PDA

View Full Version : டாக்டர் ப்ரகாஷ் MBBSlenram80
03-11-2008, 07:29 PM
பேஷன்ட்: தலைய அடிக்கடி சுத்துது டாக்டர்!
டாக்டர்: எந்த சைடுலே சுத்துதோ, அதுக்கு ஆப்போசிட் சைடுலே சுத்துங்க... சரியாயிடும்!

==============

பிச்சைகாரர்: சாமி... தர்மம் பண்ணுங்க...
டாக்டர்: யோவ். இது ஆஸ்பிடல். நான் டாக்டர்ய்யா...
பிச்சைகாரர்: பாவம் பண்ணுறவங்க தான் தர்மம் பண்ணுவாங்கன்னு இங்கே வந்தேன் சாமி...

==============

பேஷன்ட்: எனக்கு வந்தது ஜுரம் இல்லேன்னு எப்படி டாக்டர் சொல்றீங்க?
டாக்டர்: நான் கொடுத்த மருந்தை சாப்புட்டு சரியாயிடுச்சுன்னு சொல்றீங்களே. அதுனாலே தான் சொல்றேன்.

==============

பேஷன்ட்: எனக்கு ஆஃபிஸ்லே தூக்கமா வருது.... டாக்டர்!
டாக்டர்: தூக்கம் வரலையின்னா தான் பிரச்சனை. you are perfectly all right.

==============

பேஷன்ட்: எனக்கு எதை சாப்பிட்டாலும் வாந்தி வருது... டாக்டர்!
டாக்டர்: அப்போ.. சாப்பிடாம இருங்க. என்ன வருதுன்னு பாப்போம்?

==============

பேஷன்ட்: டாக்டர்...என் கையை எக்ஸ் ரே எடுக்கும் போது, கை எரிஞ்சு போச்சு டாக்டர்!
டாக்டர்: சாரிப்பா...எக்ஸ் ரே மிஷின்னுக்கு பதிலா லேசர் மிஷினை வாங்கிகிட்டு வந்துட்டேன் போல.

==============

பேஷன்ட்: ஒரு மாசமா உங்ககிட்டே வைத்தியம் பாத்தும் ஒன்னுமே சரியாகாதது வருத்தமா இருக்கு டாக்டர்!
டாக்டர்: என் சர்வீஸுலேயே நான் ஒரு மாசம் வைத்தியம் பாத்து உயிரோட இருக்குறது நீங்க ஒருத்தர் தான். அதை நினச்சு சந்தோஷப்படுங்க..

==============

பேஷன்ட்: அந்த ஸ்டதஸ்கோப்பை உங்க கையிலே பாத்தா வேற மாதிரி தெரியுது...டாக்டர்!
டாக்டர்: எப்படி தெரியுது?
பேஷன்ட்: பாசக் கயிறு மாதிரி தெரியுது டாக்டர்!

===============

நர்ஸ்: நம்மகிட்டே ஒரு யூனிட் ரத்தம் தான் இருக்கு. ஆனா ரெண்டு யூனிட் தேவைப் படுது...டாக்டர்!
டாக்டர்: பரவாயில்லே.. கொஞ்சம் தண்ணி கலந்து ரெண்டு யூனிட்டா மாத்திடுங்க..!

===============

இளசு
03-11-2008, 08:01 PM
என்ன லெனின்..

இத்தனை மருத்துவச் சிறப்பு நகைச்சுவைகளை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள்..

எல்லாமே எண்ணிச் சிரிக்க வைத்தன..

வக்கீல்களை வாரும் அண்ணல் கரிகாலன் தொடருண்டு மன்றத்தில்.. ஒன்றே ஒன்றுதான்..

மென்பொருள் வல்லுநர்கள் பற்றி அவ்வப்போது திரிகள் வரும்..

ஆனால் வற்றாத நகைநதி - மருத்துவர்கள் தொடர்புடையவை...


தொடர்ந்து கலக்குங்கள் லெனின்.. பாராட்டுகள்!

ராஜா
04-11-2008, 03:02 AM
ப்ரகாசமான சிரிப்புகள் லெனின்..!

அதிலும் பிச்சைக்காரன் ஜோக் அதிர்வேட்டு..!

Narathar
04-11-2008, 03:21 AM
இளசு சொன்னதுபோல இந்த வைத்தியர்களை கலாய்க்காத பத்திரிகைகளும் இல்லை இணையதளங்களும் இல்லை!!!!

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

சிவா.ஜி
04-11-2008, 04:03 AM
நகைச்சுவையே ஒரு நல்ல வைத்தியம், அதிலும் வைத்தியர்களைக் கலாய்க்கும் இந்தவகை நகைச்சுவைகள் அருமை. நன்றி லெனின்.

ஜெயாஸ்தா
04-11-2008, 04:10 AM
முடிவாய் என்ன சொல்ல வர்றீங்க...? இதைப்படித்து சிரித்து வயிற்றுவலி வந்தால் மருத்துவரிடம் போகலாமா? வேண்டாமா? மனதை குதூகுலமாக்கிய நகைச்சுவையை தந்ததற்கு நன்றி.

poornima
04-11-2008, 04:25 AM
சரியான இம்சை வைத்தியாரா இருப்பார் போல..

