PDA

View Full Version : ஜென்னல் கைதிகள்



ஐரேனிபுரம் பால்ராசய்யா
06-11-2008, 03:26 AM
நாங்கள் கன்னியர்கள்
திருமணம் எனும் பூட்டை திறக்க
வரதட்சணை சாவி இல்லாத
ஜென்னல் கைதிகள்!

புகுந்த வீடு செல்ல முடியாமல்
பிறந்த வீட்டிலேயே வாழும்
வாழாவெட்டிகள்!

தினமும் மாப்பிள்ளை வரன்களின்
பார்வை அம்புகளுக்கு பலியாகும்
புள்ளிமான்கள்!

மாப்பிள்ளை வரன்களின்
நேர்காணலுக்குப் பிறகு
ராஜகுமாரர்களின் கனவுகள் மட்டுமே
மிச்சமாகிவிடுகின்றன!

வரதட்சணை இருந்தால்நிச்சயதார்த்தமும்
இல்லையென்றால் புறக்கணிப்புகளும்
எங்களுக்கு பழகிவிட்டன!

மாப்பிள்ளையை விலைக்கு வாங்கிவிட்டு
மாடிவீட்டு மயில்களெல்லாம்
தோகை விரித்தாடும்போது
குடிசை வீட்டு குயில்கள் நாங்கள்
வேதனையில் வாடுகிறோம்!.

வாழ்க்கை சுவர்களில்
வறுமை சித்திரம் வரைந்து வரைந்து
வசப்பட்டு போனவர்கள்!

தங்க நகைகளை
நகைக்கடைகளில் மட்டுமே
பார்த்து பார்த்து
பழகிப்போனவர்கள்!

அன்பார்ந்த வானொலி நிலையமே
கார்த்திகை மாசமடி
கல்யாண சீசமடி என்ற பாடலை
இனியும் ஒலி பரப்ப வேண்டாம்

இங்கே கல்யாணம் ஆகாமல்
நிறைய முதிர்கன்னியர்கள்
காத்துக் கிடக்கிறார்கள்!

நாங்கள் கன்னியர்கள்
திருமணம் எனும் பூட்டை திறக்க
வரதட்சணை சாவி இல்லாத
ஜென்னல் கைதிகள்

ஆதி
06-11-2008, 07:22 AM
புது கவிதையின் பிறப்புகால கவிதைகளை ஞாபகபடுத்துகிறது உங்களின் எழுத்து நடை.. கவிதையின் கரு பழயதானாலும் வெளுத்துப் போன கல்யாண கனவுகளோடு வெதும்பிப் போன முதிர்கன்னிகள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்..

ஐரேனிபுரம் பால்ராசய்யா
06-11-2008, 08:49 AM
அன்புள்ள ஆதி அவர்களுக்கு,

பத்து வருடங்களுக்கு முன்பு கோவை வசந்த வாசல் கவியரங்கில் படிக்கப்பட்டு பரிசு பெற்ற் கவிதை இது.
ஊர் சென்றிருந்தபோது எடுத்து வந்தேன். காலம் கடந்தாலும் கன்னியர்கள் இன்னமும் காத்திருப்பது உண்மைதானே.
பதிலிட்டமைக்கு பாராட்டுக்கள்

சிவா.ஜி
06-11-2008, 09:28 AM
நிச்சயமாக இன்னமும் இந்த முதிர்கன்னிகள் அந்த வரதட்சணை சாவியில்லாமல் ஜன்னலுள் ஜடமாய்த்தான் காத்து நிற்கிறார்கள். இந்தக்கவிதை இனி வருங்காலத்திலும் வழக்கத்தில் இருக்கும்.

பாராட்டுக்கள் ஐ.பா.ரா.

தீபா
06-11-2008, 10:30 AM
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...

இளசு
08-11-2008, 08:33 AM
பத்து வருடங்களுக்கு முன்பு கோவை வசந்த வாசல் கவியரங்கில் படிக்கப்பட்டு பரிசு பெற்ற் கவிதை இது.
ஊர் சென்றிருந்தபோது எடுத்து வந்தேன்.

வாழ்த்துகள் பால்ராசய்யா அவர்களே!

முன்னாள், இந்நாள், வருநாள் - எந்நாள் படைப்புகளையும்
நம் மன்றத்துக்கு தந்துகொண்டே இருங்கள்... நன்றி!

Keelai Naadaan
08-11-2008, 12:16 PM
நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்

இன்னமும் கூட தினசரிகளில் வரதட்சனை கொடுமை சாவுகளுக்காக ஒரு பக்கம் ஒதுக்க வேண்டியிருப்பது வேதனையான விஷயம்.

ஏன்..? வரதட்சனை கேட்கும் ஆண்களுக்கு தங்கள் உழைப்பின் மீது திறமையின் மீது நம்பிக்கையில்லையா..?

ஐரேனிபுரம் பால்ராசய்யா
11-11-2008, 11:41 AM
நறுக்கென்று நல்ல கேள்வி இது கீழை நாடன் அவர்களே

சமுதாயத்தில் வரதட்சணை ஒழிய ஒரே வழி காதல் திருமணம் தான்.

இதை ஏற்றுக்கொள்ளாத சமுதாயங்கள் இருக்கும்வரை இன்னும் காத்திருப்பார்கள் ஜென்னல் கைதிகள்

பதிலிட்டமைக்கு நன்றி