PDA

View Full Version : மண்வாசம்

shibly591
24-10-2008, 03:46 PM
துப்பாக்கி முனைகளில்
அடகு வைக்கப்பட்ட
எங்கள் வாழ்க்கையை
நினைந்து
ஒரு போதும் வருந்தவில்லை

தந்தை கொல்லப்படும்போதோ
நண்பன் கடத்தப்படும்போதோ
இவ்வளவு வருத்தம்
எனக்குள் எழுந்ததில்லை

என் வீட்டில்
பதிந்திருந்த
சநதேகக் கண்காணிப்போ
பசியின்
கோரப்பிடிக்குள்
சிக்கித் தவித்த
நரக நிமிடங்களோ

என்னை இத்தனை தூரம்
அழவைத்ததில்லை

பெயர் தெரியாத
தெருக்களில்
அகதிகளாய்
மண்வாசனையை
தேடும்போதுதான்
உயிர் கருகுகிறது

அமரன்
24-10-2008, 04:10 PM
பீட்சா, பர்கர், சான்ட்விச் வாசனைகளுக்கு நடுவில் அருமையாகக் கிடைக்கும் சோற்று வாசனையை நுகரும் நிமிடங்கள் எம்மைப் போன்றவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தருணங்கள். காலை மாலை இருவேளையும் தொடருந்துகளில் பயணம் செய்தால் பெட்டிகளின் சுவர்களில் அறைந்தறைந்து காதில்பாயும் தமிழோசை அற்புதமான நேரங்கள் அவை. சொந்த நாட்டில் ஊர் வாசனை தேடுவது இன்னும் கொடுமை. அந்தக் கொடும்பாவியை எரிக்கத் துணிந்த ஷிப்லிக்கு வாழ்த்தும் நன்றியும்.

shibly591
24-10-2008, 04:33 PM

நன்றி அமரன்...

சரியாகச்சொன்னீங்க..

கொடும்பாவியை கொளுத்த விரும்பாத கொடிய பாவிகளை என் செய்யட்டும்..?