PDA

View Full Version : கொடுங்கோல் சிங்கள அரசின் கொலைப்படை! அதிர்ச்சித் தகவல்!!மர்மயோகி
02-11-2008, 04:42 AM
கொடுங்கோல் சிங்கள அரசின் கொலைப்படை! அதிர்ச்சித் தகவல்!!

கடந்த காலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் தம்மால் கடத்தப்பட்ட அப்பாவிகளை சித்திரவதை செய்து கொன்று புதைத்து, சிதைத்து எறிந்துவந்த சிங்கள கொடுங்கோல் அரசு.. பல்வேறு நாடுகளினதும் மனித உரிமை மீறல் தொடர்பான எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து.. தடயமே இல்லாமல் கொன்றழிக்கும் பயங்கரத்தில் ஈடுபட்டிருக்கிறது. இதில் அப்பாவித் தமிழ் மக்கள் மட்டுமல்ல அரசின் கொடுங்கோல் அராஜகத்திற்கெதிராக குரல் கொடுக்கும் சிங்கள இனத்தவரையும் பலிகொடுத்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக விவரங்கள்...
-----------------

மகிந்த சகோதரர்களின் தயாரிப்பில் பிசாசுப்படை - நெறியாள்கை பிரிகேடியர் ஜயநாத் பெரேரா - படப்பிடிப்பு கம்பஹா - கடத்தப்படுபவர்களுக்கு நேரும் கொடூரம்!!!

(வெள்ளிக்கிழமை- 31 ஒக்ரேபர் 2008 - இராணுவ நிருபர்)
ஆட்கடத்தல் காணாமல் போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் மஹஷோன் பலகாய (பிசாசுப்படை) எனும் அமைப்பு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக க்கிய தேசியக் கட்சியினர் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தனர் அல்லவா? இது தொடர்பாக கிடைத்த இராணுவ உயர்வட்டார இரகசிய தகவல் வெளியே கசியத்தொடங்கியுள்ளது.

தென்னிலங்கையில் சந்தேகத்தின் பேரில் கடத்தப்படும் தமிழர்கள் தொடர்பில் கடந்த இரண்டு வருடங்களாக நீடிக்கும் மர்மம் மெல்லமெல்ல பாராளுமன்றம் வரைக்கும் கசியத்தொடங்கியுள்ளது.

இது இப்போது பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் அதிலும் குறிப்பாக அரசை எதிர்ப்பவர்களுக்கும் விமர்சிப்பவர்களுக்கும் எதிராக மகிந்தவின் சகோதரர்களின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட பிசாசுப்படை ஏவிவிடப்பட்டுள்ளது.

இந்த இரகசிய படையின் உருவாக்கத்தில் கோத்தபாய பிதாமகனாக கருதப்படுகிறார்.இவர்களுக்கு மிக நம்பிக்கையான இராணுவ அதிகாரியான பிரிகேடியர் ஜயநாத் பெரேரா இதற்கு தலைமை வகித்து வருகிறார்.

தென்னிலங்கையில் கொல்லப்பட்ட பலரது சடலங்கள் உருக்குலைந்த நிலையில் ஆங்காங்கே வீசப்பட்டு வந்தது தெரிந்ததே.இது சென்ற வருடத்தில் அதிகமாக இருந்தது.இந்த நடவடிக்கை தென்னிலங்கையில் பயப்பீதியை தமிழர்களுக்கு ஏற்படுத்தி புலிகளுக்குஆதரவளிப்பவர்களை அச்சம் கொள்ள வைப்பதே கோத்தபாயவின் உளவியலாக இருந்தது.

ஆனால் இந்த பீதி கொள்ளும் நடவடிக்கை சர்வதேச பார்வையாளர்கள் மத்தியில் அரசாங்கம் தொடர்பான எதிர்வினைகளை ஏற்படுத்தியது.எனவே இதற்கு மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டிய கட்டத்துக்குள் தள்ளப்பட்டது மகிந்த அரசு.இப்போது அது பிசாசு படை பிரிவின் பெயரில் செயற்பட தொடங்கியது.அதன் பெயருக்கு ஏற்றபடி மிக இரகசியமாக பெரும்பான்மை சிங்களவர்கள் வசிக்கும் கம்பஹா மாவட்டத்திலுள்ள இரகசிய இடம் தெரிவு செய்யப்பட்டு கடத்தப்படுபவர்கள் அங்கு கொண்டு செல்லப்படுவர்.

