PDA

View Full Version : விடுகதை

Pages : [1] 2

ரங்கராஜன்
24-10-2008, 05:03 PM
உடம்பில் வேர்வை வராத இடங்கள் அல்லது பகுதிகள் எது?

shibly591
24-10-2008, 05:04 PM
உதடு மட்டுமே

இளசு
24-10-2008, 08:02 PM
உழைக்காமல் தினம் உண்டு கொழுத்து,
குளிரூட்டிய அறையில்
பணம் எண்ணிக் காலம் கழிக்கும்
மனிதமலைகள் உறையும் பகுதிகள்/இடங்கள்...

( உழைப்பவருக்கும் வியர்க்காத இடம் - உதடுகள்..
விருப்பமானவருக்கு வழங்கும்போது கரிக்கக் கூடாதல்லவா..
சரிதானே ஷிப்லி???!!!)

shibly591
24-10-2008, 08:12 PM
( உழைப்பவருக்கும் வியர்க்காத இடம் - உதடுகள்..
விருப்பமானவருக்கு வழங்கும்போது கரிக்கக் கூடாதல்லவா..
சரிதானே ஷிப்லி???!!!)

சரிதான்...

(எனக்கு இன்னும் பழக்கம் இல்லை அண்ணா...)

ரங்கராஜன்
25-10-2008, 08:03 AM
சிரி ஆனால்
இன்னும் இருக்கிறது

அமரன்
25-10-2008, 08:06 AM
இதுவரை எனக்கு கண்மடலில் வியர்க்கவில்லை

சிறுபிள்ளை
13-11-2008, 10:11 AM
உள்ளங்கை பாதம் மற்றும் கால் பாதங்களில் வியர்ப்பதில்லை.. சரிதானே?

அன்புரசிகன்
13-11-2008, 10:23 AM
உள்ளங்கை பாதம் மற்றும் கால் பாதங்களில் வியர்ப்பதில்லை.. சரிதானே?

தவறு.. வியர்க்க கண்டிருக்கிறேன்...

கண்மணி
13-11-2008, 10:26 AM
மான்குட்டியே புள்ளி மான்குட்டியே பாடலில்(படம் பிரியமான தோழி) வரும் வரிகள் தானே இது

ரங்கராஜன்
13-11-2008, 11:15 AM
வெளியில் தெரியும் பாகங்களில் வியர்காத பாகங்கள்
உதடுகள்
பற்க்கள்
ஈறுகள்
காது மடல்கள்
நகங்கள்
கால் முட்டி
உள்ளங்கை, உள்ளங்கால் (தோல் வியாதி இல்லாதவங்களுக்கு)

சிவா.ஜி
13-11-2008, 11:18 AM
உள்ளங்கை, உள்ளங்கால் (தோல் வியாதி இல்லாதவங்களுக்கு)

இல்லையே மூர்த்தி....உள்ளங்கை, உள்ளங்காலில் வியர்க்கிறதே...(எனக்கு எந்த தோல் வியாதியுமில்லை)

ரங்கராஜன்
13-11-2008, 11:32 AM
இல்லையே மூர்த்தி....உள்ளங்கை, உள்ளங்காலில் வியர்க்கிறதே...(எனக்கு எந்த தோல் வியாதியுமில்லை)

நண்பரே
தோல் வியாதி என்பது, விட்டமின் டிஃபியன்சீயும் சேர்த்து தான் நண்பரே. Hyperhidrosis இதுதான் இந்த பிரச்சனையின் பெயர். இது பெரிய பிரச்சனை இல்லை தான். அதிகமாக வேர்வை வருவது அவ்வளவே

ஆதி
23-09-2009, 01:49 PM
வண்டி ஓடுவது எதனாலே ?
திண்ணை மிளிர்வது எதனாலே ?

வெண்முகிலில் உண்டாகும்!!
வெண்ணிலவிலும் அது உண்டாம்!!

( ஒரு வார்த்தையில் விடை சொல்லுங்க )

MUTHGAAA
24-09-2009, 11:21 AM
வண்டி ஓடுவது எதனாலே ?
திண்ணை மிளிர்வது எதனாலே ?

வெண்முகிலில் உண்டாகும்!!
வெண்ணிலவிலும் அது உண்டாம்!!

( ஒரு வார்த்தையில் விடை சொல்லுங்க )

மின்சாரம்.

அறிஞர்
24-09-2009, 08:47 PM
வெளியில் தெரியும் பாகங்களில் வியர்காத பாகங்கள்
காது மடல்கள்
கால் முட்டி
உள்ளங்கை, உள்ளங்கால் (தோல் வியாதி இல்லாதவங்களுக்கு)

இவையெல்லாம் சரியா என சந்தேகம்...

ஜனகன்
29-11-2009, 08:02 PM
விடுகதை நம்;1

உணம்புண்டு கையில்லை, தலையுண்டு காலில்லை. தடடச்சீறும் பாம்பொன்று. அது என்ன?

குணமதி
30-11-2009, 02:59 AM
அடுகலன் (cooker)

ஜனகன்
30-11-2009, 08:09 AM
இல்லையே குணமதி யோசியுங்க

ஜனகன்
01-12-2009, 08:44 AM
இது சமையல் அறையிலும் இருக்கும், சாமி அறையிலும் இருக்கும், சில ஆண்கள் சட்டை பையிலும் இருக்கும். இப்போ கண்டுபிடியுங்கள்.

சரண்யா
01-12-2009, 09:20 AM
தீப்பெட்டியில் உள்ள தீக்குச்சி
சரியா...

ஜனகன்
01-12-2009, 08:44 PM
சரிதான் சரண்யா. வாழ்த்துக்கள்

ஜனகன்
01-12-2009, 08:45 PM
விடுகதை நம்;2

எட்டு கால் உன்றி, இரு கால் படமெடுத்து, வட்டக்குடை பிடித்து வாறாராம் வன்னியப்பர் அவர்யார்?

சரண்யா
02-12-2009, 03:05 AM
நன்றிகள்...
மழையில் பிடிக்கும் குடை தானா அது...

கீதம்
02-12-2009, 03:09 AM
நண்டு?

ஜனகன்
02-12-2009, 06:59 AM
நண்டு சரியான பதில் வாழ்த்துக்கள்

ஜனகன்
02-12-2009, 07:01 AM
விடுகதை நம்;3

நன்னுவார், தின்ன மாட்டார் அவர் யார்?

குணமதி
03-12-2009, 03:49 AM
நன்னுவார், தின்ன மாட்டார் அவர் யார்?

நன்னுவார் என்றால் என்ன என்று பொருள் புரியவில்லை.

சொல்லுங்கள்; அதைத் தெரிந்தால்தான் விடை கூற இயலும்.

விகடன்
03-12-2009, 07:36 AM
நன்னுவார், தின்ன மாட்டார் அவர் யார்?

பாக்குவெட்டி

விகடன்
03-12-2009, 07:38 AM
நன்னுவார் என்றால் என்ன என்று பொருள் புரியவில்லை.

சொல்லுங்கள்; அதைத் தெரிந்தால்தான் விடை கூற இயலும்.

நன்னுதல் என்றால், பற்களுக்கு இடையில் வைத்து நெரித்தலை சொல்லுவர். உதாரணத்திற்கு வேர்க்கடலை ஒன்றை வாயில்ப் போட்டு முன் பற்களால் சிறு சிறு துண்டுகளாக்குவது.

ஜனகன்
03-12-2009, 08:22 AM
பாக்குவெட்டி

விராடன்! சரியான பதில் வாழ்த்துக்கள்

ஜனகன்
03-12-2009, 08:25 AM
நன்னுவார் என்றால் என்ன என்று பொருள் புரியவில்லை.

சொல்லுங்கள்; அதைத் தெரிந்தால்தான் விடை கூற இயலும்.

குணமதி! விராடன் இதற்க்கு விளக்கமாக பதில் தந்துள்ளார். இதை விட நான் வேறென்ன சொல்ல.

விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி வராடன்.

ஜனகன்
03-12-2009, 08:27 AM
விடுகதை நம்;4

ஆடுவார், பாடுவார் ஒற்றை காலில் நிற்பார்.
அவர் யார்?

குணமதி
03-12-2009, 11:33 AM
நன்னுதல் என்றால், பற்களுக்கு இடையில் வைத்து நெரித்தலை சொல்லுவர். உதாரணத்திற்கு வேர்க்கடலை ஒன்றை வாயில்ப் போட்டு முன் பற்களால் சிறு சிறு துண்டுகளாக்குவது.

