PDA

View Full Version : சென்று வா அனில்



leomohan
02-11-2008, 09:45 AM
இன்று அனில் கும்பளே தன்னுடைய ஓய்வை அறிவித்த போது என்றுமே எதற்குமே அசையாத ஜம்போ முன்னாள் கிரிகெட் வீர்ர்களின் பிதற்றல்களும் பத்திரிகை துறையின் புலம்பலுக்கும் வளைந்து கொடுத்துவிட்டாரோ என்றே தோன்றியது.

40 வயதிற்கும் மேற்பட்ட பல கிரிகெட் வீர்ர்களின் விளையாட்டை பார்த்திருக்கிறோம். இவரிடம் இன்னும் இரண்டு-மூன்று ஆண்டுகளுக்கு விளையாடும் திறன் இருக்குமோ என்றே தோன்றுகிறது.

பலமுறை தலைகட்டுடனும், கையில் கட்டுகளுடனும் இவர் விளையாடியதை பார்க்கும் போது இவரிடம் கற்றுக் கொள்ள கிரிகெட்டை தவிர பல விஷயங்கள் உள்ளன என்று அறியலாம்.
தைரியம், மனதிடம், வலிமை, எந்த சூழலிலும் தோல்வியை ஏற்காத மனப்பானமை, நேர்மை, தேசப்பற்று, எதையும் செய்யத்துடிக்கும் நெருப்பு, கடின உழைப்பு என்று பல குணங்கள் உண்டு.

இவர் ஒரு கிரிகெட் சகாப்தம். இவரை இழந்து நிற்கிறது இன்றை இந்திய கிரிகெட்.

சுமார் 500 விக்கெட் எடுத்து பிறகு அவர் கொடுத்த பேட்டியை பார்த்த போது அவர் சொன்னது நினைவிற்கு வருகிறது. இன்று லெக் ஸ்பின் எனும் புதிய பந்து வீச்சு முறையை மீண்டும் கண்டறிந்தேன் என்று.
வேகப்பந்து வீச்சாளரின் வேகம், சராசரி ஸ்பின்னர்களை விட அதிகமான ஓட்ட தூரம், எந்த நேரத்திலும் எந்த ஆடுகளத்திலும் விக்கெட்டுகள் வீழ்த்தும் திறமை இனி நாம் காட் டிராவிட் போல்ட் கும்பளே என்பதை காணமுடியாமல் போக்கிவிட்டதே எனும் துக்கம் நெஞ்சை அடைத்துக் கொள்ளச் செய்கிறது.

எந்த பிரச்சனையிலும் மாட்டாதவர், விளையாட்டில் அரசியல் புகுந்த போதும் அதில் தலையிடாதவர் ஆடுகளத்தில் சூரன் அனைவரின் நெஞ்சில் நிற்கும் ஜம்போ.

பாகிஸ்தானுடன் எடுத்த 10 விக்கெட்டுகளாகட்டும், உலக கோப்பையில் சிரிநாத்துடன் அவருக்குள் ஒளிந்திருந்த மட்டையாளரின் திறமையாகட்டும் சமீபத்தில் அவர் தன்னுடைய முதல் சதம் அடித்த போது காட்டிய குழந்தையின் குதுகுலமாகட்டும் அவர் இந்த ஆட்டத்தின் மீது வைத்திருந்த அளப்பரியா அன்பை காட்டும்.

அனில், ஓய்வு பெறுங்கள். மற்றவர்களுக்கு கற்றுத்தாருங்கள். எப்படி பந்து வீசுவது என்பது அல்ல. அதை கற்றுக் கொடுக்க பலர் இருக்கிறார்கள். எப்படி கிரிகெட் விளையாடுவது என்பதை. எங்கிருந்து வரும் அந்த நெருப்பு, அதை எப்படி ஆடுகளத்தில் காட்டுவது என்பதை. எப்படி தோல்வியிலிருந்து வெற்றியை மீட்டு வரவேண்டும் என்பதை.

சென்று வா அனில். வாழ்த்துகள்.

Narathar
02-11-2008, 09:55 AM
அனில், ஓய்வு பெறுங்கள். மற்றவர்களுக்கு கற்றுத்தாருங்கள். எப்படி பந்து வீசுவது என்பது அல்ல. அதை கற்றுக் கொடுக்க பலர் இருக்கிறார்கள். எப்படி கிரிகெட் விளையாடுவது என்பதை. எங்கிருந்து வரும் அந்த நெருப்பு, அதை எப்படி ஆடுகளத்தில் காட்டுவது என்பதை. எப்படி தோல்வியிலிருந்து வெற்றியை மீட்டு வரவேண்டும் என்பதை.

சென்று வா அனில். வாழ்த்துகள்.

மிகச்சரியாகச்சொன்னீர்கள்.....

இலங்கை அணிக்கு அடுத்து நான் மனதார நேசிக்கும் ஒரு அணியென்றால் அது இந்திய அணிதான்.

இலங்கையோடு அவர்கள் விளையாடும்போது மட்டும் எனது ஆதரவு அவர்களுக்கு இருக்காது!!!!

உண்மையில் அனில் கும்ளெயின் இழப்பென்பது இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய இழப்புத்தான்...

மோஹன் சொன்னது போல் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம்...

நம்ம அர்ஜுணாவை விடவா அவர் வயசாயிட்டார்???

மதி
02-11-2008, 11:48 AM
இந்திய அணியில் ஒரு சகாப்தம். இவரது ஓய்வு மிகப்பெரிய இழப்பே. வாழ்த்துகள் அனில்

ராஜா
02-11-2008, 04:20 PM
தளபதி படத்தில், அதிக குண்டுகள் வாங்கிய ரஜினி உயிரோடிருப்பார்.. ஒரே ஒரு குண்டு பட்ட மம்மூட்டி உயிரிழப்பார்..

அதுபோல, தாதாவின் ஓய்வு அறிவிப்பை நாம் பேசிக்கொண்டிருக்க ஜம்போவின் அறிவிப்பு சற்றே புருவத்தை உயர்த்த வைத்தது.

எல்லோரும் ஒருநாள் ஓய்வு பெற வேண்டியவர்களே என்று அறிவு சொன்னாலும், அனில் கூடவா என்று மனம் கேட்கிறது.

அறிவாளர் மோகன் சொன்னது போல ஒரு போராட்டகுணமுள்ள வீரரை இழந்து நிற்கிறது இந்திய அணி.

மேற்கிந்திய பயணத்தின்போது, தாடை உடைந்த நிலையில் தையல்களுடனும் கட்டுடனும், பெயின் கில்லர் எடுத்துக்கொண்டு பந்துவீசி விக்கெட் வீழ்த்தியது நினைவிலிருந்து அகலாது.

கும்ப்ளே விட்டுச் சென்ற இடம் சரியான முறையில் நிரப்பப்பட நாட்கள் மிக எடுக்கும்.

சென்று வா வீர மகனே..!

paarthiban
07-11-2008, 11:51 PM
அனில் ஒரு கிரிக்கெட் ஸ்டேட்ஸ்மென்!
அவருடைய விலகல் கிரிக்கெட் உலகில் விழுந்த வெற்றிடம்!
சுழல் பந்தை அதிகம் சுழற்றாமலே பலரை வீழ்த்திய சூறாவளி!

arun
10-11-2008, 02:39 AM
அனில் கும்ப்ளே இக்கட்டான பல தருணங்களில் நமது அணியை மீட்டு இருக்கிறார் கண்டிப்பாக அவரது இடத்தை நிரப்ப பல ஆண்டுகள் ஆகலாம்