PDA

View Full Version : செய்தி துணுக்குகள்Adhikaalai
30-10-2008, 01:36 AM
இற(ர)வாமை வேண்டும் : ஆவணப்படம்
தமிழ்மன்ற நண்பர்கள் அனைவருக்கும் தாமதமான, அன்பான "தீபாவளி நல்வாழ்த்துக்கள்" இந்தத் தீபாவளி ஒரு முழுமையான மகிழ்ச்சியுள்ளதாக இருக்கமுடியாது.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6180&lang=ta&Itemid=163

Adhikaalai
30-10-2008, 01:39 AM
திரையுலகில் கால் பதித்து இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் நிறைவுபெறுவதால் இதை சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார் கமல்ஹாசன். தசாவதாரம் எதிர்பார்த்த அளவுக்குப் போகாவிட்டாலும், மர்மயோகி-யில் பல மர்மத் திருப்பங்களைக் கொண்டுவருவதில் தீவிரமாக உள்ளார்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6188&lang=ta&Itemid=68

aren
30-10-2008, 01:40 AM
2008*ல் மகப்பெரிய ஹிட் தசாவதாரம் என்று கேள்விப்பட்டேன், சரியாக போகவில்லை என்று சொல்கிறீர்களே.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் போட்ட பணத்திற்கு பல மடங்கு லாபம் சம்பாதித்து விட்டதாக தகவல்.

Adhikaalai
30-10-2008, 01:40 AM
ஸ்ரேயா வெறுமனே இப்படியெல்லாம் செய்தி போடச்சொல்லி பத்திரிகையாளர்களை நச்சரிப்பது அனைவருக்கும் தெரிந்ததே! காரணம் சமீபத்தில் ஸ்ரேயா ஓரங்கட்டப்பட்டுள்ளார். பட வாய்ப்புக்கள் எதுவும் இல்லாததால் கோயில் கோயிலாக ஏறி இறங்குகிறார்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6187&lang=ta&Itemid=68

Adhikaalai
30-10-2008, 01:43 AM
சங்கீதா ரொம்ப சந்தோசமாக இருக்கிறார். இருக்காதா பின்னே! இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒன்று தீபாவளி, மற்றொன்று பிறந்த நாள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கீதா! கூடவே அதிகாலையின் தீபாவளி வாழ்த்துக்களும்!

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6186&lang=ta&Itemid=68

Adhikaalai
30-10-2008, 01:55 AM
தமிழ்த்தேசிய முழக்கங்கள் எல்லாம், சிறைக் கம்பிகளின் அழுத்தத்திற்குப் பயந்து இந்திய இறையாண்மை பற்றிப் பேசியது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானபோது ஒரு பக்கம் அழுவதா இல்லை சிரிப்பதா என்கிற இனம் புரியாத ஒரு கலவையான உணர்வு எனக்குள் உருவாகியது. கட்டுரையின் சாரத்திற்குள் நுழைவதற்கு முன்னர், நாம் வாழுகின்ற ஒரு நிலப்பரப்பின் அரசியல் உணர்வையும், புரிந்துணர்வையும் நமது இளைஞர்களுக்குள் உருவாக்க வேண்டிய கடமை உணர்வுடன் இந்தக் கட்டுரையை வடிக்கிறேன். ஊடகங்களில் எழுதும் நண்பர்களுக்கும் இதே வேண்டுகோளை விடுக்கிறேன்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6229&lang=ta&Itemid=185

Adhikaalai
30-10-2008, 01:57 AM
காதலில் விழுந்தேன்' வெற்றி படத்துக்குப் பிறகு நகுலன் நடிக்கும் புதிய படத்தை புதிய இயக்குநர் மனோகர் இயக்குகிறார். இதற்கிடையில் நகுலனை, தான் இயக்கும் புதிய படத்தில் இரண்டு கதாநாயகர்களுள் ஒருவராக நடிக்க அழைப்பு விடுத்துள்ளார் கெளதம் மேனன்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6224&lang=ta&Itemid=68

Adhikaalai
30-10-2008, 02:04 AM
ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் பரத்-நிலா நடிப்பில் பாதியிலேயே நின்றுவிட்ட "கில்லாடி' படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் முதல் மீண்டும் தொடங்குகிறது.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6226&lang=ta&Itemid=68

Adhikaalai
30-10-2008, 02:10 AM
சிறந்த நடிகைக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆந்திர மாநில அரசின் உயர்ந்த விருதான நந்தி விருது இந்த ஆண்டு சினேகாவுக்கு கிடைத்துள்ளது. கே.அனில்குமார் தயாரிப்பில் பாபு இயக்கிய படம் ‘ராதா கோபாலா’. இப்படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6218&lang=ta&Itemid=52

