PDA

View Full Version : +1 (சற்று பெரிய சிறுகதை)



ரங்கராஜன்
28-10-2008, 08:28 AM
மு.கு : நண்பர்களே இது என்னுடைய எழாவது கதை, என்னுடைய முந்தியா ஆறு கதைகளும் சோகமான அல்லது சீரியஸான களத்தை உடையவைகள்.அதனால் ஒரு மாறுதலுக்காக இந்த கதையின் வாயிலாக உங்களை கீச்சுகீச்சு மூட்ட முயற்சி செய்து இருக்கிறேன், அதனால் நண்பர்களே தங்களின் கைகளை தூக்கிக் கொண்டு நின்றால் கீச்சுகீச்சு மூட்ட தொதுவாக இருக்கும்.


+1

வாழ்க்கையில் அனைவருக்கும் பசுமையான காலம் என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும், சிலர் அதை வெளியில் சொல்லி சந்தோஷப்படுவார்கள், சிலர் அதை மனதுக்குள் மட்டும் நினைத்து பூரிப்பார்கள். சிலர் அந்த காலத்தை திருப்பவும் உருவாக்க முயற்சித்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் காலம், இந்த காலம் பல மனிதர்களை அடித்து விழ்த்தும், அதே காலம் இந்த மனிதர்களுக்கு மருந்தும் போடும். காலத்தை விட சிறந்த மருத்துவர் இருக்க முடியாது.

அந்த மாதிரி ஒரு பசுமையான காலத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம் என்று தெரியாமல் ஜீவித்துக் கொண்டு இருக்கும் +1 மாணவர்களின் கதை இது, சுதந்திர பறவைகள். ஏன்?, கடந்த வருடம் பத்தாவதில் பெற்றோராலும், ஆசிரியர்களாளும் புழியப்பட்டு, இதற்க்கு அடுத்த வருடம் +2வில் அதே பெற்றோரால், ஆசிரியர்களாள் வறுக்கப்பட போகும் மாணவர்கள். அதனால் +1ல் அவர்கள் அனைவரும் சுதந்திர பறவைகள், எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத சுதந்திர பறவைகள் . அந்த பறவைகளின் கூட்டுக்குள் ஒரு நாள் சென்று பார்ப்போம்.

மூர்த்தி, குமார், பாலா, மதி இவர்கள் நால்வரும் நல்ல நண்பர்கள், தங்களின் வகுப்பறையில் மூன்றாவது பீரியர்டு முடிந்து, அடுத்த பீரியர்டு ஆசிரியருக்காக காத்துக் கொண்டு இருந்தனர். நால்வரும்
ஒரே பேஞ் அமர்ந்து இருந்தனர்.

மூர்த்தி : நல்லவன்,கோபக்காரன்
பாலா : படிப்பாளி, மென்னையானவன்
மதி : சுமாறாக படிப்பான், திக்குவாய்
குமார் : தண்டகருமாந்திரம், ஓட்டவாய்

" டேய் அடுத்து என்ன பீரியர்டு டா" என்றான் மூர்த்தி.

"பா.......பா......பா........" என்று திக்கினான் மதி.

"டேய் நீ சும்மா இரு, ரைம்ஸ் அப்பறம் சொல்லிக்கலாம், பாலா நீ சொல்ற" என்றான் குமார்.

"பாட்டனி கிளாஸ்டா" என்றான் பாலா.

"கிழிஞ்சது போ, செடியில ஒரு பூ பூக்க உடமாட்டானே, உடனே அத பிச்சி ஆராய்வானே அவன் கிளாஸா, வாடா கட் அடிச்சிடலாம்" என்றான் குமார். ஆசிரியர் அதே நேரம் பின்னாடி வந்து
நின்றார், பசங்க அதை கவனிக்கவில்லை.

மூர்த்தி சிரித்துக் கொண்டு "அவன விடுடா சின்ன பய, சரி இன்னிக்கு நம்ப ஸ்கூலுக்கு வெளியே இருக்கும் மணியே அடிக்கறத ப்ளான் போட்டோம் ஞாபகம் இருக்கா?"

"ஆ........ஆமாட....டா, இன்னைக்கு நான் ஸ்கூலுக்கு வரும் போதுக்கூட என் முறச்சி பார்த்தா....தா, இன்னைக்கு விடக்கூடாது" என்றான் மதி.

