்கனம் சாத்தியமாகும்...???

பென்ஸ்
10-11-2008, 04:10 AM
கருவில் இருக்கும் குழந்தையும் கனவு காணும் என்று சொல்கிறார்கள்...
பிறவி குருடர்கள் "ஒலி போன்ற" கனவுகள் காண்பது போல்....

அப்படி கண்ட ஒரு கனவை தேடிய பயணமா..???

கண்டவை அனைத்தும் உன் மூளையின் தேவையான பகுதியில் எங்கோ உறங்கி கொண்டிருக்கும், அதை முடிந்தால் வேளியே கொண்டு வரலாம்... இதற்க்கு அறிவியல் வளர தேவையில்லை, உங்கள் மனம் ஒன்றியிருந்தால் போதும்.

கடைசி வரிகளில் ..
கனவை காணவே இல்லை--- எங்கோ என்று தேடுகிறீரா.???
கனவை காணவே இல்லை--- அப்படி ஒரு கனவு இல்லை என்கிறீரா???

எழிதானக இனிய கவிதை.... உப்பில்லாமல் போனதோ..???

ஆதவா
10-11-2008, 05:04 AM
மிக்க நன்றி ஓவியன். தற்போது எனக்கு மனநிலை சரியில்லை.. அண்ணனின் இறப்பு மிகவும் ஆழமாக புதைந்து காயப்படுத்திவிட்டது. பணிப்பளு வேறு. தினமும் வந்து போனாலும் ஆறுதல் படுத்துமளவு எனக்கு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த கனவுகளைப் போலத்தான்.. ஒவ்வொரு கவிதைக்கான கருவும் கலைந்து போகிறது....

உங்கள் பின்னூட்டம் கண்டு நெகிழ்ந்தேன்.. (எனது பல கவிதைகளுக்கு முதல் பின்னூட்டம் உங்களுடையதுதான்.) கேள்வி கேட்பது நுகர்பவர்கள் உரிமை, பதிலளிப்பது படைப்பாளியின் கடமை. என்னால் இயன்ற அளவுக்குத் தரமுயலுகிறேன்..

ஒவ்வொரு மனிதனாலும் தான் கண்ட முதல் கனவை மட்டும் நினைவுபடுத்தவே இயலாது. எங்கு தேடினாலும்.... பென்ஸ் சொல்வது போல, உலகை நுகராத பொழுதும் கனவை நுகர்ந்திருப்போம்... எத்தனையோ கனவுகளை ஞாபகப்படுத்திவிடலாம்.. ஆனால் முதற்கனவு???

என்றாலும் எல்லாருக்கும் முதல் கனவு என்று ஒன்று இருக்கும் இல்லையா? தொடக்கம் எது என்பதும், இறுதி எது என்பதும் அறியாமல் வரும் பலவற்றோடு கனவுகளும் உண்டு.

பிறிதொரு நாள் சிந்திக்கிறேன்.. நாம் என்ன கண்டிருப்போம் என்பதை... ஆனால் கனவுகள் என்பது நமது நித்திரை திரையிடும் திரைப்படங்கள் மட்டுமன்று. நாமாக காணுவதும் கனவே!.. அத்தகைய கனவை இதுவரையிலும் காணவே இல்லை.

சுயதேடலின் போது எங்கேயோ செல்லும் நம்மை ஏதோ ஒரு இலக்கில் கொண்டு போய் விடும்... வெறும் கனவுகளை மட்டும் தேடிக்கொண்டிருந்த நான்,, பிறகுதான் தெரிந்தது கனவுகள் என்பதே நாமாகவும் காணக்கூடியவை என்பதும்..




எழிதானக இனிய கவிதை.... உப்பில்லாமல் போனதோ..???

என் இனிய பென்ஸ் அண்ணா..

மன்றத்தில் இப்படி வெளிப்படையான கேள்விகளும், சந்தேகங்களும், குறைசுட்டுதலும் இருப்பதால்தான்.... இன்னமும் தோணுகிறது நன்றாக எழுதியிருக்கவேண்டும் என்பது....

நான் என்றும் குறைகுடமாக தள்ளாடிக் கொண்டிருப்பதையே விரும்புகிறேன்.. நிறைந்து கர்வப்பட விருப்பமில்லை.

இனிய பதார்த்தங்கள் உப்பில்லாமல் சமைக்கப்படுகின்றன.. :)

ஓவியன்
10-11-2008, 05:12 AM
பிறிதொரு நாள் சிந்திக்கிறேன்.. நாம் என்ன கண்டிருப்போம் என்பதை... ஆனால் கனவுகள் என்பது நமது நித்திரை திரையிடும் திரைப்படங்கள் மட்டுமன்று. நாமாக காணுவதும் கனவே!.. அத்தகைய கனவை இதுவரையிலும் காணவே இல்லை.