இது ஒரு வட்டார வழக்கு என்று எண்ணுகிறேன்.

நன்னுதல் என்றால் அகராதிப் பொருள்படி நல்ல நெற்றியை உடைய பெண் என்பதாகும்.

வினை வடிவில், அச்சொல்லுக்கு நீங்கள் கூறும் பொருள் வழக்கிலிருப்பதை அறிகிறேன்.

எனவே, தமிழகத்தின் எந்தப் பகுதிகளில் இவ் வழக்கு உள்ளதென அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

அன்போடு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜனகன்
03-12-2009, 05:25 PM

தமிழகத்தில் இச்சொல் பேச்சுவழக்கில் இருப்பது பற்றி தெரியாது. இலங்கையில் வசிக்கும் எந்த தமிழனுக்கும், இச்சொல் நன்றாகவே தெரியும்.
நன்னுதல்= கடித்தல்

குணமதி
04-12-2009, 11:48 AM
தமிழகத்தில் இச்சொல் பேச்சுவழக்கில் இருப்பது பற்றி தெரியாது. இலங்கையில் வசிக்கும் எந்த தமிழனுக்கும், இச்சொல் நன்றாகவே தெரியும்.
நன்னுதல்= கடித்தல்

நன்றி.

குணமதி
04-12-2009, 11:53 AM
ஆடுவார், பாடுவார் ஒற்றை காலில் நிற்பார்.
அவர் யார்?

ஏதாவது புலன் தாருங்கள்; தந்தால் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்கிறேன்.

ஜனகன்
04-12-2009, 12:37 PM
ஏதாவது புலன் தாருங்கள்; தந்தால் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்கிறேன்.

இது வீ ட்டில் இருக்கும், பெரும்பாலும் எல்லோரும் பயன்படுத்துவார்கள்.

தாமரை
04-12-2009, 12:44 PM
தமிழகத்தில் இச்சொல் பேச்சுவழக்கில் இருப்பது பற்றி தெரியாது. இலங்கையில் வசிக்கும் எந்த தமிழனுக்கும், இச்சொல் நன்றாகவே தெரியும்.
நன்னுதல்= கடித்தல்

அப்ப இனிமே கடி ஜோக்கை நன்னுச் சிரிப்புன்னு சொல்லி நன்சிரிப்பு அப்படின்னு மாத்திடலாம். ஹைய்யா!!!:D:D:D:D:D:D

குணமதி
04-12-2009, 12:56 PM
அப்ப இனிமே கடி ஜோக்கை நன்னுச் சிரிப்புன்னு சொல்லி நன்சிரிப்பு அப்படின்னு மாத்திடலாம். ஹைய்யா!!!:D:D:D:D:D:D

ஆமாம். அதுவும் பெருஞ்சிரிப்பாக இருக்கும்.

( நல், நன் - பெரியதைக் குறிக்கும்)

குணமதி
04-12-2009, 01:05 PM
இது வீ ட்டில் இருக்கும், பெரும்பாலும் எல்லோரும் பயன்படுத்துவார்கள்.

ஊகும்... விடையைச் சொல்லிவிடுங்கள்!

கலையரசி
04-12-2009, 01:09 PM
ஆடுவார், பாடுவார் ஒற்றை காலில் நிற்பார்.
அவர் யார்?

'பெண்டுலம்' (pendulum) உள்ள கடிகாரம்?

ஜனகன்
04-12-2009, 08:37 PM
'பெண்டுலம்' (pendulum) உள்ள கடிகாரம்?

தவறு கலையரசி.

கதவு

ஜனகன்
04-12-2009, 08:39 PM
விடுகதை நம்;5

ஆழக்குழி வெட்டி, அதில் ஒரு முட்டை இட்டு, அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை. அது என்ன?

குணமதி
05-12-2009, 01:38 AM
தவறு கலையரசி.

கதவு

ஒற்றைக்கால் என்பது சரியாகப் பொருந்தவில்லையே!
சரி, அடுத்ததைப் பார்ப்போம்.

குணமதி
05-12-2009, 01:40 AM
ஆழக்குழி வெட்டி, அதில் ஒரு முட்டை இட்டு, அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை. அது என்ன?

தென்னை.

குணமதி
05-12-2009, 01:46 AM
நானும் சில விடுகதைகள் எழுதுகிறேன்.

1.மழையில் நனையும்; வெயிலில் காயும்;
வெளியில் மலரும்; வீட்டில் சுருங்கும். - அது என்ன?

2. கடையில் வாங்கிவந்த ராணி என்ன ராணி?

3. பையில் அது இருந்தால்...
வேறு எதுவும் இருக்காது. - அது என்ன?

ஜனகன்
05-12-2009, 06:07 AM
தென்னை.

சரியான பதில் குணமதி.
உங்கள் விடுகதைக்கு பதில் எழுத முயற்ச்சிக்கின்றேன்.

ஜனகன்
05-12-2009, 06:09 AM
நானும் சில விடுகதைகள் எழுதுகிறேன்.

1.மழையில் நனையும்; வெயிலில் காயும்;
வெளியில் மலரும்; வீட்டில் சுருங்கும். - அது என்ன?

2. கடையில் வாங்கிவந்த ராணி என்ன ராணி?

3. பையில் அது இருந்தால்...
வேறு எதுவும் இருக்காது. - அது என்ன?

2.சாம்பிராணி

குணமதி
05-12-2009, 07:00 AM
2.சாம்பிராணி

இரண்டாவதற்குச் சரியான விடை தந்துவிட்டீர்கள்.

பாராட்டு. நன்றி.

முதலாவதற்கும் கடைசிக்கும் உங்கள் விடையை எதிர்பார்க்கின்றேன்.

கீதம்
05-12-2009, 10:38 AM
முதலாவதற்கு விடை குடை என்றும் மூன்றாவதற்கு விடை கிழிசல் என்றும் நினைக்கிறேன்.

பா.ராஜேஷ்
05-12-2009, 10:45 AM
கீதம் சொல்வதுதான் சரி என தோன்றுகிறது

குணமதி
06-12-2009, 02:43 AM
முதலாவதற்கு விடை குடை என்றும் மூன்றாவதற்கு விடை கிழிசல் என்றும் நினைக்கிறேன்.

சரியான விடைகள்.

பாராட்டு. நன்றி.

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

குணமதி
06-12-2009, 02:44 AM
கீதம் சொல்வதுதான் சரி என தோன்றுகிறது

நன்றி.

குணமதி
06-12-2009, 02:50 AM
இன்னும் மூன்று விடுகதைகள்:

1. உணவில்லாமல் பருக்கிறது.
நோயில்லாமல் இளைக்கிறது. - அது என்ன?

2. பறிக்கப்பறிக்கப் பெரிதாகிறது. - அது என்ன?

3. நித்தம் கொட்டும்
சத்தம் இல்லை. - அது என்ன?

ஜனகன்
06-12-2009, 10:43 AM
இன்னும் மூன்று விடுகதைகள்:

1. உணவில்லாமல் பருக்கிறது.
நோயில்லாமல் இளைக்கிறது. - அது என்ன?

2. பறிக்கப்பறிக்கப் பெரிதாகிறது. - அது என்ன?

3. நித்தம் கொட்டும்
சத்தம் இல்லை. - அது என்ன?

1.பலுன்

3.மழை

குணமதி
06-12-2009, 11:10 AM
1.பலுன்

3.மழை

முதல் விடுகதைக்கான விடை ஓரளவு பொருந்துகிறது. நன்றி.
ஆனால் ஒரு நல்ல விடை அதற்கு உண்டு; எண்ணிப்பாருங்கள்.

மூன்றாம் விடுகதைக்கான விடை பற்றி -
மழை பெய்தால் ஒலி - சத்தம் - இருக்குமே!

இன்னும் பொருத்தமானதைக் கண்டுபிடியுங்கள்.

ஜனகன்
06-12-2009, 11:15 AM

1.சைக்கிள் ரியூப்

3.கொசு

குணமதி
06-12-2009, 11:21 AM
1.சைக்கிள் ரியூப்

3.கொசு

சரி, நானே சரியான விடையைக் கூறிவிடுகிறேன்.

1. நிலா

3. இமை

கலந்து கொண்ட அனைவர்க்கும் நன்றி.