"வேண்டாம் டா பாவம், விட்டுடலாம்" என்றான் பாலா

"அப்படியெல்லாம் விட்டா, நம்ம மேல பயம் இருக்காது, இன்னைக்கு போட்டுடனும்" என்றான் குமார். இவர்கள் பேசிக்கொண்டு இருந்தை அனைத்தையும் கேட்டு விட்டு ஆசிரியர் அமைதியாக
உள்ளே நுழைந்தார்.

"குட்........ மார்னிங்.........சார்" என்று மாணவர்கள் அனைவரும் கொரஸாக சொன்னார்கள். மதி மட்டும் குட் - ளே திக்கிக் கொண்டு இருந்தான். வந்தவர் பாடத்தை எடுக்க ஆரம்பித்தார்.

இவர்கள் நான்கு பேரும் கடைசி பேஞ்சில் அமர்ந்து இருப்பார்கள், கிளாஸுக்குள் நுழைபவர்கள் அவர்களை கடந்து தான் வரவேண்டும். பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் பொழுது, இவர்களின் ஆதர்சன விளையாட்டு ஒன்று இருக்கும், அதாவது சார் பார்க்காத பொழுது, இவர்களுக்கு முன் பேஞ்சில் அமர்ந்து இருக்கு பெண் பிள்ளைகளின் மூடியை பிடித்து இழுத்துவிட்டு, அவள் திரும்பி பார்க்கும் பொழுது நான்கு பேரும் சிரிப்பார்கள். அவள் யாரை திட்டுவது என்று தெரியாமல் மொத்தாமாக திட்டுவாள், அந்த திட்டில் ஒரு சந்தோஷம் இவர்களுக்கு.
அந்த விளையாட்டின் பெயர் பாம்பு விளையாட்டு.

மென்மையான குரலில் குமார் "டேய் வாடா பாம்பு விளையாட்டு விளையாடலாம்"

"வேண்டா டா, சார் பார்த்தா பூவ பிக்கிற மாதிரி நம்மள பிச்சிடுவாரு" பாலா

"பரவாயில்லைடா, வா விளையாடலாம் கரைட்டா கைய வைக்கனும் ஓ.கே, 1..2..3" என்ற மூர்த்தி முன்னாடி இருந்த பெண்ணின் ஜடையை மின்னல் வேகத்தில் இழுத்து விட்டு கையை இழுத்துக் கொண்டான் அவளும் அதே மின்னல் வேகத்தில் திரும்பினாள், இவர்கள் நால்வரும் பாம்பு படம் எடுப்பது போல கையை பேஞ்சில் ஒரே மாதிரி வைத்துக் கொண்டு சிரித்தனர்.

உடனே குமார் அந்த பெண்னை பார்த்து "யாரு இழுத்தானு கரைட்டா சொன்னா உனக்கு இன்னைக்கு மதியம் மாமன் பிரியாணி வாங்கி தருவேன், சொல்லுடீ செல்லம்" சன்னமான குரலில்

"போட பொறுக்கி நாயே" அதைவிட சன்னமான குரலில் அந்த பெண்.

நால்வரும் பிறந்த பயனை அடைந்த மாதிரி சந்தோஷப்பட்டு சிரித்தார்கள்,

அதில் மதி உடனே "மா.....மா.....மாமாவை இப்படீ....டீ..டீ மரியாதையில்லாம பேசக்கூடாது, டார்லி....லீ...லீங்"

அந்த பெண் "டேய் இன்ஸ்டால்மேண்டு வாயே, அப்படியே கிழிச்சுடுவேன் வாய".

"என்ன அங்க சத்தம்" என்று ஆசிரியர் கேட்க. உடனே அந்த பெண் திரும்பிக் கொண்டாள்.

"ஆ........இரண்டு நாளா வயிரு சரியில்லை அதான் சத்தம்" என்றான் குமார் சன்னமான குரலில், நால்வரும் ரகசியமாக சிரித்தனர்.

பத்து நிமிடம் கழித்து திரும்பவும் அந்த பாம்பு விளையாட்டை அந்த பெண்ணிடம் அரங்கேற்றினார்கள், அவள் மிகுந்த கோபத்தோடு பின்னாடி திரும்பி

"டேய் நாய்களா உங்கள..................(அவர்களுக்கு பின்னாடி பார்த்து எழுந்து நின்றவள்)............. சார் நான் ஒன்னுமோ பண்ணல சார், இவங்க தான்....." என்று பேந்த பேந்த விழித்தாள்.