சுயதேடலின் போது எங்கேயோ செல்லும் நம்மை ஏதோ ஒரு இலக்கில் கொண்டு போய் விடும்... வெறும் கனவுகளை மட்டும் தேடிக்கொண்டிருந்த நான்,, பிறகுதான் தெரிந்தது கனவுகள் என்பதே நாமாகவும் காணக்கூடியவை என்பதும்..

உண்மைதான் ஆதவா, இது கவிதையின் இன்னொரு கோணம்....

பல வெற்றியாளர்களுக்கு கனவுகளே பாதை சமைத்துக் கொடுத்திருக்கின்றன...
நித்திரையிலும், பின் நினைவிருக்கையில்
தாமாக கண்ட போதும்.....

மன்மதன்
10-11-2008, 02:43 PM
கவிதையில் வார்த்தை பிரயோகங்கள் பிரமிக்க வைக்கின்றன..

ஆதவாவிற்கு சீக்கிரம் முதல் கனவு கிட்ட
வாழ்த்துகள்..

சுகந்தப்ரீதன்
12-11-2008, 07:38 AM
எதையோ தேடப்போய் எதையோ கண்டுபிடிப்பதுதான் அதிகம் நிகழ்கிறது இன்றைக்கும் அறிவியல் உலகிலும் ஆன்மீக உலகிலும்..!! முதற்கனவை தேடியதன் மூலம் காணத கனவை கண்டுப்பிடித்து விட்டீர்கள் ஆதவா..!!

விரியும் பிரபஞ்சத்தின்
ஏதோவொரு மூலையில்
தேங்கி நிற்கும் என் கனவை
எவ்விதிப்படி மீட்க?நம் எண்ண அலைகள் பிரபஞ்சம் முழுதும் அலைந்து திரிகின்றனவாம்... அவை மற்ற அலைகளால் சேதாரமில்லாமல் சேமிக்கப்பட்டிருந்தால் அவற்றை நாம் மீட்டிருக்க முடியும்..!! ஆனால் நீ கனவே காணவில்லை என்றான பிறகு இனி முதற்கனவை தேட வேண்டியதுதான்.. எதை முதற்கனவாய் காண்பதென்று..:lachen001::lachen001::lachen001:

வாழ்த்துக்கள் ஆதவா.. உன் முதற்கனவிற்க்கு...!!

ஷீ-நிசி
24-11-2008, 01:22 PM
கவிதைக்கான கரு மிக அழகு! வாழ்த்துக்கள் ஆதவா...

அட நான் கூட இப்ப யோசிச்சிட்டு இருக்கேன்.. என் முதல் கனவு எதுவென்று..... :)

ஆதவா
25-11-2008, 04:07 AM
கவிதையில் வார்த்தை பிரயோகங்கள் பிரமிக்க வைக்கின்றன..

ஆதவாவிற்கு சீக்கிரம் முதல் கனவு கிட்ட
வாழ்த்துகள்..

மிக்க நன்றி மன்மதன். உங்கள் தீண்டலில் தழுவி மயக்கமுற்றது என் கவிதை.


எதையோ தேடப்போய் எதையோ கண்டுபிடிப்பதுதான் அதிகம் நிகழ்கிறது இன்றைக்கும் அறிவியல் உலகிலும் ஆன்மீக உலகிலும்..!! முதற்கனவை தேடியதன் மூலம் காணத கனவை கண்டுப்பிடித்து விட்டீர்கள் ஆதவா..!!
நம் எண்ண அலைகள் பிரபஞ்சம் முழுதும் அலைந்து திரிகின்றனவாம்... அவை மற்ற அலைகளால் சேதாரமில்லாமல் சேமிக்கப்பட்டிருந்தால் அவற்றை நாம் மீட்டிருக்க முடியும்..!! ஆனால் நீ கனவே காணவில்லை என்றான பிறகு இனி முதற்கனவை தேட வேண்டியதுதான்.. எதை முதற்கனவாய் காண்பதென்று..:lachen001::lachen001::lachen001:


வாழ்த்துக்கள் ஆதவா.. உன் முதற்கனவிற்க்கு...!!
மிக்க நன்றி சுகந்தப்ரீதன். உங்கள் விமர்சனங்கள் உங்களை தரமிக்க எழுத்தாளனாக உயர்த்திக் கொண்டிருக்கிறது./



கவிதைக்கான கரு மிக அழகு! வாழ்த்துக்கள் ஆதவா...

