PDA

View Full Version : DELL ஆடியோ சம்பந்தமாக..



உதயா
25-10-2008, 06:55 AM
வணக்கம்..

அன்மையில் ஒரு லேப் டாப் வாங்கினேன்.

DELL STUDIO 1535

இதில் வாய் மற்று மைக் இவை இரண்டும் வேலை செய்யவில்லை. எப்படி சரி செய்வது. யாஹூவில் சாட் செய்யும் போது மட்டுமே வேலை செய்யவில்லை ஆனால் விண்டோஸ் பிலேயர் மூலம் பாடல்கள் கேட்க முடிகிறது.

praveen
25-10-2008, 07:10 AM
நீங்கள் வாங்கிய இடத்தில்(விற்பனையாளரிடம்) புகார் செய்து, அவர் ஆலோசனை படி செய்யுங்கள். ஏனென்றால் விற்பனை செய்தவர் விற்ற பின் அதில் ஏற்படும் குறைகளை சீர் செய்யவேண்டும். அதற்கும் சேர்த்து தான் பணம் வாங்குகிறார்.

அவர் செய்யத்தவறினால், டெல் வெப் தளத்தில் சென்று பாருங்கள். அங்கே இது பற்றி தகவல் இல்லையென்றால் சப்போர்ட் சென்று பார்த்து புகார் செய்யுங்கள் பதில் தருவார்கள்.

இங்கே பதில் தரவேண்டும் என்றால் அதே பிரச்சினையில் நண்பர்கள் யாராவது பாதிப்பாயிருந்தால் (அவர்கள் தீர்த்திருந்தால்) ஒழிய சரியான தீர்வு கிடைக்காது.

அன்புரசிகன்
25-10-2008, 07:15 AM
நீங்கள் மைக் ஐ இணைக்கும் போது auto play போல் ஒரு window வருகிறதே... அதில் உங்களது input type ஐ தெரிவுசெய்ய வேண்டும். எதற்கும் இந்த (http://dellcommunity.com/supportforums/board/message?board.id=insp_audio&message.id=29912) சுட்டியை பாருங்கள்...

சிவா.ஜி
25-10-2008, 07:34 AM
அன்புரசிகன் சொன்னதைப்போல செய்ய வேண்டும். கூடவே முதன்முறை யாஹுவில் பேசும்போது செட்டப் செய்ய வேண்டும். அதில் சரியான ஆடியோ டிரைவரை தேர்வு செய்ய வேண்டும். எனக்கும் இந்தப் பிரச்சனை வந்தது. நான் மேற்கூறிய முறையில் முயன்று சரியாகிவிட்டது.

உதயா
12-11-2008, 11:41 AM
சரியான ஆடியோ ட்ரைவரை தேர்வு செய்ததும் இப்போது என்னால் பேச முடிகிறது. அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி