PDA

View Full Version : தீப ஒளித்திருநாள் வந்தது...!



வசீகரன்
25-10-2008, 10:46 AM
http://img30.picoodle.com/img/img30/5/11/9/f_diwali7m_aba73b8.jpg

ஏற்றிய தீபங்கள் பிரவாகமாய்
இல்லங்களில்...

புகுத்திருந்த புற்றீசல்கள் மனம் குறைந்து
புன்முறுவல் பூக்கின்றன
உள்ளங்களில்...

திசைகளாம் தெறித்த ஒலி(ளி)ச்சத்தம்
தீமைகளை கறுவறுத்து களைந்துவிடவெண்ணிய
திருநாள் வந்தது...!

தீபாவளி பெருநாள் வந்தது...!

வண்ணங்களாக வரைந்திருந்த வானம்
புவி முழுதும் ஒளி வெள்ளம்
ஓங்கி உரைத்திருக்கிறது...!

இருள் வாழ்வி இடர்களெல்லாம் கூனிக்குறுகி
ஒளி கண் கூச ஓடி ஒளிகிறது...

மறுகிய மனங்களாம் மத்தாப்பூக்களாய் மலர்கிறது...

சற்றையோரும் மற்றையோரும்
அற்றவை மறந்தோம்....
ஆங்கில் உற்றவரென ஆனோம்...

மகிழ்ச்சிதனை மட்டினில் கண்டோம்...
மனம் திறந்து சிரித்தோம்...
மழலைகளாய் ஆனோம்...

அரிக்கேன் விளக்கு வீட்டில்
மத்தாப்பூவிட்டோம்......பூரித்த ஒளி வெள்ளத்தை
கண்களில் விரித்தோம்...

அயலானுக்கும் கேட்கும்படியாய் ஆட்டம்பாம்
வெடித்தோம்... ஆரவாரம் செய்தோம்...
ஆடிப்பாடி மகிழ்ந்தோம்...

கவலைகளை மறந்தோம்... கசப்புகளை துறந்தோம்..

களிப்பு நிறைந்த தருணங்களை வாழ்வில்
மீண்டுமோர் தரம் காண்டோம்...

தீபஒளித்திருநாளாம் தீபாவளி
திசைகளாம் இனிமை திளைத்திருக்க
ஏற்றி கொண்டோடி வந்தது ""தீபஒளி""





மன்ற நண்பர்கள் அனைவருக்கும்
தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறேன்..!

தீபா
25-10-2008, 12:59 PM
வாழ்த்துக்கள் திரு.வசீகரன்....

வசீகரன்
26-10-2008, 05:46 AM
நன்றி தென்றல் அவர்களே... உங்களுக்கு எனது இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை
தெரிவித்துகொள்கிறேன்..!:natur008::nature-smiley-002::nature-smiley-009:

சிவா.ஜி
26-10-2008, 07:08 AM
தீப ஒளித் திருநாளில் வசீயின் வசீகரக்கவிதை விழாக்கால உற்சாகத்தை விதைக்கிறது. உள்ளார்ந்த உற்சாகத்துடன் வாழ்த்துகள் வசீ.