PDA

View Full Version : ஏகன்- பட விமர்சனம்



shibly591
26-10-2008, 09:22 AM
மன்ற நண்பர்கள் யாராவது படத்தைப்பார்த்து விமர்சனம் செய்யும் வரை அதிகாலை.கொம் என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ள விமர்சனத்தை படித்து ஆறுதலைடையவும்..

நன்றிகள்--அதிகாலை.காம்

ஏகன்- பட விமர்சனம்

நடிப்பு: அஜீத், நயனதாரா, ஜெயராம், சுமன், நவ்தீப், பியா, நாசர்

இசை: யுவன் ஷங்கர் ராஜா

இயக்கம்: ராஜூ சுந்தரம்

தயாரிப்பு: அய்கரன் இண்டர்நேஷனல்

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வந்துள்ளது அஜீத்தின் ஏகன்.

என்னதான், இந்தப் படத்தை ஷாரூக்கின் மெய்ன் ஹூன் நா ரீமேக் இல்லை என ராஜூ சுந்தரம் சத்தியமடித்தாலும், காட்சிக்குக் காட்சி ஷாரூக்கின் படம்தான் நினைவுக்கு வருகிறது. ஆனால், இந்தியை விட தமிழில் மிக சுவாரஸ்யமாகச் செய்திருக்கிறார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

பல படங்களில் அஜீத்தை சீரியஸாகவே பார்த்த கண்களுக்கு இதில் முற்றிலும் வித்தியாசமான, காட்சிக்குக் காட்சி வெடிச் சிரிப்பைக் கிளப்புகிற கலகல அஜீத்தைப் பார்ப்பது ரொம்பவே வித்தியாசமான அனுபவம். இடைவேளை வரை அவர் அடிக்கும் லூட்டிகள் தீபாவளிப் பட்டாசைத் தோற்கடிக்கும் அதிர் வேட்டுக்கள்.

கதைப்படி அஜீத் ஒரு அதிரடி போலீஸ் அதிகாரி. ஒன்மேன் ஆர்மி என்று தந்தை நாசரே வர்ணிக்கும் அளவுக்கு பட்டையைக் கிளப்பும் போலீஸ்.

வில்லன் சுமனுடைய பழைய கூட்டாளி தேவன் போலீஸ் அப்ரூவராக மாறிவிட, அவரைக் கொன்று விடத் துடிக்கிறார் சுமன். இதனால் மறைந்து வாழ்கிறார் தேவன். அவருக்கு ஒரே ஒரு மகள் (பொய் சொல்லப் போறாம் படத்தில் நடித்த பியா). ஊட்டியில் ஒரு கல்லூரியில் படிக்கிறார்.

பியாவின் உயிருக்கு சுமனால் ஆபத்து வரும் எனக் கருதும் போலீஸ், அவரைப் பாதுகாக்கும் பொறுப்பை நம்ம 'தல'யிடம் விடுகிறது. அதுவும் எப்படி, போலீஸ் என்று தெரியாமல் ஒரு மாணவரைப் போல மாறு வேடத்தில் போய் பாதுகாக்க வேண்டும். கூடவே, மறைந்திருக்கும் அவரது தந்தை தேவனையும் கண்டுபிடிக்க வேண்டும்.

கல்லூரியில் சேருகிறார் அஜீத்! அங்கே ஒரு கலகல பிரின்ஸிபால் (ஜெய்ராம்), அவருக்கேற்ற உதவியாளர் (சத்யன்) என காமெடிக் கூட்டணி, எக்ஸ்பிரஸ் வேகமெடுக்க இடைவேளை வந்ததே தெரியவில்லை.

அங்கே போன பிறகுதான் தனக்கு ஒரு தம்பி (நவ்தீப்) இருப்பதையும், அவரும் அதே கல்லூரியில் படிப்பதையும் தெரிந்து கொள்கிறார் அஜீத்.

பின்னர் எப்படி தனது அஸைன்மெண்டை வெற்றிகரமாக முடிக்கிறார் இந்த ஏகன் என்பதே மீதிக் கதை.

அஜீத்தின் நடிப்பும், நகைச்சுவை ததும்ப அதைக் கையாண்டுள்ள விதமும் சரவெடி. குறிப்பாக நயனதாராவை முதன்முதலில் பார்க்கும் அஜீத், 'உன்னைப் பார்த்த பின்பு நான்...' என 'காதல் மன்னன்' பாடலை பாடுவது காதல் கலாட்டா.