இவர்கள் நால்வரும் கையை பாம்பு போல வைத்துக் கொண்டு ஒன்றாக திரும்பி பார்த்தார்கள். அவர்களின் பின்னாடி பள்ளியின் தலைமை ஆசிரியர் நின்றுக் கொண்டு இருந்தார்.
நால்வரின் வயிரும் ஜீல்லிட்டது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு எழுந்து நின்றனர். வகுப்பே மையான அமைதியாக இருப்பதை உணர்ந்த ஆசிரியர் திரும்பி மாணவர்களை பார்த்தார்.
தலைமை ஆசிரியரை வகுப்பில் வந்து நின்றதை பார்த்தவுடன் அவர் அலறிக் கொண்டு வந்தார்.

"குட் மார்னிங் சார், சொல்லுங்க சார்" என்றார் ஆசிரியர்.

"என்ன மாஸ்டர் நீங்க, போர்டுல எழுத ஆரம்பிச்சா இந்த சைடு திரும்பியே பார்க்க மாட்டீங்களா?, நானும் கால் மணி நேரமா பார்த்துனு இருக்கேன், இந்த பசங்க அந்த பொண்ண
கிளாஸ் கவனிக்கவுடாம சீண்டினே இருக்காங்க"

"அப்படியா சார், நானே கிளாஸ் முடிச்சிட்டு உங்ககிட்ட வந்து இவங்களை பத்தி ஒரு கம்பளைண்டு சொல்லாம்னு இருந்தேன், நான் கிளாஸ்க்குள்ள நுழையும் பொழுது இவங்க இன்னிக்கு
மணி ன்னு ஒருத்தனை அடிக்க பிளான் போட்டுனு இருந்தாங்க சார், நான் கேட்டேன்" என்றார் ஆசிரியர் நால்வரையும் முறைத்து.

தலைமை ஆசிரியர் " ஓ பொறுக்கி பசங்கன்னு பார்த்தா, ரவுடி பசங்களா இவனுங்க, முளையிலே கிள்ளிடனுமே இவங்கள" என்று யோசித்தபடி நால்வரையும் பார்த்தார்.

மூர்த்தி பதறியபடி "இல்ல இல்ல சார், நாங்க.........." என்று சொல்லி முடிப்பதற்க்குள் ஆசிரியர் குறிக்கிட்டு

"என்ன, இல்லன்னு சொல்றீயா, நான் காதுல கேட்டேன்" என்றார்

"அ.......அ.....அது இ......இல்.......இல்ல....சா" என்று திக்கினான் மதி.

"டேய் நீ சும்மா இருடா, நாங்க பேசினாவே ஒத்துக்க மாட்றாங்க இதுல நீ வேற" என்று மதியின் காதோரமாய் சொன்னான் குமார்.

தலைமை ஆசிரியர் "என்னடா இல்ல சார், அப்ப மாஸ்டர் பொய் சொல்றார, மணின்னு ஒருத்தனை நீங்க இன்னிக்கு அடிக்க பிளான் போட்டது உண்மையா, இல்லையா அத சொல்லுங்க" என்றார் கோபமாக

"உண்மைதான் சார், ஆனா......"என்று மூர்த்தி முடிப்பதற்க்குள் ஆசிரியர் குறுக்கிட்டு

"பார்த்தீங்களா சார், திமிர் பிடிச்ச பசங்க சார்" என்றார்.

மூர்த்தி "சார் மணி-ன்றது ஸ்கூலுக்கு எதிரில கடையில இருக்குற நாய்! சார்". வகுப்பறையில் அனைவரும் சத்தமாக சிரித்தார்கள்.

பாலா "ஆமா சார், தினமும் அது எங்கள பார்த்தா குளைக்கும், துரத்தும் அதனால இன்னைக்கு அத அடிக்கலாம்ன்னு இருந்தோம்" என்றான் பரிதாபமாக,

வகுப்பறையில் சிரிப்பு சத்தம் இன்னும் அதிகமாகியது, ஆசிரியர் முகத்தில் அசடு வழிந்தது. தலைமை ஆசிரியருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஆனால் கோபம் அதிகமாகியது

"என்னடா சமாளிக்கிறீங்களா, அறிவில்ல உங்களுக்கு பொண்ணோட முடியை பிடித்து இழுக்கிறீங்களே, இந்த வயசுல என்ன உங்களுக்கு பொம்பள ஆசை, அவ்வளவு ஆசையா இருந்தா
உங்க அக்கா, தங்கச்சி முடியை இழுக்க வேண்டியது தானே, இத நான் சும்மா விட போறது இல்லா, நாளைக்கு உங்க பெரன்ஸ் வந்தாதான் நீங்க ஸ்கூலுக்கு வரணும், மாஸ்டர் இன்னைக்கு
இவனுங்களுக்கு அட்டணன்ஸ் போடாதீங்க" என்று வேகமாக வெளியே நடந்தார். சாப்பாட்டு மணி அடித்தது.

அனைவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள், மூர்த்தியும் சாப்பிட்டுக் கொண்டே

"டேய் பாட்டனி சாருக்கு இந்த வருஷம் ஆன்வல் டே-ல பொங்க வச்சி சாமி கும்பிடனும், அடிக்கிற அடியில் பாட்டனி என்ன தமிழையே மறந்திடனும் டா அவன்"

"வாயிலியே குத்தணும் டா அவனை, ஆமா நாளைக்கு நீ அப்பாவ கூட்டி வருவியா, எங்க வீட்டுல கொன்னுடுவாங்க டா" என்றான் குமார் வாயில் சாப்பாட்டை அதக்கிக் கொண்டு.

"நான் மா...ட்டன், மாட்டேன் பா" என்றான் மதி. பாலா மட்டும் சாப்பிடாமல் உக்கார்ந்து இருந்தான், கண்களில் கண்ணீருடன்

"இந்த வயசுல என்ன பொம்பள ஆசை....... அக்கா தங்கச்சி போய்" தலைமை ஆசிரியரின் வார்த்தைகள் அவனை மிகவும் பாதித்து இருந்தது. அவன் கண்களங்கியபடி

"டேய் அவர் கேட்ட கேள்விக்கு நாக்கை பிடிங்கிக்குனு சாகலாம் போல இருக்குடா" என்றான் சோகத்துடன்

"அப்ப உனக்கு சாப்பாடு வானாமா டா, நான் எடுத்துக்கட்டுமா" என்று பாலாவின் சாப்பாட்டை எடுத்தான் குமார்.

"நாயே எப்படி டா உன்னால இப்படி பேச முடியுது மனசாட்சியில்லாம" என்று கோபத்தோடு மூர்த்தி குமாரை பார்த்தான்.

"இல்லடா பயங்கர பசி அதான்" என்று தயங்கினான் குமார்.

"பசியா இருந்த நீ மட்டும் மனசாட்சியில்லாம தனியா சாப்பிடுவியா, எனக்கும் கொஞ்சம் கூடுடா" என்றான் மூர்த்தி.

மதியம் கிளாஸ் துடங்கியது அனைத்து பையன்களும் ஃப்ரஸ்ஸாக இருந்தனர், முகம் கழுவி, பெளடர் போட்டு, அதையே திருநீராக வைத்து வாசனையாக அமர்ந்து இருந்தனர், காரணம்? தேவி மேடம், கணக்கு ஆசிரியர், மலையாளி வயது 25. பல மாணவர்கள் அவர்களிடம் டியூஸன் போனார்கள், இந்த நால்வரையும் சேர்த்து. அந்த மேடத்திற்க்கு பாலாவை தான் பிடிக்கும், நன்றாக படிக்கும் பையன் என்பதால். அவர் வந்தது பாலாவின் முகத்தை பார்த்து என்ன நடந்ததுன்னு கேட்டார். மூர்த்தி நடந்ததை சொன்னான். உடனே குமார்

"அதுக்கு போய் சாவணும் போல இருக்குனு சொல்றான் மேடம்" என்று சிரித்தான்.

உடனே தேவி மேடம் "சாகணுன்னு முடிவு பண்ணவன் சொல்லிட்டு சாகமாட்டான், குமார்" என்று சிரித்தார்.

பாலாவிற்க்கு இன்னும் அவமானமாகி விட்டது. பள்ளி முடிந்தது, அனைவரும் மாலை டியூஸன் வந்தார்கள், பாலா மட்டும் வரவில்லை. மூர்த்தி, மதி, குமார் மூன்று பேரும் ஒருவரை ஒருவர்
பாலாவை பற்றி விசாரித்துக் கொண்டனர், தேவி மேடமும் விசாரித்தார், அனைவரிடமும் ஒரே பதில் "தெரியவில்லை". ஒரு மணி நேரம் கழித்து பாலா வேர்த்து விறுவிறுத்து வந்தான். வந்தவன் நேராக தேவி மேடம் இருக்கும் இடத்துக்கு வந்தவன், அவர்கள் மீது ஒரு பொட்டலத்தை எறிந்து விட்டு,

"சில பேர் சொல்லிட்டும் செய்வார்கள்" என்று கூறிவிட்டு ஒரே ஓட்டமாக கிழே ஒடினான். அந்த பொட்டலம் மூர்த்தியிடம் வந்து விழுந்தது

"டேய் என்னது டா இது, கறுப்பா பெளடர் மாதிரி இருக்கு" என்று மூர்த்தி அதை பிரித்தான்.