அட நான் கூட இப்ப யோசிச்சிட்டு இருக்கேன்.. என் முதல் கனவு எதுவென்று..... :)
நன்றி ஷீ! அந்த யோசனைக்கு என் கவிதை திரிகொளுத்தியிருக்குமேயானால்... அது என் வெற்றியே!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-12-2008, 06:07 PM
கவிதை நன்று. கருதான் கொஞ்சம் தலை சுத்த வைக்கிற கரு.முதற் கனவை தேடுதல் என்பது உதிர்த்த முதல் வார்த்தையை தேடுற மாதிரி. ஆனா கண்டிப்பா எல்லாரும் படிச்சுட்டு என்னோட முதல் கனவு என்னன்னு கொஞ்ச நேரம் யோசிப்பாங்க.

தமிழ்தாசன்
13-12-2008, 11:04 PM
வணக்கம்.
ஆதவா அவர்களே!
முதலில் உங்கள் மனதின் வேதனைநிலைக்கு என் ஆறுதல்கள்.
அவற்றிலிருந்து மீள்வது கடினமே!
ஆனாலும் மீண்டெழுதலே வாழ்வியலின் போக்கு.
எழுந்து வருக ஆதவா!
இருள் போக்கி கதிர் பாய்ச்சி எழுந்து வருக ஆதவனே!.
கர்த்தாக்கள் கலங்குதல் கூடாது. காலங்கள் காத்தும் கிடக்காது!


---
அடுத்து வரிகள் பற்றி...

காணாத கனவைத் தேடிய முதற்கனவே கனவானது தான் வேடிக்கை.
ஏமாற்றமே!





......
1. [COLOR="Red"]விழியசைவிடுக்கில் நசிந்தன கனவுகள்
1.அ. பிறகெப்படி நினைவுற?
அதிலும் முதற்கனவு?
-----
-----

2. நினைவுத் தகட்டின் புழுதி தட்டி
----

3.சப்தமான நிசப்தத்தில்
3.அ தியானிக்கையில்ஒருவேளை முதற் கனவு கிடைக்குமா என்றால்
4. புலன்கள் ஒருங்கிணைந்தது போல
கனவுகள் கூடவில்லை

-----------------
5. மருத்துவத் தோய்தலில்
மூளை அகழ்ந்து,
கனவைத்
திரைப்படுத்த இயலுமா எனில்
ஆகாதென்றது காலம்.

----------------

6. விரியும் பிரபஞ்சத்தின்
ஏதோவொரு மூலையில்
தேங்கி நிற்கும் என் கனவை
எவ்விதிப்படி மீட்க?
--------

---
7.முதற்கனவை
காணவே இல்லை என்பது.

1. அழகான கனவுப்பகிர்வு, பிடிக்கும் வரிகள்.
1.அ. அது சரிதானே பிறகெப்படி? தேடலின் விடை இங்கேயே கிடைத்து விட்டது.
2. என்னைக்கவர்ந்த நினைவுத்தட்டு. அழகான உவமை.
3. முறன் சொல்லும் நிலை
3.அ. தியானம் அதில் மன அமைதி தேடல்தான் கனவு தேடல், மனக்குழப்பம்.
4. பலன் அல்லாமல் போனமை, ஏமாற்றம்.
5. அற்புதமான விஞ்ஞாணம். ஆனால் கனவுகளை பதியும் கருவி போன்ற ஒன்று உருவானதாகவோ? அன்றி நீங்கள் ஒரு விடயத்தை வைத்தக் கொண்டால் அக்கனவு காணக் கருவி வந்ததாகவோ? எங்கோ படித்த ஞாபகம். அல்லது என் கனவோ தெரியவில்லை.
6. அருமை ஆதவா! அழகான கவி உச்சம்.
7.எல்லாம் கலைந்து போவது. நிலையற்றமை.அற்புதமான தத்துவம்.

பாராட்டுக்கள்.
இதுபோன்ற படைப்பாக்கங்கள் தடைகளின்றி படைக்கப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.

முதல் விடயங்கள் மறக்கக்கூடாதவை. மறக்கப்படாமலிருந்தால் அதுவே ஒரு சுகம். சில நேரம் சுமை.
சில சமயம் மறந்து போவதுதான் வேதனை.

Narathar
14-12-2008, 12:53 AM
ஆதவனின் முதல்கனவுத்தேடல் பிரமாதம்!
வாழ்த்துக்கள் ஆதவா.......

