PDA

View Full Version : இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் கைதுmgandhi
24-10-2008, 05:46 PM
இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் கைது

சென்னை ராமேஸ்வரத்தில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்த்திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில் இதே பிரச்னையில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவைத்தலைவர் கண்ணப்பன் ஆகியோர் 23-10-08 அன்று கைது செய்யப்பட்டனர். இதனிடையே இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீரை போலீசார் கைது செய்துள்ளனர்.

shibly591
24-10-2008, 07:29 PM
அய்யோ ரொம்ப கவலையா இருக்கு...

அவர்கள் பேசியது எப்படி இனவாதத்தை தூண்டும்?

அவர்கள் விடுதலை அடைய பிரார்த்திப்போமாக.

இளசு
24-10-2008, 07:40 PM
அப்பாவி தமிழ்மக்கள் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள்..
ஆயிரக்கணக்கில் நம் குழந்தைகள் உணவின்றி, கல்வியின்றி, வீடின்றி நிராதரவாய் மரத்தடியில்.. வெட்டவெளியில்..

ஒற்றுமையாய்ச் செயல்பட்டு உதவ வேண்டிய நேரம்..

ஆனால் தமிழகத்தில் -
ஞானசேகரன் பேட்டி
சரத்குமார் தனி அறிவிப்பு
இவ்வகைக் கைதுகள்..

கவலை அளிக்கும் நிகழ்வுகள்..
நமக்குள் பிளவுபட இதுவா நேரம்?

நோக்கம் ஒன்று..
அதற்காகத் தடம் பிறழாமல் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது..

உணரவேண்டியவர்கள் உணர்ந்தால் சரி..

இதில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சொன்னாராம் -
தமிழக அரசியல்வியாதிகளைப்
பார்த்து ஒற்றுமையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று!

shibly591
24-10-2008, 07:46 PM
சரியாகச்சொன்னீர்கள் இளசு அண்ணா...

ஒரு விசயம் தெரியுமா..???இலங்கையின் தமிழ் மக்கள் தாங்கள் உயிராக நினைத்து நிறைய பணம் செலவு செய்து ஸ்டார்களாகவும் தளபதிகளாகவும் கொண்டாடும் சில நடிகர்கள் வாயே திறக்கவில்லை எனும்போது ரொம்பவே கவலை..

அமீரும் சீமானும் சினிமாக்காரர்கள் என்பதை விட மனிதாபிமானிகள்..

கவலையான செய்திதான்..

அமரன்
25-10-2008, 08:20 AM
ஒரு விசயம் தெரியுமா..???இலங்கையின் தமிழ் மக்கள் தாங்கள் உயிராக நினைத்து நிறைய பணம் செலவு செய்து ஸ்டார்களாகவும் தளபதிகளாகவும் கொண்டாடும் சில நடிகர்கள் வாயே திறக்கவில்லை எனும்போது ரொம்பவே கவலை..

தம்நலன் கருதி மௌனம் பேணும் அவர்களை அப்படியே விட்டு விடுவோம். அவர்கள் பேசவில்லை என்பதால் அவர்களைச் சீண்டிப் பேசவைத்து அவர்கள் ரசிகர்கள் பலரை இழக்காதவரை அவர்கள் நல்லதே செய்கிறார்கள் என்று மகிழ்வோம்.

பேசியதன் மூலம் கைதை தூண்டி கனலும் தணல்களின் மீது உயிர்வாயு ஊதிய சீமான்களைப் போற்றுவோம்.

அதே சமயம் கலைஞர், காங்கிரஸ் சார்ந்த தமிழர்களில் ஏற்படும் எதிர்மறை மாற்றங்களுக்காக வருந்துவோம்.

இந்த விடயத்தில் பழ.நெடுமாறன் அய்யாவின் அணுகுமுறை எனக்குத் தித்திக்கிறது.

miindum
25-10-2008, 09:31 AM
தமிழனுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் வடகத்தி பாராளுமன்ற அதிகாரம் படைத்தவர்களுக்கு ஆகாதவர்கள்தான்,இவர்களை திருப்திபடுத்த தமிழக அரசு இடதுகண்ணை மூடி வலது கண்ணை குத்துகிறது.

ராஜா
25-10-2008, 10:45 AM
கவலையளிக்கும் செய்தி..

(வைகோ உட்பட) இந்தக் கைதுகள் சராசரி பொதுமக்கள் இடையே எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாதது இன்னும் கவலையளிக்கிறது.

சுகந்தப்ரீதன்
25-10-2008, 01:19 PM
அண்ணா.. அடுத்தடுத்த காட்சி மாற்றங்களால் தமிழக மக்கள் தங்கள் தலைவிதியையும் எதிர்காலத்தையும் எண்ணி ரொம்பவே நொந்து போயிருக்கிறார்கள்..!!

