PDA

View Full Version : கைப்புள்ள தீயணைப்பு துறை சர்வீஸ்மன்மதன்
08-11-2008, 02:12 PM
ஒரு வயலில் தீப்பிடித்து கொண்டது. தீயணைப்பு துறை வந்து அந்த தீயை அணைக்க முயன்றது. தீ முற்றிலும் பரவி கொழுந்து விட்டு எரிந்ததால், ஒரு தீயணைப்பு வண்டியினால் அந்த தீ பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை.

கிராமத்தில் இருக்கும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்’ தீயணைப்பு வண்டியை அழைத்து தீயை கட்டுப்படுத்தலாம் என்று கட்டதுரை ஒரு ஆலோசனை கூறியதும் , அனைவரும் அவனை ஒரு மாதிரியாக பார்த்தனர். இருந்தாலும் வேறு வழி இல்லை. வ.வா.ச பொது சேவை தீயணைப்பு வண்டிக்கு போன் செய்து வரவழைத்தனர்.

கைப்புள்ளயின் தீயணைப்பு வண்டி ஸ்பாட்டுக்கு வந்து நேராக அந்த தீ பற்றி கொழுந்து விட்டு எரியும் வயல் வெளியின் நடுவில் சென்றது. அனைவருக்கும் ஆச்சரியம்.. உடனே கைப்புள்ளயும், அவன் ஆட்களும் தண்ணீரை பீச்சி அடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இவர்களின் தீர செயலை பாராட்டி, வயலுக்கு சொந்தக்காரர், கைப்புள்ளக்கு 1000 ரூபாய் பரிசு வழங்கினான்.

கட்டதுரை : இந்த 1000 ரூபாய வச்சு என்ன பண்ணுவே?

கைப்புள்ள
(தன் மேல் படிந்துள்ள சாம்பலை தட்டி விட்டபடி) : முதல்ல இந்த வண்டியோட பிரேக்கை சரி பண்ணனும்..

:D:D

அன்புரசிகன்
08-11-2008, 03:24 PM
முடியல... அப்போ கட்டதுரைக்கு வாழ்வா சாவா போராட்டம் தான் நிகழ்ந்ததா?

இளசு
08-11-2008, 10:30 PM
ஹ்ஹ்ஹ்ஹா!

மிக அருமை மன்மதன்...

(கிணற்றில் விழுந்தவனை ''வீரமாய்க் குதித்து'' காப்பாற்றியவன் கதை நினைவுக்கு வந்தது..

கைப்புள்ளயின் அட்டகாசங்கள் தொடரட்டும்!

Ranjitham
08-11-2008, 10:50 PM
அருமை. நேரில் பார்ததுபோல் சிரிதேன்.
நன்றியுடன்
இரன்சிதம்

மதுரை மைந்தன்
08-11-2008, 11:26 PM
கட்டதுரை : இந்த 1000 ரூபாய வச்சு என்ன பண்ணுவே?

கைப்புள்ள
(தன் மேல் படிந்துள்ள சாம்பலை தட்டி விட்டபடி) : முதல்ல இந்த வண்டியோட பிரேக்கை சரி பண்ணனும்.. இப்படி உசுப்பி விட்டு உசுப்பி விட்டே இந்த பாடியை ரண களமா ஆக்கீடடீங்க. அதையும் குணப்படுத்தணும்.:lachen001:

ஹ்ஹ்ஹ்ஹா!

மிக அருமை மன்மதன்...

ஜெயாஸ்தா
09-11-2008, 02:53 AM
கைப்புள்ள சிரிக்கவைத்துவிட்டார். அட்டகாசமான நகைச்சுவைதான்...! யாராவது இயக்குனர்கள் இதை படித்தால் அடுத்த படத்தில் நிச்சயம் வைத்துவிடுவார்கள்...!

வெங்கட்
09-11-2008, 03:12 AM
வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டது. நன்றி மன்மதன்.

சிவா.ஜி
09-11-2008, 04:42 AM
பின்னிட்டீங்க மன்மதன்.

வ.வா. சங்கத்தாரின் சார்பில் மன்மதனுக்கு ஒரு பொன்னாடை போர்த்தும் விழாவுக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. கட்டதுரைதான் தலைமை. கைப்புள்ள கையால பொன்னாடை போர்த்தப்படும்.(ஆனா போர்த்தும்போதே அந்த பொன்னாடைக்கான பணத்தை கைப்புள்ல கையில கமுக்கமா செட்டில் பண்ணிடனும். இதான் கண்டிஷன்....ஓக்கேவா?)

அசத்தல் நகைச்சுவைக்கு பாராட்டுக்கள். இன்னும் அடிச்சி விளையாடுங்க.

ஓவியன்
09-11-2008, 10:46 AM
ஹா, ஹா..!!

பிரேக் அறுந்தமையால்தான் ஆயிரம் ரூபா கிடைத்தது,
ஆயிரம் ரூபா கிடைக்க வேண்டுமென்பதற்காகவே பிரேக் அறுந்தது..!!:rolleyes:

ஓவியா
09-11-2008, 02:02 PM
ஹி ஹி ஹி சிரித்தேன்..

நன்றி மன்மி.

arun
10-11-2008, 02:20 AM
ஹா, ஹா..!! சூப்பர்.... :icon_b:

பென்ஸ்
10-11-2008, 02:46 AM
மன்மதா... உங்கள் நகைசுவை உணர்விற்கு வயதாகிவிட்டதோ என்று நினைத்தேன்...
இல்லை முதிற்சிதான் அடைந்திருக்கு...

மன்மதன்
10-11-2008, 01:36 PM
நன்றி நண்பர்களே..வ.வா. சங்கத்தாரின் சார்பில் மன்மதனுக்கு ஒரு பொன்னாடை போர்த்தும் விழாவுக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. கட்டதுரைதான் தலைமை. கைப்புள்ள கையால பொன்னாடை போர்த்தப்படும்.(ஆனா போர்த்தும்போதே அந்த பொன்னாடைக்கான பணத்தை கைப்புள்ல கையில கமுக்கமா செட்டில் பண்ணிடனும். இதான் கண்டிஷன்....ஓக்கேவா?)


அடடே.. போர்த்தவெல்லாம் வேண்டாம்.. கூரியர்ல அனுப்பி வையுங்க..:D

மதுரா
20-11-2008, 02:20 PM
நல்ல நகைச்சுவை...
வடிவேலு பாணியில் படித்து பார்த்தேன்... வரும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.... :D:D
பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றிகள்...

நதி
20-11-2008, 08:44 PM
உண்மையை சொல்லுங்க மன்மதன். வண்டியின் பிரேக்கை பிடுங்கி விட்டது ஹீரோதானே.

lolluvathiyar
23-11-2008, 04:55 AM
அப்பா பிரேக் போட முடியாம உள்ள போயிட்டாங்க அவுங்க தப்பிக்க தீயை அனைச்சு ஓடி வந்தா பாராட்டு மழை அல்லவா கிடைக்குது

சூரியன்
23-11-2008, 09:47 AM
அது இல்லாமதா வண்டி வயலுக்கு நடுவுல போச்சா?

Keelai Naadaan
23-11-2008, 11:26 AM
கலக்கல் மன்மதன்.:icon_b:
வாய்விட்டு சிரித்தேன்

poornima
23-11-2008, 12:37 PM
அடடா கைப்புள்ள செஞ்ச சாதனைக்கு இந்த
பிரேக்குதான் காரணமா..?

நல்ல கற்பனை.. நன்றி மன்மதன்