PDA

View Full Version : சந்த்ரயான்!lenram80
28-10-2008, 03:28 PM
இஸ்ரோவுக்கு இஸ்திரி போட்ட சந்த்ரயானே!

மங்கைக்கு
மான் விடு தூது!

மதியே உனக்கு...
சந்த்ரயான் விடு தூது!

சந்திரனா? நிலவா?
ஆணா? பெண்ணா? - உன்னை
ஆராய்ச்சி செய்யப் போகிறோம்!

காற்றுள்ள பலூன் தானே வானில் பறக்கும்!
காற்றே இல்லாமல் நீ எப்படிப் பறக்கிறாய்?
உன் குரோமோசோம் எடுத்து குடையப் போகிறோம்!

உன் இருட்டின் மீது வெள்ளை அடித்து
முப்பது நாளும் முழு நிலவாக்கப் போகிறோம்!

எங்கள் பேரப் பிள்ளை
"பூமி பூமி ஓடி வா!...பூப் பறிக்க ஓடி வா!"
சொல்லும் காலம் தூரம் இல்லை!

பாதி நாடு வறுமை கோட்டுக்குக் கீழே!
சந்த்ரயான் மட்டும் மேகக் கூட்டுக்கு மேலே!

தேவையா?

வறுமை வறட்சியால் அறிவியல் புரட்சியை அடைக்கலாமா?
பசி பஞ்சத்தால் தொழில் நுட்பத்தைத் துடைக்கலாமா?

கொல்லும் பிரச்சனைகள் ஆணிகள்!
கொள்ளும் சாதனைகள் பூங்காக்கள்!
பூங்காக்களில் ஆணி அடிக்காதீர்கள்!
அப்படி அடித்தாலும்
"மரங்களை வெட்டாதீர்கள்!" பலகை வைக்க அடியுங்கள்!

விதை தான் விதைத்து இருக்கு!
பலன் கிடைக்கக் காலம் கிடக்கு!
பிறகு ஏன் விதைப்பது?
எனக் கேட்பது - அறிவீனம்!

வெப்பம் இல்லாமல் வெளிச்சம் இல்லை!
செலவு இல்லாமல் வரவு இல்லை!
உழைப்பு இல்லாமல் உயர்வு இல்லை!

தொலைநோக்குப் பார்வையோடு
தலை தூக்கிப் பாருங்கள்!

வெற்றி கொண்ட நெருப்புத் துண்டு
நிலவு சுற்றி வருவது கண்டு
ஆனந்தம் கொண்ட இந்தியன் அகிலம் முழுக்க உண்டு!

நிலவே,
சீக்கிரம் தொட்டு விடுவோம் உன் மண்ணை!
தொட்டால் விட மாட்டோம் உன்னை!

தாமரை
28-10-2008, 04:48 PM
ஆனந்த விகடன் தீபாவளி மலரில் படித்தது. சந்திரனில் எக்கச்சக்கமாய் ஹீலியம் இருக்கிறது. ஹீலியம் நமது யுரேனியத்தை விட மிக அதிக சக்தி வாய்ந்த எரிபொருள்.எதிர்காலத்தில் ஹீலியம் சந்திரனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படலாம்.

சொன்னவர் : அப்துல் கலாம்.

அப்படியானால் நம்பிக்கையான தகவலாகத்தானே இருக்கும்.

சாம்பவி
28-10-2008, 05:01 PM
உன் இருட்டின் மீது வெள்ளை அடித்து
முப்பது நாளும் முழு நிலவாக்கப் போகிறோம்!

நமது பேரப் பிள்ளை .... :O :O
"பூமி பூமி ஓடி வா!...பூப் பறிக்க ஓடி வா!"
சொல்லும் காலம் தூரம் இல்லை!

பாதி நாடு வறுமை கோட்டுக்குக் கீழே!
சந்த்ரயான் மட்டும் மேகக் கூட்டுக்கு மேலே!

தேவையா?

வறுமை வறட்சியால் அறிவியல் புரட்சியை அடைக்கலாமா?
பசி பஞ்சத்தால் தொழில் நுட்பத்தைத் துடைக்கலாமா?

கொல்லும் பிரச்சனைகள் ஆணிகள்!
கொள்ளும் சாதனைகள் பூங்காக்கள்!
பூங்காக்களில் ஆணி அடிக்காதீர்கள்!
அப்படி அடித்தாலும்
"மரங்களை வெட்டாதீர்கள்!" பலகை வைக்க அடியுங்கள்!

விதை தான் விதைத்து இருக்கு!
பலன் கிடைக்கக் காலம் கிடக்கு!
பிறகு ஏன் விதைப்பது?
எனக் கேட்பது - அறிவீனம்!

வெப்பம் இல்லாமல் வெளிச்சம் இல்லை!
செலவு இல்லாமல் வரவு இல்லை!
உழைப்பு இல்லாமல் உயர்வு இல்லை!

தொலைநோக்குப் பார்வையோடு
தலை தூக்கிப் பாருங்கள்!

வெற்றி கொண்ட நெறுப்புத் துண்டு
நிலவு சுற்றி வருவது கண்டு
ஆனந்தம் கொண்ட இந்தியன் அகிலம் முழுக்க உண்டு!

நிலவே,
சீக்கிரம் தொட்டு விடுவோம் உன் மண்ணை!
தொட்டால் விட மாட்டோம் உன்னை!


ஒரு வரியில் நிலவோடு பேச்சு...
மறுவரியோ சக மனிதனுக்கென ஆச்சு...
முன்னிலையில் (second person ) உள்ளது
நிலவென மறந்தா போச்சு... !!!


சொற்பிழைகளையும் சேர்த்தே களைந்திடுங்கள்.... :)

lenram80
28-10-2008, 05:09 PM
நன்றி தாமரை & சாம்பவி.

முடிந்தவரை சொற்பிழைகளை தவிர்த்து தான் தருவேன்.

நெறுப்பு - நெருப்பு, கறுப்பு - கருப்பு
பயங்கர குழப்பம் இருக்கு.

இளசு
28-10-2008, 08:32 PM
வாங்க லெனின்..

உலக நாடுகளில் நிலவுக்கு கலம் அனுப்பியதில்
ஆறாவதாம் பாரதம்!

அடிப்படை வசதிகள் அனைத்தும் கடைக்கோடி மனிதனுக்கும்
கிடைத்த பின்னரே - அதி அறிவியல் சோதனைகளில் கோடிகளைக் கொட்ட வேண்டும்!

இந்த பார்வையின் அடிப்படை நோக்கம் சரியே..

ஆனாலும் -
எதுவரை எதற்காகக் காத்திருக்கலாம்?
சில பாய்ச்சல்களால் மேலே சொன்ன எல்லைகளை (விரைவாய்) எட்டலாம்!
என்ற நம்பிக்கைப் பார்வையும் உண்டு..

விடியல் எந்த வகையில் வந்தாலும் சரியே என
எதையும் தாங்கும், நம்பும் சராசரி இந்தியனாய்
நானும் இந்த சந்திராயனை வரவேற்கிறேன்!

கவிதைக்கு என் பாராட்டுகள் லெனின்..

-------------------------------

லெனின்
எங்கே கொஞ்ச நாள் ஆளைக் காணோம்?

---------------------------------------

சந்திராயனின் பயணத்தில் தனிமகிழ்ச்சி கொள்ள வல்ல நண்பர் ஒருவர் நம்மில் உண்டு..

அவர் நம் நண்பன்..

விண்கலன் செய்பவளே என்னும் அவரின் கவிதை வாசித்தவர்களுக்குப் புரியும்..

அமரன்
28-10-2008, 08:34 PM
சந்திராயனின் பயணத்தில் தனிமகிழ்ச்சி கொள்ள வல்ல நண்பர் ஒருவர் நம்மில் உண்டு..

அவர் நம் நண்பன்..