"என்னது காப்பி தூள் மாதிரி இருக்கே, மேடம் அவன காப்பி தூள் எதாவது வாங்கி வர சொல்லி திட்டீனீங்களா, அதான் கோபத்துல தூக்கி எறிஞ்சிட்டு ஒடறான்" என்றான் குமார்.

"நான் எதும் அவன வாங்கினவர சொல்லலையே, காட்டு பாக்கலாம்" என்று வாங்கியவள் அந்த பொட்டலத்தில் இருக்கும் பெயரை பார்த்து அப்படியே நாற்காலியில் உக்கார்ந்தார், பொட்டலத்தில்

சுகண்யா எலி மருந்து,
கலப்பிடம் இல்லாதது,
ISI முத்திரை இருந்தது. பொட்டலத்தில் எலி மருந்து பாதி இல்லை

மேடம் "அய்யயோ டேய் அவன் விஷம் சாப்பிட்டு இருக்கான் டா, பசங்களா புடிங்கடா அவனை" என்று கத்தினாள்.

மாணவர்கள் அனைவரும் பதட்டத்துடன் எழுந்தார்கள், சில மாணவிகள் விஷம் என்றது அந்த பொட்டலத்தை பார்த்தே அழுதார்கள். மூர்த்தி, மதி, குமார் பதட்டத்துடன் எழுந்தனர்.

குமார் "மேடம் அப்ப இன்னைக்கு டியூஸன் லீவா" என்றான்.

மூர்த்தி "டேய் பரதேசி வாடா சீக்கிரம் போய் அவன புடிப்போம்" என்று அவசரமாக கீழே இறங்கி தெருவில் போய் பார்த்தார்கள், பாலா தூரத்தில் ஓடிக் கொண்டு இருந்தான்

(தொடரும்)

மதி
28-10-2008, 08:52 AM
நல்ல தொடக்கம் மூர்த்தி.. ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் கவனத்தை சிதறடிக்குது..
எனக்கு நெருக்கமான பெயர்கள்... அதனால் கூடுதல் சுவாரஸ்யம்...

அடுத்த பாகத்தை எதிர்நோக்கி...

ரங்கராஜன்
28-10-2008, 09:07 AM
நன்றி திரு.மதி
எழுத்துப் பிழைகள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை, நான் மாணவர்களின் வட்டார பேச்சு வழக்கில் இருக்கும் தமிழில் எழுதி இருக்கேன்

மதி
28-10-2008, 09:09 AM
"நால்வரும் பிறந்த பையனை அடைந்த மாதிரி சந்தோஷப்பட்டு சிரித்தார்கள்"..
அர்த்தமே மாறி விடுகிறதே..

shibly591
28-10-2008, 09:59 AM
சிறந்த எதிர்காலம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது..

முயற்சியையும் தேடலையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளுங்கள்..

வாழ்த்துக்கள் நண்பரே

ரங்கராஜன்
28-10-2008, 10:11 AM
"நால்வரும் பிறந்த பையனை அடைந்த மாதிரி சந்தோஷப்பட்டு சிரித்தார்கள்"..
அர்த்தமே மாறி விடுகிறதே..

ஹா ஹா ஹா, உண்மை தான், இப்பொழுது தான் கவனித்தேன், பள்ளி காலத்தில் தமிழ் வகுப்புகளை கட் அடித்தால், இப்பொழுது தடுமாறுகிறேன், கூடிய விரைவில் திருத்திக் கொள்கிறேன், நன்றி மதி என்னுடைய முதல் கதையான வழித்துணையில், முதல் விமர்சனம் உங்களுடையது தான், என்றும் உங்களை மறக்கமாட்டேன்,

ரங்கராஜன்
28-10-2008, 10:13 AM
சிறந்த எதிர்காலம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது..

முயற்சியையும் தேடலையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளுங்கள்..

வாழ்த்துக்கள் நண்பரே

நன்றி நண்பரே

மிகப்பெரிய வார்த்தை தந்தமைக்கு கனிவான நன்றிகள்

MURALINITHISH
31-10-2008, 09:09 AM
அடுத்த கதையாசிரியர் தளத்துக்கு நானும் உங்கள் வாசகனாய்