PDA

View Full Version : தொகுத்த வினாக்களும்... கிடைத்த பதில்களும்..



ஆதி
04-11-2008, 02:24 PM
ஆண்டாண்டு காலமாய்
ஆண்டுவரும் ஆண்டவா
ஆண்டவன் என்பது எக்காலம் ?

ஆண்டாண்டாய் ஆண்டதெலாம்
ஆண்டாண்டில் முடிந்துவிட
ஆண்டாண்டாய் தொடர்ந்துவரும்
ஆண்டவன் என்பது முக்காலம்..

அறியா மைகவிழ்ந்து
அறியாத அறிவெல்லாம்
அறியாமை ஆனதுவா பெரும்பொருளே ?

அறியாத அறிவையெல்லாம்
அறியாமல் அறிந்துணர்ந்து
அறியாது வாழ்ந்துவரும்
அறியாத அந்தறிவே
அறியாமை மானிடமே!

விண்மீன்கள் தாண்டி எங்கள்
விஞ்ஞானம் தேடி செல்லும்
வினாவுக்கு விடையென்ன முதற்துகளே ?

விண்ணெல்லாம் கடந்தாலும்
விண்மீன்கள் துளைத்தாலும்
விஞ்ஞானம் தேடிச் செல்லும்
வினாவுக்கு விடையெல்லாம் உன்னினிலே!

எட்டின் இளசுரத்தில்
எந்த சுரம் உன் சுரம்
எப்பாடல் உன் பாடல்
எக்கருவி உன் கருவி சொல்தேவா ?

ஒன்வாய் குழல்நீ
ஐம்பொறி என் சுரம்
அடங்கி இசைத்தால் என் பாடல்
அறியாமல் தொடர்கிறது உன் தேடல்…

Keelai Naadaan
04-11-2008, 04:14 PM
அடுத்த தேடல் கவிதைக்கு வாழ்த்துக்கள்.


எவையெவை ஒழுக்கம்
எவையெவை இழுக்கு
சொல் என் இறைவா ?

உனக்கு நீயே
அஞ்சாத நிலையில்
எவைக்கு அஞ்சி
என்ன பயன் ?

ஆண்டவனுக்கு தெரியுமா.. ?
அவர் வந்து சொன்னால் மட்டும் ஏற்போமா..?

shibly591
05-11-2008, 04:33 AM
இறைநம்பிக்கையை வலியுறுத்தும் கவிதை
நன்றி ஆதி

சாம்பவி
05-11-2008, 09:58 AM
எவையெவை ஒழுக்கம்
எவையெவை இழுக்கு
சொல் என் இறைவா ?

உனக்கு நீயே
அஞ்சாத நிலையில்
எவைக்கு அஞ்சி
என்ன பயன் ?


நெருடுகிறதே ஆதி.,
இக்கேள்வியும் பதிலும்.
கேயாஸ் தியரியை
நினைவுருத்துகின்றனவே....!!!

ஆதி
05-11-2008, 10:26 AM
நெருடுகிறதே ஆதி.,
இக்கேள்வியும் பதிலும்.
கேயாஸ் தியரியை
நினைவுருத்துகின்றனவே....!!!



செயலொன்றை புரிகையில் தகமையற்றது என்று பட்டால் நிறுத்திவிடு.. உனக்கு நீயே நேர்மையாய் இரு.. என்றேண்ணியதை வார்த்தைகளில் தெளிவில்லாமல் ஆக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன் சாம்பவி..

உண்மையில் நீங்கள் பரிந்துரைத்திருக்கும் வரி வரைதான் முதலில் எழுதினேன்.. ஒரு மணி நேரம் கழித்து இறுதி பத்திகளை ஒட்டு போட்டு மன்றத்தில் பதித்தேன்..

இறுதி பத்தியை நீக்கிவிடுகிறேன் சாம்பவி..