PDA

View Full Version : யுனிகோடு சம்பந்தமாக........??????



shibly591
03-11-2008, 06:40 AM
யுனிகோடில் தட்டச்சு செய்யப்பட்ட தமிழ் ஆக்கங்களை மீண்டும் பாமினி அல்லது வேறு தமிழ் பொன்ட் இற்கு மாற்ற முடியுமா...?????

மன்ற நண்பர்களே உதவுங்களேன்..

நன்றிகள்

அன்புரசிகன்
03-11-2008, 06:45 AM
நிச்சயமாக... இந்த NHM என்ற நிறுவன மென்பொருட்களில் NHM writer and NHM Converter என்பதில் converter மூலம் செய்யலாம்.

இது முற்றிலும் இலவசம்.

இங்கே (http://software.nhm.in/Products/NHMConverter/tabid/60/Default.aspx) சென்று இந்த மாற்றியை பதிவிறக்குங்கள்...

பாரதி
03-11-2008, 07:01 AM
நல்ல தகவலுக்கு நன்றி அன்பு.

அன்பு ஷிப்லி, சுரதா அவர்களின் இணையப்பக்கத்தில் நீங்கள் கேட்ட மென்பொருளும் கிடைக்கிறது. உதாரணமாக ஒருங்குறியில் இருந்து பாமினி எழுத்துருவிற்கு மாற்ற தட்டச்ச வேண்டிய சுட்டி :
http://www.suratha.com/uni2bam.htm

அன்புரசிகன்
03-11-2008, 07:09 AM
ஆம். சுராதா இணையத்தில் முன்பிருந்தே உள்ளது. தனித்தனி எடிட்டரில் தான் உள்ளது.

ஆனால் இந்த NHM மென்பொருள் மூலம் ஒரே எடிட்டரில் செய்யவல்லது. இணையம் தேவையில்லை..

இந்த NHM ஐ அறிமுகப்படுத்திய பெருமை பாரதியண்ணாவுக்குத்தான்...

shibly591
03-11-2008, 07:17 AM
அன்பு மற்றும் பாரதிக்கு நன்றிகள்..

ரங்கராஜன்
03-11-2008, 09:03 AM
நண்பரே என்னால் NHM மென்பொருளை உபயோகிக்க முடியவில்லை அதை நான் என் கணினியில் ஏற்றி விட்டேன், ஆனால் அதை திறக்க முடியவில்லை, உதவுங்கள்

அன்புரசிகன்
03-11-2008, 10:15 AM
மணிபோன்ற அடையாளம் ஒன்று start up bar உங்களுக்கு தென்படுமே.. அது active ஆக உள்ளபோது தங்க நிறத்திலும் இல்லாத போது வெள்ளி நிறத்திலும் தெரியும்.

அதை உங்கள் setting ற்கு ஏற்றாற்போல் மாறும். உ - ம் alt + 2 என நீங்கள் தெரிந்தால் அது வரும். அதற்கு அந்த மணி icon ல் right click செய்து வருவதில் settings ஐ தெரிய வேண்டும்.

http://slcuesne.dot5hosting.com//mantram/pics/stnhm.JPG

ரங்கராஜன்
03-11-2008, 11:38 AM
நண்பரே
என்னால் இன்னும் உபயோகிக்க முடியவில்லை, நான் இ-கலப்பை வைத்திருக்கிறேன், அதை uninstall செய்துவிட்டு தான் செய்யமுடியுமா?

பாரதி
03-11-2008, 01:08 PM
அன்பு மூர்த்தி,
நீங்கள் என்.ஹெச்.எம் ரைட்டர் குறித்து வினவுகிறீர்களா அல்லது என்.ஹெச். எம் எழுத்துரு மாற்றி (கன்வெர்ட்டர்) குறித்து வினவுகிறீர்களா?

ரைட்டரை உபயோகிக்க இ-கலப்பையை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. இ-கலப்பையை நிறுத்திவிட்டு அதை மூடி விடுங்கள். (இல்லாவிடில் ஆல்ட்+2 விசைகளை உபயோகிக்கும் போது சிரமம் ஏற்படக்கூடும்.) ஸ்டார்ட் - ஆல்புரோகிராம்ஸ் - என்.ஹெச். எம் ரைட்டரில் உள்ள என்.ஹெச்.எம் ரைட்டரை இயக்குங்கள். உங்கள் கணினியின் திரையில் உள்ள டாஸ்க்பாரில் ஒரு மணி தெரியும். அதை மெளஸின் வலது பொத்தானால் சொடுக்கினால் உங்களுக்கு தேவையான விபரங்கள் தெரியவரும். மற்றவற்றை அன்புவின் பதிலில் உள்ளதை போல பார்த்துக்கொள்ளுங்கள்.

ரங்கராஜன்
03-11-2008, 02:43 PM
நன்றி பாரதி
நான் கொஞ்சம் டியூப்லைட், எனக்கு ஏற்றார் போல சொன்னதுக்கு நன்றி, உங்களின் பதிலின் விளைவை தான் படித்துக் கொண்டு இருக்கிறீர்கள், இது அதில் டைப் செய்தது தான்

Mathu
15-01-2009, 08:48 AM
மிக நல்ல தகவல் அன்பு, நீண்ட நாட்களாக போட்டொ சொப் இல்
தமிழில் எழுத சிரம பட்டு கொன்றிருந்தேன். இனி அந்த தொல்லை
இல்லை.

அடோப் போட்டொ சொப் 7 இல் யுனிகோட்டில் எழுத முடியவில்லை.

அன்புரசிகன்
15-01-2009, 10:24 AM
அண்மையில் உதயாவிற்கும் சொன்னேன். உங்களுக்கு பாமினி முறையில் எழுத தெரிந்தால் நேரடியாக போட்டோ சொப்பில் எழுதலாம். CS3 ல் நேரடியாக யுனிக்கோட்டில் எழுதலாம். 7ல் எழுதமுடியவில்லை என்கிறீர்கள். அதுபற்றி என்னால் பரிசோதிக்க முடியாதமைக்கு வருந்துகிறேன்.

இதற்கு பரிகாரமாக அங்கே கூறியது தான். பாமினி முறையில் எழுதமுடியாவிட்டால் notepad ல் யுனிக்கோடாக எழுதி பின்னர் NHM converter மூலம் பாமினி எழுத்துருவிற்கு மாற்றலாம்.

முயன்றுபாருங்கள்.

Mathu
15-01-2009, 02:24 PM
இதற்கு பரிகாரமாக அங்கே கூறியது தான். பாமினி முறையில் எழுதமுடியாவிட்டால் notepad ல் யுனிக்கோடாக எழுதி பின்னர் NHM converter மூலம் பாமினி எழுத்துருவிற்கு மாற்றலாம்.

முயன்றுபாருங்கள்.

இதுவரை அப்படி தான் பாமினி முறையில் எழுதுவேன், ஆனால் அது மிக சிரமம். இப்போ இந்த கொன்வேற்ரர் மிக இலகுவாக்குகிறது.
மீண்டும் நன்றிகள் அன்பு

ஆர்.ஈஸ்வரன்
16-01-2009, 10:26 AM
யுனிகோடில் தட்டச்சு செய்யப்பட்ட தமிழ் ஆக்கங்களை மீண்டும் பாமினி அல்லது வேறு தமிழ் பொன்ட் இற்கு மாற்ற முடியுமா...?????

மன்ற நண்பர்களே உதவுங்களேன்..

நன்றிகள்

www.suratha.com
சென்று பாருங்கள்