விக்ரம்
25-10-2008, 02:05 PM
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியவர்களை கைது செய்வதில் எந்த தவறும் இல்லை.

இலங்கை தமிழர்களுக்கு எதிரான படுகொலையை எதிர்த்து போராட்டமா? தாராளமாக பண்ணட்டும். எங்கே பண்ணியிருக்க வேண்டும் -> டெல்லியில் பாராளுமன்றத்திற்கு எதிரில். அங்குள்ள எம்.பிக்களின் கவனத்தை கவர்ந்து, அதன் மூலம் ஒரு தீர்வுகாண இந்திய அரசு முயலுமேயானால், அது நம் இனத்திற்கு நல்லது.

ஆனால் இவர்கள் செய்தது எங்கே? இராமேஸ்வரத்தில். அங்கே இருந்து போராடினால் மட்டும் இலங்கையிலுள்ள இனப்படுகொலையினருக்கு கேட்டு விடுமா?

சரி அவ்வாறே கேட்கும் எனும் பட்சத்தில், இலங்கை அரசின் கொள்கைக்கு எதிராக கூச்சல் போட வேண்டுமே தவிர, இந்திய இறையாண்மைக்கு எதிராக அல்ல.

எத்தனை நாளைக்குத் தான், அப்பாவி தமிழ்நாட்டு தமிழர்களை ஏமாற்றுவார்களோ இந்த சினி கோமாளிகள்.

இலங்கைக்கு எதிராக போராட போன இடத்தில், இந்திய இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் விதத்தில் பேசியதால் வந்த விளைவு, இந்த கைது. மனமாற வரவேற்கிறேன்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக எவன் வாலாட்டினாலும், அதை, மிக, மிக சிறு, சிறு துண்டுகளாக ஒட்ட நறுக்க வேண்டும்... வாழ்க பாரதம்!

மனிதன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும் இலங்கையில் நடக்கும், நடந்த அனைத்துவித இனப்படுகொலையிலிருந்தும் இலங்கை மக்கள் விடுதலை பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும் என்று என் உள்மனதிலிருந்து வேண்டுகிறேன்.

ஓவியா
25-10-2008, 02:26 PM

(மக்களே யாரும் சிரிக்க வேண்டாம், நான் வேற்று மொழிகளில் படித்தவள், இது போல் சொற்களை அறிந்திட துமியளவும் வாய்ப்பு கிடைக்கவில்லை)

கேள்வி 'இறையாண்மை' என்றால் என்ன?

நன்றி.

விக்ரம்
25-10-2008, 02:43 PM
(மக்களே யாரும் சிரிக்க வேண்டாம், நான் வேற்று மொழிகளில் படித்தவள், இது போல் சொற்களை அறிந்திட துமியளவும் வாய்ப்பு கிடைக்கவில்லை)

கேள்வி 'இறையாண்மை' என்றால் என்ன?

நன்றி.
ரொம்ப அருமையா நக்கல் செய்திருக்கிறீர்கள், என்ன பண்றது நீங்க வளர்ந்த சூழ்நிலை அப்படி. நான் பெண்களிடம் நக்கல் செய்வதில்லை. இருந்தாலும் உங்க நக்கலை, (பாதகத்தை சாதகமாக பயன்படுத்த தெரிந்தவன் நான்)

முதலில் ஒன்று புரிஞ்சுக்கணும். கருத்துக்கள் என்பது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம். அதை புரிந்து கொள்வது எப்படி என்றும் தெரிந்து கொள்ளவும்.

இறையாண்மை என்றால் நாட்டிலுள்ள சட்ட, திட்டங்கள் என்று கூட பொருள்படும். ஆளும் மன்னருக்கு உடன்படுவது போன்ற அர்த்தங்கள்.

இந்திய நாட்டிலுள்ள சட்ட, திட்டங்களுக்கு எதிராக செயல்படக்கூடாது, அதுவே இந்திய இறையாண்மை. ஒரு குறிப்பிட்ட இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிந்தும், சிலர் அந்த இயக்கத்திற்கு சப்போர்ட் பண்ணி பேசினார்கள், அதனால் அவர்களை கைது செய்தார்கள். தனித் தமிழ்நாடு வேண்டும் (அ) அதனை ஆயுதம் ஏந்தி போராடி உருவாக்குவோம் என்கிற அர்த்தத்தில் பேசினார்கள். (எதுக்கு இங்கயும் மனுசன் நிம்மதி இல்லாம வாழ்றதுக்கா)

இரண்டாவது இறையாண்மைக்கு எதிரானது, அதனால் கைது செய்தார்கள்.

mukilan
25-10-2008, 03:14 PM
(மக்களே யாரும் சிரிக்க வேண்டாம், நான் வேற்று மொழிகளில் படித்தவள், இது போல் சொற்களை அறிந்திட துமியளவும் வாய்ப்பு கிடைக்கவில்லை)

கேள்வி 'இறையாண்மை' என்றால் என்ன?

