PDA

View Full Version : இணையம் பற்றிய ஒரு சந்தேகம்,



அகத்தியன்
29-10-2008, 05:43 AM
வணக்கம் நண்பர்களே,

இணையம் பற்றிய ஒரு சந்தேகம்,

எங்களது குடியிருப்பில், அனைத்து அறைகளுக்கும் கேபிள் மூலமான இணைய இணைப்பு அளித்துள்ளனர். எனது அறையில் ப்லர் கணிணி பயன்படுத்துவதால், அதனை வயர்லெஸ் இணைப்பாக மாற்றலாம் என் ஆலோசித்து, வயர்லெஸ் ரவ்ட்டர் (D-Link V-101 / Dir-655) வாங்கி அதனை பொருத்த முயற்சித்த போது தோல்வியே மிஞ்சியது. எனக்கு வயர்லெஸ் தொடர்பில் அவ்வளவு பரிச்சயமில்லை.. (ஆனால் என்னை ஏதோ நெற்வேர்க் புலி என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்………:p;);););).) மானம் காப்பாற்றுங்கள் நண்பர்களே,.

ராஜா
29-10-2008, 05:55 AM
நெட்வொர்க் அமைப்பது கணிணியின் கான்ஃபிகரேஷனைப் பொறுத்து மாறுபடும்.

உங்கள் கணிணியில் வை-ஃபை வசதியிருந்தால் அருகில் கிடைக்கும் சைகைகளை தானாகவே கண்டறிந்து "எதை இணைக்கவேண்டும்?" என்று கேள்வி கேட்கும்.தேவையானவற்றை ஓ.கே. செய்தால் போதும்.

அவ்வாறில்லாவிட்டால் (எனக்குத் தெரிந்தவரை) வடமே துணை..!

நம் மன்ற கணிணியாளர்கள் நிச்சயம் உதவுவார்கள் அகத்தி(னி)யரே..!

ராஜா
29-10-2008, 06:05 AM
http://kasilingam.com/wiki/doku.php?id=wireless_networking

இந்தச் சுட்டி உங்களுக்கு பயன் தரக்கூடும்..

அன்புரசிகன்
29-10-2008, 06:25 AM
சாதாரணமாக உங்கள் கணினியை அந்த ரவுட்டருடன் இணைக்கவேண்டும். முதல் தடவையாக என்றால் கேபிளால் இணையுங்கள். DLINK என்பதால் அனேகமாக 192.168.1.1 என இணைய உலாவியில் சென்றால் உங்களிடம் அது user name password கேட்கும். (அட்மின் ற்கானது) அதற்கு புதிது நீங்கள் ஏதும் மாற்றாவிட்டால் admin என்றது user name and password ஆக இருக்கும்...

உள்ளே சென்றால் அங்கு wizard ஒன்று ஆரம்பிக்க ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும். அங்கே தான் உங்கள் இணைய இணைப்பின் user name and password கொடுக்கவேண்டியிருக்கும். எனக்கு அத்துப்படியாக தெரியாது. தந்தால் செய்யத்தெரியும்... முயலுங்கள். இது போதும் என நினைக்கிறேன். உங்களால் முடியும். தொடருங்கள்...

இறுதியில் உங்கள் ரவுட்டருக்கு reboot என கொடுத்தால் தான் நீங்கள் செய்த settings எல்லாம் save ஆகும்...

முக்கியமாக வயர்லெஸ் என்பதால் பாதுகாப்பு கடவுச்சொல் கொடுக்க மறவாதீர். இல்லையேல் நீங்கள் அதிக தியாகியாகி அக்கம் பக்கத்தவர்கள் பாவிக்க ஆரம்பித்துவிடுவர்...

அன்புரசிகன்
29-10-2008, 06:28 AM
ஒன்று கூற மறந்துவிட்டேன்... புதிதாக வாங்கியிருந்தால் அதனுடன் வந்த உதவி புத்தகத்துடன் செயற்றடலாமே...

மீதிக்கு பிரவீன் வருவார்...

அகத்தியன்
29-10-2008, 11:28 AM
நன்றி அன்பு,
கையேட்டின் படித்தான் முயற்சித்தேன். ஆனால் அதில் இணைப்பு வரவில்லை. கேபிள் இணப்புக்கென தனியான IP முகவரி உள்ளது. அதன் படி, D link Router இனை முதன் முதலாக இணைக்கின்ற போது, அந்த ஐபி முகவரியினை மாற்ற வேண்டுமா?
அதனை எப்படி செய்வது என்பதில் குழப்பம் இருக்கின்றது. அதுதான். தயவு செய்து விளக்குங்கள். D link Router புதியது என்றால்தான் 192.168.1.1 ற்கு செல்ல வேண்டுமா? பாவித்த்து எனில் அது தேவையில்லையா

அன்புரசிகன்
29-10-2008, 11:37 AM
பாவித்தது பாவிக்காதது என்றல்ல. நீங்கள் மாற்றாதவரைக்கும் அந்த ஐபி மாறாது... நீங்கள் அந்த ரவுட்டரை கணிணிக்கு இணைக்காது செட்டிங் மாற்றமுடியாது. அதனால் தான் முதல் தடவை எனின் நீங்கள் கேபிளால தான் இணைக்க வேண்டும்.

ஐபி முகவரி மாற்றவேண்டியதல்ல. மாற்றமுடியுமா என்றும் தெரியாது. நான் உங்களை மாற்றச்சொன்னது அந்த பாவனை காப்பு கடவுச்சொல்லையே...

உங்கள் சந்தேகம் ஐ குறிப்பிட்டு சொல்லுங்கள். இல்லை நான் சொன்னது சரியா???

உங்கள் ரவுட்டரின் மொடல் இலக்கத்தினை தாருங்கள். உதவ உதவியாக இருக்கும்.

அகத்தியன்
29-10-2008, 12:11 PM
ரவுட்டருடன் கேபிளை இணைத்தால் கணிணியில் ஈனைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக காட்டுகின்றது. அதேவேளை, கேபிளுடன் நேரடியாக கணினியினை இணைக்கும் போது இணைய இணப்பு உயிர்க்கின்றது. இதுதான் எனக்குள்ள பிரச்சினை.

ரவுட்டரின் செட்டிங்கினை மாற்ற எனக்கு இணையத்தினை பெறமுடியாததன் காரணம் புரியவில்லை அன்பு.

எனது ரவுட்டர். D Link Dir 655.

அன்புரசிகன்
29-10-2008, 02:58 PM
இங்கே (http://support.dlink.com/products/view.asp?productid=DIR-655) மிக விளக்கமாக FAQ ல் சொல்லியிருக்கிறார்கள்...

எதற்கும் உங்கள் வயர்லஸ் ஐ முதலில் அணைத்துவிட்டு தனியே கேபிளில் இயக்குங்கள். அதற்கு பின்னர் உங்கள் ரவுட்டரை reset செய்துவிடுங்கள். அது எவ்வாறு செய்வதென்று மேற்கூறிய சுட்டியில் உண்டு...

வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

anna
07-11-2008, 05:39 PM
கேபிள் கனெக்ஷனே பாதுக்காப்பனது என்பது என் கருத்து