PDA

View Full Version : கடன்காரன்

shibly591
25-10-2008, 05:41 PM
2008-06-14

அந்தக்கடைப்பக்கம் நான் போவது குறைவு.காரணம் மூலைக்டை தேவனுக்கு நான் 500 ரூபா கடன்பட்டிருக்கிறேன்.எப்பவாவது அவன் என்னைக்கண்டால் சுகம் விசாரிக்க முதல் 500 ரூபாலை பற்றி பேசி என்னை கேவலப்படுத்துவான்..

இன்றும் தற்செயலாய' அவன் கண்ணில் பட்டுவிட்டேன்.

"என்ன வாத்தியாரே..நானும் எத்தனை வாட்டிதான் கேட்கிறது? 2 வருஷமா திருப்பித்தராமலே பிகு பண்றீங்களே..கொஞ்சம் ஒதவியா இருக்குமு..2 நாளில் தந்துருங்க அண்ணா.."சத்தமாக அவனது குரல் கேட்டு வெட்கமாகிப்போயிற்று.இரண்டு நாள் என்னடா நாளைக்கே உன் காச மூஞ:சியில வீசிடுறன்" என்று வீறாப்பாய் பேசிவிட்டு வீடு வந்துவிட்டேன்..

2008-06-15

இன்று தேவனுக்கு நான் பணம் கொடுப்பதாக (மூஞ்சியில் வீசுவதாக )வாக்குறுதி அளித்த நாள்..

வழமை போலவே என்னால் இன்றும் பணத்தை கொடுக்க முடியவில்லை..வேறு வேறு பிரச்சினைகளால் அவனுக்கு கொடுக்க உசிதப்பட்ட 500 ரூபாவை கொடுக்க முடியாமல் போனாலும் நாளை எப்பாடு பட்டாவது கொடுத்து தீர்ப்பது என்று தீர்க்கமாக முடிவு செய்தேன்..

2008-06-16

சந்தையில் தேவனின் கடை பூட்டியிருந்தது..பக்கத்து வெற்றிலைக்கடை சண்முகத்திடம் விசாரித்த போது அதிர்ந்து போனேன்..

"அண்ணே..தேவன் நேத்து கார் மோதி செத்துட்டான்னே" ஒங்களுக்கு தெரியாதா..??நானும் காலை வியாபாரம் முடிஞசதும் கடய பூட்டிட்டு போலாம்னு இருக்கேன்..பாவம்ணே..ரொம்ப நல்லவன்.அதான் கடவுளுக்கு பொறுக்கல போல:
தொடர்ந்த சண்முகத்தின் பேச்சை கேட்டவாறே அந்த 500 ரூபாவை எனது பாக்கெட்டில் வைத்து விட்டு எனது வீட்டை நோக்கி நடந்தேன்..

இளசு
25-10-2008, 10:53 PM
சிலருக்கு மனமுள் குத்தும் - அவர்கள் என்றும் கடன்பட்டவர்களே..
சிலருக்கு மனம் மழுங்கி வழுக்கும் - அவர்களால் மற்றவர்கள் மட்டுமே மனம் கீறப்படுவார்கள்..

இக்கதை மனிதன் எவ்வகையோ?
தேவனுக்குக் குடும்பம் இருந்தால் அவர்களிடம் கொடுக்கலாமே!

நிகழ்வுகள், நிஜங்கள் எல்லாமே நம் விருப்பப்படியே இருக்குமா என்ன?

கதைக்குப் பாராட்டுகள் ஷிப்லி..

தீபா
26-10-2008, 02:07 AM
என்னங்க, தேதிவாரியா போட்டு ஏதோ கொலைக்கதை ரேஞ்சுக்கு எழுதியிருப்பீங்கன்னு பார்த்தா, கடன்காரனைக் கொன்னுட்டீங்களே!!!!

இதுதான் முதல் கதையா? ரொம்ப அருமையா இருக்கு..