குணமதி
06-12-2009, 11:25 AM
அதுத்த மூன்று விடுகதைகள் :

1.அடி காட்டில்
நடு மாட்டில்
நுனி வீட்டில் - அது என்ன?

2. அடித்தால் விலகாது
அணைத்தால் நிற்காது - அது என்ன?

3.அடிமேல் அடிவாங்கி அனைவரையும் சொக்கவைப்பான்.
அவன் யார்?

ஜனகன்
06-12-2009, 11:27 AM
நன்றி குணமதி நான் இதை யோசிக்கவே இல்லை.

அப்படியே இரண்டாவதுக்கும் சொல்லி விடுங்களேன்

குணமதி
06-12-2009, 11:29 AM
நன்றி குணமதி நான் இதை யோசிக்கவே இல்லை.

அப்படியே இரண்டாவதுக்கும் சொல்லி விடுங்களேன்

சொல்லியிருக்கிறேனே!

ஜனகன்
06-12-2009, 04:42 PM
சொல்லியிருக்கிறேனே!

2. பறிக்கப்பறிக்கப் பெரிதாகிறது. - அது என்ன?

இதற்க்கு என்ன பதில் சொல்லவில்லையே

குணமதி
07-12-2009, 01:12 AM
நன்றி குணமதி நான் இதை யோசிக்கவே இல்லை.

அப்படியே இரண்டாவதுக்கும் சொல்லி விடுங்களேன்

பொறுத்துக் கொள்க. கவனக்குறைவில் அதைச் சொல்லி விட்டதாக நினைத்துவிட்டேன்.

பறிக்கப் பறிக்கப் பெரிதாவது - பள்ளம்.

சரியா! நன்றி.

அடுத்த மூன்று விடுகதைகளுக்கு விடை காண முயலுங்கள்!

சரண்யா
07-12-2009, 02:47 AM
அதுத்த மூன்று விடுகதைகள் :

1.அடி காட்டில்
நடு மாட்டில்
நுனி வீட்டில் - அது என்ன?

2. அடித்தால் விலகாது
அணைத்தால் நிற்காது - அது என்ன?

3.அடிமேல் அடிவாங்கி அனைவரையும் சொக்கவைப்பான்.
அவன் யார்?

அரிசி,காற்று,காற்றாடி...சரியா..

கீதம்
07-12-2009, 03:34 AM
நெற்பயிர், நீர் மற்றும் மேளம். சரியா?

குணமதி
07-12-2009, 04:26 AM
நெற்பயிர், நீர் மற்றும் மேளம். சரியா?

அருமை, மிக அருமை!

மூன்றையும் சரியாகச் சொன்னீர்கள்.

பாராட்டு.

அனைவர்க்கும் நன்றி.

குணமதி
07-12-2009, 04:33 AM
1.அண்ணன் வீட்டுக்குள் தம்பி போகலம்.
தம்பி வீட்டுக்குள் அண்ணன் போக முடியாது. - அது என்ன?

2. விந்தைக் குளத்தில் வியப்புக் குருவி.
வாலினால் தண்ணீரை வற்றக் குடிக்குது. - அது என்ன?

3.அருமையான குகையிலே அழகான பெண் ஆடுகிறாள். - அவள் யார்?

ஜனகன்
07-12-2009, 08:07 AM

2.விளக்கு

குணமதி
07-12-2009, 10:16 AM
2.விளக்கு

சரியாகச் சொன்னீர்கள்.

பாராட்டு. நன்றி.

முதலுக்கும் கடைசிக்கும் விடை கண்டுபிடியுங்கள்.

ஜனகன்
07-12-2009, 10:19 AM
1.அண்ணன் வீட்டுக்குள் தம்பி போகலம்.
தம்பி வீட்டுக்குள் அண்ணன் போக முடியாது. - அது என்ன?

2. விந்தைக் குளத்தில் வியப்புக் குருவி.
வாலினால் தண்ணீரை வற்றக் குடிக்குது. - அது என்ன?

3.அருமையான குகையிலே அழகான பெண் ஆடுகிறாள். - அவள் யார்?

1.வாய்

குணமதி
07-12-2009, 10:28 AM
1.வாய்

முதல் விடுகதைக்கு விடை வாய் - என்றால் தவறு.

பா.ராஜேஷ்
09-12-2009, 10:19 AM
1. உதடு

குணமதி
09-12-2009, 03:02 PM
1. உதடு

வேறு பொருந்தும் விடை கண்டுபிடியுங்கள்!

குணமதி
10-12-2009, 04:04 PM
சரி, விடையைக் கூறி விடுகிறேன்:

1. படியும் உழக்கும்.

3. நாக்கு.

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

குணமதி
10-12-2009, 04:08 PM
1. அறைகள் அறுநூறு.
அத்தனையும் ஓரளவு - அது என்ன?

2.ஆணியை எதில் அடித்தால் இறங்கும்?

ஜனகன்
10-12-2009, 08:53 PM
சரி, விடையைக் கூறி விடுகிறேன்:

1. படியும் உழக்கும்.

3. நாக்கு.

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

உழக்கு என்றால் என்ன என்று சொல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஜனகன்
10-12-2009, 08:59 PM
1.தேன்கூடு

2.தலையில் (ஆணியின் தலையில்)

குணமதி
11-12-2009, 04:04 AM
உழக்கு என்றால் என்ன என்று சொல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அரைக்கால் படியையும் அதற்கும் கீழுள்ளவற்றையும் உழக்கு என்றழைக்கும் வழக்கு உண்டு. நன்றி.

குணமதி
11-12-2009, 04:05 AM
1.தேன்கூடு

2.தலையில் (ஆணியின் தலையில்)

அருமை.

இரண்டும் சரியான விடைகளே.

நன்றி.

குணமதி
11-12-2009, 04:11 AM
1. இது அழுக்காக இருக்கும்போது வெள்ளையாக இருக்கும்.
தூய்மையாக இருக்கும்போது கருப்பாயிருக்கும். - அது என்ன?

2. இதை மேசையின் மீது போட்டு வெட்டுவார்கள்.
ஆனால், இது துடிக்காது. அப்போதுதான், உயிரோட்டமாக இருக்கும்.
அது என்ன?

சரண்யா
12-12-2009, 02:27 AM
1] கரும்பலகை
சரியா..

குணமதி
12-12-2009, 03:37 AM
அருமை!

முதல் விடுகதைக்கு விடை சரியே!

பாராட்டு!

இரண்டாம் விடுகதைக்கும் விடை காண முயல்க.

பா.ராஜேஷ்
14-12-2009, 04:31 PM
2. ஒருவேளை சீட்டுகட்டாக இருக்குமோ!?? ;)

ஜனகன்
14-12-2009, 04:39 PM
2.கீரை கட்டு

குணமதி
14-12-2009, 04:51 PM
2. ஒருவேளை சீட்டுகட்டாக இருக்குமோ!?? ;)

சரியான விடை.

பாராட்டும் நன்றியும்.

குணமதி
14-12-2009, 04:55 PM
2.கீரை கட்டு

நன்றி நண்பரே.

சரியான விடையை அவர் கூறிவிட்டார்.

நீங்கள் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டீர்களா? காணவில்லை என்பதால் கேட்டேன்!

எங்கும் புயல் பற்றிய செய்தி! இங்கும் கூட ஆற்றலான ஒரு புயல். கண்டுபிடித்துப் பிறகு சொல்லுங்கள்.

குணமதி
14-12-2009, 05:00 PM
1. இந்தப்பிள்ளை பெரியவனானால் படிக்காமலே பயன்தருவான்.
- அவன் யார்?

2. இரண்டு தோட்டம், நான்கு வேலி;
பூப்பூத்தால் பூந்தோட்டம் பாழ்! - அது என்ன?

ஜனகன்
14-12-2009, 05:27 PM
நன்றி நண்பரே.

சரியான விடையை அவர் கூறிவிட்டார்.

நீங்கள் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டீர்களா? காணவில்லை என்பதால் கேட்டேன்!

எங்கும் புயல் பற்றிய செய்தி! இங்கும் கூட ஆற்றலான ஒரு புயல். கண்டுபிடித்துப் பிறகு சொல்லுங்கள்.

ஆமாம், உங்கள் ஊகம் சரியே. இன்றுதான் நாடு திரும்பினேன்.அக்கறைக்கு நன்றி.

ஜனகன்
14-12-2009, 05:28 PM
1.தென்னம்பிள்ளை

குணமதி
15-12-2009, 02:16 AM
1.தென்னம்பிள்ளை

சரியான விடை.

