PDA

View Full Version : இந்திய மாணவர்களுக்காக மைக்ரோசாப்ட்டின் இலவச மென்பொருட்கள்



sarathecreator
06-11-2008, 04:01 AM
100 மில்லியன் மாணவமணிகளுக்கு இந்த மென்பொருட்கள் இலவசமாகக் கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்வந்துள்ளது.

திரு. பில்கேட்ஸ் அவர்கள் இந்தியாவில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்காக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி பட்ட மேற்படிப்போ, பட்டப்படிப்போ படித்துக்கொண்டிருக்கும் தொழில்நுட்பப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது அடையாள அட்டைகளை அருகில் உள்ள அப்டெக், என்.ஐ.ஐ.டி கணினிப் பயிற்சிப் பட்டறைகளில் காண்பித்தால் அவர்களுக்கு மைக்ரோசாப்ட்டின் இலவச டிவிடி வழங்கப்படும்.

http://1.bp.blogspot.com/_-5Cl9WHU-Uo/SRJzuz659ZI/AAAAAAAACCk/bXrxq_TQcuI/s400/all.jpg

அந்த டிவிடியில் விண்டோஸ் சர்வர் 2003, விசுவல் ஸ்டுடியோ 2008, எஸ்க்யூஎல் சர்வர் 2005, மைக்ரோசாப்ட் எக்ஸ்ப்ரசன் ஸ்டுடியோ, விர்ச்சுவல் பிசி ஆகிய மென்பொருள்கள் அடங்கியிருக்கும்.

மாணவர்களின் இணைய இணைப்பின் பேண்ட்வித் நன்றாக இருந்தால் அவர்கள்

http://www.dreamsparkindia.com/dreamspark/GetDreamTools.aspx?Tab=1 (http://www.dreamsparkindia.com/dreamspark/GetDreamTools.aspx?Tab=1)

தளத்திலிருந்து நேரடியாகவே இந்த மென்பொருள்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

2009ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களின் இந்தச்சலுகை 11, 12ம் வகுப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்படவிருக்கிறது என்பது இனிப்பான செய்தி.

இதனால் இந்தியாவின் மனிதவளத்தை பில்கேட்ஸ் அபகரிக்கப்போகிறார் என்கிற குற்றச்சாட்டுகள் எழலாம். ஆனால் ஒன்றும் இல்லாமல் ஏதோ படித்தோம் / ஏதோ ஒரு வேலையைச் செய்தோம் / இறந்தோம் - என இல்லாமல் வாழ்வில் ஒரு திருப்புமுனைக்காக ஏங்கும் எத்தனையோ மாணவச் செல்வங்களுக்கு இந்தப் பயன்பாடுகள் கண்டிப்பாக உதவும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இது குறித்து மாற்றுக்கருத்துக் கூற விரும்புபவர்கள் பின்னூட்டம் இடலாம்.

http://www.aptech-education.com/microsoft_dreamspark.html

http://www.edgeineers.in/dreamspark.aspx

எனது வலைப்பூவில் ( http://tamizh2000.blogspot.com ) நானே எழுதியதை இங்கே இட்டிருக்கிறேன். எதையும் காப்பியடிக்கவில்லை.

சிவா.ஜி
06-11-2008, 04:40 AM
நல்ல பயனுள்ள தகவல். அனைவருக்கும் பயன்படும்படியான தகவலை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் சாரா.

அமரன்
06-11-2008, 06:35 AM
பகிர்வுக்கு நன்றி சரத்.
நீங்கள் சொன்ன குற்றச்சாட்டு நிஜமாகவும் இருக்கலாம். ஆனால் மாணவர்களுக்கு நல்லது உள்ளது. அவர்கள் மூலம் நாட்டுக்கும் நல்லது நடக்கலாம். பயன்பெறுவோர் புரிந்துகொண்டு செயற்பட்டால் போதும்.

பாரதி
06-11-2008, 06:41 AM
மிக மிக நல்ல தகவல் தந்திருக்கும் சரத் அவர்களுக்கு மிகவும் நன்றி. நிச்சயம் பல மாணவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்பதில் ஐய்யம் ஏதுமில்லை.