PDA

View Full Version : அமெரிக்காவின் பிரச்சினைகளும் ஒபாமாவும்மதுரை மைந்தன்
05-11-2008, 11:53 PM
அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டதை உலகெங்கிலும் கொண்டாடப் படும் இந்த நேரத்தில் அவருக்கு கிடைத்திருப்பது மலர்க் கிரீடம் அல்ல முள் கிரீடம். ஒன்றரைக் காலமாக அமெரிக்காவில் வாழ்ந்ததாலும் பல அமெரிக்கர்கள் இன்றும் நண்பர்களாக இருப்பதாலும் அமெரிக்காவின் பிரச்சினைகள் என்ன என்று ஓரளவு அறிவேன். பல அரசியல் பண்டிதர்கள் குறிப்பிட்டுள்ளது போல ஒபாமாவின் அபார வெற்றி இன்றைய அமெரிக்க பொருளாதார சரிவின் காரணமாகும். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். இளைஞர்களிடையே தங்களது வேலை பறி போய் விடுமோ என்ற அச்சம் வயதான உத்தியோக ஓய்வு பெற்றவர்களிடையே தங்களது பென்ஷன் முதலீடுகளில் உண்டான நஷ்டங்களைப் பற்றிய கவலை சிறு தொழில் செய்பவர்களுக்கு கடன் உதவி கிடைக்காமல் போகக் கூடிய அபாயம் ஆகியவை அமெரிக்க மக்களை அரசாங்கத்தில் ஒரு மாற்றம் வேண்டி பெருமளவில் ஓட்டளிக்க வைத்திருக்கிறது.

இனறைய அமெரிக்காவின் தலையான் பிரச்சினைகள் நிரந்தர வேலையினமை பொறுப்பற்ற இளைய சமுதாயம் உயர் கல்வியில் அமெரிக்க இளைஞர்களுக்கு நாட்டமிண்மை மற்றும் பெருகி வரும் சட்ட விரோதமாக குடி பெயர்பவர்கள் ஆகியவையாகும். உயர் மட்ட கல்வியாளர்களின் சங்கத்தில் உறுப்பினராக இருந்ததால் அமெரிக்காவில் விஞ்ஞானம் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விகளில் அமெரிக்க இளைஞர்களிடையே நாட்டம குறைந்து வருவதை அறிந்தேன். ஒபாமாவும் தனது தேர்தல் சொற்பொழிவுகளில் குறைந்து வரும் கல்வியின் தரத்தை உயர்த்த ஈராக் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து அதில் செலவாகும் பணத்தை கல்வித்துறையில் முதலீடு செய்யப் போவதாக கூறியுள்ளார். இது வரவேற்க தக்கதாகும். அடுத்த பிரச்சினை விலை உயர்ந்த மக்கள் உடல் நல காப்பு திட்டங்கள். அமெரிக்காவில் மருந்துகள் மிக அதிக விலைகளில் விற்கப் படுகின்றன. இதற்காக பலர் மருந்துகளை மலிவு விலைகளில் விற்கப் படும் அண்டை நாடுகளான கானடா மெக்ஸிகோ போன்றவற்றிலிருந்து வாங்கும் நிலை உள்ளது. பல நடுத்தர மக்கள் காப்பீடு வாங்க முடியாமல் சிகிச்சையினறி அவதிப் படுகிறார்கள். ஒபாமா இந்த நிலையை மாற்றப் போவதாக கூறியுள்ளார்.

ஒபாமாவின் அதிபர் தேர்வு இந்தியாவிற்கு நன்மை பயக்குமா என்பதை காலம் தான் உணர்த்தும். நியூ யார்க் நகரத்தில் படிக்கும்போது அவர் ஒரு இந்திய மாணவருடன் தங்கி இருந்ததாகவும் இந்திய உணவுகளை விரும்பி சாப்பிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. சர்வதேச உறவுக் கொள்கைகளில் பெரும் மாற்றங்கள் ஏதும் இருக்காது என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். வளர்ந்து வரும் அமெரிக்க இந்திய உறவு ஒபாமாவினால் மேலும் வலுப்படும் என்று நம்புவோம்.

ரங்கராஜன்
06-11-2008, 05:45 AM
மிக அருமையான பதிவு, ஒபாமாவின் -வில் இருந்து அழகாக +வில் முடித்துள்ளீர்கள், வாழ்த்துக்கள்

மதுரை மைந்தன்
06-11-2008, 08:53 AM
மிக அருமையான பதிவு, ஒபாமாவின் -வில் இருந்து அழகாக +வில் முடித்துள்ளீர்கள், வாழ்த்துக்கள்


தங்களுடய பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே

அறிஞர்
06-11-2008, 01:48 PM
தாங்கள் கூறும் கருத்துக்கள் உண்மை.

எளிதில் மீள இயலாத அளவிற்கு வீழ்ச்சியில் உள்ளது.

சரியான பாதையை கையாண்டால் 3 வருடங்களில் தீர்வு ஏற்படும்.

அதே நேரத்தில், பல மறுமலர்ச்சிகளைக் கொண்டு வருவதன் மூலம், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படக் கூடும்.

காலம் பதில் சொல்லும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.