PDA

View Full Version : இலங்கை - பரந்தனில் வான்தாக்குதல்அன்புரசிகன்
29-10-2008, 06:02 AM
நேற்று இலங்கை நேரப்படி காலை 11.15 அளவில் பரந்தன் இந்துமகாவித்தியாலத்திற்கு அருகாமையில் உள்ள குடியிருப்புக்கள் மீது இலங்கை விமானப்படையின் இரண்டு மிக் 27 இரக விமானத்தினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது... இதில் 3 பேர் பலியாகியதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக புதினம் செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது. மக்கள் செறிவாக வாழும் பகுதி மீது இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக இந்த செய்தித்தளம் தெரிவிக்கிறது.

அண்மையில் இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ஷ இந்திய அரசுக்கு இனி தமிழ் மக்களை தாம் தாக்குவதில்லை அல்லது தாக்கமாட்டோம் என்ற தொனியில் உறுதி வழங்கியிருந்ததும் இதை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதன் பெயரில் தமிழக முதல்வர் கருணாநிதி திருப்தி கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது...

காலங்காலமாக இலங்கை அரசு வாக்குறுதி வழங்குவதும் அவற்றை ஏற்றுக்கொள்வதும் சலித்துப்போனதொன்றென்றாலும் இதை இம்முறையும் கலைஞர் அவரகள் திருப்தியுடன் ஏற்றுக்கொண்டது மீண்டும் புரியாத புதிராகவே உள்ளது. வழமையான ஏமாற்றம் தொடர்கிறது...


நேற்று பரந்தனில் நடாத்தப்பட்ட விமானத்தாக்குதலின் பிரதிபலிப்புக்களின் புகைப்படங்கள்....

http://www.puthinam.com/d/p/2008/OCT/paranthan_20081028001.jpg

http://www.puthinam.com/d/p/2008/OCT/paranthan_20081028002.jpg


http://www.puthinam.com/d/p/2008/OCT/paranthan_20081028005.jpghttp://www.puthinam.com/d/p/2008/OCT/paranthan_20081028006.jpgபுகைப்படங்கள் முழுமையாக இங்கே... (http://www.puthinam.com/full.php?2e40SF4ca3afbJQ34d2VPoy3a02P4JTe4d4ZOu8c00bhoMSDde2dEYkm2cc0LfY73e)


நன்றி புதினம் இணையம்...

ராஜா
29-10-2008, 06:25 AM
இளம்பருவம் என்பது விளையாட்டுக்கும், கவலையற்ற வாழ்வுக்குமான காலகட்டம்.

அவர்களைக்கூட பதறியபடி பதுங்குகுழிகளைத் தேடவைக்கும் நாடு மண்ணில் ஒரு நரகமே..

அன்புரசிகன்
29-10-2008, 06:36 AM
ஆனால் அண்ணா... இனி வரும் சந்ததியிரருக்கு இது மரத்துப்போனதாக வந்தால் இந்த மண்ணும் சொர்க்கமாக அமைந்துவிடும்... காரணம் நாமெல்லாம் விமானத்தாக்குதல் நிகழ்ந்தால் வேடிக்கை பார்ப்பதே வழமையாக இருந்தது... அம்மா திட்டு திட்டென்று திட்டினாலும் நம் வேடிக்கை குறைந்ததில்லை. குண்டு போட்ட இடங்களில் சென்று விடுப்பு பார்ப்பது அங்கு சர்வசாதாரணமான நிகழ்வு... எனக்கு நிறைய அனுபவம் இருந்தது... சிறுவர்கள் சிலவேளை பந்து அழுதிடலாம். சற்று வளர்ந்தவர்கள் அல்ல...

ஓவியன்
29-10-2008, 08:50 AM
பரந்தன், என் சொந்த ஊர்...

பரந்தன் இந்து மகா வித்தியாலயம், என் கல்விக் கண்ணைத் திறந்த கோவில்....
:frown: :frown: :frown: :frown: :frown: :frown:

அமரன்
29-10-2008, 12:24 PM
ஈழத்தின் உண்மை நிலவரத்தை உலகுக்கு எடுத்துச் செல்ல உகந்த செயல். பாராட்டுக்கள் அன்பு.

கருகிய மொட்டுகளுக்கு கண்ணீர் அஞ்சலி.

விக்ரம்
29-10-2008, 02:18 PM
பரந்தன், என் சொந்த ஊர்...

