PDA

View Full Version : அய்யோ பத்திக்கிச்சி...!!!சிவா.ஜி
29-10-2008, 06:34 AM
கலைஞர் தொலைக்காட்சியில் வரும் எல்லாமே சிரிப்புதான் நிகழ்ச்சியில் கண்ட(கேட்ட) இந்த நகைச்சுவையை மிக ரசித்தேன்.

ஒரு வீடு தீப்பிடித்துக்கொள்கிறது. அதனைப் பார்த்த ஒருவர், தீயணைப்புத் துறைக்கு தகவல் சொல்கிறார். அப்படி சொல்பவர் யாரெல்லாம் என ஒரு கற்பனை. அதில் பிரபல வானொலி தொகுப்பாளர் திரு அப்துல் ஹமீது அவர்களின் பகுதி என்னை மிகவும் கவர்ந்தது.

அப்துல் ஹமீது: (தொலைபேசியில் தொடர்பு கிடைத்ததும்) வணக்கம். நான் மேலைதெரு பழைய இலக்கம் ஒன்றுங்கீழ் பதினேழு, புதிய இலக்கம் மூன்றின் கீழ் நாற்பதிலிருந்து பேசுகிறேன். இங்கே தீப்பிடித்திருக்கிறது.....தி குறிலல்ல.....தீ நெடில்....விரைவில் வந்து அதனை அணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.....

(பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியின் சாயலில் அமைந்த இந்த மிமிக்கிரியை மிக ரசித்ததன் விளைவு நம் மன்றத்து மாமணிகளையும் அவரது இடத்தில் வைத்து சிந்திக்க வைத்தது.)


ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் அங்கு நேர்ந்துவிட்ட தீவிபத்தை தீயணைப்புத் துறைக்கு அறிவிக்கிறார்.

முதலில் நமது 'தலை' மணியா........

கிழிஞ்சது கிருஷ்ணகிரி எரியுது தர்மபுரி.....எங்க ஆபீஸ் பத்திக்கிச்சு.....பிரெட்லீ பௌலிங் மாதிரி காத்து அடிக்குது, தோணி பேட்டிங் மாதிரி நெருப்பு எரியுது....சேப்பாக்கம் பக்கத்துல செவப்பா ஒரு பில்டிங் அங்கதான் நெருப்பு சீக்கிரம் வாங்கப்பு....

சூட்டுடன்
மணியா

----------------------------------------------
அடுத்து நம்ம இளசு....

கார்ல் ஷீல் நெருப்புக்காற்று என்று பெயரிட்ட,
லாவோய்சியர் ஆக்ஸிஜன் என்று பெயரிட்ட
வாயுவின் உதவியால்
இங்கே அலுவலகம் எரிகிறது.....

நீரோ மன்னனாய் பிடில் வாசிக்காமல்,
தடுத்தாண்டவராய் தடுக்க நினைத்தாலும்
சளைக்காமல் எரிகிறது...

இரு தனிமங்களை சேர்த்து
கேவண்டிஷ் உருவாக்கிய
புனலை எடுத்துக்கொண்டு
உடனே விரைந்து வாருங்கள்....
___________________________________
தண்ணீர் தணல்போல் எரியும் - செந்
தழலும் நீர் போல் குளிரும்...

---------------------------------

அடுத்து அறிஞர்.....

மென்பொருள் மாற்றத்தின்போது ஏற்பட்ட விபத்தில் அலுவலகம் எரிகிறது....பொறுப்பாளர்கள் யாரையும் காணவில்லை. எனக்கு என் ஆராய்ச்சியை தொடர வேண்டும். உடனே வந்து நெருப்பை அணையுங்கள் 1000 இ-பணம் கிடைக்கும்........
----------------------------------

அடுத்து தாமரை
தொலைபேசி மணியடித்து, எதிர்முனையில் ஹலோ கேட்ட பிரகும் எதுவும் பேசாமல் இருக்கிறார்...
மீண்டும் யாருங்க பேசறது என்று மறுமுனையில் கேட்டதும்தான்
“தாமரை” என்று சொல்கிறார்.
அதற்கு,எதிர்முனை,
”பேச ஆரம்பிக்கும்போதே சொல்ல வேண்டியதுதானே..?”
“நான் கேள்வி கேட்டாத்தான் பதில் சொல்லுவேன்....”
“அதுசரி இப்ப உங்களுக்கு என்னா வேணும்”
“ஆபீஸ்ல தீ....அதை அணைக்க தண்ணி வேணும்”
“ஆபீஸ்ல தீயா...எங்கருக்கு உங்க ஆபீஸ்?”
“ஒருமுறை ஒரு கேள்விதான் கேக்க முடியும்...”
டொக்கென்று போனை வைத்துவிடுகிறார்.
----------------------------