அஜீத்துக்கும் நயனுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருப்பது காதல் மற்றும் பாடல் காட்சிகளில் தெரிகிறது.

சண்டைக் காட்சிகளை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

முந்தைய படங்களில் சறுக்கிய நயன்தாராவுக்கு இந்தப் படம் ஒரு பிரேக். ஜெயராம், சத்யன் மற்றும் ஹனீபா கூட்டணிக்கு ஒரு ஜே. சுமனை இன்னும் கூட நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம். பியா, நவ்தீவ் ஓகே.

யுவனின் இசையில் ஏ சாலா... அஜீத் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டத்தை இரு மடங்காக்கும். அர்ஜூன் ஜனாவின் கேமரா அட்டகாசம்.

படத்தில் இப்படி ஏகப்பட்ட ப்ளஸ்கள் இருந்தாலும் இயக்குநர் ராஜூ சுந்தரம் க்ளைமாக்ஸில் சறுக்கியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இருந்தாலும் முதல் படம் என்பதால் அந்தக் குறையை மன்னிக்கலாம்.

ஏகன்.. மற்றபடி சரவெடி அட்டகாசம் தான்!

சூரியன்
26-10-2008, 09:26 AM
படத்தை இரண்டு முறை பார்த்துவிட்டேன்.
இன்னும் ஒரு முறை பார்க்கலாம் என உள்ளேன்.

படம் மிகவும் அருமை.

shibly591
26-10-2008, 04:26 PM
படத்தை இரண்டு முறை பார்த்துவிட்டேன்.
இன்னும் ஒரு முறை பார்க்கலாம் என உள்ளேன்.

படம் மிகவும் அருமை.

அய்யோ...அதற்குள் இரண்டு தடவைகளா..???

அப்ப தல தல தீபாவளி என்று சொல்லுங்க...

நதி
26-10-2008, 06:59 PM
இது தட்ஸ்தமிழ் இணையத்தளத்தின் விமர்சனம். நானும் படம் பார்த்தேன். விமர்சிக்கலாம் என்று ஓடோடி வந்தேன். என்னைப் போல எத்தனை பேர் ஏமாறப் போகிறார்களோ.

shibly591
27-10-2008, 05:42 AM
இது தட்ஸ்தமிழ் இணையத்தளத்தின் விமர்சனம். நானும் படம் பார்த்தேன். விமர்சிக்கலாம் என்று ஓடோடி வந்தேன். என்னைப் போல எத்தனை பேர் ஏமாறப் போகிறார்களோ.

இல்லை நண்பரே...

உங்கள் சொந்த விமர்சனத்துக்குத்தான் முன்னுரிமை...படம் பார்க்கலாமா வேண்டாமா என்று குழம்புபவர்களுக்காக நான் பின்னிணைத்துள்ளேன்..

உங்கள் சொந்த விமர்சனத்தை மன்றத்தில் பதிவிடுங்கள்..எனது இந்தத்திரியை நான் மாற்றி விடுகிறேன்

ஏமாற்றம் என்று ஒதுங்க வேண்டாம்..

எழுதுங்கள் நண்பரே

ராஜா
27-10-2008, 07:27 AM
அதிகாலை தளம் ஒரு பாசிட்டிவான விமர்சனம் எழுதியுள்ளது. என் பார்வையில் படத்துக்கும், விமர்சனத்துக்கும் வேறுபாடுகள் உள்ளதாகப் படுகிறது.

விகடன்
27-10-2008, 09:30 AM
என்னதான் அடிச்சுச்சொன்னாலும் ஷாருகானின் படத்தின் ரீ-மேக்த்தான் இந்த ஏகன் படம்.
ஹிந்தி தெரியாததால் பலரிற்கு தமிழில் எடுத்திருப்பது சுவாரஷ்யமா இருக்கலாம்.
திரும்ப கொப்பி அடிக்கும்போது தமிழ் இரசிகர்களுக்கும் தலைக்கும் இயைபான சில விடயங்களை புகுத்துவதும் அகற்றுவதும் வழமைதானே. அதனை மட்டும் வத்து புதிதாக வெட்டி விழுத்தியகாக கருத முடியுமா?

சிவா.ஜி
27-10-2008, 10:19 AM
அதிகாலை தளம் ஒரு பாசிட்டிவான விமர்சனம் எழுதியுள்ளது. என் பார்வையில் படத்துக்கும், விமர்சனத்துக்கும் வேறுபாடுகள் உள்ளதாகப் படுகிறது.