நன்றி.
இறையாண்மை என்றால் என்ன?
http://tamilmantram.com/vb/showpost.php?p=387307&postcount=147

ஓவியா
25-10-2008, 03:18 PM
ரொம்ப அருமையா நக்கல் செய்திருக்கிறீர்கள், என்ன பண்றது நீங்க வளர்ந்த சூழ்நிலை அப்படி. நான் பெண்களிடம் நக்கல் செய்வதில்லை. இருந்தாலும் உங்க நக்கலை, (பாதகத்தை சாதகமாக பயன்படுத்த தெரிந்தவன் நான்)

முதலில் ஒன்று புரிஞ்சுக்கணும். கருத்துக்கள் என்பது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம். அதை புரிந்து கொள்வது எப்படி என்றும் தெரிந்து கொள்ளவும்.

இறையாண்மை என்றால் நாட்டிலுள்ள சட்ட, திட்டங்கள் என்று கூட பொருள்படும். ஆளும் மன்னருக்கு உடன்படுவது போன்ற அர்த்தங்கள்.

இந்திய நாட்டிலுள்ள சட்ட, திட்டங்களுக்கு எதிராக செயல்படக்கூடாது, அதுவே இந்திய இறையாண்மை. ஒரு குறிப்பிட்ட இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிந்தும், சிலர் அந்த இயக்கத்திற்கு சப்போர்ட் பண்ணி பேசினார்கள், அதனால் அவர்களை கைது செய்தார்கள். தனித் தமிழ்நாடு வேண்டும் (அ) அதனை ஆயுதம் ஏந்தி போராடி உருவாக்குவோம் என்கிற அர்த்தத்தில் பேசினார்கள். (எதுக்கு இங்கயும் மனுசன் நிம்மதி இல்லாம வாழ்றதுக்கா)

இரண்டாவது இறையாண்மைக்கு எதிரானது, அதனால் கைது செய்தார்கள்.

சிரமம் பாராது உடனே விளக்கமளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

நல்ல தமிழ் வளம் உங்களிடன், பாராட்டுகிறேன்.

********************************************************************************************************

(உங்கள் நக்கல் ஆரம்பத்தை நான் நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்கிறேன், ஆனாலும் ஒரு விசயம்: நான் எனக்கு தெரியாத விசயததிற்க்குதான் விளக்கம் கேட்டேன், அது எப்படி நக்கலாக போகும்? நான் எந்த நாட்டில் எனத சூழ்நிலையில் வளர்ந்தேன் என்று உங்களுக்கு தெரியாது அதனால் 'என்ன பண்றது நீங்க வளர்ந்த சூழ்நிலை அப்படி' என்று இதுபோல் பதிலிப்பதை தவிருங்கள். நன்றி)

ஓவியா
25-10-2008, 03:21 PM
இறையாண்மை என்றால் என்ன?
http://tamilmantram.com/vb/showpost.php?p=387307&postcount=147

சுட்டிக்கு மிக்க நன்றி முகில்ஸ், உங்களுக்கு முன் விக்ரம் அவர்களே அருமையா 'ஒரு குட்டி' விளக்கம்ளித்து விட்டார்.

விக்ரம்
25-10-2008, 05:57 PM
முதலில் மனிதன், அதன் பின்னர் இந்தியன், அதன் பின்னர் தான் தமிழன், சார்ந்த மதம், சாதி எல்லாம்.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் மனிதன் முதல் என்றால். இலங்கை மண்ணில் கஷ்டப்படும் மனிதர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தவில்லையென்றால் அது அசிங்கம். ஆனால் அதற்காக இந்தியாவை சிதரடித்துவிட்டுத்தான் (தனித் தமிழகம்) இலங்கை தமிழ் மக்களை காப்பேன் என்றால், அது அசிங்கத்தை மிதித்துவிட்டு காலைக் கழுவுவதைப் போன்றது.

mgandhi
25-10-2008, 06:01 PM
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியவர்களை கைது செய்வதில் எந்த தவறும் இல்லை.

இலங்கை தமிழர்களுக்கு எதிரான படுகொலையை எதிர்த்து போராட்டமா? தாராளமாக பண்ணட்டும். எங்கே பண்ணியிருக்க வேண்டும் -> டெல்லியில் பாராளுமன்றத்திற்கு எதிரில். அங்குள்ள எம்.பிக்களின் கவனத்தை கவர்ந்து, அதன் மூலம் ஒரு தீர்வுகாண இந்திய அரசு முயலுமேயானால், அது நம் இனத்திற்கு நல்லது.