பாராட்டும் நன்றியும்.

அடுத்தது...?

கீதம்
15-12-2009, 03:51 AM
கண்கள் என்பது சரியா?

குணமதி
15-12-2009, 11:08 AM
கண்கள் என்பது சரியா?

சரி.

பாராட்டும் நன்றியும்.

குணமதி
15-12-2009, 04:11 PM
அடுத்த இரண்டு விடுகதைகள் :

1.இருசன் கொண்ட இரண்டு காளை
ஒன்று படுத்திருக்கும் அடுத்தது திரியும் - அது என்ன?

2. இலையுண்டு கிளையில்லை
பூ உண்டு காய் இல்லை - அது என்ன?

ஜனகன்
15-12-2009, 09:47 PM
2.முங்கில் மரமா?

குணமதி
16-12-2009, 10:51 AM
2.முங்கில் மரமா?

மூங்கில் பூக்குமா என்று தெரியவில்லை.

பொருந்தும் வேறு விடை இருக்கிறது.

சரண்யா
16-12-2009, 11:07 AM
தேங்காய்

ஜனகன்
16-12-2009, 05:11 PM
1.மணிக்ககூட்டு கம்பிகள்

2.வெங்காய மரம்

குணமதி
17-12-2009, 02:23 AM
1.மணிக்ககூட்டு கம்பிகள்

2.வெங்காய மரம்

மணிக்ககூட்டு கம்பிகள் - என்னவென்றே புரியவில்லை.

வெங்காய மரமா?

இன்னும் பொருத்தமான விடை காண முயலுங்கள்.

நன்றி.

குணமதி
18-12-2009, 01:48 AM
இன்று மாலை வரையில் விடை வரவில்லை என்றால் பொருந்தும் விடையை நானே கூறுகிறேன்.

கீதம்
18-12-2009, 03:00 AM
1.இருசன் கொண்ட இரண்டு காளை
ஒன்று படுத்திருக்கும் அடுத்தது திரியும் - அது என்ன?

இதற்கு விடை கடிகார முட்கள் என்று நினைக்கிறேன்,ஒன்று மெதுவாகவும், மற்றொன்று வேகமாகவும் சுற்றுவதால்.

குணமதி
18-12-2009, 03:53 AM
1.இருசன் கொண்ட இரண்டு காளை
ஒன்று படுத்திருக்கும் அடுத்தது திரியும் - அது என்ன?

இதற்கு விடை கடிகார முட்கள் என்று நினைக்கிறேன்,ஒன்று மெதுவாகவும், மற்றொன்று வேகமாகவும் சுற்றுவதால்.

இன்னும் பொருந்தும் விடை உள்ளது. முயன்று கூறுங்கள்.

கீதம்
18-12-2009, 10:51 AM
ஆட்டுக்கல்லும் குழவியும்?

குணமதி
18-12-2009, 11:54 AM
ஆட்டுக்கல்லும் குழவியும்?

அருமை.

சரியான விடை.

பாராட்டும் நன்றியும்.

குணமதி
18-12-2009, 12:06 PM
அடுத்த இரண்டு விடுகதைகள் :

1. நெட்டை மாந்தன் விழுந்து விழுந்து கும்பிடுகிறான். - அது என்ன?

2. எந்தத் தாளம் எல்லாவற்றிற்கும் அடி?

ஜனகன்
18-12-2009, 01:08 PM
அருமை.

சரியான விடை.

பாராட்டும் நன்றியும்.

நான் நினைத்தேன் ஆட்டுக்கல் என்று ஆனால் இருசான் என்று குறிப்பிட்ட படியால் எழுதவில்லை, இப்படி ஏமாற்றி விட்டீர்களே.
உங்கள் ஊரில் ஆட்டுக்கல் இரண்டு சானா?

ஜனகன்
18-12-2009, 03:39 PM
1.கிணறும் துலாவும்

குணமதி
18-12-2009, 04:29 PM
நான் நினைத்தேன் ஆட்டுக்கல் என்று ஆனால் இருசான் என்று குறிப்பிட்ட படியால் எழுதவில்லை, இப்படி ஏமாற்றி விட்டீர்களே.
உங்கள் ஊரில் ஆட்டுக்கல் இரண்டு சானா?

இருசாண் அன்று! இருசன் - என்பது ஒருவர் பெயர்.

போகட்டும், விடுங்கள்.

அடுத்த விடுகதைக்கு விடையைக் கண்டுபிடியுங்கள்.

குணமதி
18-12-2009, 04:37 PM
1.கிணறும் துலாவும்

அருமை.

உங்கள் விடை சரி. (துலா என்றால் ஏற்றம் தானே!)

பாராட்டு.

அடுத்த விடுகதைக்கு விடையைக் கண்டுபிடியுங்கள்!

ஜனகன்
18-12-2009, 08:52 PM
//2. இலையுண்டு கிளையில்லை
பூ உண்டு காய் இல்லை - அது என்ன?/////////

இதற்கு என்ன பதில் சொல்லவில்லையே

குணமதி
19-12-2009, 11:19 AM
//2. இலையுண்டு கிளையில்லை
பூ உண்டு காய் இல்லை - அது என்ன?/////////

இதற்கு என்ன பதில் சொல்லவில்லையே

மறந்தேன்!

அதற்கு விடை கரும்பு.

நன்றி.

ஜனகன்
20-12-2009, 06:15 PM
விடுகதை நம்;6

சரி நானும் இரண்டு விடுகதைகள் கேக்கின்றேன். சொல்லுங்கள் பார்ப்போம்.

1. ஒரு கால் குள்ளனுக்கு எட்டு கைகள். அவன் யார்?

2.இங்கே குத்து பட்டவன் அங்கே வாயை திறக்கிறான். அவன் யார்?

குணமதி
21-12-2009, 01:16 AM
1.குடை இராட்டினம்.

2. உலைக்களத் துருத்தி.

ஜனகன்
21-12-2009, 07:46 AM
1.குடை இராட்டினம்.

2. உலைக்களத் துருத்தி.

முதலாவதுக்கு குடைவிடை சரி, நன்றி.
இரண்டாவதுக்கு இன்னும் கொஞ்சம் பொருத்தமான விடை உண்டு முயற்சிக்கவும்

குணமதி
21-12-2009, 10:30 AM
2.இங்கே குத்து பட்டவன் அங்கே வாயை திறக்கிறான். அவன் யார்?

உலைக்களத்தில் அடிக்கப்படும் இரும்பு நீரில் இட்டதும் ஒலி எழுப்புதல் - சரியா?

ஜனகன்
21-12-2009, 09:13 PM
2.இங்கே குத்து பட்டவன் அங்கே வாயை திறக்கிறான். அவன் யார்?

உலைக்களத்தில் அடிக்கப்படும் இரும்பு நீரில் இட்டதும் ஒலி எழுப்புதல் - சரியா?

உங்கள் விடை கேள்விக்கு பொரிந்தினாலும், நான் நினைத்து எழுதியது வேறு.யோசியுங்கள்.

குணமதி
22-12-2009, 02:16 AM
புரியப்பம் (பரோட்டா)...?

ஜனகன்
22-12-2009, 02:58 PM
புரியப்பம் (பரோட்டா)...?

தவறு குணமதி.
சரி நானே சொல்லிவிடுகிறேன்.
தந்தி

ஜனகன்
22-12-2009, 03:05 PM
விடுகதை நம்;7

அடுத்த இரண்டு விடுகதைகள்;

1.நாலு மூலை சதுரப்பெட்டி,
அதன் மேல் ஒரு குதிரை குட்டி. அது என்ன?

2.இட்டேன் எடுக்க முடியல்லை
பூசினேன் புட(பிக்க)முடியவில்லை

சரண்யா
22-12-2009, 03:21 PM
இரண்டாவது மாவா...

aren
22-12-2009, 03:27 PM
இரண்டாவது மாவா...

தவறாக இருக்கலாம் என்பது என் கருத்து. மாவை தோசையாக சுட்டால் எடுக்கலாமே.

aren
22-12-2009, 03:28 PM
பெயிண்டாக இருக்கலாம் இரண்டாவது

aren
22-12-2009, 03:28 PM
முதலாவது அலாரமாக இருக்கலாம்.

ஜனகன்
22-12-2009, 03:39 PM
இரண்டாவது மாவா...

