PDA

View Full Version : யூடியூபினால் மாறிய வாழ்க்கை - உண்மைக்கதை



ரங்கராஜன்
05-11-2008, 03:44 PM
புத்திசாலித்தனமான கிளவர் ஐடியா எதாவது உங்களிடம் இருக்கின்றதா? எதாவது டிப்ஸ் அல்லது மைண்ட்புளோயிங் டிரிக்ஸ் உங்களிடம் இருக்கின்றதா? உடனே அதை வீடியோவாக்கி யூடியூபில் போஸ்ட் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையே மாறிப்போகலாம்.

இப்படித்தான் ஜானி எனும் 28 வயது இளைஞன் Wii remote controller-ஐயும் head tracking glass-களையும் வைத்து எப்படி மிக எளிதாக விர்சுவல் ரியாலிட்டி செய்வது என செய்து காட்டி அதை 5 நிமிட வீடியோவாக்கி யூடியூபில் போட்டான். இன்றைக்கு அவ்வீடியோ 6 மில்லியன் தடவை பார்க்கப்பட்டிருக்கின்றது. இது போல இவனுடைய இன்னும் சில இன்னோவேடிவ் ஐடியாக்களையும் வீடியோவாக்கி யூடியூபில் போட்டான். இவன் கண்டுபிடிப்புகளை கண்டு ஆச்சரியத்தில் வியந்த பெரிய பெரிய வீடியோ கேம் நிறுவனங்களெல்லாம் இவனை மொய்த்தன. சீக்கிரத்தில் இவனைப்பற்றிய பேச்சு மைக்ரோசாப்டிலும் அடிபட ஆரம்பித்தது. ஜானியை மைக்ரோசாப்டில் வேலைக்கு இழுக்க பில்கேட்சை அணுகியபோது அவருக்கு ஏற்கனவே இவனை பற்றி தெரிந்திருந்ததாம். அவருக்கும் ஜானியை வேலைக்கு எடுப்பதில் ரொம்ப சந்தோசம். இப்போது ஜானி Microsoft - Applied Sciences துறையில் ஒரு Researcher. ஐந்து நிமிட யூடியூப் வீடியோ இவன் வாழ்க்கையையே மாற்றிப்போட்டுவிட்டது.

ஒருவேளை இவன் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தால் அதை ஒரு சில பேர் மட்டுமே படித்திருப்பர். ஒரு தொழில்நுட்ப அரங்கில் பேசியிருந்தால் மேலும் சில நூறு பேர் மட்டுமே கேட்டிருப்பர். ஆனால் இவன் குரல் மைரோசாப்ட் வரை எட்ட யூடியூப் ஒரு ஊடகமாக அமைந்தது. மாபெரும் கூட்டத்தையும் எளிதில் எட்ட இன்றைக்கு இருக்கும் வசதிகள் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே. லாவகமாய் பயன்படுத்துவோர் வெற்றி பெறுகின்றனர்.


நம் மன்றத்தில் பல விஞ்ஞானிகள் இருக்கிறார்கள் அதனால் இந்த செய்தியை தருகிறேன், அப்படி என்னதான் அவன் செய்துக் காட்டினான் என்று பார்க்க ஆசையாக இருக்கா, இந்த திரியில் ஒலி-ஒளி கோப்புகள் தர நம் மன்ற விதிகள் அனுமதிக்காதால், அதனுடைய சுட்டியை தருகிறேன், காண விரும்புபவர்கள் கண்டு பயணடையலாம்


http://in.youtube.com/profile?user=jcl5m

ஓவியா
05-11-2008, 04:30 PM
அப்பப்பா என்ன அறிவு என்ன அறிவு, அசந்து போனேன்.

ஜானிக்கு என் வாழ்த்துக்கள்.

(உண்மையை சொல்கிறேன், இரண்டுமுறை பார்த்து பின் அகராதியில் சில சொற்களை தேடி விளக்கம் கண்டுதான் விசயத்தை தெரிந்துக்கொண்டேன் :redface::redface: )

தகவலுக்கு மிக்க நன்றி மூர்த்தி.

Narathar
05-11-2008, 04:33 PM
நாம இதுவரைக்கும் youtube ஐ சினிமா பாட்டு பார்க்கவல்லவா
பயன்படுத்தி வருகின்றோம்???

நாராயணா!!! ;)

அன்புரசிகன்
05-11-2008, 05:06 PM
அழகானதும் பயனுள்ளதுமான பகிர்வு. நன்றி மூர்த்தி.

அமரன்
05-11-2008, 08:10 PM
இணையவலையை கேடுகெட்ட வேட்டைக்குப் பயன்படுத்தும் வேடதாரிகளுக்கு நடுவில் இப்படியும் ஒருவன். விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் பள்ளத்தில் தள்ளிவிடும் செய்தியாளர்கள் இருக்கும் உலகில் இப்படி ஒரு செய்திப்பகிர்வு. பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் பெருக்கெடுக்கிறது.

மாதவர்
05-12-2008, 12:34 PM
மிக நல்ல செய்தி
கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு!

arun
15-12-2008, 04:59 PM
உண்மையில் ஆக்கப்பூர்வமான செய்தி தான் பகிர்வுக்கு நன்றி

aren
16-12-2008, 12:45 AM
YouTube னிலால் பல நன்மைகள் நடக்கின்றன. அதில் இதுவும் ஒன்று.

தாசன்
18-12-2008, 11:02 AM
நல்ல யோசனை
நல்ல தகவல்
நன்றி

minmini
18-12-2008, 11:36 AM
அமரம் சொல்வதை போல் இணையத்தை தவறான முறையில் பயண்படுத்துபவர்கள்மத்தியில் ஜானியின் செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்கது
வளரும் இளைஞைர்களுக்கு ஜானி ஒரு எடுத்துக்காட்டு
உண்மையிலேயே இன்றைய நவீன வசதிகள் ஒரு வரப்பிரசாதம்தான்
இன்னும் சரிவர நம் இளைஞர்கள் புரிந்து கொள்ளவில்லை
[ஜானியைப்போல்]

சூரியன்
18-12-2008, 11:46 AM
நல்ல ஒரு செய்தி பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அண்ணா.

மன்மதன்
18-12-2008, 12:37 PM
பகிர்தலுக்கு நன்றி..!