நல்ல நகைச்சுவை துணுக்குகள்.பாராட்டுகள் லெனின்

நம்ம பங்குக்கு ஒண்ணு

நோயாளி : டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பொழச்சிருவேனா?
டாக்டர் : ஸ்.. போஸ்ட்மார்ட்டம் பண்றப்ப இந்த மாதிரியெல்லாம் கேள்வி
கேட்க கூடாது

ஜெயாஸ்தா
04-11-2008, 04:35 AM
நாங்களும் சொல்வோமுல்ல...!

'நல்லாத்தானேயிருந்தாரு டாக்டரு..! அவருக்கு எப்படி தீடீர்ன்னு ஹார்ட்அட்டாக் வந்தது?'

'அவர் அறுவை சிகிச்சை செய்த நோயளிகளில் யாரேவொருர் பிழைத்துவிட்டார் என்ற செய்தி கேட்டதும்தான்...!

poornima
04-11-2008, 04:41 AM
நல்லா இருக்கு ஜெயாஸ்தா..

நோயாளி : டாக்டர் எனக்கு பயமாயிருக்கு இந்த ஆபரேஷன்ல நான் பொழப்பேனா சாவேனான்னு

டாட்டர் : இப்ப இப்படித்தான் பயப்படுவீங்க.. அப்புறமா பேயா வந்து
என்னை பயமுறுத்துவீங்க

ஜெயாஸ்தா
04-11-2008, 04:53 AM
நல்லா இருக்கு ஜெயாஸ்தா..

நோயாளி : டாக்டர் எனக்கு பயமாயிருக்கு இந்த ஆபரேஷன்ல நான் பொழப்பேனா சாவேனான்னு

டாட்டர் : இப்ப இப்படித்தான் பயப்படுவீங்க.. அப்புறமா பேயா வந்து
என்னை பயமுறுத்துவீங்க

இது அதைவிட நல்லாயிருக்கு...! :lachen001: :lachen001: :lachen001:

ஓவியா
04-11-2008, 12:26 PM
எல்லாமே கலக்கலா இருக்கு, சபாஷ்.

''ஆனாலும் தலைப்பில் டாக்டர் பிரகாஷ்னு போட்டது நகைச்சுவையின் உச்சம்'

நன்றி மக்களே..

எனக்கு டாக்டர்கள் என்றாலே அலர்ஜி, என்னை நிரம்பவே கொடுமை செய்துள்ளார்கள்....அதனால் நான் செத்தா முதலில் டாக்டர் வீட்டுக்கு பேயா போய்தான் என் வாலுதனத்தை ஆரம்பிப்பேன்....

எனக்கு பல் சர்ஜரி செய்த டாக்டர் ரொம்ப அழகா அன்பா இருந்தார் அதனால் அவர் மட்டும் என் லிஸ்டில் எஸ்கேப்,...

மன்மதன்
05-11-2008, 01:15 PM
பேஷன்ட்: டாக்டர்...என் கையை எக்ஸ் ரே எடுக்கும் போது, கை எரிஞ்சு போச்சு டாக்டர்!
டாக்டர்: சாரிப்பா...எக்ஸ் ரே மிஷின்னுக்கு பதிலா லேசர் மிஷினை வாங்கிகிட்டு வந்துட்டேன் போல.
===============

ஹாஹ்ஹா....அட்டகாசமான ஜோக்ஸ்..!!

அறிஞர்
05-11-2008, 02:06 PM
ம்ம்ம் லெனின் சிரிப்புக்களை வெகு நாட்கள் கழித்து படிக்கிறேன்...

டாக்டர் பிரகாஷ்... லெனின் கையில் அவதிப்படுகிறார்..

தீபா
05-11-2008, 02:34 PM
எனக்கு டாக்டர்கள் என்றாலே அலர்ஜி, என்னை நிரம்பவே கொடுமை செய்துள்ளார்கள்....அதனால் நான் செத்தா முதலில் டாக்டர் வீட்டுக்கு பேயா போய்தான் என் வாலுதனத்தை ஆரம்பிப்பேன்....
...

இளசு சார்.. நொட் திஸ் பாய்ண்ட்

:D :D :D :D

lenram80
22-12-2008, 01:14 PM
மிக்க நன்றி......
இளசு
ராஜா
நாரதர்
சிவாஜி
ஜெயஸ்தா
பூர்ணிமா
ஓவியா
மன்மதன்
அறிஞர்
தென்றல்....

arun
22-12-2008, 06:44 PM
ஆகா அனைத்தும் சூப்பரான ஜோக்குகள் பாராட்டுக்கள்

இன்னும் தொடரலாமே?

பாலகன்
22-12-2008, 06:59 PM
டுபாகூர் டாக்குடரு டாப் டக்கரு.... அனைத்து சிரிப்புகளும் அசத்தல் நண்பரே

shibly591
23-12-2008, 12:10 AM
வாரே வாவ்...என்று குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தாலும் ஏதோ ஒரு குறை தெரிகிறது..

முத்தாய்ப்பாய் இன்னும் பல நகைச்சுவைகள் தந்து எங்களை மகிழ்வியுங்கள்.

பாராட்டுக்கள்

aren
23-12-2008, 02:44 AM
மருத்துவர்களின் நகைச்சுவை அருமை.

உமாமீனா
06-03-2011, 09:12 AM
:lachen001::lachen001:ஒவ்வொன்றும் அருமை :lachen001::lachen001: