PDA

View Full Version : மீண்டும் புலிகளின் விமானத் தாக்குதல்- கொழும்பு, மன்னாரில்...



தீபன்
28-10-2008, 07:12 PM
கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதல் -புதினம்.கொம்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள எண்ணெயக்குதம் அருகிலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி படைத்தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளதாவது

தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10:50 நிமிடத்துக்கு விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்று குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

அதேநேரம் கொழும்பில் உள்ள எண்ணெய்க்குதம் அருகேயும் இன்றிரவு 11:30 நிமிடமளவில் விடுதலைப் புலிகளின் வானூர்தி குண்டுகளை வீசியுள்ளது.

விடுதலைப் புலிகளின் வானூர்திக்கு எதிராக சிறிலங்கா படையினர் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

கொழும்பிலும் மன்னாரிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் விமானத்தாக்குதல்: கொழும்பில் மக்கள் பதற்றம் -தமிழ்வின்.கொம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல் கொழும்பின் சப்புகஸ்கந்த எரிபொருள் தாங்கிப்பகுதியிலும் மன்னார் தள்ளாடி இராணுவ தலைமையக பகுதியிலும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானங்கள் இரவு 11.28 மணியளவில் கொழும்பின் சப்புகஸ்கந்த எரிபொருள் தாங்கிப்பகுதியில் தாக்குதல்கள் நடத்தியாதாகவும் அதனையடுத்து புலிகளின் விமானத்திற்கு படையினர் கொழும்புத்துறைமுகம் மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் இரவு 11 மணியளவில் மன்னார் தள்ளாடி இராணுவ தலைமையக பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின்; விமானங்கள் இரண்டு குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளதாக இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும் எந்த சேதமும் இல்லை என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துதுள்ளன. இதனையடுத்து கொழும்பில் முழுமையாக மின்சாரம் தடைசெய்யப்பட்டுள்ளது.

பாரிய சத்தங்களுடன் பல நிமிடங்கள் தொடர்ச்சியான படையினரின் வான் நோக்கிய தாக்குதலில் கொழும்பு மற்றும் கொழும்பையண்டிய பகுதிகளில் மக்கள் பதற்றத்துக்கு உள்ளாகியிருப்பாதாக தெரியப்படுகிறது.

Narathar
28-10-2008, 07:20 PM
படையினரின் வான் நோக்கிய தற்காப்பு வேட்டுக்கள் தீர்க்கப்படுவதை எனது வீட்டிலிருந்தபடி பார்க்ககூடியதாகவிருந்தது.....

களனி திஸ்ஸ மின் நிலையத்துக்கு தீயணைப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று குறுந்தகவல் செய்தி கூரியது.

அமரன்
28-10-2008, 08:13 PM
புலிகளின் ஓடுபாதையை அழித்து விட்டோம்; வானூர்தியை சுட்டு வீழ்த்தி விட்டோம் என்ற சிங்கள மக்களை அடைந்த பொய்யுரைகளுக்கு பதிலடி. வெற்றியின் மிதப்பில் இருந்தவர்களுக்கான உளவியல் தாக்குதல்.

மர்மயோகி
29-10-2008, 12:55 AM
உண்மை நிலவரங்கள் என்னவென்பதைப் புலப்படுத்த தமிழனின் பறவைகள் அவ்வப்போது பறக்கவேண்டியிருக்கிறது.

அன்புரசிகன்
29-10-2008, 06:05 AM
எனது அண்ணன் அனுப்பிய குறுந்தகவல்... அதிகாலை வந்ததால் ஏதோ கனவு போன்று இருந்தது... இந்த எண்ணைக்குதங்கள் எத்தனை தடவை தாக்குதலை உள்வாங்கியுள்ளது. ரொம்ப.......... நல்ல எண்ணைக்குதமாக உள்ளதே............

ராஜா
29-10-2008, 06:10 AM
ம்ம்ம்ம்ம்

குட்டித்தீவில் என்று அமைதி திரும்புமோ..?

ஒவ்வொரு விடியலும் நிச்சயமற்றதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.