PDA

View Full Version : அமெரிக்க முதல் கறுப்பின அதிபர் - ஒபாமாஅறிஞர்
04-11-2008, 03:04 PM
இன்று (நவம்பர் 4, 2008), 44வது அதிபருக்கான அமெரிக்க தேர்தல் நடக்கிறது.

ஜனநாயக கட்சி சார்பில் மெக்கென், பாலின்

குடியரசு கட்சி சார்பில் ஒபாமா, பைடன்

போட்டியிடுகிறார்கள்.

பராக் ஓபாமாவிற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

கருத்துக்கணிப்பின் படி முதல் கறுப்பின அதிபராக ஒபாமா வெற்றி பெற்றார்.

அமரன்
04-11-2008, 03:08 PM
மாற்றம் நல்ல மாற்றத்தை கொண்டுவந்தால் மகிழ்ச்சி.

அறிஞர்
04-11-2008, 03:10 PM
மாற்றம் நல்ல மாற்றத்தை கொண்டுவந்தால் மகிழ்ச்சி.
இந்த தேர்தல் அமெரிக்க பொருளாதாரத்தை முடிவெடுக்கும் தருணம்..

தலைவன் சரியாக அமைந்தால்.. அமெரிக்க எதிர்காலத்திற்கு நல்லது.

அமரன்
04-11-2008, 03:11 PM
ஆம்..
ஒபேமாவின் கொள்கைகளை மேலோட்டமாகப் பார்த்தவரை உலகுக்கே நல்லது போலத்தான் தெரிகிறது. எதுக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்புரசிகன்
04-11-2008, 03:16 PM
இந்தியர்களை திருப்பியனுப்புவேன் என்றாராமே.. உண்மையா?

ராஜா
04-11-2008, 03:40 PM
தல...

ஒபாமா வந்தால் இந்திய தகவல் - தொழில்நுட்பத்துறை வாய்ப்புகள் குறையும்ன்னு பேசிக்கறாங்களே.. உண்மையா..?

ஓவியா
04-11-2008, 03:52 PM
கலரில் ஒன்றுமில்லை என்று புதியதலைமுறை உலகிற்க்கு சொல்ல வேண்டும்.

கலரைக்கட்டிக்கொண்டு ஓட்டு போடும் மக்களுக்கு இது ஒரு சவுக்கடியா இருக்க வேண்டும், திறமைதான் எங்கும் ஜெயிக்க வேண்டும்.


ஓபாமாதான் வரனும், உலக அதிபதி என்று மார்தட்டும் அமேரிக்காவிற்குள்ளும் ஒளிந்து கிடக்கும் (கருப்பின) ஏழைகளுக்கு வாழ்வு கிடைக்க வேண்டும்.

ஏழ்மையின் உச்சத்தில் தத்ளிக்கும் ஆப்ரிக்கா நாடுகளையும் கொஞ்சம் கவனிப்பார் என்று நினைக்கிறேன்.

அட இந்தியாவிற்க்கு 'ஆப்பா' ம்ஹூம், அப்படியெல்லாம் ஒன்னும் செய்யமாட்டார்.

பொருளாதாரத்தை துக்கி நிருத்துவாரா என்று கேட்டால் ..... :redface::redface:

கொஞ்சம் இருங்க மிஸர்ஸ்.கிலிண்டனை கூப்பிடுகிறேன்... ஓவி ஜூட்.


****************************************************************************************************

இருப்பினும் அனுபவம் மற்றும் புத்திசாலியானா மெக்கெய்னின் பங்களிப்பு மக்களுக்கு கிடைக்காமல் போகிறதே என்ற வலி ஓரிடத்தில் இருக்கதான் செய்கிறது.. :traurig001:

அறிஞர்
04-11-2008, 06:54 PM
ஓபாமாவின் கொள்கை அமெரிக்கர்களை நன்கு வாழ வைக்கவேண்டும் என்பதே...

அமெரிக்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு கொடுக்கப்படும் அவுட்சோர்ஷிங்க் வேலைகளில் தொய்வு ஏற்படும்.