அதற்குத்தான் அரேன் பதில் சொல்லி விட்டாரே,நன்றி

ஜனகன்
22-12-2009, 03:43 PM
இதிலே இரண்டு விடுகதைகள் கேக்கப்பட்டுள்ளது. அதிலே இரண்டாவதில் இரண்டு பதில்கள் வரவேண்டும்.எதற்கு எந்த பதில் என சொல்லுங்கள் அரேன்.
உங்கள் பதில் எதற்குரியது என விளங்க வில்லை.

குணமதி
22-12-2009, 04:31 PM
இதிலே இரண்டு விடுகதைகள் கேக்கப்பட்டுள்ளது. அதிலே இரண்டாவதில் இரண்டு பதில்கள் வரவேண்டும்.எதற்கு எந்த பதில் என சொல்லுங்கள் அரேன்.
உங்கள் பதில் எதற்குரியது என விளங்க வில்லை.

சாந்துப் பொட்டும் முகமாவும்

ஜனகன்
22-12-2009, 09:01 PM
சாந்துப் பொட்டும் முகமாவும்

இது எதற்குரிய பதில் குணமதி, கொஞ்சம் விழக்கமாக சொல்லுங்களேன்.

குணமதி
23-12-2009, 03:16 AM
அடுத்த இரண்டு விடுகதைகள்;

1.நாலு மூலை சதுரப்பெட்டி,
அதன் மேல் ஒரு குதிரை குட்டி. அது என்ன?

2.இட்டேன் எடுக்க முடியல்லை
பூசினேன் புட(பிக்க)முடியவில்லை

இரண்டாவது விடுகதைக்கு விடை :

சாந்துப்பொட்டு, முகமாவு.

முதல் விடுகதைக்கு விடை :

வீடு அல்லது கோயில்

சரியா?

ஜனகன்
23-12-2009, 09:45 AM
முதலாவது விடுகதைக்கு விடை தவறு.

இரண்டாவதுக்கு விடை இரண்டு வரவேண்டும்

அதில் உங்கள் பதில் கொஞ்சம் பொருந்துகிறது.பதிலை நானே சொல்லி விடுகின்றேன்.

2.(1) கோலம்
. (2) மஞ்சள்

குணமதி
23-12-2009, 03:55 PM
முதலாவது விடுகதைக்கு விடை தவறு.

இரண்டாவதுக்கு விடை இரண்டு வரவேண்டும்

அதில் உங்கள் பதில் கொஞ்சம் பொருந்துகிறது.பதிலை நானே சொல்லி விடுகின்றேன்.

2.(1) கோலம்
. (2) மஞ்சள்

முதல் விடுகதைக்கு விடை-

'அலாரம்' கடிகாரமா?

ஜனகன்
23-12-2009, 03:57 PM
முதல் விடுகதைக்கு விடை?

1.அம்மியும் குழவியும்.

குணமதி
23-12-2009, 04:13 PM
1.அம்மியும் குழவியும்.

கணக்குப் புலி நண்பரே,அம்மி சதுரமாகவா இருக்கிறது?

ஜனகன்
23-12-2009, 04:24 PM
கணக்குப் புலி நண்பரே,அம்மி சதுரமாகவா இருக்கிறது?

அம்மி சதுரம் தானே. ஆட்டுக்கல்தான் வட்டம்.மணப்பெண் கால் வைத்து மணமகன் மெட்டி போடுவது.மெட்டி ஒலி நாடகத்தில் வருமே.சகோதரி.

குணமதி
23-12-2009, 04:29 PM
அம்மி சதுரம் தானே. ஆட்டுக்கல்தான் வட்டம்.மணப்பெண் கால் வைத்து மணமகன் மெட்டி போடுவது.மெட்டி ஒலி நாடகத்தில் வருமே.சகோதரி.

செவ்வக அம்மியைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.

(உங்கள் விடையில் கடைசிச் சொல்லை ஆண் பாலாக்குங்கள்!)

ஜனகன்
23-12-2009, 04:33 PM
செவ்வக அம்மியைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.

(உங்கள் விடையில் கடைசிச் சொல்லை ஆண் பாலாக்குங்கள்!)

மன்னிக்கவும் சகோதரன்.

ஜனகன்
24-12-2009, 10:11 PM
விடுகதை நம்;8

1.தான் குடியிருக்க கோட்டை கட்டுவான்
கோட்டையை உடைத்து வெளிவருவான் -அவன் யார்?

2.தலை மட்டும் கொண்ட சிறகில்லா பறவை தேசமெல்லாம் பறக்குது -அவன் யார்?

குணமதி
25-12-2009, 02:44 AM
1. பூச்சி- கூட்டுப்புழு
2.ஏவுகணை
__________________________
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
_

aren
25-12-2009, 02:53 AM
1. கம்பளிப்பூச்சி
2. நாணயம் (காசு)

ஜனகன்
25-12-2009, 07:53 AM
முதலாவது விடை பட்டு பூச்சி. உங்கள் இருவரதும் எதோ ஒரு விதத்தில் பொருந்துகிறது.வாழ்த்துக்கள்.

இரண்டாவது விடை இருவரதும் தவறு.தலை என்பதை கருத்தில் கொண்டு யோசிக்கவும்.

குணமதி
25-12-2009, 11:25 AM
காற்றுக் குமிழியா?

ஜனகன்
25-12-2009, 03:52 PM
காற்றுக் குமிழியா?

தவறு குணமதி.

ஜனகன்
26-12-2009, 09:20 AM
2.தலை மட்டும் கொண்ட சிறகில்லா பறவை தேசமெல்லாம் பறக்குது -அவன் யார்?

சரி இரண்டாவதுக்கு பதிலை நானே சொல்லி விடுகின்றேன்.

கடிதம் (தபால்)

ஜனகன்
26-12-2009, 09:25 AM
விடுகதை நம்;9
அடுத்து இரண்டு விடுகதை:

1.உலகமெல்லாம் படுக்கை விரித்து உறங்காமல் அலைகிறான்.-அவன் யார்?

2. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால், கண்ணீரும் கம்பலையும்தான் -அது என்ன?

கீதம்
26-12-2009, 10:46 AM
1. நிலா
2.வெங்காயம்

ஜனகன்
26-12-2009, 05:04 PM
1. நிலா
2.வெங்காயம்

இரண்டும் சரியான பதில் நன்றி, வாழ்த்துக்கள்

ஜனகன்
26-12-2009, 05:08 PM
விடுகதை நம்;10

1.சுளகு(முறம்) நிறைய சோழன் பொரி விடிய பார்த்தால் ஒன்றும் இல்லை -அது என்ன?

2.தாய் சப்பாணி மகள் இழுப்பாணி -அது என்ன?

குணமதி
27-12-2009, 04:04 AM
1. விண்மீன்கள்

சரண்யா
27-12-2009, 11:59 AM
ஜனகன் மற்றும் குணமதி அவர்களே..இதுவரை கேட்டதை ஓர் தொகுப்பாக அளிக்கிறீர்களா...
சிலவற்றில் எந்த கேள்விக்கு எந்த பதில் என்ற குழப்பம் நிலவுவதால்...
மிக்க நன்றிகள்..

ஜனகன்
27-12-2009, 01:40 PM
ஆமாம் சரண்யா நீங்கள் சொல்வது நல்ல யோசனை. இனிமேல் விடுகதை என்றாலும் பதில் என்றாலும் நம்பர் போட்டு தெருவித்தால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும் என்பது என் அவிப்பிராயம்.

ஜனகன்
27-12-2009, 02:12 PM
1. விண்மீன்கள்

விடுகதை நம்;10 ல் முதலாவதுக்கு நட்சத்திரம் என்பது சரியான பதில் வாழ்த்துக்கள் குணமதி.
இரண்டாவதுக்கும் கண்டுபிடியுங்கள்.

குணமதி
27-12-2009, 03:16 PM
விடுகதை முதலாவதுக்கு நட்சத்திரம் என்பது சரியான பதில் வாழ்த்துக்கள் குணமதி.
இரண்டாவதுக்கும் கண்டுபிடியுங்கள்.

நன்றி.
இரண்டாவது விடுகதைக்கு ஏதாவது புலன் தெரிந்தால் - தந்தால் - கண்டுபிடிக்க முயலலாம்.

ஜனகன்
27-12-2009, 03:42 PM
நன்றி.
இரண்டாவது விடுகதைக்கு ஏதாவது புலன் தெரிந்தால் - தந்தால் - கண்டுபிடிக்க முயலலாம்.