அடுத்ததாக அமரன்....
எரியும் நெருப்பையே பார்த்துக்கொண்டு நிற்கிறார்.
பிறகு தொலைபேசியை எடுத்து பேசுகிறார்...

காக்கையே கருகிவிடும் கனல்
வெக்கையில் வழிகிறது வியர்வை புனல்
விரைவிலேயே வந்து அணைத்து விடுக
காத்து நிற்கிறேன் கால்கள் கடுக்க...

அடுத்தமுனையில் யாரோ கீழே விழும் சத்தம்.......
--------------------------
அடுத்து நம்ம செல்வா

செல்வா: அலுவலகத்துல தீ....அணைக்க வாங்க உடனே....

மறுமுனை: லொக்கேஷன் சொல்லுங்க

செல்வா: பாலைவனம்..

மறுமுனை: என்னாது பாலைவனமா?

செல்வா: ஆமா ஆபீஸ்ல ஒரு ஃபிகர் கூட இல்லை அப்ப இது பாலைவனம் தானே..?

மறுமுனை: ஹலோ...உங்க சோகக்கதையை அப்புறம் சொல்லுங்க முதல்ல இடத்தை சொல்லுங்க.

செல்வா: இலக்கியச்சோலைக்குப் பக்கத்துல நந்தவனம். ஆனா மெதுவா வாங்க....புதுசா நிழற்படக் கருவி வாங்கியிருக்கேன்...நெருப்பு எரியறதை பல கோணங்கள்ல படமெடுக்கனும்....

மறுமுனை: ?????????

-------------------------------------

மீதமுள்ள மன்ற உறவுகளை பாத்திரமாக்கி மற்றவர்கள் தொடரலாமே......

Narathar
29-10-2008, 06:47 AM
ஆஹா! அருமை அருமை....

அந்த அப்துல்ஹமீது ஜோக்கை நானும் ரசித்தேன்.....


இதோ நம் மன்ற உறவுகளில் சுவேதா போன்செய்தால் .....

தொலைபேசியில்: ஐயோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ தீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ பற்றி எறிகிறதூஊஊஊஊஊஊஊஊ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ சீக்கிரம் வாங்கோவ்வ்
வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வ்வ்வ்வ்......


மறுமுனையில் தொலைபேசியில் எதோ கோளாரென்று நினைத்த தீயணைப்பு படை வீரர் போனை கட் செய்து தொழில் நுட்பவியலாளரை அழைக்கின்றார்.


அடுத்து நமது தீபன்:

அமரன் பாணியில் எரியும் தீயை பார்த்துக்கோண்டே இருக்கின்றார். யோசிக்கின்றார்....... யோசிக்கின்றார்... யோசித்துக்கொண்டெ இருக்கையில் ஒரு கவிதை வருகின்றது.......


எரிகின்றது தனல்
எம்மக்கள் வாழ்க்கைபோல
அணைக்க வருவோர் யார்?
இலங்கை தீயணைப்புப்படையா?
வேண்டவே வேண்டாம்!
அதைவிட நெருப்பில் சாவதே மேல்

எரியும் நெருப்பை பார்த்துக்கொண்டிருக்கும் தீபன் தலையில் விழுகிறது ஒரு ஷொட்டு! திரும்பிப்பார்த்தால் ......................

நாராயணா!!!!!!

ராஜா
29-10-2008, 06:48 AM
ராஜா : அலோ.. தண்ணிவண்டி ஆபீசா..? தீபாவளிக்கு வெடி கொளுத்த யாரோ சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் போனதுல இங்கன எங்க ஆபீசு நல்லா தீப்பிடிச்சு நின்னு எரியுதுங்க.. ஆ! 10 ங்க..! சீக்கிரம் வாங்க..!!

