PDA

View Full Version : தமிழக வீரர் - விஜய்அறிஞர்
05-11-2008, 03:28 PM
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாட கம்பீருக்கு தடை விதிக்கப்பட்டதால், தமிழக வீரர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதம் எடுத்து அனைவரையும் கவர்ந்த அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியில் இடம் பெற்று சாதிப்பாரா...

இளம் ஆட்டக்காரர்களை நம்பும் தோனிக்கு, இவர் பக்கபலமாக இருந்தால், அணியில் நிரந்தரமாக இடம்பெற வாய்ப்புண்டு.

rajatemp
05-11-2008, 03:33 PM
நிச்சயமாக,
சரியான வாய்ப்பு விஜய்க்கு ஏனெனில் ஆஸ்திரேலியாவுடன்

aren
06-11-2008, 01:21 AM
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்களுக்கு நன்றி என்று போட்ட டிஷ்ர்டைப் போட்டுக்கொண்டு ஆடவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒரு நாள் ஆட்டத்திற்கும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ஏனோ, இப்படி பத்ரிநாத்திற்கு ஆப்பு வைக்கிறார்களே?

ராஜா
06-11-2008, 03:07 AM
எவ்வளவு திறமை இருந்தாலும், தமிழக வீரர்கள் முன்னுக்கு வர வாரியம் அனுமதிக்காது. இந்திய அணி வீரர் என்பது பணம் காய்ச்சி மரம். அதில் அதிக அறுவடை செய்யும் வாய்ப்பு வடவருக்கே..!

வெற்றி வாய்ப்பில்லாத ஆட்டங்களில் வாய்ப்புக் கொடுத்து ஓரிரு தடவையோடு உட்கார வைத்துவிடுவார்கள்..!

அற்புதமான பந்துவீச்சுத் திறமையும், நல்ல மட்டைபிடித் திறனும் கொண்ட முரளி கார்த்திக் நிலை தெரியும்தானே..?

இனி இந்திய அணியில் தமிழக வீரர்கள் என்றால் அதிகமாக எதிர்பார்க்காதீர்கள்..!

paarthiban
08-11-2008, 12:05 AM
கம்பீர் இல்லாவிடினும் கம்பீரமாய் ஆடிய விஜய்!
வாழ்த்துக்கள்!

வசீகரன்
08-11-2008, 06:23 AM
எவ்வளவோ தமிழக வீரர்கள் இந்திய அணியில் வந்து விளையாடி எந்த காரணமும் இன்றி புறக்கணிக்கபட்டுவிட்டார்கள்...

ரமேஷ்... திணேஷ் கார்த்திக் முரளி கார்த்திக்... பாலாஜி... குமரன்... பத்ரிநாத்.. ஹெமாங்பதாணி..

விஜய் தனது முதல் ஆட்டத்திலேயே தான் ஒரு நல்ல வீரர் என்பதை காட்டினார்..

அவரது கவனிப்புகள் அற்புதமாக இருந்தது... துரதிர்ஷ்டம் அவரையும் தொடர கூடாது என நம்புவோம்....!

ஓவியன்
08-11-2008, 08:07 AM
எவ்வளவோ தமிழக வீரர்கள் இந்திய அணியில் வந்து விளையாடி எந்த காரணமும் இன்றி புறக்கணிக்கபட்டுவிட்டார்கள்...

ரமேஷ்... திணேஷ் கார்த்திக் முரளி கார்த்திக்... பாலாஜி... குமரன்... பத்ரிநாத்.. ஹெமாங்பதாணி......!

உங்கள் வரிசையில் ஐ.சி.எல் ஆட்டங்களில் பட்டை கிளப்பும் ராஜகோபால் சதீஸையும் (http://content-gulf.cricinfo.com/icl2008/content/player/33870.html), கணபதி விக்கினேசையும் இணைக்க வேண்டும்...

மற்றவர்களுக்காவது வாய்ப்புக் கொடுத்தார்கள், ஆனால் இவர்களிருவருக்கும் வாய்ப்புக்களே கொடுக்கப் படவில்லையே...

arun
10-11-2008, 02:27 AM
முதல் ஆட்டத்தில் தனது அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் ஆனால் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பது சற்று கடினமே....

aren
10-11-2008, 02:36 AM
விஜய்க்கு காம்பீர் அணிக்குத்திரும்பியவுடன் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே.


ஆனால் ஒரு வழி இருக்கிறது.

கங்குலி ரிடையர்ட் ஆகிவிட்டதால் அவருடைய இடம் காலியாக இருக்கிறது. ஆகையால் இப்பொழுது சரியாக ஆடாமல் இருக்கும் திராவிடை அந்த இடத்திற்கு பாட்டிங் செய்ய அனுப்பிவிட்டு விஜயை ஒன் டவுன் ஆட்டக்காரராக களத்தில் இறக்கலாம்.

ஒரே பிரச்சனை அவர் தமிழக ஆட்டக்காரர், மும்பை ஆட்டக்காரர் கிடையாது.

ஓவியன்
10-11-2008, 03:10 AM
கங்குலியின் ஓய்வின் பின், விஜய்க்கு அணியில் வாய்ப்புக் கிடைக்குமென்றும் கூற முடியாது...

ஏனென்றால் ஒரு நாள் ஆட்டக்காரர்களான சுரேஸ்ரெய்னா மற்றும் யுவராஜ்சிங் இருவரும் டெஸ்ட் அணிக்குள் உள்வாங்கப்படும் வாய்ப்பும் உள்ளதே...

aren
10-11-2008, 05:01 AM
கங்குலியின் ஓய்வின் பின், விஜய்க்கு அணியில் வாய்ப்புக் கிடைக்குமென்றும் கூற முடியாது...

ஏனென்றால் ஒரு நாள் ஆட்டக்காரர்களான சுரேஸ்ரெய்னா மற்றும் யுவராஜ்சிங் இருவரும் டெஸ்ட் அணிக்குள் உள்வாங்கப்படும் வாய்ப்பும் உள்ளதே...

இவங்க இரண்டு பேரை விட ரோஹிட் ஷர்மாவிற்கு அதிகம் சான்ஸ் இருக்கிறது, ஏனெனில் அவர் மும்பையைச் சேர்ந்தவர்.

ஓவியன்
10-11-2008, 05:19 AM
ஓஹோ..!!

எனக்கு இந்த ‘அரசியல்’ கொஞ்சம் பிடி படுகிறதில்லை...

பி.கு - நேற்றைய லாகூர் அணியினருடனான ஐசிஎல் ஆட்டத்தில் 9 விக்கட்டுக்கள் விழுந்த நிலையிலும் அசராமல், அசங்காமல் துடுப்பெடுத்தாடி 38 பந்துகளில் 76 ஓட்டங்களை சதீஸ் குவித்த போது இந்த திறமைகளையெல்லாம் இந்திய தேசிய அணி தவற விட்டு விட்டதே என எண்ணத் தோன்றியது.

aren
10-11-2008, 06:47 AM
என்ன செய்வது ஓவியன். வடஇந்தியர்கள் இந்த விஷயத்தில் கொஞ்சம் பலசாலிகளாக இருக்கிறார்கள்.

தென்னகம் கொஞ்சம் ஏமாளியாகவே இருக்கிறது.