PDA

View Full Version : செய்தித்துணுக்குகள்Adhikaalai
24-10-2008, 08:16 PM
இந்தக் கேள்விக்கான சரியான விடை நமக்குத் தெரிய வருமேயானால், இலங்கையில் நடக்கின்ற ஒரு இன விடுதலைப் போராட்ட வரலாற்றின் முழுமையான சாரம் நமக்குக் கிடைக்கும். இந்தக் கேள்விக்கான விடையை நோக்கிப் பயணப்படும்போது இலங்கையின் ஆதியான வரலாறு நமக்குத் தெரிய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், அந்த வரலாற்று ஆய்வுகளில் ஈடுபடுவது இன்றைய சூழலில் ஒரு தேவையற்றதாகவும், எரிகின்ற வீட்டில் எத்தனை ஓடுகள் இருந்தன, அந்த வீட்டை யார் கட்டியது போன்ற பயனற்ற ஆய்வுகளாகவே இருக்கும். இருப்பினும், இலங்கையின் ஒரு குறைந்தபட்ச வரலாறு நாம் அறிந்து கொள்ள வேண்டியதே!

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6027&lang=ta&Itemid=185

Adhikaalai
24-10-2008, 08:24 PM
ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பலர் பேசியிருக்கிறார்கள். இத்தகைய தேசவிரோத கருத்துக்களை தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிப்பது தேசவிரோதச் செயல். தீவிரவாதம்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6032&lang=ta&Itemid=52

Adhikaalai
24-10-2008, 08:26 PM
அவர்கள் பேசியதில் என்னய்யா தவறு? தேசியம் பேசுகிற தங்கபாலுவைக் கேட்கிறேன்? மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக கோட்சேவின் இனத்தை அழித்தீர்களா? முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றது சீக்கியர் என்பதற்காக அந்த இனத்தையே அழித்துவிட்டீர்களா? சீக்கியனும் உணர்ச்சிவசப்பட்டான். தமிழனும் உணர்ச்சி வசப்பட்டான். சீக்கியனை மட்டும் மன்னிச்சுடுவ... தமிழனைத் தண்டிச்சுக்கிட்டே இருப்பியா? என இயக்குநர் பாரதிராஜா ஆவேசமாக வார இதழில் பேட்டியளித்துள்ளார்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6036&lang=ta&Itemid=52

Adhikaalai
24-10-2008, 08:27 PM
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் சீமான்-அமீர் பின்னால் நிற்கும்'' என்று நடிகர் சத்யராஜ் ஆவேசமாக பேசினார். பிரபு சாலமன் டைரக்டு செய்துள்ள `லாடம்' படத்தின் பாடல்கள் அடங்கிய சி.டி. வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று நடந்தது. சி.டி.யை நடிகர் சத்யராஜ் வெளியிட, டைரக்டர் அமீர் பெற்றுக்கொண்டார்.

Adhikaalai
24-10-2008, 08:28 PM
வைகோ கைது பற்றி கருத்து தெரிவித்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் ராமேசுவரத்தில் நடைபெற்ற திரைப்படத் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான பல ஆட்சேபகரமான தேச விரோத கருத்துக்களை தெரிவித்த திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நான் ஆட்சியில் இருந்திருந்தால் இது போன்ற தேச விரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கைது செய்திருப்பேன் என்றும் நான் வெளியிட்ட அறிக்கை முதல்-அமைச்சரை வெகுவாக தாக்கியிருக்கிறது.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6075&lang=ta&Itemid=52

Adhikaalai
24-10-2008, 08:29 PM
வைகோ, கண்ணப்பன் ஆகியோரை கைது செய்தது பாராட்டுக்குரியது என்று கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.வி.தங்கபாலு எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்து தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை பகிரங்கமாக ஆதரித்தும், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக தனித்தமிழ்நாடு வேண்டுமென்று பேசியும் தேச விரோத குற்றம் இழைத்த ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மற்றும் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென்ற காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளை ஏற்று அதை செயல்படுத்தியதன் மூலம் தமிழக முதல்-அமைச்சர் தன்னுடைய கடமையை நிறைவேற்றி உள்ளார்.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6076&lang=ta&Itemid=52