ஆனால் இவர்கள் செய்தது எங்கே? இராமேஸ்வரத்தில். அங்கே இருந்து போராடினால் மட்டும் இலங்கையிலுள்ள இனப்படுகொலையினருக்கு கேட்டு விடுமா?

சரி அவ்வாறே கேட்கும் எனும் பட்சத்தில், இலங்கை அரசின் கொள்கைக்கு எதிராக கூச்சல் போட வேண்டுமே தவிர, இந்திய இறையாண்மைக்கு எதிராக அல்ல.
எத்தனை நாளைக்குத் தான், அப்பாவி தமிழ்நாட்டு தமிழர்களை ஏமாற்றுவார்களோ இந்த சினி கோமாளிகள்.

இலங்கைக்கு எதிராக போராட போன இடத்தில், இந்திய இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் விதத்தில் பேசியதால் வந்த விளைவு, இந்த கைது. மனமாற வரவேற்கிறேன்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக எவன் வாலாட்டினாலும், அதை, மிக, மிக சிறு, சிறு துண்டுகளாக ஒட்ட நறுக்க வேண்டும்... வாழ்க பாரதம்!
மனிதன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும் இலங்கையில் நடக்கும், நடந்த அனைத்துவித இனப்படுகொலையிலிருந்தும் இலங்கை மக்கள் விடுதலை பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும் என்று என் உள்மனதிலிருந்து வேண்டுகிறேன்.
அருமையான,சுடான விளக்கம் நன்றி விக்ரம்

அமரன்
25-10-2008, 06:12 PM
விக்ரம்!
சம்மந்தப்பட்டவர்கள் பேச்சுகளை நீங்கள் கேட்டீர்களா?

விக்ரம்
25-10-2008, 06:28 PM
விக்ரம்!
சம்மந்தப்பட்டவர்கள் பேச்சுகளை நீங்கள் கேட்டீர்களா?
அவர்கள் பேசிய அன்றே, அது ஒரு செய்தித்தாளில் செய்தியாக வந்தது. குறிப்பிட்ட செய்திக்கு கீழே வாசகர்கள் கருத்துப் பதிக்கும் வண்ணம் தான், அந்த செய்தித்தாள் இருக்கும்.

கருத்துப்பதித்த வாசகர்களில் பலர் சம்பந்தப்பட்ட நபர்களின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருக்கிறது என்றும், மற்றவர்கள் ஆதரவும் தெரிவித்து இருந்தார்கள்.

அதற்கு அடுத்த நாள் தான், காங்கிரஸ், அதிமுக, கம்யூனிஸ்டுகள் போன்றோர் எதிர்ப்பே தெரிவித்திருந்தனர். என்னைப் பொருத்தவரையில் அவர்கள் பேசிய பேச்சையும் குறிப்பிட்ட செய்தித்தாளின் மூலம் அறிந்தேன், அதற்காக கைது செய்யப்பட்டதையும் அதே செய்தித்தாளின் மூலம் தான் அறிந்தேன்.

திரு முக கூட இவர்களை இஷ்டப்பட்டு கைது செய்யவில்லை என்பது வேறுவிஷயம். இதில் இயக்குனர் சேரன், மிஸ்டர் தொல்ஸ் எல்லாம் ஏன் கைது செய்யப்படவில்லை என்பது தான் அண்ட(ந்த)ர் பாலிடிக்ஸ்.

முதலிலேயே நாடெங்கும் வெடிகுண்டு வெடிப்புகள். இடையில் தீபாவளிக்கு வேற என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்ற ஒரு அச்சமான உள்ளுணர்வு மக்களுக்குள் இருக்கிறது.

இம்மாதிரி சூழ்நிலைகளில் தனித்தமிழ்நாடு சம்பந்தமான வீராவேசமான பேச்சுக்கள். எங்கே செல்லும் இந்தப் பாதை? யாரோ யாரோ அறிவார் என்று பாடிக்கொண்டெல்லாம் இருக்கக் கூடாது அரசு.

அரசு செயலிழந்தாலும், எதிர்க்கட்சிகள் தக்க சமயத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். அதைத்தான் இன்றைய தமிழக எதிர்க்கட்சித்தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஏன் இன்னும் மிஸ்டர் தொல்ஸ், மற்றும் இன்னும் பிறரைக் கைது செய்யவில்லை என்று.