இது சமையல் அறையில் காணப்படும்.

குணமதி
28-12-2009, 01:37 AM
இது சமையல் அறையில் காணப்படும்.

தோசைக்கல்லும் திருப்பியும்.

ஜனகன்
28-12-2009, 08:27 AM
இது கேள்விக்கு சரியாக பதில் பொருந்த வில்லையே குணமதி.

சரி நானே சொல்லி விடுகின்றேன்.

அம்மியும் குழவியும்.

ஜனகன்
28-12-2009, 08:34 AM
விடுகதை நம்; 11

1. பொழுது போனால் பொன் தோட்டம்
விடிய பார்த்தால் ஒன்றும் இல்லை -அது என்ன?

2. தொம் என்று விழுந்தார் தொப்பி கலண்டார்- அது என்ன?

குணமதி
28-12-2009, 09:54 AM
1. வானத்து மீன்கள்.

2. பனங்காய்?

ஜனகன்
28-12-2009, 10:33 AM
1. வானத்து மீன்கள்.

2. பனங்காய்?

இரண்டும் சரியான பதில். நன்றி வாழ்த்துக்கள்.

இனி அடுத்த விடுகதையுடன் வருகின்றேன்.

குணமதி
28-12-2009, 10:45 AM
இரண்டும் சரியான பதில். நன்றி வாழ்த்துக்கள்.

இனி அடுத்த விடுகதையுடன் வருகின்றேன்.

என்னுடைய இரண்டு விடுகதைகள் :

1. உயிர் இல்லாத நடுவர்;
ஒழுங்காக ஞாயம் சொல்கிறார் -அவர் யார்?

2. உருவத்தில் சிறியவன்,
உழைப்பில் பெரியவன் - அவன் யார்?

ஜனகன்
28-12-2009, 11:17 AM
1.தராசு

2.எறும்பு

anna
28-12-2009, 12:55 PM
குழ்ந்தைக்கு எந்தகை பலமான கை?

திறந்தால் சீறிகொண்டு வருவான், இருப்பினும் தாகமும் தீர்ப்பான் அவன் யார்?

anna
28-12-2009, 12:59 PM
அப்பன் சோறியன் , ஆத்தா சடைச்சி, பிள்ளைகள் எல்லாம் சக்கரைகட்டிகள் யார் இவர்கள்?

குணமதி
28-12-2009, 03:08 PM
1.தராசு

2.எறும்பு

சரியான விடைகள்.
நன்றி.

குணமதி
28-12-2009, 03:09 PM
குழ்ந்தைக்கு எந்தகை பலமான கை?

திறந்தால் சீறிகொண்டு வருவான், இருப்பினும் தாகமும் தீர்ப்பான் அவன் யார்?

1. அழுகை

2. (குளிர்)குடிப்பு

சரிதாமா?

குணமதி
28-12-2009, 03:10 PM
அப்பன் சொறியன் , ஆத்தா சடைச்சி, பிள்ளைகள் எல்லாம் சக்கரைகட்டிகள் யார் இவர்கள்?

பலாப்பழம்.

குணமதி
28-12-2009, 03:25 PM
இரண்டு விடுகதைகள் :

1. காணப் பூ பூக்கும்
காணாமல் காய் காய்க்கும் அது என்ன?

2.கடல் நீரில் வளர்வேன்
மழைநீரில் மடிவேன் - நான் யார்?

ஜனகன்
28-12-2009, 09:05 PM
இரண்டு விடுகதைகள் :

1. காணப் பூ பூக்கும்
காணாமல் காய் காய்க்கும் அது என்ன?

2.கடல் நீரில் வளர்வேன்
மழைநீரில் மடிவேன் - நான் யார்?

2.உப்பு

குணமதி
29-12-2009, 03:10 AM
2.உப்பு

சரியான விடை.

பாராட்டு. நன்றி.

முதல் விடுகதைக்கு விடை...?

ஜனகன்
29-12-2009, 06:40 AM
1.பலாபழம் சரியா குணமதி.

குணமதி
29-12-2009, 07:09 AM
1.பலாப்பழம் சரியா குணமதி.

இல்லை!
கண்டுபிடியுங்கள். நன்றி.

anna
29-12-2009, 08:01 AM
1. அழுகை

2. (குளிர்)குடிப்பு

சரிதாமா?

முதலாவது விடுகதைக்கு அழுகை என்பது சரியான விடை.

இரண்டாவது விடுகதைக்கு உங்கள் பதில் புரியவில்லை அதற்கான பதில்

சோடா

anna
29-12-2009, 08:03 AM
இரண்டு விடுகதைகள் :

1. காணப் பூ பூக்கும்
காணாமல் காய் காய்க்கும் அது என்ன?

வேர்கடலை

பதில் சரியா?

anna
29-12-2009, 08:05 AM
அட்டைக்கு ஆயிரம் கண் அது என்ன?

முட்டைக்கு மூன்று கண் அது என்ன ?

மதுரை சிதம்பரத்துக்கு ஒரே கண் அது யார்?

குணமதி
29-12-2009, 10:11 AM
முதலாவது விடுகதைக்கு அழுகை என்பது சரியான விடை.

இரண்டாவது விடுகதைக்கு உங்கள் பதில் புரியவில்லை அதற்கான பதில்

சோடா

இரண்டாவதற்கு நான் தந்த விடை "cool drink" - பொருந்துகிறதா?

குணமதி
29-12-2009, 10:13 AM
அட்டைக்கு ஆயிரம் கண் அது என்ன?

முட்டைக்கு மூன்று கண் அது என்ன ?

மதுரை சிதம்பரத்துக்கு ஒரே கண் அது யார்?

சல்லடை

தேங்காய்

சிவன் - நெற்றிக்கண் ?

குணமதி
29-12-2009, 10:19 AM
வேர்கடலை

பதில் சரியா?

அருமை.

சரியான விடை.

பாராட்டு, நன்றி.

வானதிதேவி
29-12-2009, 02:04 PM
1.தபால்
2.கோந்து
சரியா?

குணமதி
29-12-2009, 02:14 PM
1.தபால்
2.கோந்து
சரியா?

எந்த எந்த விடுகதைகளுக்கு இவ்விடைகள் என்று புரியவில்லையே!

ஜனகன்
30-12-2009, 05:46 AM
எந்த எந்த விடுகதைகளுக்கு இவ்விடைகள் என்று புரியவில்லையே!

அதுதான் நம்பர் போட்டு எழுதும்படி சரண்யா சொல்லி இருக்கிறாங்களே. அப்போதான் எது எது எதற்கென விளங்கிக்கொள்ளலாம்.

ஜனகன்
30-12-2009, 05:52 AM
விடுகதை நம்;12

1. மஞ்சள் நிறத்தழகி, மங்கையர் முகத்தழகி -அவள் யார்?

2. ஏறு ஏறு சங்கிலி இறங்கு இறங்கு சங்கிலி, எட்டாத கொப்பெல்லாம் ஏறி வந்த சங்கிலி -அவன் யார்?

குணமதி
30-12-2009, 07:06 AM
அட்டைக்கு ஆயிரம் கண் அது என்ன?

முட்டைக்கு மூன்று கண் அது என்ன ?

மதுரை சிதம்பரத்துக்கு ஒரே கண் அது யார்?

விடுகதை எழுதிய 'அண்ணா' விடையை இன்னும் உறுதி செய்யவில்லையே!

குணமதி
30-12-2009, 07:08 AM
விடுகதை நம்;12

1. மஞ்சள் நிறத்தழகி, மங்கையர் முகத்தழகி -அவள் யார்?

2. ஏறு ஏறு சங்கிலி இறங்கு இறங்கு சங்கிலி, எட்டாத கொப்பெல்லாம் ஏறி வந்த சங்கிலி -அவன் யார்?

1. மஞ்சள்

2. ஏற்றம்

ஜனகன்
30-12-2009, 02:32 PM
1. மஞ்சள்

2. ஏற்றம்

முதலாவது விடை சரி, வாழ்த்துக்கள்.

இரண்டாவது விடுகதையின் பதில் தவறு.இதற்கு பொருத்தமான ஒன்று இருக்கின்றது.

anna
02-01-2010, 10:25 AM
சல்லடை

தேங்காய்

சிவன் - நெற்றிக்கண் ?

முதல் இரண்டு விடுகதைகளுக்கு விடை சரி தான் ஆனால் முன்றாவது விடுகதைக்கு விடை தான் தவறு.

