PDA

View Full Version : சரிகம குடும்பம்!!!



கண்மணி
06-11-2008, 01:35 AM
என்னங்க வீடே "வெறிச்"சுன்னு இருக்குங்க. அப்பா அம்மாவை வீட்டுக்கு அழைச்சிகிட்டு வந்திடலாங்க. கெஞ்சலாகச் சொன்னாள் வித்யா.

என்ன சொல்ற வித்யா, நீ தானே இருக்குற கொஞ்ச காலம் அவங்க அவங்க வயசு நண்பர்களோட அமைதியா சந்தோஷமா நிம்மதியா இருக்கட்டும். இங்கே அவங்களுக்கு கூடப் பேச்சுத் துணை கூட இல்லாம ரொம்பக் கஷ்டப் படறாங்க அப்படின்னெல்லாம் என்னைச் சமாதானப் படுத்தி அவங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்ட.. ஆச்சர்யமாய்ப் பார்த்தான் விஜய்..

அப்பா குரல் எவ்வளவு கணீர்னு இருக்கும் இல்லையா? வாராய் நீ வாராய்னு பாட ஆரம்பிச்சா இன்னிக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம். அம்மா மட்டும் என்னவாம்.. குறையேதுமில்லைன்னு பாட ஆரம்பிச்சா மனசில இருக்கிற அத்தனைக் கனமும் போய் அப்படியே இலேசாயிடுமே... நம்ம வினய்க்கும் அவங்களோட இருந்தா நல்ல சங்கீதமும் வரும். கதை சொல்வதற்கும்.,. குழந்தையும் குடும்பம் பந்தம் பாசம்னு நல்லா வருவான் இல்லியா.. வித்யா கெஞ்சினாள்..

சரி சரி இந்த சனிக்கிழமையே போய் அழைச்சிகிட்டு வந்திடலாம். சரியா.. இப்போ செல்வம் வீடு வரைக்கும் போகணும் கொஞ்சம் வழி விடறயா? விஜய் சந்தோஷமாகக் கொஞ்சினான்..

விஜய் கிளம்பியதும்.. வித்யா விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்தாள்..

வேணு கோபால் - தாத்தா - வயது 60.............. ..... ........... ....
கலாதேவி - பாட்டி - வயது 55 ....... ...... ..... ....
விஜய் - அப்பா - வயது 35 .............. ..... ........... ....
வித்யா - அம்மா - வயது - 32 .............. ..... ........... ....
வினய் - வயது - 9 .............. ..... ........... ....


விண்ணப்பத்தை பூர்த்து செய்து கவரில் முகவரியை எழுத ஆரம்பித்தாள்.


சக்ரா சரிகம ஃபேமிலி
விஜய் டி.வி..
தபால் பெட்டி எண் ...
சென்னை ...

(குறிப்பு : விஜய் டி.வி.யில் சக்ரா சரிகம ஃபேமிலி என்ற ரியாலிடி ஷோ விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..

நிபந்தனை

10 வயதுக்குட்பட்டக் குழந்தை
தாய் தந்தை
தாத்தா பாட்டி

என ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கலந்து கொள்ள வேண்டுமாம்.)

aren
06-11-2008, 02:21 AM
அதானே பார்த்தேன்!!!

என்ன அக்கறை!!!!

மருமகள்களே நீங்கள் நீடூடி வாழ்க!!!!

சிவா.ஜி
06-11-2008, 04:29 AM
நச்சுன்னு இருக்கு. எல்லாம் பாப்புலாரிட்டி மாயை. தன் தேவைக்காக, தேவைப்படாத பெரியவர்களின் தேவையை நாடும் நல்ல மருமகள்.

பாராட்டுக்கள் கண்மணி. கதை அம்சமாய் உள்ளது.

கண்மணி
06-11-2008, 04:59 AM
நச்சுன்னு இருக்கு. எல்லாம் பாப்புலாரிட்டி மாயை. தன் தேவைக்காக, தேவைப்படாத பெரியவர்களின் தேவையை நாடும் நல்ல மருமகள்.

பாராட்டுக்கள் கண்மணி. கதை அம்சமாய் உள்ளது.

நேற்றிரவு இந்த விளம்பரம் டி.வி.ல வந்தது, அதைப் பார்த்தவுடன் சட்டெனப் பொறித்த சின்னப் பொறிதான் இந்தக் கதை.

பாராட்டிய சிவாஜி அண்ணா ஆரென் அண்ணா ஆகியோருக்கு நன்றி!

ரங்கராஜன்
06-11-2008, 05:53 AM
நிதர்சனமான உண்மை, எந்த ஒரு டைவர்ஸனும் இல்லாமல் கதை அழகாக நகர்த்தியுள்ளீர்கள், பெரும்பாலும் நேர் கோட்டில் கதை நகர்ந்தால் அதனுடைய முடிவை சுலபமாக யுகித்து விடலாம். ஆனால் இந்த கதையில் முடிவை யுகிக்க முடியவில்லை, வாழ்த்துக்கள்

பாபு
06-11-2008, 06:39 AM
நல்லா இருக்கு...இன்னும் எழுதுங்க !!

