PDA

View Full Version : விழிப்புடன்...

தமிழ்தாசன்
31-10-2008, 11:36 AM
விழிப்புடன்...
வந்து வீழ்ந்துவிட்ட
பூமித்தாயின் மடியில்,
சிந்திய துளிகளில்
சுகவாழ்வின் உச்சம் தேடும்
விழிகள் விரித்து,
உளம் சிரித்து,
இலக்கு நோக்கி
எண்ணங்கள் ஓடும்.

தாய்மொழியுள்,
தேசத்துறவுள் - சொந்தம்
ஆயுள் போயினும் கலந்திடும்.

முன்னும் முதுகின்பின்னும்,
அருகிலும், அகலமாய்,
விழிகள் விழித்திருக்க,
விழிமூடித்தூங்கும் இரவுகள்
சுகமான போதும்,
உலகும்-உலகுதாவியும்,
உலவ வேண்டும்
மனக்கண்கள் விழிப்புடன்...

அமரன்
01-11-2008, 09:26 AM
முதலில் மன்றத்திலிட்ட முதல்கவிக்கு பாராட்டுகள் தமிழ்தாசன்.

தூங்காத இரவுகளுடன் உறவாடி
தூங்க இரவுகள் தருபவர்களின்
விழிப்புத்தவமாய்
கருக்கொள்ள வைக்கிறது கவிதை.

உங்கள் பதிலை எதிர்பார்த்து

பென்ஸ்
02-11-2008, 10:49 PM
மன்றத்தில் உங்களை வரவேற்க்கிறேன் தமிழ்தாசன்...

முதல் கவியிலையே எங்களை மண்டையை பிக்க வைத்து , புரிய வேண்டி பல முறை வாசிக்க வைத்தமைக்கு நன்றி.... (பின்ன என்னாங்க, பல நாட்க்களுக்கு பின் நான் படித்த முதல் கவியே ரொம்ம்ம்ம்ம்ப கஷ்டமா இருக்கு)

சரி இப்போ கவிதைக்கு....

கண் இருண்டால், புலங்களில் ஒன்று இல்லாமல் போகும்..
மனம் இருண்டால்.. புலமே இல்லாமல் அல்லவா போகும்..!!!

மனக்கண்ணை மீண்டும் ஒரு முறை உரசி சென்ற கவிதை... பாராட்டுகள்...

இளசு
08-11-2008, 10:34 AM
தென்றல், புயல்
வேனில், மழை..
வெளியில் எதுவாயினும்...

உட்சோதி ஒன்று
நிலையாக ஒளிரும்...

மனவிழிப்பு...
மரணம் வரை
அதன் இருப்பு..

வாழ்த்துகள் தமிழ்தாசன் அவர்களே!

தமிழ்தாசன்
24-11-2008, 08:37 PM
பாராட்டுகளும்,வாழ்த்துகளும் சூட்டிய
அமரன் அவர்கள்,பென்ஸ் அவர்கள்.இளசு அவர்கள்
அன்புள்ளங்களுக்கு மகிழ்ச்சி.

அமரன் அவர்களே!

முதலில் மன்றத்திலிட்ட முதல்கவிக்கு பாராட்டுகள் தமிழ்தாசன்.

தூங்காத இரவுகளுடன் உறவாடி
தூங்க இரவுகள் தருபவர்களின்
விழிப்புத்தவமாய்
கருக்கொள்ள வைக்கிறது கவிதை.

உங்கள் பதிலை எதிர்பார்த்து

இரவு உறக்கத்தை துறந்து மற்றவர்க்காய் இரவு தருபவர்கள் போற்றுதற் குரியவர்கள். இதுவும் வரியில் கலங்திருந்தாலும்,

இங்கே பென்ஸ் அவர்கள் சுட்டுவதும்..

மன்றத்தில் உங்களை வரவேற்க்கிறேன் தமிழ்தாசன்...

முதல் கவியிலையே எங்களை மண்டையை பிக்க வைத்து , புரிய வேண்டி பல முறை வாசிக்க வைத்தமைக்கு நன்றி.... (பின்ன என்னாங்க, பல நாட்க்களுக்கு பின் நான் படித்த முதல் கவியே ரொம்ம்ம்ம்ம்ப கஷ்டமா இருக்கு)

சரி இப்போ கவிதைக்கு....

கண் இருண்டால், புலங்களில் ஒன்று இல்லாமல் போகும்..
மனம் இருண்டால்.. புலமே இல்லாமல் அல்லவா போகும்..!!!

மனக்கண்ணை மீண்டும் ஒரு முறை உரசி சென்ற கவிதை... பாராட்டுகள்...

அடுத்து இங்கே இளசு அவர்கள்..

தென்றல், புயல்
வேனில், மழை..
வெளியில் எதுவாயினும்...

உட்சோதி ஒன்று
நிலையாக ஒளிரும்...

மனவிழிப்பு...
மரணம் வரை
அதன் இருப்பு..

வாழ்த்துகள் தமிழ்தாசன் அவர்களே!

சுட்டுவதும்
'விழிப்புடன்' சுட்டுவது.