கைது செய்தது பழிவாங்கும் எண்ணமோ (அ) எதிர்க்கட்சிகளின் தூண்டுதலாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் ஒரு சாதாரண சராசரி மனிதனுக்கும் இந்தியாவின் இறையாண்மை என்றால் என்ன என்று புரியவைத்திருக்கிறது இந்த கைதுப்படலம்.

கெட்டுப் போனவன் எப்படியோ போகட்டும், நல்லவனாவது இனி கெடாமல் இருப்பானே.

அமரன்
25-10-2008, 06:44 PM
பதிலுக்கு நன்றி விக்ரம்.
முதலில் மனிதன்; பிறகு மன்றவன். அவந்தான் அமரன்.
அதனால பல வலைகளில் விழுவதில்லை.
பேச்சுப்படித்த தளத்தை சிரமம் பாராது தனிமடலிட்டு உதவ இயலுமா?

அன்புரசிகன்
25-10-2008, 07:06 PM
இந்தியா ஒரு சனநாயகநாடா இல்லையா??? இந்தியாவில் கருத்துச்சுதந்திரம் உண்டா இல்லையா? ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு சாதகமாக பேசுவது ஒரு நாட்டின் இறையாண்மையை எவ்வாறு எந்தவகையில் பாதித்திருக்கிறது...?

அரச பயங்கரவாதத்திற்கு உதவுவது ஒரு நாட்டின் இறையாண்மையை பாதிக்காதா?

விக்ரம்
25-10-2008, 08:04 PM
இந்தியா ஒரு சனநாயகநாடா இல்லையா???
கண்டிப்பாக இந்தியா ஒரு ஜனநாயக நாடு. யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், நான் ஒன்றும் செய்ய இயலாது.

இந்தியாவில் கருத்துச்சுதந்திரம் உண்டா இல்லையா?
கருத்து சுதந்திரம், மக்களுடைய உணர்ச்சிக்கு பாதகமாகவோ (அ) உணர்ச்சியைத் தூண்டி, நாட்டில் குழப்பம் விளைவித்து கலவரம் உண்டாக காரணமாகவோ இருக்கும் பட்சத்தில். சம்பந்தப்பட்ட கருத்து சர்ச்சைக்குள்ளாகிறது. சம்பந்தப்பட்டவரும் கூட.

ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு சாதகமாக பேசுவது ஒரு நாட்டின் இறையாண்மையை எவ்வாறு எந்தவகையில் பாதித்திருக்கிறது...?
இங்கே நாம் குறிப்பிடும் தடைசெய்யப்பட்ட இயக்கம், இந்தியாவில் தோன்றிய இயக்கமல்ல.

ஆனால் இந்தியாவிலேயே தோன்றி, இந்திய மக்களுக்காகவே பாடுபடக்கூடிய சில மக்கள் இயக்கங்கள் உண்டு. அவற்றில் சில கூட தடைசெய்யப்பட்டிருக்கின்றன.

அப்படிப்பட்ட இந்தியாவில் தோன்றி பின்னர் தடை செய்யப்பட்ட காலத்தில், அந்த இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசினாலே, அது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம். இப்போது புரிந்திருக்கும், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு யார் ஆதரவாகப் பேசினாலும், அவர்கள் சட்டப்படி குற்றவாளிகளே. இதற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் சம்பந்தமில்லை என்று..

அரசே பயங்கரவாதத்திற்கு உதவுவது ஒரு நாட்டின் இறையாண்மையை பாதிக்காதா?
அன்பு முதலாவதாக இந்திய அரசு, இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரி என்பது போன்ற ஒரு கருத்து இங்கே நிலவுகிறது. அது மிக மிக தவறு. இந்தியா இலங்கை விஷயத்தில், கண்டனம் மட்டுமே தெரிவிக்க இயலும்.

இந்தியாவுக்கு எப்படி இறையாண்மை இருக்கிறதோ. அதே போன்று இலங்கைக்கும் இறையாண்மை இருக்கிறது.

இலங்கையின் இறையாண்மைக்குள் தலையிட்டு, இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவின் சட்டப்படி இயலாது. இதற்கு முன்னர் முயன்றபடி தான், இனி இந்தியாவால் மீண்டும் முயற்சிக்க முடியுமே தவிர. தடாலென்று இலங்கைக்குள் சென்று, சிங்கள அரசை கவிழ்த்து ஒரு தனி ஈழத்தை இந்தியாவால் ஏற்படுத்தித் தர எக்காலத்திலும் முடியாது.