மதுரை சிதம்பரத்துக்கு ஒரு கண் யார் அவர்?

சிவனுக்கு நெற்றி கண்ணையும் சேர்த்து முன்று கண் அல்லவா உள்ளது?

சரியான விடை

ஊசி

ஜனகன்
02-01-2010, 05:57 PM
2. ஏறு ஏறு சங்கிலி இறங்கு இறங்கு சங்கிலி, எட்டாத கொப்பெல்லாம் ஏறி வந்த சங்கிலி -அவன் யார்?

இதற்க்கு யாரும் பதில் சொல்லாத படியால் நானே சொல்லி விடுகின்றேன்.

அணில்

ஜனகன்
02-01-2010, 06:04 PM
விடிகதை நம்;13

1. ஆயிரம் பேர் சேர்ந்து அழகான மண்டபம் கட்டி ஒருவர் கண் பட்டு உடைந்ததாம் அந்த மண்டபம். அது என்ன?

2. கமரா இல்லாமல் படமெடுக்கிறான் சின்னத்தப்பி . அவன் யார்?

கீதம்
02-01-2010, 08:59 PM
விடிகதை நம்;13

1. ஆயிரம் பேர் சேர்ந்து அழகான மண்டபம் கட்டி ஒருவர் கண் பட்டு உடைந்ததாம் அந்த மண்டபம். அது என்ன?

2. கமரா இல்லாமல் படமெடுக்கிறான் சின்னத்தப்பி . அவன் யார்?

1.தேன்கூடு
2.பாம்பு

ஜனகன்
02-01-2010, 09:40 PM
1.தேன்கூடு
2.பாம்பு

அருமை, இரண்டும் சரியான பதில் வாழ்த்துக்கள்.

ஜனகன்
02-01-2010, 09:45 PM
விடிகதை நம்;14

1. வாடா என்பான் போடா என்பான் அவனிருப்பதோ ஆழக்குழியில் அவன் யார்?

2. என் குதிரை கருப்பு குதிரை குளிப்பாட்டினால் வெள்ளை குதிரை அவன் யார்`?

சரண்யா
14-01-2010, 12:54 PM
விடுகதை நம்;14
1] நாக்கு
2] கரும்பலகை
சரியா..

ஜனகன்
14-01-2010, 08:19 PM
விடுகதை நம்;14
1] நாக்கு
2] கரும்பலகை
சரியா..

முதலாவது விடை சரி

இரண்டாவது விடை தவறு. அதற்க்கு பொருத்தமான ஒரு விடை இருக்கின்றது யோசியுங்கள்.

சரண்யா
15-01-2010, 07:27 AM
சிலை என்பதா..

ஜனகன்
15-01-2010, 07:53 AM
சிலை என்பதா..

தவறு ,

சரி நானே சொல்லி விடுகின்றேன்.
உளுந்து

ஜனகன்
15-01-2010, 07:58 AM
விடுகதை நம்;15

1.அங்கே போறான், இங்கே போறான்
அடியை பார்த்தால் காண வில்லை -அவன் யார்?

2. ஐந்து வீட்டுக்கு ஒரு முற்றம் -அது என்ன?

சரண்யா
15-01-2010, 08:46 AM
2] குடை

ஜனகன்
15-01-2010, 08:53 AM
2] குடை

இரண்டாவதுக்கு பதில் பொருந்தினாலும் நான் நினைத்தது அது இல்லை.

சரண்யா
15-01-2010, 08:55 AM
அடடா
விலங்கா....

ஜனகன்
15-01-2010, 09:11 AM
தவறு, அதுகும் இல்லை.

சரி, எனது இடை வேளை முடிந்தது, மீண்டும் இரவு சந்திப்போம்.

lenram80
15-01-2010, 06:38 PM
1)தார் ரோட்டில் பேருந்து :)

2) 5 விரல்கள் இணையும் உள்ளங்கை

ஜனகன்
15-01-2010, 08:49 PM
1)தார் ரோட்டில் பேருந்து :)

2) 5 விரல்கள் இணையும் உள்ளங்கை

முதலாவது விடை தவறு லெனின்

இரண்டாவது சரியான விடை, வாழ்த்துக்கள்.

சரண்யா
16-01-2010, 07:25 AM
வாழ்த்துகள் lenram80 அவர்களே...

ஜனகன்
16-01-2010, 07:57 AM
1.அங்கே போறான், இங்கே போறான்
அடியை பார்த்தால் காண வில்லை -அவன் யார்?

சரி இதன் விடையை நானே சொல்லி விடுகின்றேன்.

எறும்பு

ஜனகன்
16-01-2010, 08:01 AM
மேலும் இரண்டு புதிர்;

1. இப்ப பிறந்த பிள்ளை அப்பனுக்கு சோறு போடுது -அது என்ன?

2. குளத்துக்குள் குதித்தவன் கும்மாளம் போடுகின்றான் -அவன் யார்`?

muthuvel
20-01-2010, 07:11 AM
ஆயிரத்தில் ஒருவன் திரை படத்தில் ,
ஆயிரத்தில் ஒருவன் யார் ?

ஜனகன்
21-01-2010, 05:11 PM
ஆயிரத்தில் ஒருவன் திரை படத்தில் ,
ஆயிரத்தில் ஒருவன் யார் ?

M.G.R

samuthraselvam
22-01-2010, 07:23 AM
குளத்துக்குள் குதித்தவன் கும்மாளம் போடுகின்றான் -அவன் யார்`?

தவளை என்று நினைக்கிறேன்

ஜனகன்
22-01-2010, 08:01 AM
தவளை தவறான பதில் வேறு ஒன்று பொருத்தமாக உள்ளது.

samuthraselvam
22-01-2010, 08:16 AM
அட, தயிர் கடையும் மத்து

இது சரியா?

ஜனகன்
22-01-2010, 08:08 PM
அட, தயிர் கடையும் மத்து

இது சரியா?

உங்கள் விடை விடுகதைக்கு பொரிந்தினாலும்,
நான் நினைத்துகொடுத்தது அதில்லை.

குணமதி
03-02-2010, 12:15 PM
மேலும் இரண்டு புதிர்;

1. இப்ப பிறந்த பிள்ளை அப்பனுக்கு சோறு போடுது -அது என்ன?

2. குளத்துக்குள் குதித்தவன் கும்மாளம் போடுகின்றான் -அவன் யார்`?

2. எண்ணெய்ச்சட்டியில் இடப்பட்ட வடைமா - சரியா?

ஜனகன்
03-02-2010, 12:26 PM
2. எண்ணெய்ச்சட்டியில் இடப்பட்ட வடைமா - சரியா?

சரியான பதில், பாராட்டுக்கள்

முதலாவதுக்கு கண்டு பிடியுங்கள்.

குணமதி
04-02-2010, 03:06 AM
1. இப்ப பிறந்த பிள்ளை அப்பனுக்கு சோறு போடுது -அது என்ன?

நெல்லின் உமி, தாளே உரமாவது - சரியா?

ஜனகன்
04-02-2010, 01:45 PM
1. இப்ப பிறந்த பிள்ளை அப்பனுக்கு சோறு போடுது -அது என்ன?

நெல்லின் உமி, தாளே உரமாவது - சரியா?

தவறான பதில் குணமதி.

சரி நானே சொல்லி விடுகினேன்.

1. இப்ப பிறந்த பிள்ளை அப்பனுக்கு சோறு போடுது -அது என்ன?

அகப்பை

குணமதி
04-02-2010, 01:47 PM
தவறான பதில் குணமதி.

சரி நானே சொல்லி விடுகினேன்.

1. இப்ப பிறந்த பிள்ளை அப்பனுக்கு சோறு போடுது -அது என்ன?

அகப்பை

விடையின் பொருத்தம் புரியவில்லையே!

கொஞ்சம் விளக்கிச் சொல்வீர்களா?

ஜனகன்
04-02-2010, 01:52 PM
மேலும் இரண்டு புதிர்;

1.மதித்தால் நிற்கும் மிதித்தால் ஓடும் - அது என்ன?

2.காற்று வீசும் அழகான மரம் -அது எந்த மரம்?

ஜனகன்
04-02-2010, 02:00 PM
விடையின் பொருத்தம் புரியவில்லையே!

கொஞ்சம் விளக்கிச் சொல்வீர்களா?

அகப்பை என்றால் உங்களுக்கு தெரியும் தானே குணமதி?!. சோறு அள்ளும் கரண்டி மரத்தால் செய்யப்பட்டது.