அவுட்சோர்ஷிங்க் கொடுக்காமல், அமெரிக்காவில் செய்யப்படும் வேலைகளுக்கு (கம்பெனிகளுக்கு) வரி விலக்கு உண்டு...

வருடம் $ 250,000 மேல் குடும்ப சம்பளம் பெறும் நபர்களிடம் இருந்து வட்டி அதிகமாக வசூலிக்கப்படும்.

தீபன்
05-11-2008, 01:16 AM
ஆமா, முடிவு வந்திடுச்சா.... நாங்களும் ஆவலோட எதிர்பார்த்திட்டிருக்கம்ல...

அன்புரசிகன்
05-11-2008, 03:09 AM
ஒபாமா வந்தாச்சு...

செய்தி இங்கே (http://news.bbc.co.uk/2/hi/americas/us_elections_2008/7709978.stm)...

sakthim
05-11-2008, 03:15 AM
உடனுக்கு உடன் சூடாக செய்தியை பரிமாறிக் கொண்ட நண்பர்களுக்கு நன்றிகள்.

முதல் கருப்பின அதிபரான ஓபாமாவுக்கு வாழ்துகள்.இந்த முடிவு வெள்ளைகாரர்களுக்கு பேரிடியாக இருந்து இருக்கும்.

பார்கலாம் இவரால் இந்தியாவுக்கு என்ன நன்மைகள் விளையப் போகிறது என்று.

shibly591
05-11-2008, 04:47 AM
ஒபாமாவுக்கு வாழ்த்துக்கள்..

மாற்றம் நல்லதாய் நிகழ்ந்தால் சரிதான்...

leomohan
05-11-2008, 04:54 AM
அமெரிக்காவின் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகள் கட்சியை சார்ந்ததோ அல்லது ஜனாதிபதியை சார்ந்ததோ அல்ல. அவர்கள் வழி தனி வழி.

ஒவ்வொருவருக்கும் சில ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்க வாய்ப்பு.

பொருளாதார விஷயத்திலோ பயங்கரவாத விஷயத்திலோ ஆப்கானிஸ்தானம் ஈராக் வட கொரியா லிப்யா ஈரான் விவாகரங்களிலோ பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

அப்படி ஏதாவது ஏற்பட்டது போல் தோன்றினாலும் அது சும்மா மேம்போக்கு மாயை.

இந்திய வியாபாரங்களும் ஒன்றும் பிரச்சனை இருக்காது.

இவரும் இன்னொரு பொம்மலாட்ட பொம்மை தான் - இவருக்கும் முன் இருந்த அனைத்து ஜனாதிபதிகளை போல.

இருந்தாலும் மேடையில் ஏற பேசவும், வெள்ளை மாளிகையில் வசிக்கவும், ஜனாதிபதியின் பிரத்யேகமான விமானத்திலும் வாய்ப்பு கிடைத்ததற்காக ஓபாமாவிற்கு வாழ்த்துகள்.

Narathar
05-11-2008, 05:21 AM
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவுக்கு
எனது மனமார்ந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கின்றேன்.........

பார்ப்போம் அவர் சொன்ன மாற்றங்களில்
எத்தனை மாற்றங்களை அவரால் நடைமுறைப்படுத்த
முடிகின்றதென்று..............

namsec
05-11-2008, 07:03 AM
அமெரிக்காவில் யார் வந்தால் என்ன நாம் அவர்களைவிட முந்துவதற்க்கு என்ன வழி என பார்ப்போம்

ரங்கராஜன்
05-11-2008, 07:05 AM
அமெரிக்காவில் யார் வந்தால் என்ன நாம் அவர்களைவிட முந்துவதற்க்கு என்ன வழி என பார்ப்போம்


நண்பரே
ஒருவரை முந்த முதலில் அவரைப் பற்றி நன்றாக தெரிந்து இருக்க வேண்டும், அதற்க்கான முயற்சியாக இதைக் கொள்வோம்

ஓவியன்
05-11-2008, 07:37 AM
கடும் போட்டிகளிடை வெள்ளை மாளிகை புகவிருக்கும் ஒபாமாவுக்கு என் வாழ்த்துக்களும்....