Adhikaalai
30-10-2008, 02:23 AM
மலையாள நடிகை முக்தா எர்ணாகுலத்தில் தனது தந்தை தன்மீது சுமத்திய குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ப்ளாஷ் பேக் : இரண்டு நாட்களுக்கு முன்னர் முக்தாவின் தந்தை ஆவேசத்துடன் " முக்தா கிளாமராக நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை. மகளின் தந்தை என்ற முறையில் எனது மகள் கிளாமராக நடிப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6244&lang=ta&Itemid=68

Adhikaalai
30-10-2008, 02:24 AM
இலங்கையில் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளை ஏற்று நிதி குவிந்தது. இன்று ஒரு நாள் மட்டும் சுமார் 26 லட்ச ரூபாய் நிதி சேர்ந்தது. இலங்கையில் தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு உணவு பொருட்கள், உடைகள் மற்றும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6220&lang=ta&Itemid=52

Adhikaalai
30-10-2008, 02:26 AM
மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் ஓரிரு வாரத்தில் தொடங்குகிறது. திமுக கூட்டணியில் இருந்த பாமகவும், இடதுசாரி கட்சிகளும் அதிலிருந்து விலகி விட்ட நிலையில், திமுக அரசு 100 எம்எல்ஏக்களுக்கு மேலான எதிர்க்கட்சி வரிசையை எதிர் நோக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6221&lang=ta&Itemid=52

Adhikaalai
30-10-2008, 02:27 AM
தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து ராமேசுவரத்தில் தமிழ் திரை உலகத்தினர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினர்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6266&lang=ta&Itemid=55

Adhikaalai
30-10-2008, 02:28 AM
விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியப் பொறுப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் அடையாளம் தெரியாத மர்ம கும்பல் புகுந்தது. அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில் 4 பேர் பலியானார்கள். தாக்குதலுக்கு பின்னர், அங்கிருந்த 5 பேரை காணவில்லை. அவர்களை மர்ம கும்பல் கடத்திச் சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6227&lang=ta&Itemid=52

Adhikaalai
30-10-2008, 02:30 AM
தேசிய கீதத்தை 52 வினாடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டு சுற்றறிக்கை விட உள்ளது.தேசிய கொடியை எப்போது ஏற்றவேண்டும் எப்படி ஏற்றவேண்டும், தேசியகீதத்தை எவ்வளவு நேரத்திற்குள் பாடி முடிக்க வேண்டும்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6259&lang=ta&Itemid=52

சிவா.ஜி
30-10-2008, 03:58 AM
திரையுலகில் கால் பதித்து இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் நிறைவுபெறுவதால் இதை சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார் கமல்ஹாசன். தசாவதாரம் எதிர்பார்த்த அளவுக்குப் போகாவிட்டாலும், மர்மயோகி-யில் பல மர்மத் திருப்பங்களைக் கொண்டுவருவதில் தீவிரமாக உள்ளார்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6188&lang=ta&Itemid=68

உங்கள் திரியின் தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறதே? முன்பு சொன்னதையே மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது. இதைப்போல பிட் நோட்டீஸ் வீசுவது அத்தனை சரியல்ல.

praveen
30-10-2008, 04:37 AM
நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள்.

நண்பர் அதிகாலை அவர்களுக்கு புது திரி துவங்கும் உரிமையையை தற்காலிகமாக தடை செய்து கருத்து பதிக்க மட்டுமே உள்ள உரிமை கொடுங்கள். அவர் தமிழ்மன்றத்தை குப்பையாக்க பார்க்கிறார். ஒன்று கூட சொந்த தட்டச்சில்லை. இனையத்தில் கண்டதை இங்கே பதிந்து ஒரே நாளில் பல திரிகள் ஆரம்பித்து தள்ளுகிறார். இதை காணும் மற்றவர்களும்(புதியவர்கள்)இப்படித்தான் பங்களிக்க வேண்டுமோ என்று தவறாக நினைத்து கொள்ள போகிறார்கள்.

வசீகரன்
30-10-2008, 04:48 AM
அன்பு நண்பர் அதிகாலை அவர்களே... எதற்காக இப்படி இணையங்களில் வரும்
இவ்வளவு சினிமா செய்திகளை சேகரித்து தொகுத்திருக்கிறீர்கள்...
முதலில் உங்களை பற்றி அறிமுகபடுத்தி கொண்டீர்களா...?

தீபன்
30-10-2008, 04:56 AM
அதிகாலை தளம் இவருடையதுதானோ... அதற்கான பிரச்சாரம்தான் இதுவோ...!?

மர்மயோகி
02-11-2008, 05:09 AM
செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் பதிவு செய்கிறீர்கள். மிக்க நன்றி.