PDA

View Full Version : என்னைக்கொன்று விடுங்கள்



shibly591
25-10-2008, 05:37 PM
என்னைக்கொன்று விடுங்கள்

துப்பாக்கியாலோ
வெடிகுண்டாலோ
அடித்தோ
உதைத்தோ

என்னைக்கொன்று விடுங்கள்

மிரட்டல்
அதட்டல்
சித்ரவதை
வன்முறை

எந்த நுட்பத்தையும்
என்னில் பிரயோகிக்கத்தேவையில்லை

இதோ
இப்போதே
என்னைக்கொன்று விடுங்கள்

ஆகக்கூடியது 60 நிமிடங்கள்
நான் குற்றுயிரோடு போராட நேரும்
அல்லது
ஒரே வினாடியில் படடென்று
உயிர் பிரிய நேரும்

அதைப்பற்றி உங்களுக்கென்ன கவலை ?

உடனடியாய்
உடனடியாய்
என்னைக்கொன்று விடுங்கள்..

சாக முதல் ஒன்றே ஒன்றை
சொல்ல விரும்புகிறேன்..

கொலையுண்ட உயிரில்
ஆகர்சிக்கும் ரணங்களை
யாரோ ஒருவன் அல்லது பலர்
விரைவில் உங்களுக்கு உணர்த்தும்போது
இப்போதைய என் மனநிலையை
நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்..

தயவு செய்து
தாமதம செய்யாது
இப்போதே என்னை கொன்று விடுங்கள்...!

மதுரை மைந்தன்
25-10-2008, 06:21 PM
அருமையான கவிதை. எனது பாராட்டுக்கள்.

எப்போது சாகப்போகிறோம் என்று தெரிந்து விட்டால் வாழும் வாழ்க்கை நரகமாயிடும். இப்போது வாழும் வாழ்க்கை நரகமாயிருந்தாலும் விடிவு என்ற நாளையின் மீது நம்பிக்கையில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது. நான் குறிப்பிடுவது முப்பது வருடங்களுக்கும் மேலாக அல்லல் படும் இலங்கைத் தமிழரை.வெள்ளையரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடிய நெல்சன் மண்டேலா இதற்கு சாட்சி.

shibly591
25-10-2008, 06:40 PM
அருமையான கவிதை. எனது பாராட்டுக்கள்.



நன்றி நண்பரே...