PDA

View Full Version : காதல்..poo
04-04-2003, 05:55 PM
பாலைவனமாய் மனம்..
உன் மேக(கூந்தல்) தரிசனம்..
ஒற்றைக்கால் கொக்காய் தவம்..
பனிமழையாய் உன் பார்வை பாய்ச்சல்..
உள்ளமெங்கும் வெள்ளம்..
அணை போட்டிட அணுமதி - தலையசைத்தாய்..
இசையமைத்தேன் இன்ப நரம்புகளால்..

புதையலாய் உன் காதல்...
புதைக்க இருந்த எண்ணங்கள்
புதுப்பிக்கப்பட்டன....
உணர்வுகள் உருவிழந்து போனது -
ஏதோவொன்றென..

சொல்லமுடியாத வார்த்தைகள்
நிறைய பேசினேன்...
சொன்னாலும் புரியாத மொழி - காதலித்தால்
கற்றுக் கொள்ளலாமோ?!!

உன்னில் காதல் வந்த பின்னரே
மண்ணில் உதித்ததின்
உண்மை விளங்கியது.!!.
ஒவ்வொரு சந்திப்பிலும்
நம்மை உணர்ந்தேன்..

விதையாய் தூவின காதல்..
விருட்சமாய் வளர்ந்து -
கலகலப்பாய் கல்யாணம்!!!

இப்போதெல்லாம்
என் பலம் இருமடங்காய்..
என்னில்(லும்) நீ இருப்பதால்..

வருடங்களுக்கு மட்டுமே
வயசாகின்றன... நாம் மட்டும் இன்(று)னும்
இளமையாய்..
நமக்கு மட்டுமேன் இந்த விதிவிலக்கு?!!.
ஓ... நம்மில் கசக்காத காதல்..
இனிப்பாய் செய்யும் வேலை!!!


சாகாத காதல்..
மரணமில்லா வாழ்க்கை...
வரம் வேண்டி தவம்-
காதலில் வென்றதால்!!!

இளசு
04-04-2003, 06:10 PM
கலகலப்பாய் கல்யாணம்!!!

இப்போதெல்லாம்
என் பலம் இருமடங்காய்..
என்னில்(லும்) நீ இருப்பதால்..சாகாத காதல்..
மரணமில்லா வாழ்க்கை...
வரம் வேண்டி தவம்-
காதலில் வென்றதால்!!!

உண்மைக் காதல் வென்று
அந்த உன்னத வாழ்வு வாழ்ந்து
உள்ளத்தில் உள்ளதை
உணர்ச்சியோடு வடிக்கும்
அருமைக் கவிதை, அற்புத வரிகள்.

பாராட்டு என்ற வார்த்தை பத்தவில்லை கவியே!

aren
05-04-2003, 12:37 AM
பாலைவனமாய் மனம்..

வருடங்களுக்கு மட்டுமே
வயசாகின்றன... நாம் மட்டும் இன்(று)னும்
இளமையாய்..
நமக்கு மட்டுமேன் இந்த விதிவிலக்கு?!!.
ஓ... நம்மில் கசக்காத காதல்..
இனிப்பாய் செய்யும் வேலை!!!


!!!

கவிதை அருமையாக உள்ளது சிட்டு அவர்களே. அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். எனக்கு பிடித்த பத்தி மேலே. தொடர்ந்து அளியுங்கள் உங்கள் கவிதைகளை.

நன்றி வணக்கம்
ஆரென்

anushajasmin
05-04-2003, 11:25 AM
காதலைப் பற்றி அப்படியும் எழுதுகிறீர்கள் இப்படியும் எழுதுகிறீர்கள்... பாராட்டுகள்

poo
05-04-2003, 03:38 PM
வாழ்த்து சொன்ன அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி!!!!

discreteplague
06-04-2003, 03:21 AM
காதலை எப்படியும் எழுதளாம் என்று நல்ல புரிந்து வைத்திருக்கிறீர்கள்.

விஷ்ணு

மன்மதன்
23-11-2004, 03:00 PM
காதல் பூத்த காலம்.. இனி பூவின் கவிதைகளும் நிறைய பூக்க வேண்டும்..
அன்புடன்
மன்மதன்

ஓவியன்
24-09-2007, 05:40 PM
அன்பு பூ அண்ணா!!!

காதலே வரம் அதில்....
வெற்றி பெறும் காதல்......

உங்கள் கவிதைகளைப் போல அள்ள அள்ளக் குறையா தெவிட்டா இன்பமே.......

அன்பின் அண்ணா!!!

ஏனிந்த நீண்ட அஞ்ஞாதவாசம்.....?
உங்களது பதிவுகளுக்காக ஏங்குகின்றது மன்றம்.....
மீண்டும் வர மாட்டீர்களா உங்கள் பொற்பதிவுகளோடு.....????

அண்ணன் வரும் வழி மேல்
விழி வைத்துக் காத்திருக்கும்...
ஓவியன்...!

சுகந்தப்ரீதன்
25-09-2007, 04:19 AM
அன்பு பூ அண்ணா!!!

காதலே வரம் அதில்....
வெற்றி பெறும் காதல்......

உங்கள் கவிதைகளைப் போல அள்ள அள்ளக் குறையா தெவிட்டா இன்பமே.......

அன்பின் அண்ணா!!!