ராஜா சார் உங்கள் பார்வையிலும் ஒரு விமர்சனம் தாருங்களேன். வேறுபட்டக் கோணங்களையும் பார்க்க முடியுமே...?

சூரியன்
27-10-2008, 10:33 AM
அய்யோ...அதற்குள் இரண்டு தடவைகளா..???

அப்ப தல தல தீபாவளி என்று சொல்லுங்க...

அது அப்படித்தான்.:icon_rollout::icon_rollout:

மன்மதன்
27-10-2008, 11:24 AM
இது அப்பட்டமான ஹிந்தி ரீமேக் என எனக்கு தோன்றுகிறது.
ஹிந்தி படத்திற்கு ஏற்கனவே நான் மன்றத்தில் விமர்சனம் எழுதியுள்ளேன்...
அஜித் வரிசையாக ஷாருக் படங்களை ரீமேக் பண்ண விரும்புகிறார் . முதலில் டான் - பில்லா. இப்போ மே ஹு நா - ஏகன்..
அடுத்து .. ஓம் சாந்தி ஓம் என்று நினைக்கிறேன்..
தமிழில் என்ன பேர் வைப்பாங்க...?

சூரியன்
27-10-2008, 11:47 AM
அஜீத்தின் அடுத்த படம் "சூராங்கனி".

தீபன்
27-10-2008, 02:21 PM
சுவிஸ்ஸில் இப்படம் திரையிடப்படவில்லையென செய்திகள் தெரிவிக்கின்றன. உண்மையில் ஈழத் தமிழர் விடையத்தில் அஜித் என்னதான் சொன்னார்...!!?

Narathar
27-10-2008, 02:27 PM
சுவிஸ்ஸில் இப்படம் திரையிடப்படவில்லையென செய்திகள் தெரிவிக்கின்றன. உண்மையில் ஈழத் தமிழர் விடையத்தில் அஜித் என்னதான் சொன்னார்...!!?

தமிழ்வின் தளத்துக்கு சென்று பாருங்கள்
அல்லது நக்கீரன் தளத்துக்கு சென்று பாருங்கள்
விபரம் அங்கிருக்கின்றது.......

மர்மயோகி
29-10-2008, 12:53 AM
அஜித் குமாரை 'தல' என்று சொல்லித் தலையில் வைத்துக் கூத்தாடிக்கொண்டிருந்த புலம்பெயர் தமிழர்களின் கன்னத்தில் தனது பிய்ந்துபோன பழைய செருப்பை எடுத்து அடித்திருக்கிறார் அவர்களது 'தல!'.

சினிமா நடிகர்களுக்கு தமிழர்களின் பணம்வேண்டும் ஆனால் அவர்களது உணர்வுகள் எக்கேடு கெட்டால் என்னவென்பதுதான். அதுதான் சட்டென்று வார்த்தைகளாக வந்திருக்கிறது.

பின்னர் தங்களது எதிர்கால வசூல்களுக்காக சமாளிபிகேஷன் பண்ணியிருக்கிறார்கள்.

இனியும் இவர்களைத் 'தல'யில் வைத்துக் கூத்தாடுபவர்களை என்ன செய்வது?

ரங்கராஜன்
29-10-2008, 05:15 AM
நண்பர்களே
ஏகன் சுமாருக்கும் கீழே உள்ள படம், அஜீத் அழகாக இருக்கிறார், இயக்கத்தில் பல ஓட்டைகள், ராஜு சுந்தரத்தின் கடைசி படமாக இப்படம் இருந்தாலும் ஆச்சிரியப்படுவதர்க்கில்லை, அஜீத் எப்பொழுதும் இயக்குனர்களின் நடிகன், அவர் இயக்குனர் சொல்வதை அப்படியே செய்வார். மற்ற துறைகளிள் அவர் தலையிட மாட்டார், (இசை, காமிரா, இயக்கம், சண்டை அமைப்பு) இது தான் அவரின் பலவீனமே, இயக்குனர்கள் அஜீத்திடம் சொல்லும் கதையை எடுப்பது இல்லை, பாவம் அவரை ஏமாற்றி விடுகிறார்கள்.ஜீ படத்தில் இருந்து இதே கதை தான், ஏகன் ஒரு முறை கூட பார்க்க முடியாது.