இது தான் நடைமுறை. இது விஷயம் தெரிந்த அனைத்து அரசியல் வாதிகளுக்கும் தெரியும், சினிக் கூத்தர்களுக்கும் தெரியும். ஆனால் எதையாவது செய்து பப்ளிசிட்டி ஆகிவிட வேண்டும் (அ) அரசியல் ஆதாயம் அடையவேண்டும் என்று தான் தற்போது இந்த அரசியல் வாதிகளும், சினிக்கூத்தர்களும் இருக்கிறார்கள். ஆனால் தற்போது அவர்களின் சாயங்களும் வெளுத்துக் கொண்டு வருகின்றன. (சமீபத்திய உதாரணம் -> பா.ம.க தனது செய்தி வெளியீட்டீல் எங்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தமே இல்லை. நாங்கள் அவர்களைப் பார்த்தது கூட இல்லை. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் எத்தனையோ முறை புலிகள் பற்றி பேசியிருக்கிறார்கள்)

நாம் நினைக்கும் படி இந்தியா செய்ய வேண்டுமெனில், இந்தியா அமெரிக்கா போன்று ஏகாதிபத்திய வல்லரசாக இருக்க வேண்டும். அதாவது ஈராக்குக்குள் நுழைந்து அமைதி ஏற்படுத்திக் கொண்டிருப்பது, கொண்டிருப்பது, கொண்டிருப்பது... போன்று.

சரி, அன்பு உங்ககிட்டயே கேட்கிறேன். இந்தியா என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்? அதை சின்ன பட்டியலிடுங்கள் பார்ப்போம்.

இலங்கை தைரியமாக இனப்படுகொலை கட்டவிழ்த்து விடுவதற்கு காரணங்கள் இருக்கின்றன :
1. இந்தியா கண்டிப்பாக தலையிடாது என்று இலங்கை அரசுக்கு மிகத் தெளிவாகத் தெரியும்.

2. அமெரிக்கா எதிர்பார்க்கும் வளம் எதுவும் இலங்கையில் இல்லை, அதனால அமெரிக்காவும் தலையிடாது.

3. பிரிட்டனும், நார்வேவும் சமாதானம் காண முயன்று தோற்றது தான் மிச்சம். அதனால் அவற்றின் நேசப்படைகளும் உள்ளே வராது.

இப்படி காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இலங்கைப் பிரச்சினையும், பாலஸ்தீனப் பிரச்சினையும் ஒன்று போலத்தான். எதிரிகள் நண்பர்களாவதைத் தவிர வேறு வழியே இல்லை. இல்லை என்றால் மண்டை ஓடுகள் குவியும், சுடுகாடுகள் தான் மிஞ்சும்.

Keelai Naadaan
25-10-2008, 08:21 PM
இந்தியா ஒரு சனநாயகநாடா இல்லையா??? இந்தியாவில் கருத்துச்சுதந்திரம் உண்டா இல்லையா?

என்ன...!! இப்படி கேட்டுட்டீங்க...!!!
எங்க ஊர் அரசியல்வாதிங்க பேசுவதை நீங்க கேட்டதில்லையா..? அதுவும் தேர்தல் நெருங்கும் நேரம் என்றால் சொல்லவே வேண்டாம்.

மதி
26-10-2008, 01:17 AM
நண்பர்களே...

செய்திசோலையில் விவாதங்கள் வேண்டாமே... மேற்கொண்டு விவாதிப்பதாயின் விவாதப்பகுதியில் திரியைத் தொடங்கலாமே..

இயக்குநர்களின் கைதை பொறுத்த வரையில் அவர்கள் பேசியது யூட்யூபில் கிடைக்கிறது. தேடிப் பார்த்த பின்னர் அனைவரும் தத்தம் கருத்துக்களை தெரிவித்தால் நலம். தமிழர்க்கு ஆதரவாக கூடிய இடத்தில் இருவரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு.. தமிழகத்தையும் பிரித்து கொடுங்கள் என்று முழக்கமிட்டு விட்டனர். அதனால் தான் பிரச்சனையே. இலங்கை தமிழர்க்கு ஆதரவாக பேசியதால் கைது செய்யப்படவில்லை.

மாதவர்
26-10-2008, 04:15 AM
யாகவராயினும் நா காக்க!

ராஜா
26-10-2008, 04:16 AM
தம்பி மதியின் கருத்துதான் என் கருத்தும்..

இது நிகழ்வுகளை அறிவிக்கும் பகுதி. இங்கு விவாதங்கள் வேண்டாமே..!

நம் உறுப்பினர்கள் சார்ந்துள்ள மண்மீது வைத்திருக்கும் பற்று பிரமிக்க வைக்கிறது.

தனியொரு ஆளாக நின்று சிலம்பம் சுழற்றும் விக்ரமைப் பாராட்டும் அதேவேளையில், சிலர் பேசும் சொற்களால் சிதைந்து போவதில்லை நம் இறையாண்மை என்று சொல்லிக்கொள்ளவும் மனம் விழைகிறது.

