PDA

View Full Version : அவன் வேறு நான் வேறு



shibly591
26-10-2008, 08:44 AM
அவன் அவனாக இருக்கிறான்
என்னைத்தான் நானாக இருக்க
விடுகிறானில்லை..

அவனாக நான் ஆகவே போவதில்லை
அது தெரிந்தும்
அவன் என்னை நானாக இருக்க விடுகிறானில்லை..

அவனது வாழ்க்கை
அவனது நடத்தை
அவனது எல்லை
அவனது ஆசை
எதைப்பற்றியும் எனக்குத்தெரியாது
ஆனாலும் இவைகளை நான்
தெரிந்து கொண்டு
அவன் போலவே
அவனது எல்லைக்குள்
ஆகிவிடுவேனென்று அஞ்சுகிறான்.

அதனால்தான்
எனது வாழ்க்கையை நான் வாழ
அவன் அச்சுறுத்துகிறான்..

எனது வாழ்க்கை
அவனது நெருக்குதலால்
உருக்குலைந்து போனதும் அவனுக்குத்தெரியும்..
இருந்தும்
இன்னுமின்னும்
எனக்கெதிராய் சூழ்ச்சி வலை பின்னுகிறான்..

அவனாக அவனது
எல்லைக்குள் வாழ்வேனென்ற
கற்பனை கூட எனக்கில்லை
அவன்தான் நிறையவே கற்பனை செய்கிறான்
அவன் போலவே உடையணிந்து
அவன் போலவே நடை நடந்து
அவனது பெண்களை மணமுடித்து
அவனது எல்லையில் பங்குகேட்டு
நிறைய
நிறைய
நிறைய
அவன்தான் கற்பனை செய்கிறான்..

என்னை அழித்து விடத்துடிக்கும்
அவன் இதயத்தில் தெரிகிறது
என் மீது அவனுக்கிருக்கும்
மிகுந்த பயம்

எனது சுவாசங்களில் நிறைந்திருப்பதெல்லாம்
யாருக்கும் தீங்கற்ற ஒரு வாழ்க்கையின் வேட்கை
அவனது சுவாசங்களில் நிறைந்திருப்பதெல்லாம்
அகங்காரம் ஆணவம் அடக்குமுறை

அவனாக நானோ
நானாக அவனோ
ஒரு போதும் ஆகப்போவதில்லை

அவன் வேறு
நான் வேறு

எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை நானாக இருக்கவிடாமல்
என்னை அடையாளந்தெரியாத ஒருவனாக மாற்ற
தொடர்ந்தும் போராடுகிறான்..

பாவம் அவன்
என்னை நானாக இருக்க விடாமலே
அவனாக அவன் வாழும் அற்புத தருணங்களை
வீணாக்கிக்கொண்டிருக்கிறான்..

அவன் அவனாக இருக்கிறான்
என்னைத்தான் நானாக இருக்க
விடுகிறானில்லை..

தான் வென்றுவிட்டதாக
என்னை நானாக வாழ விடாமல்
அவன் புரியும போராட்டங்களில் என்னை விட
அவனே அதிகம் தோற்றுக்கொண்டிருக்கிறான்

பாவம் அவன்

அமரன்
30-10-2008, 11:14 AM
என்று தீரும் இந்த தாகம்!!
ஒரு நொடியாவது என்னை முழுமையாக ஆண்ட ஏக்கம் இந்தக் கவிதையின் வெற்றி.
பாராட்டுகள் ஷிப்லி!!

shibly591
05-11-2008, 04:38 AM
என்று தீரும் இந்த தாகம்!!
ஒரு நொடியாவது என்னை முழுமையாக ஆண்ட ஏக்கம் இந்தக் கவிதையின் வெற்றி.
பாராட்டுகள் ஷிப்லி!!

நன்றி அமரன்

இந்தக்கவிதையை புரிந்து கொள்ள இலங்கைப்பிரச்சினை தெரியவேண்டும் என்று நினைக்கிறேன்..

எப்படியோ உங்களுக்குப்புரிந்ததில் மகிழ்ச்சியே

சுகந்தப்ரீதன்
06-11-2008, 12:14 PM
பாவம் அவன்
என்னை நானாக இருக்க விடாமலே
அவனாக அவன் வாழும் அற்புத தருணங்களை
வீணாக்கிக்கொண்டிருக்கிறான்..வாழு.. வாழவிடு..!!

உள்ளார்ந்த உளக்கவிக்கு வாழ்த்துக்கள் ஷிப்லி..!!

பாரதி
06-11-2008, 03:04 PM
நல்ல கவிதை ஷிப்லி.

என்ன முடிவெடுப்பது என்ன திகைப்பில் இருப்பவருக்கு உண்டாகும் மனநிலை..
மன்றத்தில் முன்பு படித்த நண்பர் நண்பனின் கவிதையை நினைவூட்டியது போல இருந்தது.

இந்தத்திரியில் இருக்கும் பின்னூட்டங்களை படிக்கும் முன்னரே கவிதையின் கருப்பொருளை நன்றாகவே உணர முடிந்தது.

வார்த்தைகளை கையாண்டிருக்கும் விதத்திற்கும் சிறப்புப்பாராட்டு ஷிப்லி.

பென்ஸ்
07-11-2008, 03:03 AM
ஷிப்லி...