புதிதாக செய்யப்பட்ட அகப்பையால் அப்பனுக்கு சோறு அள்ளி போட்டால் என்ன அர்த்தம்.
அதுதான் சொன்னேன் இப்ப பிறந்த பிள்ளை அப்பனுக்கு சோறு போடுதென சரியா?
இது நான் நினைத்து எழுதியது

சிவா.ஜி
04-02-2010, 02:04 PM
மேலும் இரண்டு புதிர்;

1.மதித்தால் நிற்கும் மிதித்தால் ஓடும் - அது என்ன?

2.காற்று வீசும் அழகான மரம் -அது எந்த மரம்?

1.மிதிவண்டி

2.சாமரம்

ஜனகன்
04-02-2010, 05:06 PM
1.மிதிவண்டி

2.சாமரம்

அருமை..இரண்டும் சரியான பதில் வாழ்த்துக்கள்.

ஜனகன்
04-02-2010, 05:17 PM
மேலும் இரண்டு விடுகதைகள்;

1. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

2. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்- அவள் யார்?

கீதம்
05-02-2010, 05:32 AM
மேலும் இரண்டு விடுகதைகள்;

1. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

2. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்- அவள் யார்?

1. நிலவொளி
2. கைபேசி

ஜனகன்
05-02-2010, 01:06 PM
1. நிலவொளி
2. கைபேசி

முதலாவது விடை சரி பாராட்டுகின்றேன்.

இரண்டாவதுக்கு இன்னும் கொஞ்சம் பொருத்தமாக யோசியுங்கள்

சிவா.ஜி
05-02-2010, 01:17 PM
இரண்டாவது கம்மலா?
அல்லது தென்றலா?

குணமதி
05-02-2010, 01:50 PM
இரண்டாவது கம்மலா?
அல்லது தென்றலா?

அல்லது 'மாட்டலா' ?

சரண்யா
05-02-2010, 01:56 PM
கொசு வா....கொய்ங்..கொய்ங்.....

ஜனகன்
05-02-2010, 02:20 PM
இரண்டாவது கம்மலா?
அல்லது தென்றலா?

கம்மல் சரியான விடை வாழ்த்துக்கள் சிவா.சி சார்

குணமதி
05-02-2010, 03:04 PM
இரண்டு விடுகதைகள் :

1. பிள்ளை பிறந்ததும் எழுந்து நான்கு பேரைக் கடித்தது - யார் அந்தப் பிள்ளை?

2. பச்சை வீட்டுக்குச் சிவப்பு வாயில் - அது என்ன?

சிவா.ஜி
05-02-2010, 03:47 PM
கம்மல் சரியான விடை வாழ்த்துக்கள் சிவா.சி சார்

ரொம்ப நன்றிங்க சனகன் சார்.

சரண்யா
06-02-2010, 01:31 AM
1] கன்றுகுட்டி சரியா...

குணமதி
06-02-2010, 03:22 AM
1] கன்றுகுட்டி சரியா...

சரியான விடை.

நன்றி.

இரண்டாம் விடுகதைக்கு விடை காண முயலுங்கள்.

கலையரசி
06-02-2010, 09:32 AM
பச்சைக்கிளி - சரியா?

ஆர்.ஈஸ்வரன்
06-02-2010, 09:54 AM
விடுகதை

யாரும் வாசிக்காத புல்லாங்குழல்;
பற்றி எரியும் ஊதாங்குழல்; அது என்ன?

சிவா.ஜி
06-02-2010, 10:40 AM
யாரும் வாசிக்காத புல்லாங்குழல்;
பற்றி எரியும் ஊதாங்குழல்; அது என்ன?

ட்யூப்லைட்

குணமதி
06-02-2010, 12:28 PM
பச்சைக்கிளி - சரியா?

சரியான விடை.

பாராட்டு.

நன்றி.

சரண்யா
06-02-2010, 03:17 PM
வந்தது தான் வந்தீர்கள் வந்து ஒரு தரம் போனீர்கள்
போய் ஒரு தரம் வந்தீர்களே இனிப்போனால் வருவீர்களா... அது என்ன?

சிவா.ஜி
06-02-2010, 03:53 PM
விசு படம் பார்க்கிற மாதிரி இருக்கு. நான் வர்ல இந்த ஆட்டத்துக்கு.....

சரண்யா
07-02-2010, 01:39 AM
ஒ....முயற்சி செய்யுங்க..

குணமதி
07-02-2010, 02:59 AM
வந்தது தான் வந்தீர்கள் வந்து ஒரு தரம் போனீர்கள்
போய் ஒரு தரம் வந்தீர்களே இனிப்போனால் வருவீர்களா... அது என்ன?

விடை : பல்

சரண்யா
07-02-2010, 06:42 AM
ஆம் சரியே வாழ்த்துகள் குணமதி அவர்களே..
எப்படி இருக்கீங்க..நலமா...

அடுத்தது..
உருவிலே உயர்ந்தவன்
ஊருக்கு உயர்ந்தவன்...அவன் யார்?

சிவா.ஜி
07-02-2010, 07:55 AM
கோவில் கோபுரம்...?

சரண்யா
07-02-2010, 09:20 AM
ஆம் சரியே வாழ்த்துகள்...
அடுத்தது,,,
சரியாக வைத்தால்
சரியாக எழுப்பும்
அது என்ன?

ஆர்.ஈஸ்வரன்
07-02-2010, 09:22 AM
ஆம் சரியே வாழ்த்துகள்...
அடுத்தது,,,
சரியாக வைத்தால்
சரியாக எழுப்பும்
அது என்ன?

கடிகாரம் (அலாரம்)

ஆர்.ஈஸ்வரன்
07-02-2010, 09:25 AM
ட்யூப்லைட்

மிகவும் சரியான பதில் வாழ்த்துக்கள்

குணமதி
07-02-2010, 10:34 AM
இரண்டு விடுகதைகள் :

1.பாதுகாப்பான பெட்டிக்குள்
பலரும் தாங்கும் கடிகாரம் - அது என்ன?

2. பலநாள் காய்த்தவை
ஒரே நாளில் பழுக்கும் - அவை என்ன?

சிவா.ஜி
07-02-2010, 10:42 AM
இதயம்

தலைமுடி

குணமதி
07-02-2010, 11:48 AM
இதயம்

தலைமுடி

முதல் விடுகதைக்குச் சரியான விடையைச் சொல்லி விட்டீர்கள்!

பாராட்டு.

நன்றி.

இரண்டாவதற்குப் பொருந்தும் விடையைக் கூற முயல்க.

ஜனகன்
10-02-2010, 07:55 AM
2. பலநாள் காய்த்தவை
ஒரே நாளில் பழுக்கும் - அவை என்ன?

தெரியேல்ல நீங்களே சொல்லி விடுங்கள்.

ஆர்.ஈஸ்வரன்
10-02-2010, 08:55 AM
எலுமிச்சை

குணமதி
10-02-2010, 12:08 PM
2. பலநாள் காய்த்தவை
ஒரே நாளில் பழுக்கும் - அவை என்ன?

தெரியேல்ல நீங்களே சொல்லி விடுங்கள்.

சொல்லி விடுகிறேன் : மட் பாண்டம்

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

ஜனகன்
10-02-2010, 12:33 PM
மிகவும் நன்றி

மேலும் இரண்டு விடுகதைகள்;

1. குடைவிரிக்கும் பயிர் உண்டு, விதை எங்கே தெரியாது-அது என்ன?

2. வட்ட வட்ட பொட்டுக்காரன், வாசனைப் பூச்சுக்காரன், காற்றில்

கரைந்திடுவான்-அவன் யார்?

குணமதி
10-02-2010, 12:38 PM
மிகவும் நன்றி

மேலும் இரண்டு விடுகதைகள்;

1. குடைவிரிக்கும் பயிர் உண்டு, விதை எங்கே தெரியாது-அது என்ன?

2. வட்ட வட்ட பொட்டுக்காரன், வாசனைப் பூச்சுக்காரன், காற்றில்

கரைந்திடுவான்-அவன் யார்?

1. காளான்.

சரியா?

ஜனகன்
10-02-2010, 12:42 PM
முதலாவது சரியான பதில் வாழ்த்துக்கள்.

இரண்டாவதுக்கு சொல்லுங்கள்

கலையரசி
10-02-2010, 12:47 PM
சூடம். சரியா?