அதிகாரி : இதோ.. கிளம்பிட்டோம்.. உங்க ஆபீசுக்கு நாங்க எப்படி வரணும் சொல்லுங்க..?

ராஜா : அந்த எழவெடுத்த ஓட்டைச் சிவப்பு வண்டி வச்சிருப்பீங்களே.. அதிலேயே வந்துருங்க..!
____________________________________________________________________
அ ணை க் க.. வா ங் க

அன்புரசிகன்
29-10-2008, 06:48 AM
உண்மையில் அனைத்தையும் வாசித்து அலுவலகத்தில் கண்கலங்க சிரித்துவிட்டேன்.. அருகிலிருப்பவர்கள் ஒரு மாதிரி பார்த்துவிட்டார்கள். புரியவைக்க போதும் போதும் என்று ஆகிவிட்டது.

காரணம் இது மற்றவர்களுக்கு நகைச்சுவையாக தெரியாது. நம்மவர்களைப்பற்றி புரிந்தவர்களுக்குதத்தான் இது நகைச்சுவை...

சூப்பருங்க சிவா அண்ணாத்த...

அன்புரசிகன்
29-10-2008, 06:51 AM
இதோ நம் மன்ற உறவுகளில் சுவேதா போன்செய்தால் .....

தொலைபேசியில்: ஐயோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ தீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ பற்றி எறிகிறதூஊஊஊஊஊஊஊஊ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ சீக்கிரம் வாங்கோவ்வ்
வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வ்வ்வ்வ்......

மறுமுனையில் தொலைபேசியில் எதோ கோளாரென்று நினைத்த தீயணைப்பு படை வீரர் போனை கட் செய்து தொழில் நுட்பவியலாளரை அழைக்கின்றார்.

இது அடுத்த சூப்பர்.........................
முடியலப்பா..............

ராஜா
29-10-2008, 06:56 AM
சபாஷ் சிவா..!

இளசு எபிசோட் படு சூப்பர்..!

மதி
29-10-2008, 07:15 AM
நல்லாவே பத்திக்கிச்சு போல.. :)

கலக்கலான பக்கங்கள்.. மற்ற உறவுகளைக் கொண்டு தொடரட்டும்.

சிவா.ஜி
29-10-2008, 07:18 AM
சுவேதாஆஆஆஆஆஆஆஆஆஆ..................சூப்பர் நாரதரே....தீபனுடையதும் அருமை.

ராஜா சார் கலக்கிட்டீங்க....இன்னும் கலக்குங்க.

இன்னும்யார் யாரெல்லாம் மாட்டப்போறாங்களோ....நாராயணா.......!!!!

ரங்கராஜன்
29-10-2008, 08:23 AM
திரு சிவா
ரசித்து சிரித்தேன், நீங்கள் குறிப்பிட்ட யாரையும் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் நீங்கள் குறிப்பிட்டதில் இருந்து அவர்களை பற்றி விவரங்கள் தெரிகிறது. நல்ல மனோதத்துவ நகைச்சுவைப் பிரிவை சேர்ந்தது உங்கள் எழுத்து, நானும் இதில் கலந்துக் கொள்ள விரும்புகிறேன் யாரையும் பற்றி தெரியாது. அதனால் என்னையே வைத்து எழுதுகிறேன்

மூர்த்தியின் வீடு எரிகிறது

மூர்த்தி : அள்ளோ தீ யனைப்பூ ஆபிச்சா

மறுமுனை : ஆமா சொல்லுங்க

மூர்த்தி : சார், ஏங்க விட்டு எறியுது வந்து காபாத்துங்கஓ ஸார்

மறுமுனை : என்னையா தமிழ இப்படி பேசற சேட்டா நீ, எந்த ஏரியா

மூர்த்தி : ஸார் நான் பச்ச டமிலன், எழூஉத்தாலர் ஸார்

மறுமுனை : இந்த ஒரு காரணத்துக்காகவே வரமுடியாது போயா, அப்படியே நெருப்புல விழுந்து சாவு

அமரன்
29-10-2008, 08:27 AM
சபாஷ் சிவா!
என் மனங்கவர் நாரதர்!