விண்கலன் செய்பவளே என்னும் அவரின் கவிதை வாசித்தவர்களுக்குப் புரியும்..

அண்ணா!
இந்தக் கவிதை படித்த கணத்தில் நண்பனும் அந்தக் கவிதையும் நினைவாடலில்.

lenram80
30-10-2008, 08:40 PM
நன்றி இளசு மற்றும் அமரன்.

இளசு சொல்வது போல, எனக்கும் அந்த சின்ன நம்பிக்கை உண்டு. அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளையை விட இப்படி அறிவியலுக்கு செலவு செய்வது ஒன்றும் தேசத் துரோகமாக தோன்றவில்லை எனக்கு.

சந்திராயனின் கிளை பொருட்கள்(Side Products) நாட்டின் பாதுகாப்புக்கு கூட பயன்படும் என்ற நம்பிக்கையும் உண்டு.

வசீகரன்
31-10-2008, 05:05 AM
.
இளசு சொல்வது போல, எனக்கும் அந்த சின்ன நம்பிக்கை உண்டு. அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளையை விட இப்படி அறிவியலுக்கு செலவு செய்வது ஒன்றும் தேசத் துரோகமாக தோன்றவில்லை எனக்கு.

சந்திராயனின் கிளை பொருட்கள்(Side Products) நாட்டின் பாதுகாப்புக்கு கூட பயன்படும் என்ற நம்பிக்கையும் உண்டு.

ஆம்.. நிதர்சனம்...! சந்திராயன் எம் பாரதத்தின் இன்னுமொரு சாதனை சிகரம்..

பென்ஸ்
02-11-2008, 11:47 PM
இஸ்ரோவுக்கு இஸ்திரியானாலும் பல பாமரர்களுக்கு பிளாஸ்திரி என்று அலறி திரியும் அறிவிலா அரசியல்வாதிகளின் அறிவியல் பற்றிய பேச்சு...

DRDO-வில் பணி புரியும் என் நண்பர் ஒருவரின் மூலம் நான் அறிந்த ஒரு தகவல்... ஏவுகணையை கண்டுபிடிக்கும் ராடார் ஒன்றை தயாரிக்க நாம் 30 மாத திட்டம் போட்டு பல கோடி இட்டு, திட்டத்திற்கு மாதத்தையும் கோடியையும் அதிகமாக இட்டு பலன் இல்லாமல் போக, இஸ்ரேலின் ராடர் வாங்கபட்டது.... அரசாங்க அலுவலகம் போல நடை பெறும் இந்த ஆராய்ச்சி கூடங்கள் மேல் எனக்கு அதிகம் நம்பிக்கை இல்லை என்றாலும்....
LCA, Arjun போன்ற பல தோல்விகள் இருந்தாலும், நமது PSLV, GSLV வெற்றிகள் மேல் ஊள்ள நம்பிக்கையுடன்...
தன் சம்பளத்தில் பெரும் பங்கை வருமான வரி என்ற பெயரில் அரசியல்வாதிகளுக்கு வாய்க்கரிசியாகவும், அரசாங்க ஊழியர்களுக்கு போன்ஸ் போன்ற இதர செலவாகவும் கொடுக்கும் ஒரு அப்பாவி இளைஞன்.

பி.கு:
சந்திரனில் நிலம் விலைக்கு போகிறது என்று இனையத்தில் வந்த விளம்பரத்தை நம்பி 30 நிலாவில் ஏக்கர் நிலம் வாங்கிய படித்த இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர் நம்ம பிரதிப்பு ஊருகாரராம்.

பிச்சி
03-11-2008, 04:15 AM
காதலோடு கல்ந்த சமூக கவிதை மாதிரி இருக்கிறது. அதே அழகு. வாழ்த்துக்கள் அண்ணா

shibly591
05-11-2008, 04:35 AM
சந்ராயன் இந்தியாவின் வல்லரசுக்கனவின் சாத்தியத்திருப்பம்

கவிதைக்கு பாராட்டுக்கள்