சுகந்தப்ரீதன்
26-10-2008, 04:49 AM
மதி தயவுசெய்து என்னை மன்னிக்கவும் மீண்டும் இத்திரியில் பதிவிடுவதற்க்கு..!!
ஆனால் அதற்காக இந்தியாவை சிதரடித்துவிட்டுத்தான் (தனித் தமிழகம்) இலங்கை தமிழ் மக்களை காப்பேன் என்றால், அது அசிங்கத்தை மிதித்துவிட்டு காலைக் கழுவுவதைப் போன்றது.நல்ல காமடி போங்க.. அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்களே ஒழிய அதில் உள்நோக்கம் ஏதுமில்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்..!!

praveen
26-10-2008, 07:21 AM
மாற்றுக்கருத்து கூறுபவரை ஒத்த கருத்துடைய நண்பர்கள் மாறி மாறி மல்டி கோட் கிண்டல் செய்வதாக எனக்கு தெரிகிறது. நான் இந்த திரி தலைப்பை ஒட்டி கருத்து பதிக்காததற்கு இதுவே காரணம்.

மன்றத்தில் புதிதாக வந்த ஒருவருடன் முன்னரே இருக்கும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து அடுதடுத்து பரிகாசித்தால், அவர் எப்படி நம்முடன் இயைந்து தன் படைப்புகள் தருவார்.

எனக்கு தோன்றியதை பதிந்தேன், தவறிருந்தால் பொறுத்தருள்க.

தீபன்
26-10-2008, 08:23 AM
சீமான், அமீர் கைது தமிழ் நாட்டில் தனிநாட்டுக் கோரிக்கைக்கு கணிசமான ஆதரவு உறங்குநிலையிலிருக்கின்றதென்ற மத்திய அரசின் அச்சத்தை வெளிக்காட்டுகிறது. இல்லையென்றால், அவர்களின் பேச்சால் நாட்டின் இறைமையை குலைக்கமுடியாதென்று நினைத்திருந்தால் இந்த கைதுகள் தேவையற்றது. மக்களே அவர்களை நிராகரித்திருந்திருப்பர். இது கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாகப்போனாலும் போகலாம்...!

Keelai Naadaan
26-10-2008, 08:59 AM
சீமான், அமீர் கைது தமிழ் நாட்டில் தனிநாட்டுக் கோரிக்கைக்கு கணிசமான ஆதரவு உறங்குநிலையிலிருக்கின்றதென்ற மத்திய அரசின் அச்சத்தை வெளிக்காட்டுகிறது.

கணிசமான ஆதரவு இருக்கிறதா..? :fragend005:
அப்படி இருந்திருந்தால் அப்போதே அந்த யோசனையை குப்பையில் போட்டிருக்க மாட்டார்களே..!!!
ஒரு பேச்சுக்கு அப்படியே தனி தமிழ்நாடு அமைந்து விட்டால் அப்போது இலங்கை பிரச்னை தீர்த்து விட முடியுமா.?
பாரதம் பல மாநிலங்களின் ஒரு மொத்த உருவம்.
தயவு செய்து பாரதத்தை பிரிக்கும் வகையான பேச்சுக்களை பேச வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன்.

பெரும்பாலும் இலங்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பேச விரும்புவதில்லை
ஆனாலும் சில சமயங்களில் ஆற்றாமையை தாழாமல் சொல்ல வேண்டியுள்ளது. வருந்துகிறேன்.

அன்புரசிகன்
26-10-2008, 11:13 AM
விக்ரம் அவர்களால் தவறான கூற்று ஒன்று உள்ளது. அதற்காக பதிலிடுகிறேன். எந்த நாட்டில் இயங்கும் எந்த தடைசெய்யப்பட்ட இயக்கம் என்றாலும் அவர்களுக்கு ஆதரவாக கருத்து வெளியிடுவது எந்த வகையிலும் இறைமையை பாதிக்காது.

உதாரணம் - ஐக்கிய ராச்சியம் கனடா அமெரிக்கா போன்ற நாடுகளில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நடாத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வுகள். அங்கே விடுதலைப்புலிகளின் கொடிகள் கூட வைத்திருந்தனர்.

மக்களை கட்டாயப்படுத்தி நிதி வசூலிப்பது மட்டுமே தப்பு... இன்னொருவரின் மூக்கு நுனிவரை உங்கள் சுதந்திரம் ஒரு ஜனநாயக நாட்டில் உண்டு. இல்லையேல் அது சர்வாதிகார நாடு...

இப்படி பார்த்தால் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை வெளியிட்ட கலைஞர் கருணாநிதியை ஏன் கைதுசெய்யவில்லை..?