நாரா:அலோ தீயணைப்புப் படை அலுவலகம்.
அங்கே:ஓம் சொல்லுங்கோ
நாரா:இங்க பக்கத்துல தீப் பிடிச்சுட்டுது
அங்கே:எங்கே
நாரா: தீபாவளி தமிழருடைய பண்டிகை இல்லைன்னு சொல்றாங்களே?
அங்கே:... ... ... ... (யோசனை) ஓ.. அப்ப சிங்களப் பிரதேசமா?
நாரா:தமிழர்கள் தீபாவளிக்கு பட்டாச்சு வெடிக்கறதில்லையே.
அங்கே: அப்போ
நாரா: நாராயணா

அமரன்
29-10-2008, 08:34 AM
ஓவியன்: ஃபயர் ஸ்டேஷனா?
விராடன்: ஓமோம்.
ஓவியன்: இஞ்சை எங்கட பக்கத்து வீட்டில நெருப்பெரியுது.
விராடன்: குப்பை எரிக்கிறாங்களோ?
ஓவியன்: இல்லை சேர். வீடே எரியுது. நூக்க வாங்கோ
விராடன்: நெருப்பை நூக்க தீயணைப்புப் படைக்கெல்லோ போன் பண்ணவேணும்
ஓவியன்: அப்ப நீங்க
விராடன்: நானும் தீயணைப்பு படை ஊழியந்தான்.
ஓவியன்: அப்ப உடன வாங்கோவன்
விராடன்:நீங்கள் ஃபயருக்குத்தானே போன் பண்ணினிங்கள்.
ஓவியன்:..................

சிவா.ஜி
29-10-2008, 12:53 PM
எல்லோரையும் பற்றி விரைவிலேயே தெரிந்துகொள்வீர்கள் மூர்த்தி. உங்களைப்பற்றி நீங்களே எழுதியது அருமை. அதிலும் அந்த எழூஉத்தாலர் சூப்பர்.

சிவா.ஜி
29-10-2008, 12:54 PM
அமரன் கலக்கறீங்க. நல்ல இலங்கை தமிழில் படிக்க சுவாரசியமாக இருக்கிறது. தொடர்ந்து கலக்குங்க....!

அகத்தியன்
29-10-2008, 01:03 PM
ஓவியன்: ஃபயர் ஸ்டேஷனா?
விராடன்: ஓமோம்.
ஓவியன்: இஞ்சை எங்கட பக்கத்து வீட்டில நெருப்பெரியுது.
விராடன்: குப்பை எரிக்கிறாங்களோ?
ஓவியன்: இல்லை சேர். வீடே எரியுது. நூக்க வாங்கோ
விராடன்: நெருப்பை நூக்க தீயணைப்புப் படைக்கெல்லோ போன் பண்ணவேணும்
ஓவியன்: அப்ப நீங்க
விராடன்: நானும் தீயணைப்பு படை ஊழியந்தான்.
ஓவியன்: அப்ப உடன வாங்கோவன்
விராடன்:நீங்கள் ஃபயருக்குத்தானே போன் பண்ணினிங்கள்.
ஓவியன்:..................

இலங்கை தமிழ் . அதிலும் யாழ் தமிழ். அசத்தப்பு......:icon_b: :icon_b:

செல்வா
29-10-2008, 02:00 PM
சிரிச்சு சிரிச்சு ... ஒரு வழி ஆயிட்டேன் போங்க...
சிவா அண்ணா.... எப்படி இதெல்லாம்....
கலக்கிட்டீங்க....
தொடர்ந்தவங்க மட்டும் சோடையா என்ன .. எல்லாமே லக லக லக
ஒக்காந்து யோசிப்பீங்களோ...எல்லாரும் ?

ஜெயாஸ்தா
29-10-2008, 02:02 PM
நேரம் போதாத காரணத்தினால், இப்போதெல்லாம் மன்றத்தில் வந்து படித்து செல்வதற்கே வெகு சிரமமாய் உள்ளது. அதையும் மீறி நம்ம சிவா அண்ணாவின் இந்த திரியை படித்துவுடன் பின்னூட்டம் எப்படியாவது பதித்துவிட வேண்டுமென்றெண்ணி பதித்தும் விட்டேன்.