Adhikaalai
24-10-2008, 08:31 PM
மாலையில் நடைபெறும் மனிதச் சங்கிலிக்கு, இன்று காலையில் இருந்தே கட்சி தொண்டர்கள் மற்றும் பல்வேறு சங்கங்கள் அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் சென்னை வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். 12 மணிக்கு பிறகு மனித சங்கிலி நடைபெறும் பிரதான சாலையின் அருகிகே கூட்டம் கூட்ட மாக வந்து சேர்ந்தனர். ஏற்கனவே பரபரப்பாக காணப்படும் சென்னை நகரம் தொண்டர்கள் வருகையால் திணறியபடி உள்ளது. மனிதச் சங்கிலியை யொட்டி பிரதான சாலைகளில் பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டப்பட்டு மனிதச்சங்கிலி நடைபெறும் பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6077&lang=ta&Itemid=52

Adhikaalai
24-10-2008, 08:31 PM
இலங்கை தமிழர்களை பாதுகாக்க கோரி சென்னையில் கொட்டும் மழையில் ஒன்று திரண்டது தமிழினம்!60 கிலோமீட்டர் நீளத்துக்கு பிரமாண்ட மனிதச் சங்கிலி பேரணி!!இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கையில் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தியும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வற்புறுத்தியும் சென்னையில் பிரமாண்ட மனிதச் சங்கிலி பேரணி 60 கிலோமீட்டர் நீளத்துக்கு கொட்டும் மழையில் நடைபெற்றது.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6080&lang=ta&Itemid=52

Adhikaalai
24-10-2008, 08:32 PM
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதற்காக திரைப்பட இயக்குனர்கள் சீமான் அமீர், இன்று இரவு 8 மணி அளவில்,அவர்கள் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து திரைப்பட கலைஞர்கள் சார்பில் கடந்த 19ந் தேதி ராமேஸ்வரத்தில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெற்றது.

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=6085&lang=ta&Itemid=52

அறிஞர்
24-10-2008, 09:23 PM
வைகோவிற்கு அடுத்ததாக இருவருமா...

பாரதிராஜாவும் ஏதோ பேசியதாக சொன்னார்கள்...

Narathar
25-10-2008, 04:59 AM
பாரதிராஜாவும் ஏதோ பேசியதாக சொன்னார்கள்...

:) நாராயணா!!!!

தங்கவேல்
25-10-2008, 05:02 AM
அறிஞரே... நாரதர் செய்ய வேண்டியதை நீங்கள் செய்தால் எப்படி ????? நாரதர் தொழிலுக்கு வேட்டு வைப்பீர்கள் போல.

அமெரிக்காவில் இருப்பதால் ஏதும் புதுவேலை தேட வேண்டிய நிர்பந்தமா ????

உதயா
25-10-2008, 06:59 AM
தமிழனுக்கு குறல் கொடுத்தால் கைதா? வேடிக்கை.

praveen
25-10-2008, 07:13 AM
நண்பரே, அதிகாலை என்ன ஒரே மாதிரியான செய்தியை பல்வேறு தலைப்புகளில் இட்டு தனித்தனி திரி ஆரம்பித்து தள்ளுகிறீர்கள். உங்கள் செய்திகள் அனைத்தையும் ஒரே திரியில் தரலாமே.

ஒரு திரி ஆரம்பித்து அதில் மற்றவர் கருத்து கண்டு, அல்லது மற்றவர் திரிகளில் கருத்து பதிந்து மன்றத்தில் இயைந்து இல்லாமால் ஏனோ கடனுக்கு பதிப்பது போல இப்படி செய்வது நன்றாக இல்லை.

சிவா.ஜி
25-10-2008, 07:27 AM
பிரவீணின் கருத்தை நான் முற்றிலுமாக ஆமோதிக்கிறேன். நன்பர் அதிகாலை..இப்படி துண்டு பிரசுரங்களைப்போல எல்லா இடத்திலும் தூவி விட்டுச் செல்லாமல், ஒரே மாதிரியான செய்திகளை ஒரே திரியில் கொடுத்தால் நல்லது.

புதிய திரிகள் அதிகமாகும்போது, மற்றவர்களின் மற்ற படைப்புகள் பின் தள்ளப்பட்டுவிடுகிறது. சரிவர பார்வையிடப்படாமலேயே மறக்கப்பட்டுவிடுவது சங்கடமாக உள்ளது. அந்தப் படைப்புகளுக்காக அவர்கள் செலவிட்ட நேர மற்றும் உழைப்பின் பலனை முழுதாக அடையமுடியாமல் போய்விடுகிறது.

புரிதலை வேண்டி........
சிவா.ஜி