வசீகரன்
29-10-2008, 05:26 AM
அஜித் குமாரை 'தல' என்று சொல்லித் தலையில் வைத்துக் கூத்தாடிக்கொண்டிருந்த புலம்பெயர் தமிழர்களின் கன்னத்தில் தனது பிய்ந்துபோன பழைய செருப்பை எடுத்து அடித்திருக்கிறார் அவர்களது 'தல!'.

ரொம்ப கற்பன குதிரையா தட்டி விடாதீங்க ஸார்... அப்படியெல்லாம் எதுவும் இல்ல... அவர் ரசிகர்களும்
அப்படி பைத்தியக்காரர்கள் அல்ல.... கூட்டம் வராதவன்லாம் காசு குடுத்து...கூட்டம் கூட்டும் போது..
தனது ரசிகர்களை எந்தவிதத்திலும் தனது சுயலாபதிற்கு பயன்படுத்தி கொள்ளாதவர் அஜித்...

சிவா.ஜி
29-10-2008, 05:28 AM
அஜீத் மீண்டும் நக்கீரனைத் தொடர்புகொண்டு தானும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வதாக உறுதியளித்திருக்கிறார். தான் முன்பு வெளியிட்டக் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக சொல்லியிருக்கிறார்.

இனி இதைப் பற்றி தயவுசெய்து இந்த திரியில் விவாதிக்க வேண்டாமே. விமர்சனம் தொடர்பாக, திரைப்படம் தொடர்பாக பேசுவோம். நன்றி.

poornima
29-10-2008, 03:46 PM
அஜீத் மீண்டும் நக்கீரனைத் தொடர்புகொண்டு தானும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வதாக உறுதியளித்திருக்கிறார். தான் முன்பு வெளியிட்டக் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக சொல்லியிருக்கிறார்.

இனி இதைப் பற்றி தயவுசெய்து இந்த திரியில் விவாதிக்க வேண்டாமே. விமர்சனம் தொடர்பாக, திரைப்படம் தொடர்பாக பேசுவோம். நன்றி.

ஆம்.. அதுதான் நல்லது..

உணர்வுபூர்மான பிரச்னைகள் குறித்து விவாதிக்கையில் இவர்கள் எல்லாம்
ஒத்துவரவில்லை என்பதால் அது நீர்த்துப்போகாது.. மாறாக இதைப் பற்றிய விவாதம் நீள பிரச்னை வேறு பாதைக்குப் போய்விடும்..

எனவே இங்கு திரைப்படம் பற்றி மட்டுமே பேசப்படட்டும்

சூரியன்
01-11-2008, 02:28 PM
படத்தை பற்றி மட்டுமே அலசுங்கள் .
தேவை இல்லாதவற்றை இங்கு விவாதிக்க வேண்டாம்.

மயூ
02-11-2008, 01:50 AM
அஜீத்தின் அடுத்த படம் "சூராங்கனி".
அந்தப் பெயரில் ஏதோ பதிப்புரிமை பிரைச்சனையாம், வேற பெயர் தேடுறீங்க...
இயக்கம் கொளதம் மேனன் தானே?

உதயசூரியன்
02-11-2008, 05:28 AM
எதிர்பார்க்காத அஜித்..
அதை பயன்படுத்தி தனக்கும்.. கல கல நடிப்பு வரும் என்று நிருபீத்திருக்கிறார்..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

அன்புரசிகன்
04-11-2008, 03:04 AM
அடுத்து .. ஓம் சாந்தி ஓம் என்று நினைக்கிறேன்..
தமிழில் என்ன பேர் வைப்பாங்க...?
ஓம் மல்லிகா ஓம் என்று வைப்பாங்களாக்கும்... :lachen001:

aren
04-11-2008, 06:03 AM
ஓம் மல்லிகா ஓம் என்று வைப்பாங்களாக்கும்... :lachen001:

உங்கள் ஆளோட பெயரை எப்படியாவது படத்துக்கு வைக்கவேண்டும் இப்படி துடிக்கிறீர்களே!!!

உங்களை நிச்சயம் பாராட்டியேயாகவேண்டும்!!!

ஆமாம், யார் அந்த மல்லிகா?

சிவா.ஜி
04-11-2008, 06:13 AM
ஆரென் அன்பு இடத்தில் அமரனை வைத்துப் பாருங்கள் அவர் தரும் தலைப்பு என்னவாக இருக்கும்.......

'ஓம் கலகலா ஓம்'

(அமரன் வர்றதுக்குள்ள எஸ்கேப்.....)