விஜய் தொலைக்காட்சியில் 'கலக்கப்போவது யாரு' பார்த்தமாதிரியே இருக்கு.....! அதிலும் அறிஞரையும், அமரனையும் கலாய்த்ததை படித்து சிரிப்பை அடக்க முடியாமல் சிதறிவிட்டேன். இளசுவை கலாய்த்தது பொருத்தமோ பொருத்தம்.....!

ஒவ்வொரு திரியிலும் ஓரிரு வரிகளில் மட்டுமே காலாய்க்கும் நாரதர்கூட இங்கு சிக்சர் அடித்துவிட்டார்.


(என்ன சிவாண்ணா அரேபியாவில் தீபாவளியை எப்படி கொண்டடினீர்கள்...?)

தீபன்
29-10-2008, 05:54 PM
கலக்கல் திரி... தொடருங்க மக்களே...
கலகக்கார நாரதர் இப்ப கலக்க்ல் நாரதராயிட்டார்... போதாதற்கு கவிஞருமாயிட்டார்... (கலாய்க்க எழுதியிருந்தாலும் ஆழமான கருத்தோடு எனக்காய் எழுதிய குறுங்கவிதை இருக்கிறது நாரதரே... பாராட்டுக்கள்.)

Narathar
29-10-2008, 05:54 PM
சபாஷ் சிவா!
என் மனங்கவர் நாரதர்!

நாரா:அலோ தீயணைப்புப் படை அலுவலகம்.
அங்கே:ஓம் சொல்லுங்கோ
நாரா:இங்க பக்கத்துல தீப் பிடிச்சுட்டுது
அங்கே:எங்கே
நாரா: தீபாவளி தமிழருடைய பண்டிகை இல்லைன்னு சொல்றாங்களே?
அங்கே:... ... ... ... (யோசனை) ஓ.. அப்ப சிங்களப் பிரதேசமா?
நாரா:தமிழர்கள் தீபாவளிக்கு பட்டாச்சு வெடிக்கறதில்லையே.
அங்கே: அப்போ
நாரா: நாராயணா

ரசித்தேன்
சிரித்தேன்...........

நான் இப்படித்தான் பதிவிடுகின்றேனோ???? ;)

நாராயணா!!!! :lachen001:

Narathar
29-10-2008, 05:57 PM
கலக்கல் திரி... தொடருங்க மக்களே...
கலகக்கார நாரதர் இப்ப கலக்க்ல் நாரதராயிட்டார்... போதாதற்கு கவிஞருமாயிட்டார்... (கலாய்க்க எழுதியிருந்தாலும் ஆழமான கருத்தோடு எனக்காய் எழுதிய குறுங்கவிதை இருக்கிறது நாரதரே... பாராட்டுக்கள்.)

நன்றி தீபன்..........
உங்கள் கவிதைகளை பார்த்துப்பார்த்து
நானும் கொஞ்சம் கொஞ்சம்
கவிதை எழுத கத்துக்கிறோம் இல்ல? :)

சிவா.ஜி
30-10-2008, 05:01 AM
என்ன செல்வா உங்க பங்குக்கு நீங்களும் கொஞ்சம் கலக்கலாமே...?

அன்பு ஜெயஸ்தா...நேரமின்மையிலும், நேரமொதுக்கி பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றிகள். நீங்களெல்லாம் இனி அடிக்கடி வரவேண்டும்.

அன்புரசிகன்
30-10-2008, 05:51 AM
நான் அலுவலகத்தில் திட்டுவாங்கியதற்கான பாவம் உங்களை சும்மா விடாது... :D :D :D

poornima
30-10-2008, 06:25 AM
வறட்டு ஜோக்குகளை உதிர்க்கும் வார இதழ் குப்பைகளுக்கு மத்தியில்
மனம் விட்டு சிரிக்க வைத்து இந்த திரியில் உள்ள
தொலைபேசி உரையாடல்கள்..

இந்த காலைநேரம் மிக இனிமையாக மிக சந்தோஷமாய்
தொடங்கியது இந்தப் பதிவைப் படித்தவுடன்..

அவரவர் எழுத்து நடையோடு இந்த திரியைத் தொடங்கிய நண்பர் சிவாவை
மனதார பாட்டுகிறேன்.. அவர் கலாய்த்திருக்கும் நண்பர்கள் யாவரின் பதிவுகளையும்
படித்திருப்பதால் மனம் ஒன்றி ரசிக்க முடிந்தது..