ஓவியா
05-11-2008, 12:34 PM
உடனுக்கு உடன் சூடாக செய்தியை பரிமாறிக் கொண்ட நண்பர்களுக்கு நன்றிகள்.

முதல் கருப்பின அதிபரான ஓபாமாவுக்கு வாழ்துகள்.இந்த முடிவு வெள்ளைகாரர்களுக்கு பேரிடியாக இருந்து இருக்கும்.

பார்கலாம் இவரால் இந்தியாவுக்கு என்ன நன்மைகள் விளையப் போகிறது என்று.

இவர் அமேரிக்காவின் அதிபர், முதலில் இவரால் அமேரிக்காவில் என்ன நன்மைகள் விளையப்போகிறது என்று பார்ப்போம்.

இந்தியாவிற்க்கு விளையும் நன்மைகளை காண இந்தியநாட்டு தலைவர்களைதான் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

மன்மதன்
05-11-2008, 12:52 PM
எண்ணெய் கிணறுக்காக பல அப்பாவிகள் கொல்லப்படுவதை தடுத்தாலே போதும்.. புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துகள்..

ஓவியா
05-11-2008, 12:56 PM
எண்ணெய் கிணறுக்காக பல அப்பாவிகள் கொல்லப்படுவதை தடுத்தாலே போதும்.. புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துகள்..
மம்மு, எது நடந்தாலும் இது மட்டும் நடக்காது போகலாம், பணம் வருவதை யார் வேண்டாம் என்று சொல்வார்கள், அதுவும் பொருளாதாரம் தகிட தத்தோம் போடும் பொழுது!!

அதான் மோகன் அழகாக சொல்லி விட்டாரே இவரும் ஒரு ஆட்டிவைக்கப்படும் பொம்மை என்று....:)

அறிஞர்
05-11-2008, 02:01 PM
ஒபாமாவின் கூற்றுப்படி 18 மாதங்களில் ஈராக்கிலிருந்து அமெரிக்க ராணுவம் திரும்ப பெறப்படும்.

ஒபாமா... நல்ல பேச்சாளர். "மாற்றம் - Change" என்ற வார்த்தையை வைத்து இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

பேச்சு செயலில் இருந்தால் நல்லது. .. ஏட்டு சுரக்காய் போல் ஆகிவிடக்கூடாது....

அமெரிக்காவில் தற்பொழுது பலருக்கு வேலையில்லா நிலையுள்ளது... புதிய அரசு எடுக்கும் முயறியால் மட்டுமே... நாட்டின் நிதி நிலைமையை சரிப்படுத்த இயலும்.

அறிஞர்
05-11-2008, 02:42 PM
முதல் கருப்பின அதிபரான ஓபாமாவுக்கு வாழ்துகள்.இந்த முடிவு வெள்ளைகாரர்களுக்கு பேரிடியாக இருந்து இருக்கும்.
வெள்ளையர் துணையின்றி யாராலும் பதவிக்கு வர இயலாது. வெள்ளையருக்கு இது பேரிடி எல்லாம் இல்லை...

இப்பொழுது, அமெரிக்காவின் உள்ளே... வெள்ளை, கறுப்பு என்ற பாகுபாடு கிடையாது..

அமெரிக்கர் என்றே பார்க்கிறார்கள்...

ஒரு காலத்தில் கறுப்பர்கள் ஒடுக்கப்பட்டனர். இப்பொழுது நிலை முற்றிலும் மாறிவிட்டது என்பதற்கு இது உதாரணம்.

இதை கண்டு இந்தியா, ஐரோப்பா நாடுகளில் உள்ள நிறவெறி.. ஜாதிவெறி மாறுமா...

தீபன்
05-11-2008, 05:04 PM
ஈழப்பிரச்சினையில் இவரின் வரவு என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறதென யாராச்சும் ஊகிக்க முடியுதா....!!!?

ஓவியா
05-11-2008, 05:10 PM
ஈழப்பிரச்சினையில் இவரின் வரவு என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறதென யாராச்சும் ஊகிக்க முடியுதா....!!!?

நைனா, இங்கேயுமா!!!