பரந்தன் இந்து மகா வித்தியாலயம், என் கல்விக் கண்ணைத் திறந்த கோவில்....
:frown: :frown: :frown: :frown: :frown: :frown:
ரொம்பவும் மனம் நெருடச் செய்யும், கவலையான செய்தி இது. வருந்துகிறேன்..

kampan
29-10-2008, 02:23 PM
பந்தடித்து விழையாடும் சிறார்கள் மீது குண்டடித்து விளையாடுகிறார்களே?
பள்ளிக்கு போகும் பச்சிளைகனை பங்கருக்குள் ஒடவைக்கிறாயே?
வெள்ளை உடைதரித்தவர்கனை கொள்ளவா பார்க்கிறாய்?
புத்தகம் தூக்குபவர்களுக்கும் உத்தரவு போடாது
குத்தகைக்கு வாங்கிய உனக்கே இவ்வளவென்றால்
பிரித்தெடுத்தும் புட்டும் இவர்களுக்கு எவ்வளவு இருக்கும்?

தீபன்
29-10-2008, 06:02 PM
கிளிநொச்சியில் இப்போது மக்களில்லை. இனி அப்பிரதேசங்களில் யாரும் இறந்தாலோ, காயப்பட்டாலோ அவர்கள் பயங்கரவாதிகளே. இப்படி அரசு சொல்லியிருக்கிறது. இதை அயல் அரசும் ஏற்று தங்கள் போராட்ட முனைப்பை கைவிட்டிருக்கிறது.
ஆகவே, மேற்படி படங்களிலிருக்கும் வெண்புறாக்கள்தான் பயங்கரவாதிகள்!!!
நம்புங்க நண்பர்களே... அப்படியே எமக்கான நிவாரணத்தில் இணைந்து பழைய சோறு, உடுபுடவைகள் இருந்தா போடுங்க...
(பரந்தன் கிளிநொச்சியை அடுத்து அருகாக அமைந்துள்ள நகரம்.)

வசீகரன்
30-10-2008, 04:53 AM
இந்த கொடுமைகளை எல்லாம் பார்க்கும் போது கடவுள்
என்பவன் இருக்கிறானா என எண்ணத் தோன்றுகிறது..!

ஓவியன்
30-10-2008, 04:56 AM
உண்மைதான் தீபன், பரந்தன் கிளிநொச்சி நகரிலிருந்து இரு மைல்களுக்குள் அமைந்துள்ள பிரதேசம்....

இதுவரை பரந்தன் பிரதேசத்தில் மக்கள் வாழக் கூடிய நிலை இருந்தது....

இந்தத் தாக்குதல் மக்களை அங்கிருந்து பயமுறுத்தி அகற்றும் நோக்கத்தில் நடத்தப்பட்ட ஒரு மிலேச்சத்தனமாகவும் கொள்ளலாம்....

praveen
30-10-2008, 05:13 AM
என்றைக்கு புலிகள், எதிரி தாக்குதலை தடுத்து பாதுகாப்பு தாக்குதலை கை விட்டு, புதிதாக கொழும்பு நகரில் சிங்களர் வாழும் பகுதியில் மிகப்பெரிய தாக்குதலை நடத்துகிறார்களோ அன்று தான் ஆள்பவர்களுக்கு அடுத்தவர் கஸ்டம் தெரியவரும். அதுவரை அவர்கள் தாக்கி கொண்டே இருப்பார்கள், இவர்கள் தடுத்து கொண்டே இருப்பார்கள். அப்படி கொழும்பில் பெரிய தாக்குதல் நடத்தினால் இவர்கள் ராணுவ நிலைகளை இங்கே கொண்டு வருவார்களா என்ன?. பின் அவர்கள் பாதுகாப்பு நிலையில் இருக்க நேரிடும்.

அன்புரசிகன்
30-10-2008, 05:35 AM
எதிரிக்கும் வேண்டாமே இந்த கொடுமை...