விகடன்
26-10-2008, 12:13 PM
சீமான் அமீர் இருவர் இராமேஸ்வரத்தில் பேசிய பேச்சு தற்கால இந்தியாவின் அரசியலில் தவறாக இருக்கலாம். ஆனால் அவர்கள் எதிர்காலத்தினை நோக்கிய ஓர் யூகத்தினையே சொல்லியிருக்கிறார்கள்.

அதற்காக ஆயுதம் ஏந்தத்தான் போகிறார்கள் என்று கருதவேண்டாம். இன்று 40 உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்திற்கொள்ள்ளாது இந்திய அரசு தவிர்த்தால், நாளை தமிழ்நாட்டில் ஏற்படும் ஓர் நெருக்கடியினை எவ்வாறு தீர்த்துவைப்பர்?
இந்த அடிப்படையில் வந்த உண்ணர்ச்சிகரமான பேச்சுத்தான் அவை.

அமரன்
26-10-2008, 06:05 PM
நண்பர்களுக்கு!

விதிகளை மீறிய பதிவுகளை நீக்கியுள்ளேன். தணிக்கை தொடரும்.

உங்களை நெருடும் பதிவுகளை 'ரிப்போட் போஸ்ட்' மூலம் தெரியப்படுத்துங்கள்.

மதி சொன்னதை கவனத்தில் கொள்ளுங்கள்.

நன்றி.

amalan
27-10-2008, 03:55 AM
ஆமாம், யாரும் மன்றத்தின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் பேசாதீர்கள்...
(எனக்கும் சேர்த்துத்தான்...!)

தமிழ்தாசன்
20-12-2008, 08:33 PM
எத்தனை நாளைக்குத் தான், அப்பாவி தமிழ்நாட்டு தமிழர்களை ஏமாற்றுவார்களோ இந்த சினி கோமாளிகள்.

இலங்கையில் நடக்கும், நடந்த அனைத்துவித இனப்படுகொலையிலிருந்தும் இலங்கை மக்கள் விடுதலை பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும் என்று என் உள்மனதிலிருந்து வேண்டுகிறேன்.

ரொம்ப அருமையா நக்கல் செய்திருக்கிறீர்கள், என்ன பண்றது நீங்க வளர்ந்த சூழ்நிலை அப்படி. நான் பெண்களிடம் நக்கல் செய்வதில்லை. இருந்தாலும் உங்க நக்கலை, (பாதகத்தை சாதகமாக பயன்படுத்த தெரிந்தவன் நான்) .

மிகவும் தெளிவாக விளக்கமளிப்பது போல் எண்ணி கருத்து வழங்கியுள்ளீர்கள்.

முதலில் இந்தமன்றம். அதில் நாம் இணையக்காரணம் தமிழ்.
அதிலும் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் தளம் என்ற நம்பிக்கை எனக்கு கூடவே இருந்தது.

இப்போ அதில் ஏதோ குறை தென்படுவது போல அமைகிறது. இப் பக்க கருத்தாடல்.

என்னைப்பொருத்த வரையில் பொதுவான மனித உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கப்பட வேண்டும்.

நமது தாயகப் பிரச்சினையின் ஆழ அகலங்களை அனைத்து தமிழ்பேசும் உலகத் தழிழர்கள் அனைவரும் தயவுடன் உணர்வுடன் அறிந்து கொள்ள வேண்டும். அதன் தன்மைகள் பற்றி விளக்கமில்லா கருத்துப் பகிர்வுகள் தவிர்க்கப்படவேண்டும்.

அண்மையில் இலங்கை இராணுவத்தளபதி தமிழக அரசியல் வாதிகளை தரக்குறைவாகப் பேசினார். இங்கே மன்றத்தில் சினிமாக் கலைஞர்களை தரக்குறைவான வார்த்தையால் கூறுவது பொருத்தப்பாடற்றது. அதைக் கேள்விப்பட்டு அக்கலைஞர்கள் சந்தோசப் படுவார்கள???
என்னைப் பொருத்தவரை தயவுடன் இந்த மன்றத்தின் பண்புகள் 'தமிழ்' என்ற உணர்வுடன் தொடர்வதே விருப்பம். அதில் இது போன்ற கருத்துரைகள் தவிர்க்கப்படல் நலம். மன்ற நிர்வாகிகள் கவணித்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். தயவுடன் இதைப் புரிந்த கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அமரன்
20-12-2008, 10:28 PM
நண்பர் தமிழ்தாசன் அவர்களே!

மன்றம் மீதான உங்கள் நம்பிக்கை என்றும் வீண் போகாது.

பதிலுக்குப் பதிலென இந்த திரி நீளாமல் இருக்க திரியை மூடுகிறேன். மேற்கொண்டு ஏதாவது விளக்கம் தேவைப்படின் தனிமடலில் கேளுங்கள்.