தீபன் அக்காவின் அன்பான வேண்டுகோள்.
ஈழப்பிரச்சனையால் வலி கொள்ளும் உங்களுக்கு எனது வருத்தங்கள். வேதனையுரும் மக்களிடம் நான் நெருங்கி பழகுகிறேன், உங்களின் காயங்கள் எமக்கு நன்கு விளங்கும், தற்ப்பொழுது இது சர்ச்சைக்கூரிய விசயமாக இருப்பதால் அதர்க்குண்டான திரியில் மட்டும் பேசுவோமே. ஈழப்பிரச்சனையை எல்லா திரிகளிலும் பேச வேண்டிய அவசியமில்லை.

ஒபாமாவை பற்றியும், அமேரிக்க அரசாங்கத்தை பற்றியும் அலசுவோமே!!

தீபன்
06-11-2008, 01:23 AM
நைனா, இங்கேயுமா!!!

தீபன் அக்காவின் அன்பான வேண்டுகோள்.
ஈழப்பிரச்சனையால் வலி கொள்ளும் உங்களுக்கு எனது வருத்தங்கள். வேதனையுரும் மக்களிடம் நான் நெருங்கி பழகுகிறேன், உங்களின் காயங்கள் எமக்கு நன்கு விளங்கும், தற்ப்பொழுது இது சர்ச்சைக்கூரிய விசயமாக இருப்பதால் அதர்க்குண்டான திரியில் மட்டும் பேசுவோமே. ஈழப்பிரச்சனையை எல்லா திரிகளிலும் பேச வேண்டிய அவசியமில்லை.

ஒபாமாவை பற்றியும், அமேரிக்க அரசாங்கத்தை பற்றியும் அலசுவோமே!!

நல்லது அக்கா... ஆனால், ஒபாமாவும், அமெரிக்காவும் சர்வதேச அரசியலில் புறந்தள்ளமுடியாத சக்திகள்... ஈழப்பிரச்சினையிலும் இவரின் வரவு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று... இவரின் வரவு எப்படி இந்தியாவின் நலனில் தாக்கம் செலுத்துமென கருத்துக்கள் எழுப்பப்பட்டனவோ அதேபோலொரு கேள்வியே எனதும்... எனவே இது வேண்டுமென்றே இங்கும் ஈழப்பிரச்சனையை கிளறும் செயலல்ல...
இந்திய பத்திரிகையாளர் அனிதா பிரதாப்ப் ஒருமுறை தன் செவ்வியில் சொல்லியுள்ளார், ஈழத்தமிழர் படை அமரிக்க தேர்தல் முடிவுக்காய் காத்திருப்பதாக...
இப்படி இவரின் வரவு பலவளிகளில் ஈழப்பிரச்சினையிலும் எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனோடு சம்பந்தப்பட்ட திரியில் அது சார்ந்த கேள்வியை எழுப்புவது தவறென கருதினால் இத்தோடு அமைகிறேன்... நன்றி. வணக்கம்.

(வலிகளிலோ, காயங்களின் துயரத்திலோ இங்கு நான் என் பதிவுகளை இடுவதில்லை... அதில் பயனுமில்லை. ஆனால், எமக்கு தெரிந்ததில்தானே எங்கள் பதிவுகள் இருக்கும்... அந்தவகையான பதிவுகளே என்னுடையது.)

அமரன்
06-11-2008, 07:10 AM
தீபனின் பதிவு.. அதுக்கு ஒவியாக்காவின் கருத்து.. அதுக்கு தீபனின் பதில்.. மூன்றும் புரிந்துணர்வுக்கு சான்று.

இதே புரிந்துணர்வு அடுத்து வருபவர்களும் இருக்க வேண்டும். அவர்கள் பதிவுகள் ஒபேமாவும்-ஈழப்பிரச்சினையும் என்பதுடன் நின்றுவிடவேண்டும். அதைத் தாண்டிப் போனால் அது தேவையற்றது எனக் கருதி மற்றவர்கள் அப்படியே விட்டு விட வேண்டும். இந்தளவும் நடந்தால் எந்தளவு சந்தோசம்.