ஒரு களப் போராளி சொன்னது... தூரத்தில் நிற்கும் வரை தான் அவன் எதிரி. அவனை தாக்கமுடியும். அருகில் வந்துவிட்டால் தன் சகோதரன் போல் தான் அவன் தெரிவான் என்று சொன்னபோது நெஞ்சே அடைத்துவிட்டது...

shibly591
30-10-2008, 09:07 AM
:confused:

:confused:

:confused:

:confused:

:confused:

:confused:

:confused:

:confused:

:confused:

:confused:

ஓவியன்
30-10-2008, 09:16 AM
இன்று இலங்கை விமானப் படை நடாத்திய தாக்குதலையும், அதனை இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறும் விதத்தினையும் இங்கே ஒப்பிட்டுப் பாருங்கள்.....


முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வள்ளிபுனத்தில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் மாணவன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பகுதி வான்பரப்புக்குள் இன்று வியாழக்கிழமை காலை 9:30 நிமிடத்துக்கு நுழைந்த சிறிலங்கா வான்படையின் இரண்டு மிக்-27 ரக வானூர்திகள் வள்ளிபுனம் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.

இதில் மாணவன் ஒருவர் உடல் சிதறிய நிலையில் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் வள்ளிபுனம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வராசா சதீஸ்கரன் (வயது 15) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவியும் சிறிலங்கா வல்வளைப்பு படையினரால் பூநகரியில் இருந்து இடம்பெயர்ந்து வள்ளிபுனத்தில் வசித்து வந்தவருமான பத்மநாதன் நிவேதினி (வயது 17) என்பவர் காயமடைந்துள்ளார்.

பொதுமக்களின் 10 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இடம்பெயர்ந்து மக்கள் செறிவாக வாழும் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் திட்டமிட்ட வகையில் இத்தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

புதினம் (http://www.puthinam.com/full.php?2e3YOA4cb33e6Df04dctVo0da0eA4AU24d4yIm4300aUoMV1de23D1eW2cc4OcY4be)


SLAF raids LTTE suicide training base ; Heavy damages confirmed- Mullaittivu
SLAF fighter jets made precision air raids at an LTTE female suicide squad training facility, located at Vallipuram, 6km Northwest of Puthukkudiyirippu in Mullaittivu, Thursday (Oct 30)at around 10a.m.


இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு (http://www.defence.lk/new.asp?fname=20081030_01)

இலங்கை விமானப் படையினர், இவ்விதம் தான் புலிகளின் இலக்குகளைத் தாக்கி வருகின்றனர் (!!??)

அமரன்
30-10-2008, 09:19 AM
வல்லிபுனம் - வன்னிப்பிரதேசம்
வல்லிபுரம் - யாழ்ப்பாணம் (வடமராட்சி)

இலங்கை அரசு
நல்லா கொடுக்கிறாங்கப்பா டீட்டைல்ஸு.

தீபன்
30-10-2008, 09:48 AM
தமிழக் மீனவர் பிரச்சினையில் இலங்கை அரசை நம்பி முட்டாள்களாக்கப்பட்டபின்னும் விழிப்பதாயில்லை....
ம்ம்ம்.... அப்ப உண்மையிலேயே அப்படித்தானா...!!!?

ஓவியன்
30-10-2008, 10:24 AM
வல்லிபுனம் - வன்னிப்பிரதேசம்
வல்லிபுரம் - யாழ்ப்பாணம் (வடமராட்சி)

இலங்கை அரசு
நல்லா கொடுக்கிறாங்கப்பா டீட்டைல்ஸு.

உண்மைதான் அமரன், வன்னியின் புதுக்குடியிருப்பில் இருக்கும் வள்ளிபுனத்தைக் குறிப்பிட நினைத்து நாக்குத் தடுமாறி(!) வல்லிபுரம் என்று கூறிட்டாங்கள் போல... :sprachlos020:

அமரன்
30-10-2008, 10:49 AM
எதிரிக்கும் வேண்டாமே இந்த கொடுமை...

ஒரு களப் போராளி சொன்னது... தூரத்தில் நிற்கும் வரை தான் அவன் எதிரி. அவனை தாக்கமுடியும். அருகில் வந்துவிட்டால் தன் சகோதரன் போல் தான் அவன் தெரிவான் என்று சொன்னபோது நெஞ்சே அடைத்துவிட்டது...

உயிரிழப்பு இல்லாமல் நேற்று முந்தினம் நிகழ்த்தப்பட்டது போன்ற தாக்குதல்கள் இலங்கை மக்களிடத்தில் யுத்தவலிகளை ஆழப்புகுத்தி தீர்வு நோக்கிய எண்ணங்களை அகழ்ந்தெடுத்துத் தருமே ரசிகன்.