ஓவியன் முதல் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பதுபோல...... மன்றம் ஆதவக்கவிகீற்றுகளால் மீண்டும் ஒளி பெறும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

ஆதவா
15-12-2008, 01:25 PM
அனைவருக்கும் நன்றி....

நாரதர் அண்ணா... தமிழ்தாசன் ஐயா ஆகியோருக்கும் என் மனமாழ்ந்த நன்றி.

தமிழ்தாசன் ஐயா... நீங்கள் சொல்லவருவதை கொட் செய்து சொல்லுங்கள்.. அது படிப்பவருக்கு இன்னமும் இலகுவாக இருக்கும்...

உதாரணத்திற்கு....



விழியசைவிடுக்கில் நசிந்தன கனவுகள்

அழகான கனவுப்பகிர்வு, பிடிக்கும் வரிகள்.


பிறகெப்படி நினைவுற?
அதிலும் முதற்கனவு?

அது சரிதானே பிறகெப்படி? தேடலின் விடை இங்கேயே கிடைத்து விட்டது.

இவ்வகையில்..................

அன்புடன்
ஆதவன்

தமிழ்தாசன்
15-12-2008, 05:49 PM
அழகான சுட்டுதலுக்கு மிக்க மகிழ்ச்சி. ஆதவா அவர்களே!
எனக்கென்னமோ இப்படி மடலில் எழுதிப் பழகியமைதான் காரணம்.
இணையத்தில் இது அழகுதான்.
அடுத்து வருவது .....
உங்கள் கற்பித்தல் வடிவில் அமையும்.

கற்க எவ்வளவோ இருக்கிறது... இல்லையா?

கற்றதைப்பிறர்க்கு வழங்குதல் அழகு. அதில்
ஆதவன் ஐயாவின் கற்பித்தல் மன்றத்தில் தனியழகு!

gans5001
16-12-2008, 11:29 AM
"நினைவுத் தகட்டின் புழுதி தட்டி
கனவுப் பட்டியலை எடுக்க நேர்ந்ததில்
கனவின் தொடக்கம்
எதுவென்றறிய முடியவில்லை"


இதே மன உளைச்சல் என்னிலும் தொடர்கிறது. உங்கள் வரிகளில் மிகுந்த முதிர்ச்சி தெரிகிறது. வாழ்த்துக்கள்.

ஆதவா
16-12-2008, 11:41 AM
அழகான சுட்டுதலுக்கு மிக்க மகிழ்ச்சி. ஆதவா அவர்களே!
எனக்கென்னமோ இப்படி மடலில் எழுதிப் பழகியமைதான் காரணம்.
இணையத்தில் இது அழகுதான்.
அடுத்து வருவது .....
உங்கள் கற்பித்தல் வடிவில் அமையும்.

கற்க எவ்வளவோ இருக்கிறது... இல்லையா?

கற்றதைப்பிறர்க்கு வழங்குதல் அழகு. அதில்
ஆதவன் ஐயாவின் கற்பித்தல் மன்றத்தில் தனியழகு!

நன்றி ஐயா...

நாம் வளர்வோம்.. நம்மை அண்டி இருப்பவரையும் வளர்ப்போம்... கற்றதை பகிர்வதால் நாமும் கற்போம் என்ற கருத்து என்னுள் விதைக்கப்பட்டதால் தான் தெரிந்ததையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் ஐயா...

எனக்கு ஐயா என்ற அடைமொழி வேண்டாமே ப்லீஸ் :)


"நினைவுத் தகட்டின் புழுதி தட்டி
கனவுப் பட்டியலை எடுக்க நேர்ந்ததில்
கனவின் தொடக்கம்
எதுவென்றறிய முடியவில்லை"


இதே மன உளைச்சல் என்னிலும் தொடர்கிறது. உங்கள் வரிகளில் மிகுந்த முதிர்ச்சி தெரிகிறது. வாழ்த்துக்கள்.


நன்றி கன்ஸ். எனக்கும் கனவுகளை பதிக்கவேண்டும் என்ற பேராசை எழுந்து பின் மறைந்தொழிந்ததுண்டு..

தமிழ்தாசன்
16-12-2008, 11:50 AM
[QUOTE=ஆதவா;396623]
நன்றி ஐயா...
எனக்கு ஐயா என்ற அடைமொழி வேண்டாமே ப்லீஸ் :)


எனக்கும் ஐயா என்ற அடைமொழி வேண்டாமே!
சும்மா :lachen001:
நேசமுடன் குறிப்பிடுகிறேன் மனங்கவர் படைப்புகளில் உங்கள் படைப்புக்களும் அடக்கம்.