தொடர்ந்து பதிந்த நண்பர்களும் நன்றாகவே கிச்சு கிச்சு மூட்டினார்கள்..அனைவருக்கும் நன்றியும் பாராட்டுகளும்..

தொடரட்டும் இந்த திரி தொடர் வெடி சிரிப்புகளுடன்

சிவா.ஜி
30-10-2008, 06:46 AM
உங்களின் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி. திரி தொடங்கியதன் பலன் உணர்ந்த திருப்தி. மிக்க நன்றி பூர்ணிமா.

வெங்கட்
30-10-2008, 07:05 AM
வறட்டு ஜோக்குகளை உதிர்க்கும் வார இதழ் குப்பைகளுக்கு மத்தியில் மனம் விட்டு சிரிக்க வைத்து இந்த திரியில் உள்ள தொலைபேசி உரையாடல்கள்.
ஆம், உண்மை தான். இன்றுதான் முதன்முதலாக இத்திரியைப் படித்த நானும் வாய்விட்டு சிரித்து விட்டேன்.

சிவா.ஜி
30-10-2008, 07:12 AM
ஆம், உண்மை தான். இன்றுதான் முதன்முதலாக இத்திரியைப் படித்த நானும் வாய்விட்டு சிரித்து விட்டேன்.

மிக்க மகிழ்ச்சி வெங்கட். உங்கள் பங்கையும் அளித்தால் இன்னும் மகிழ்ச்சி.

lolluvathiyar
05-11-2008, 09:59 AM
நல்லாவே பத்திகிச்சு நீன்ட காலமாக மன்றத்துக்கு வராததால புதிய உருப்பினர்களை பற்றி அவ்வளவாக தெரியவில்லை. பழைய உருப்பினர்களில் புதிய படைப்புகளையும் தெரியவில்லை. பழைய உருப்பினர்களில் இன்னும் யாரெல்லாம் அக்டிவ்வா இருக்காங்கனு தெரியல டச் விட்டுபோனதால என்னால யாரையும் கலாய்க்க முடியலயே சரி சரி பத்தினது இன்னும் நல்லா கொழுந்து விட்டு எரியலயே? என்னப்ப பன்னறீங்க நல்லா காத்து ஊதுங்கய்யா

மன்மதன்
05-11-2008, 12:38 PM
ஆஹா.. அட்டகாசமான திரி...
கலக்கிபுட்டீங்க சிவா.ஜி..
வாய்விட்டு சிரித்தேன்..
தலையும் இளசுவும் டக்கரு..
நண்பர்களும் தன் பங்குக்கு கலக்குறாங்க..

சிவா.ஜி
06-11-2008, 03:11 AM
வாத்தியாரே....கலாய்க்க முடியலையேன்னு வருத்தப்படாதீங்க. தைரியமா உள்ள வந்து உங்க ஆட்டத்தை ஆரம்பியுங்க. ரொம்ப நாளைக்கு அப்புறமா வந்திருக்கீங்க...இனி அடிக்கடி வாங்க தலைவா...

சிவா.ஜி
08-11-2008, 07:38 AM
நன்றி மன்மதன். உங்கள் பங்குக்கு கொஞ்சம் கலாய்க்கலாமே....

ஓவியன்
09-11-2008, 10:59 AM
தேவைகளின் நிமித்தம் நான் கொண்ட அஞ்ஞாதவாசத்தில் தக்க சமயத்தில் நான் படிக்கத் தவறிய அரும் திரிகளில் ஒன்று...

நிரம்பவே இரசித்தேன் சிவா..!!
சும்மா பின்னிட்டீங்க, மக்களே..!!:icon_b:

சிவா.ஜி
09-11-2008, 12:00 PM
மிக்க நன்றி ஓவியன். அனைவரும் இணைந்து கலாய்த்த அந்த நாட்களை மனம் விரும்புகிறது. மீண்டும் அந்த நாட்கள் வர வேண்டும். அதற்கு நீங்கள் எப்போதும் மன்றம் வரவேண்டும்.

சுவேதா
18-11-2008, 11:59 PM
அட அட என்ன அருமையான நகைச்சுவை விழுந்து விழுந்து சிரித்து அடிபடாத குறை வாழ்த்துக்கள்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்