இங்கு இரண்டு கூடங்கள் உள்ளது.முதலாவது வாயு அறை.இரண்டாவது இரசாயன அறை.முதலில் கடத்திச் செல்லப்படுபவர்கள் பல விதமான சித்திரவதைகள் செய்யப்பட்டு இங்கு வாயு அறையில்(காஸ் சேம்பர்) போட்டு சித்திரவதை செய்யப்படுவார்கள்.இதில் சந்தேக நபர் கொல்லப்பட வேண்டியவராகவோ அல்லது வழமையான சித்திரவதையில் பாதிக்கப்பட்டு வெளியே விட்டால் இதன் சு10த்திரதாரிகளை அடையாளம் காட்டிவிடும் எனக்கருதினால் இரண்டாவதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இரசாயன அறையில் (லிக்குவிட் சேம்பர்)போடப்படுவார்.இது ஒரு வகையில் எச்சமில்லாத பிரேத அறை.இதன் பின்னர் தார்(வீதிக்கு போடும் தார்) போன்ற எச்சமே மிஞ்சுமாம்.இது தான் பிசாசு படையின் கதையின் இறுதி முடிவு.இது கதையல்ல நிஜம்.

இந்த வருடத்தில் மட்டும் கடத்தப்பட்ட 159 பேரின் நிலமை இதுவரை தெரியவில்லையென தெரிகிறது. இந்த 159 பேரும் எந்த அடையாளமுமின்றி இந்த பிசாசு படையால் கொல்லப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகமாகவுள்ளது.

இந்த பிசாசுப்படையின் சேவையில் முன்னாள் ஓய்வு பெற்ற முப்படைகளின் அதிகாரிகளும் இணைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் எல்லோரையும் நெறிப்படுத்துபவராக பிரிகேடியர் ஜயநாத் பெரேரா உள்ளார்.
----------------------

செய்தி உதவி: நிதர்சனம் இணையத்தளம்.

உதயசூரியன்
02-11-2008, 05:34 AM
சிங்கள அரசு வெறி பிடித்து ஆடுகிறது..
புத்த மதத்தை புதை குழியில் தள்ளி... கொலை வெறி கூத்தாடும் கொடியவர்களிடம் இது புதிதல்ல..
சிலர்... தான் பதவிக்கு வர என்ன வேண்டுமானாலும் செய்யும் கீழ் தர புத்தியுடையவர்கள்..
இங்கே சிங்களர் அனேகருக்கு அப்படி தான் போலும்..
அவர்களே மக்களை கொல்வது.. எங்கே கொண்டு போய் விடுமோ..
உலக நாடுகள்.. கோழைகள்..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

மர்மயோகி
07-11-2008, 03:19 PM
இந்திய மக்களின் நிவாரண உதவிகள் எதுவும் வன்னியில் வாடும் தமிழ் உறவுகளுக்குப் போய்ச் சேரப்போவதில்லை.

இன்றைய செய்திகளின்படி குழந்தைகளுக்கான பால்மா உணவு வகைகள் மற்றும் எந்தவித அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக்கூட வன்னிப் பகுதிக்கு எடுத்துச்செல்ல சிங்கள இனவெறி இரத்தவெறி இராணுவம் அனுமதி மறுத்திருக்கிறது. யாருக்கு? செஞ்சிலுவைச் சங்கத்துக்கு!

எனவே இந்தியாவிலிருந்து வரும் அத்தனை நிவாரணமும் மஹிந்த அன்ட் கம்பெனியால் கொழும்பில் வைத்து ஏப்பம்விடப்படுமே தவிர தமிழ் மக்களைப் போய்ச் சேரவே போவதில்லை.

கவிஞர் தாமரை தன் உரையில் குறிப்பிட்டிருப்பதுபோல் இந்திய மக்கள் ஓடோடித் தேடிச் சேர்த்து அனுப்பும் நிவாரணப் பொருட்களனைத்தும் சிங்கள இனவெறி அரசின் வாய்க்குள்தான் போய்விழும்.

நேரடியாக கப்பலில் வன்னிக்கு நிவாரணப் பொருட்களை அனுப்ப தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்!!!

------------------------------------

அமரன்
07-11-2008, 03:37 PM
அன்பர்களுக்கு..

இங்குள்ள செய்திகள் பற்றி ஏற்கனவே அலசப்பட்டுள்லது. எனவே அதனை வெறும் செய்தியாக மட்டும் பாருங்கள்.

நன்றி.

அமரன் (http://www.tamilmantram.com/vb/member.php?u=2560)
பொறுப்பாளர்