இந்த கவிதையை நான் வாசித்த போது தன் உணர்வுகளுடனுமான போரட்டத்தில் இருக்கும் ஒரு மனிதனின் வரிகளாகவே வாசித்தேன்....

ஆனால் இது வேறு என்றாலும்...

நல்ல கவிதையே...

சாம்பவி
07-11-2008, 05:32 AM
அதனால்தான்
எனது வாழ்க்கையை நான் வாழ
அவன் அச்சுறுத்துகிறான்..

அவனது பெண்களை மணமுடித்து
அவனது எல்லையில் பங்குகேட்டு


பாவம் அவன்
என்னை நானாக இருக்க விடாமலே
அவனாக அவன் வாழும் அற்புத தருணங்களை
வீணாக்கிக்கொண்டிருக்கிறான்..

அவன் அவனாக இருக்கிறான்
என்னைத்தான் நானாக இருக்க
விடுகிறானில்லை..



கவிதையில் பல முரண்களைக் காண்கிறேன் ஷிப்லி....
பென்ஸ் சொல்வது போல்.... மனிதனுக்கும் மனசாட்சிக்குமான
மனப் போராட்டமாய் தான் பொருள் கொள்ள முடிகிறது...

பாடுபொருள் வேறாயின்., தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் ...விளக்கங்கள் வேண்டி...............

shibly591
07-11-2008, 10:08 AM
கவிதையில் பல முரண்களைக் காண்கிறேன் ஷிப்லி....
பென்ஸ் சொல்வது போல்.... மனிதனுக்கும் மனசாட்சிக்குமான
மனப் போராட்டமாய் தான் பொருள் கொள்ள முடிகிறது...

பாடுபொருள் வேறாயின்., தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் ...விளக்கங்கள் வேண்டி...............

கவிதையில் முரண்கள் இல்லை என்றே நினைக்கிறேன்..மீறிய முரண்களை சுட்டலாமே..

நன்றி

நதி
07-11-2008, 10:12 AM
கவிதையில் முரண்கள் இல்லை என்றே நினைக்கிறேன்..மீறிய முரண்களை சுட்டலாமே..

நன்றி

நீங்கள் எதைப் பற்றி எழுதுனீங்கள் என்று சொல்லலாமே.

shibly591
07-11-2008, 10:17 AM
நீங்கள் எதைப் பற்றி எழுதுனீங்கள் என்று சொல்லலாமே.

அவன் என்பது எங்கள் பௌத்த மதச்சகோதரர்களிலி இருக்கும் அடக்குமுறைவாதிகளையும் நான் என்பது குறிப்பது என்னைப்போன்ற இலங்கையின் சிறுபான்மை மக்களையும் சுட்டி நிற்கிறது..

அவன் என்மீது அடக்குமுறையை பிரயோகிக்கிறான் ஆயுதங்களால்..
நான் வீறிட்டெழ வழியில்லாமல் மௌனித்துப்போகிறேன் ...

நதி
07-11-2008, 10:21 AM
நன்றி ஷிப்லி..
சாம்பவி அவர்கள் எந்தமாதிரி கவிதை அர்த்தப் படுத்தி இருக்கிறாரோ அதை அர்த்தப்படுத்தியபடி உங்கள் கவிதையை மீண்டும் படியுங்கள்.. புதுப் பரிமாணம் தெரியும். சில முரண்களும் தெரியும்.

shibly591
07-11-2008, 10:23 AM
நன்றி ஷிப்லி..
சாம்பவி அவர்கள் எந்தமாதிரி கவிதை அர்த்தப் படுத்தி இருக்கிறாரோ அதை அர்த்தப்படுத்தியபடி உங்கள் கவிதையை மீண்டும் படியுங்கள்.. புதுப் பரிமாணம் தெரியும். சில முரண்களும் தெரியும்.

முரண்கள் இல்லை என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம்..

தெளிவாகவே சொல்ல முயற்சித்திருக்கிறேன் நண்பரே..

அதையும் மீறிய முரண்களை சுட்டிக்காட்டுங்களேன்..திருத்த உதவியாக இருக்கும்இஇ

நன்றிகள்

சாம்பவி
07-11-2008, 10:39 AM
இப்படி பயமுறுத்தினால் எப்படி... ????

நண்பரே....
பாடுபொருள் அடக்குமுறை எதிர்ப்புக் குமுறலாகவே இருந்தாலும்...முரண்கள் மண்டிக் கிடக்கின்றன....
கோட் செய்து காட்டப்பட்ட முரண்களைக் கவனியுங்கள்.... !!!!....

பென்ஸ்
10-11-2008, 03:33 AM
ஷிப்லி....

சாம்பவி சுட்டிய பிறகே மீண்டும் வாசித்தேன்....

"அவன் அவனாகவே இருக்கிறான்" என்று பலமுறை சொல்லி... ஆனால் கவிதை முழுவதும் அவன் "அவனாக அவன் வாழும் அற்புத தருணங்களை
வீணாக்கிக்கொண்டிருக்கிறான்.." என்று சொல்லுவது முரண் கொடுப்பது போல தானே இருக்கிறது....

மீண்டும் கவிதையை உங்கள் எழுதிய மனநிலையின் வேளியே நின்று வாசித்து பாருங்கள்...