ஏனிந்த நீண்ட அஞ்ஞாதவாசம்.....?
உங்களது பதிவுகளுக்காக ஏங்குகின்றது மன்றம்.....
மீண்டும் வர மாட்டீர்களா உங்கள் பொற்பதிவுகளோடு.....????

அண்ணன் வரும் வழி மேல்
விழி வைத்துக் காத்திருக்கும்...
ஓவியன்...!

அழகான கவிதையை தோண்டி எடுத்த உங்களுக்கு என் நன்றிகள் ஓவிய அண்ணா... இன்னும் படித்துபார்க்க வேண்டிய கவிதைகள் நிறைய இருக்கிறது நம் மன்றத்தில்.. ஆனால் அதெற்க்கெல்லாம் நேரம்தான் தடையாயிருக்கிறது... உங்களை மாதிரி அறிவாளிங்க அப்ப அப்ப இந்த மாதிரி தோண்டி மேல கொண்டுவந்த எங்கள மாதிரி மேம்புல் மேயுரவங்களுக்கு வசதியா இருக்கும்... செய்வீங்களா..?

ஓவியன்
25-09-2007, 04:33 AM
உங்களை மாதிரி அறிவாளிங்க அப்ப அப்ப இந்த மாதிரி தோண்டி மேல கொண்டுவந்த எங்கள மாதிரி மேம்புல் மேயுரவங்களுக்கு வசதியா இருக்கும்... செய்வீங்களா..?

நிச்சயமாக சுகந்தா... :)
ஆனா அறிவாளி என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.... :D

இந்த மன்றத்திலே எனக்கென்று ஒரு அடையாளம் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் பூ அண்ணா...
அவர் மீள வந்து, இன்னும் பல புதியவர்களுக்கு வழிகாட்டியாக வேண்டுமென்பதே என் ஆவல்....
அது வெகு விரைவிலே நிறைவேறுமென நம்புவோம்.......

பூமகள்
25-09-2007, 05:48 AM
அணை போட்டிட அணுமதி - தலையசைத்தாய்..
இசையமைத்தேன் இன்ப நரம்புகளால்..

புதையலாய் உன் காதல்...
புதைக்க இருந்த எண்ணங்கள்
புதுப்பிக்கப்பட்டன....
உணர்வுகள் உருவிழந்து போனது -
ஏதோவொன்றென..
உன்னில் காதல் வந்த பின்னரே
மண்ணில் உதித்ததின்
உண்மை விளங்கியது.!!.
ஒவ்வொரு சந்திப்பிலும்
நம்மை உணர்ந்தேன்..


அற்புதம் பூ அண்ணா.. !!
கவிதை படித்ததும் ஏதோ உணர்வு என் உடலை சில்லிப்பூட்டி சிலிர்க்க வைத்தது. அது தான் ஒரு கவிஞரின் வெற்றி என்று நினைக்கிறேன். உங்களின் எண்ணவோட்டம் அப்படியே என்னுள் உணர்ந்த உணர்வு....
பாராட்ட வார்த்தைகள் தேடி தோற்றுவிட்டேன்..!
இன்னும் வேணும் பூ அண்ணா உங்களின் கவிகள் மன்றத்தில்.
உங்களின் கவிதையை மன்றத்து கடலில் மூழ்கி முத்தாய் மீட்டெடுத்த ஓவியன் அண்ணாவிற்கு என் சிரம் தாழ்த்தி வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஷீ-நிசி
25-09-2007, 05:49 AM
ஓ... நம்மில் கசக்காத காதல்..
இனிப்பாய் செய்யும் வேலை!!!

ரசனையான வரிகள்.....

பென்ஸ்
25-09-2007, 06:01 AM
பூவென்ற பெயரிலே வரும் மென்மை போல்...
காதல் என்ற பெயரிலே வரும் சுகம், கவிதையில் ஒவ்வொரு வரியிலும்...

காதல் ஒரு உணர்வு, அதை நான் வேண்டிய போதெல்லாம் கவிதையாய் இங்கு காண்கிறென்... ஆனால், உணர்வுகளை வரியாய் அமைக்க சிலரால் மட்டுமே முடிகிறது...
வைரமுத்துவில் தபுசங்கரை புகுத்தி எழுதியது...

உங்கள் வரவுக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகர்களில் ஒருவன்...

ஓவியன்
25-09-2007, 06:10 AM
உங்களின் கவிதையை மன்றத்து கடலில் மூழ்கி முத்தாய் மீட்டெடுத்த ஓவியன் அண்ணாவிற்கு என் சிரம் தாழ்த்தி வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாப் பெருமையும் இந்தக் கவிதையை ஒருங்குறியாக்கிய அன்புரசிகனையே சாரும் பூமகள்!.:)

பூமகள்
25-09-2007, 08:39 AM
எல்லாப் பெருமையும் இந்தக் கவிதையை ஒருங்குறியாக்கிய அன்புரசிகனையே சாரும் பூமகள்!.:)

அப்படியா?? மிக்க சந்தோசம் அண்ணா. அப்போ அன்புரசிகன் அண்ணாவிற்கும் என் நன்றிகள்.

மயூ
25-09-2007, 12:00 PM
அழகான கவிதை..
உண்மைக் காதலை அழகாகவிபரித்துள்ளது!!!!!!!!!!
தொடர்ந்து எழுதுங்கள்.