PDA

View Full Version : தண்டனை



karayamsan
07-11-2008, 05:31 PM
தண்டனை

அவளின் பாதச்சுவட்டை
ஏந்திக்கொண்ட குற்றத்திற்காக
பொறாமை கொண்ட
அந்த சூரியனால் சுட்டெரிக்கப்படுவதும்
அலைகளினால் அடித்து விரட்டப்படுவதும்
வழக்கமாய் போய்விட்டது உனக்கு
கடல் மணலே!
என் உள்ளமும்
அவள் பார்வை பட்டதற்காய்
தண்டிக்கப்படுகின்றனவே!

இளசு
07-11-2008, 09:44 PM
தற்குறிப்பேற்ற அணியில்
கடல்மணலில்
கவி அணிலாய்
விளையாடும் கவிதை!

வாழ்த்துகள் காரையம்சன் அவர்களே!

கண்மணி
07-11-2008, 11:42 PM
தண்டனை

அவளின் பாதச்சுவட்டை
ஏந்திக்கொண்ட குற்றத்திற்காக
பொறாமை கொண்ட
அந்த சூரியனால் சுட்டெரிக்கப்படுவதும்
அலைகளினால் அடித்து விரட்டப்படுவதும்
வழக்கமாய் போய்விட்டது உனக்கு
கடல் மணலே!
என் உள்ளமும்
அவள் பார்வை பட்டதற்காய்
தண்டிக்கப்படுகின்றனவே!

உள்ளம் ஒருமையில் இருக்க தண்டிக்கப்படுகிறது என ஒருமையில் சொல்ல வேண்டாமோ.. தண்டிக்கப் படுகின்றன என்பது பன்மையாக உள்ளதே.இல்லையெனில் கடல் மணலே நீயும் என் உள்ளமும் என சப்போர்ட்டுக்கு அழைத்திருக்க வேண்டாமோ?

அலைகள் அடித்து விரட்டுவதில்லை.. என் இதயத்தில் பதிந்த அவளது சுவடை பறித்துக் கொண்டு போகின்றன..

சூரியனும் அந்த அலையத் தண்டிக்க எவ்வளவோ சுட்டெரித்துப் பார்க்கிறான்.. அவன் நல்லவன்.. ஆனால் கருமனம் கொண்ட முகிலன்தான்
கடலை வற்ற வைத்துவிடாதே எனக் சூரியனின் கண்ணை மறைத்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறான்.

இப்படிக் கடற்கரை மணல் வந்து பதில் சொன்னா என்ன செய்வீங்கண்ணா?