அமரன்
04-11-2008, 06:41 AM
ஆரென் அன்பு இடத்தில் அமரனை வைத்துப் பாருங்கள் அவர் தரும் தலைப்பு என்னவாக இருக்கும்.......

'ஓம் கலகலா ஓம்'

(அமரன் வர்றதுக்குள்ள எஸ்கேப்.....)

ஓம் ஓம்.:lachen001:

ஓவியா
04-11-2008, 01:03 PM
ஏகன் படம் கொஞ்சம் இழுவை அவ்வளோதான், ஆனால் ஒரு முறை பார்க்கலாம். சில இடங்களில் காப்பியடித்த பில்லாவை காப்பியடித்துள்ளார்கள்.

பாடல்கள் ரொம்ப வெஸ்டன் வாடையில் இருக்கு, வாழ்க ஆங்கிலம்.

ஜெயராமிற்க்கு இன்னும் கூடுதலான காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கலாம், அருமையான 5***** நடிகரை வீணடித்துள்ளார்கள்.

சுஹாஷினியும் நாசரும் படத்திற்க்கு கொஞ்சம் பலம்.

சுமனுக்கு அந்த 'டொப்' முடி பொருந்தவில்லை, செயற்க்கை வில்லன் போல் அப்பட்டமாக தெரிகிறார்.

அந்த இளஞ்சோடிகள் நல்ல பொருத்தமாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

ஏதோ வந்து போன நயன், பாடலுக்கு மட்டும் கால்ஷிட் கொடுத்த கதையாக உலா வருகிறார்.

அனேகமான பாடல் காட்சிகளில் நாட்டிய பெண்களின் கால்களும், குட்டி கால் சட்டையும் மட்டுமே கண்களில் தெரிகிறது....இப்படி பாடல்கள் எடுத்தால்தான் படம் ஓடும் என்ற எண்ணமோ!!! :redface:

தலைக்கு கொஞ்சம் செல்ல தொந்தி வைத்துள்ளது, தலை சீனியர் நடிகர்கள் லிஸ்டில் இணையப்போகிரார் என்று நம்புகிறேன். கண்களில் நல்ல சுருக்கம். ஆனாலும் அவர் ஒரு நல்ல நடிகர், அருமையான நடிகர்.

'தல' ஒரு போதும் தமிழ் மக்களை புண்படுத்தும் வகையில் எதுவும் செய்திருக்காமாட்டார், அவரின் செய்தி தப்பாக 'பிரசுக்கு' விளங்கப்பட்டுள்ளது என்பதே என் எண்ணம்..

அன்புரசிகன்
04-11-2008, 01:43 PM
தலைக்கு கொஞ்சம் செல்ல தொந்தி வைத்துள்ளது, தலை சீனியர் நடிகர்கள் லிஸ்டில் இணையப்போகிரார் என்று நம்புகிறேன். கண்களில் நல்ல சுருக்கம். ஆனாலும் அவர் ஒரு நல்ல நடிகர், அருமையான நடிகர்.

அது கதாபாத்திரத்திற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். தல அடிக்கடி உடம்பை மாற்றுபவராச்சே...

அந்த திரைப்பட நடிகர்கள் உண்ணாவிரதத்தில் தொப்பை தெரியவில்லை.

ஓவியா
04-11-2008, 01:54 PM
அது கதாபாத்திரத்திற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். தல அடிக்கடி உடம்பை மாற்றுபவராச்சே...

அந்த திரைப்பட நடிகர்கள் உண்ணாவிரதத்தில் தொப்பை தெரியவில்லை.

:D:D:D:D:D:D

aren
04-11-2008, 02:44 PM
படம் கொஞ்சம் இழுவை என்றுதான் சொன்னார்கள், ஆனால் தேறிவிடும் என்றே தோன்றுகிறது.

தல படமாச்சே, கொஞ்சமாவது ஓடாதா என்ன.

அமரன்
04-11-2008, 02:55 PM
படம் கொஞ்சம் இழுவை என்றுதான் சொன்னார்கள், ஆனால் தேறிவிடும் என்றே தோன்றுகிறது.

தல படமாச்சே, கொஞ்சமாவது ஓடாதா என்ன.

படம் நல்லதோ கெட்டதோ. தீபாவளிக்கு இதுதான் வழி. அதானால படம் கண்டிப்பாக ஓடும்.

வெற்றி
07-11-2008, 11:51 AM
250 ரூபாய் செலவு ஆகிவிட்டது வீணாக...!!!!