சிலபேர், ஐநூறு ரூபா மிச்சமுனு உறுத்திற மனசைக் குப்பையில போட்டுட்டு சந்தோசமா போவாங்க...

கதை அருமை..

ரங்கராஜன்
26-10-2008, 03:38 AM
"நச்" என்று இருந்தது, என்னுடைய சொந்த கருத்து இன்னும் கொஞ்சம் "நச்சி" இருக்கலாம். பாராட்டுக்கள் நண்பரே.

மாதவர்
26-10-2008, 04:23 AM
பாவம் அய்யா

Keelai Naadaan
26-10-2008, 08:16 AM
சில வரிகளிலேயே, சில மனிதர்களை படம் பிடித்து காட்டியமைக்கு பாராட்டுக்கள் ஷிப்லி.

shibly591
26-10-2008, 04:19 PM
சிலருக்கு மனமுள் குத்தும் - அவர்கள் என்றும் கடன்பட்டவர்களே..
சிலருக்கு மனம் மழுங்கி வழுக்கும் - அவர்களால் மற்றவர்கள் மட்டுமே மனம் கீறப்படுவார்கள்..

இக்கதை மனிதன் எவ்வகையோ?
தேவனுக்குக் குடும்பம் இருந்தால் அவர்களிடம் கொடுக்கலாமே!

நிகழ்வுகள், நிஜங்கள் எல்லாமே நம் விருப்பப்படியே இருக்குமா என்ன?

கதைக்குப் பாராட்டுகள் ஷிப்லி..

வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்காமல் தன்னை நியாயப்படுத்தும் ஒரு மனிதனைப்பற்றியது..500ரூபா ஒரு சிறிய தொகை என்பதால் இதை கடன் இல்லை என்று யாரும் சொல்ல வேண்டாம்...அது ஒரு குறியீட்டுத்தொகையே அன்றி திட்டமான தொகை இல்லை

இளசு அண்ணாவுக்கு மனம் நிறை நன்றிகள்

shibly591
26-10-2008, 04:20 PM
என்னங்க, தேதிவாரியா போட்டு ஏதோ கொலைக்கதை ரேஞ்சுக்கு எழுதியிருப்பீங்கன்னு பார்த்தா, கடன்காரனைக் கொன்னுட்டீங்களே!!!!

இதுதான் முதல் கதையா? ரொம்ப அருமையா இருக்கு..

சிலபேர், ஐநூறு ரூபா மிச்சமுனு உறுத்திற மனசைக் குப்பையில போட்டுட்டு சந்தோசமா போவாங்க...

கதை அருமை..

நன்றி நண்பி..

இதுவல்ல முதல்கதை..இது மூன்றாவது..ஏனைய இரண்டும் மன்றத்தில் பதியப்பட்டுள்ளது

படித்துத்திருத்துங்கள்..

உங்கள் வாழ்த்துக்களும் கண்டிப்புமே என்னை இன்னும் எழுதத்தூண்டும் சக்திகள்

shibly591
26-10-2008, 04:22 PM
"நச்" என்று இருந்தது, என்னுடைய சொந்த கருத்து இன்னும் கொஞ்சம் "நச்சி" இருக்கலாம். பாராட்டுக்கள் நண்பரே.

நன்றி நண்பரே..

நச்சியிருக்கலாம்தான்...எனக்கு நச்சிப்பழக்கமில்லை..போகப்போக நச்ச கற்றுக்கொள்கிறேன்.

shibly591
26-10-2008, 04:23 PM
பாவம் அய்யா

யாரை பாவம் என்கிறீர்கள்..

கதையை படிக்கும் நண்பர்களையா..??

shibly591
26-10-2008, 04:24 PM
சில வரிகளிலேயே, சில மனிதர்களை படம் பிடித்து காட்டியமைக்கு பாராட்டுக்கள் ஷிப்லி.

நன்றிகள் கீழை நாடன்