ஓவியா
06-11-2008, 11:56 AM
தேவைகளுக்கு மட்டும் கவனம் செலுத்தும் மருமகள்.

இது சில வீட்டில் உணமைக்கதையாக இருக்கலாம், கரு மட்டும் கொஞ்சம் மாறலாம்.

கதையை நான் ரொம்ப ரசித்தேன்.......மிக்க நன்றி அண்ணா.

கண்மணி
06-11-2008, 12:09 PM
கதையை நான் ரொம்ப ரசித்தேன்.......மிக்க நன்றி அண்ணா.

முதல்ல ரொம்ப அதிகமா கதை எழுதற சிவா.ஜி அண்ணனை உதைக்கணும்.
கஷ்டப்பட்டு கதை எழுதறது நானு.. பாராட்டு அவருக்கா?:sauer028::sauer028::sauer028::sauer028::sauer028::traurig001::traurig001::traurig001::traurig001:

ஓவியா
06-11-2008, 12:15 PM
முதல்ல ரொம்ப அதிகமா கதை எழுதற சிவா.ஜி அண்ணனை உதைக்கணும்.
கஷ்டப்பட்டு கதை எழுதறது நானு.. பாராட்டு அவருக்கா?:sauer028::sauer028::sauer028::sauer028::sauer028::traurig001::traurig001::traurig001::traurig001:

அய்யய்யோ சொதப்பிட்டேனா :eek::eek::eek:

மன்னிக்கவும் கண்மணியக்கா :D:D:D

mukilan
06-11-2008, 12:23 PM
கண்மணி "அக்கா"/கண்மணி "தங்கை"/தோழி கண்மணி எப்படி வேணும்னாலும் வச்சிக்கலாம். கலக்கல் கண்மணி! சோழியன் குடுமி சும்மா ஆடாதே! இப்படி பார்க்கும் விடையங்களில் கரு கிடைத்து எழுதப்படும் யதார்த்த கதைகள் சிறப்பாக இருக்குமென்பதற்கு உங்கள் கதை ஒரு எ.கா.

சிவா.ஜி
06-11-2008, 04:44 PM
முதல்ல ரொம்ப அதிகமா கதை எழுதற சிவா.ஜி அண்ணனை உதைக்கணும்.
கஷ்டப்பட்டு கதை எழுதறது நானு.. பாராட்டு அவருக்கா?:sauer028::sauer028::sauer028::sauer028::sauer028::traurig001::traurig001::traurig001::traurig001:

அய்யோ தேவுடா...இந்தக் கொடுமையை நான் எங்கப் போய் சொல்லுவேன்.....அமரன் நீங்க கேளுங்க....அன்பு நீங்க கேளுங்க.....செல்வா நீங்க கேளுங்க......அறிஞரே நீங்க கேளுங்க....இளசு நீங்களாவது கேளுங்க....ரெண்டு தங்கைகளும் சேர்ந்து என்னை உதைக்க ப்ளான் பண்றாங்களே....இது நியாயமா....நானே நான் எழுதிக்கிட்டு வர்ற தொடர்கதையை யாரும் சீண்டிக்கூட பாக்கலன்னு வருத்தத்துல இருக்கேன்....

கண்மணி நல்லாரும்மா........

இளசு
06-11-2008, 05:26 PM
நான் கேட்டுட்டேன் சிவா..

யாரது, நம்ம சிவாவை உதைக்கிறேன்னது?

(கொஞ்சம் உஷாராய் தள்ளி நின்னுதான் கேட்கிறேன் கண்மணி..)

போதுங்களா சிவா?

----------------------------

ஒரு தொலைக்காட்சி விளம்பரம் -

முத்து என்னும் சிறுவன் குடும்பம் பேருந்தில் இருந்து இறங்க -
முத்து மட்டும் இழுத்து தக்கவைக்கப்படுவான் -
இழுத்த குடும்பத்தில் அப்பா, அம்மா, மகள்..

இழுத்ததன் காரணம் - குடும்ப ஷாம்பு சாஷேக்கள் இப்போது 4 கிடைக்குதாம்..
அதனால் நால்வர் குடும்பம் தேவையாம்..

------------------------------

இப்படி சில வணிக/விளம்பர நோக்கங்களுக்காகவது
சில நன்மைகள் நடக்காதா என்ன எண்ண வைத்த கதை!


பாராட்டுகள் கண்மணி!

SathyaThirunavukkarasu
07-11-2008, 05:38 AM
ரசித்தேன் தொடரட்டும்

செல்வா
07-11-2008, 06:15 AM
முதல்ல ரொம்ப அதிகமா கதை எழுதற சிவா.ஜி அண்ணனை உதைக்கணும்.
கஷ்டப்பட்டு கதை எழுதறது நானு.. பாராட்டு அவருக்கா?:sauer028::sauer028::sauer028::sauer028::sauer028::traurig001::traurig001::traurig001::traurig001:
தப்பு தப்பு .....
இவ்வளவு நல்லா கதை எழுதற உங்களைத்தான் கட்டி வச்சு அதிகமா எழுதச் சொல்லணும்..... அத விட்டுட்டு அதிகமா எழுதுறவங்களை உதைக்கச் சொன்னா?
என்ன கொடுமை இது....